Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி?

06 மார்ச் 2011

அண்மையில் அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நிகரான ..

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி?

இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு சில நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நிகரான தீர்மானமொன்றை சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தும் நோக்கில் அழுத்தங்களை பிரயோகிக்க குறித்த நாடுகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான நிலைமை ஏற்படும் என முன்னாள் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் சார்லி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைத் தூதரகங்களின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் புலம்பெயர் சமூகங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை எதிர்ப்பு மற்றும் யுத்தக் குற்றப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வல்லமை இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தூதரகங்கள், நாட்டின் தமிழ் மக்கள் மனித உரிமைப் பிரச்சினைகளை எதிர்நோக்கவில்லை என்பதனை உலக சமூகத்திற்கு வலுவாக எடுத்துரைப்பதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அநேகமான இராஜதந்திரிகள் அரசியல் ரீதியான நியமனங்கள் என்பதனால் போதியளவு இராஜதந்திர அறிவு அவர்களிடம் காணப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே உலகின் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற விளைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

gtn

Edited by கறுப்பி

இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி?

சர்வதேச நாணய அமைப்பின் மூலம் அதிகளவு பணத்தை ஒரு கையால் கொடுத்த உலகம், இன்று மறுகையால் பொருளாதார தடை போட்டும், தமது கையில் உள்ள யுத்த ஆதாரங்கள் மூலமும், தமக்கு ஆதரவான சிங்கள தலைமையை கொண்டுவர முயலுகின்றது.

பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான நிலைமை ஏற்படும் என முன்னாள் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் சார்லி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைத் தூதரகங்களின் செயற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் புலம்பெயர் சமூகங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை எதிர்ப்பு மற்றும் யுத்தக் குற்றப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வல்லமை இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போர்குற்றவாளிகளை தூதுவர்களாக நியமிக்காமல் தமிழர்களை நியமியுங்கள் என சொல்லலாம், ஆனால் அது மகிந்த சிந்தனைக்கு எதிரானதாகிவிடுமே! :blink:

Edited by akootha

முயற்சிக்கிறாங்களே தவிர யாரும் நிறைவேற்ருறாங்கள் இல்லையே.. :(

முயற்சிக்கிறாங்களே தவிர யாரும் நிறைவேற்ருறாங்கள் இல்லையே.. :(

ஐரோப்பிய யூனியன் நிற்பாட்டிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ஒரு வித பொருளாதார தடை என பார்க்கலாம். அமெரிக்கா தனது ஜி.எஸ்.பி. இனை நிற்பாட்டினால் அதுவும் ஒரு பொருளாதார தடையாக இருக்கும்.

இவற்றை விட ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தொடர்ந்தும் சிங்ககளத்தின் பொருளாதரத்தை, எமது உறவுகளை பாதிக்காதபடி, தொடர்ந்தும் புறக்கணிக்க வேண்டும்.

எந்தத்தடைகளைப் போட்டாலும், மகிந்தர் & கோவின் பாக்கெட்டுக்கள் நிறைந்தவண்ணமே இருக்கும். பொது மக்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். :rolleyes:

உலகில் மனிதத்துவத்தை மதிக்கும் ஜனநாயக பண்புள்ள நாடுகள் இருந்திருந்தால் அவை அப்போதோ இனப்படுகொலை செய்துவரும் சிங்கள அரசின் மீது பல்வேறு தடைகளை விதித்திருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.