Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகள் தமிழ் நாட்டில் பயிற்சி எடுப்பதை தடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் தமிழ் நாட்டில் பயிற்சி எடுப்பதை தடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வேண்டுகோள்

[3/10/2011 ] [cmr news bulletin ]

விடுதலை புலிகள் தமிழ் நாட்டில் முகாம்களை அமைத்து பயிற்சி எடுத்து வருகின்றமை தொடர்பாக உடனடியாக இந்திய அரசாங்கத்தக்கு அறிவித்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி இன்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது.

புலிகள் பயிற்சிபெறும் தகவலை உபகண்டத்துக்கு வெளியில் இருந்து இலங்கை அரசு பெற்றிருந்தால் உடனடியாக இந்திய மத்திய அரசுக்கு அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியது.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பிரதித் தலைவர் கருஜெயசூரிய, கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் இந்த கோரிக்கையை கூட்டாக விடுத்தார்கள்.

புலிகள் மீள உயிர்பெறுவது இந்திய பிராந்தியத்துக்கு பேராபத்தெனவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நேர்மையான தீர்வு ஒன்றை அரசாங்கம் முன்வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காதெனவும் கூறிய மங்கள சமரவீர, இந்திய மத்திய அரசாங்கத்தின் உதவியை இலங்கை அரசாங்கம் பெற வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கினார்.

புலிகள் தமிழ் நாட்டில் பயிற்சி பெறுவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் தெரிவித்த தகவல் பொய்யாக இருக்குமானால் நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்திய குற்றச்சாட்டு பிரதமர் மீது முன்வைக்கப்படுமென மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் தமிழ் நாட்டில் முகாம்களை அமைத்து பயிற்சி எடுத்து வருகின்றமை தொடர்பாக உடனடியாக இந்திய அரசாங்கத்தக்கு அறிவித்து தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி இன்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது

தமிழன் புலிகளை மறந்தாலும், சிங்களவர்கள் புலிகளை மறக்க மாட்டினம் போல இருக்கு.......

யாழ் நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சி பயங்கரவாதிகளின் சந்தர்பவாத சிங்கள பயங்கரவாத அரசியல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.