Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கின் வசந்தத்தின் மறுபக்கம்!(படங்கள் இணைப்பு)

Featured Replies

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கின் அபிவிருத்திக்காக 'வடக்கின் வசந்தம்" என்ற திட்டத்தை தான் நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும் கூட, வடக்கின் நிலைமைகள் அவ்வாறானதாக இல்லை என்பதை கொழும்பிலிருந்து கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் குழுவினரால் நேரில் காணக்கூடியதாக இருந்தது. சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் பங்குகொண்ட இந்த விஜயத்தின்போது வடக்கின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடிய சந்திப்புக்கள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வடக்கின் வசந்தம் என்ற பெயரில் வடக்கில் காணப்படும் வளங்களைக் கொள்ளையடிப்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது என மதத்தலைவர்களும், புத்திஜீவிகளும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்கள். இப்போது வடக்கில் எமக்கு மிஞ்சியிருப்பது பொத்தல் விழுந்த ஏ-9 பாதையும், குடாநாட்டுக்கு வரும் மக்களைக் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான விளம்பரப் பலகைகளும்தான் என இவர்கள் கூறுவதில் பெருமளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

இந்தமுறை யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டபோது ஒரு விடயத்தைப் பொறுத்துதான் பலருடைய எச்சரிக்கையையும் கேட்க முடிந்தது. அதாவது றோட்டு சரியில்லை. நேரத்துக்குப் போக முடியாது என்பதுதான் பலருடைய எச்சரிக்கையாகவும் இருந்தது. வழமையாக வெள்ளவத்தையிலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் பஸ் மறுநாள் அதிகாலை 5.30 க்கு முன்னரே யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்துவிடும். இப்போது நிலைமை அப்படியில்லை. இரவு 8.00 மணிக்குப் பறப்பட்ட பஸ் மறுநாள் காலை 8.00 மணிக்கு யாழ். நகரை அடைந்த போதுதான் எச்சரித்தவர்கள் சொன்னதிலுள்ள உண்மை புரிந்தது. வழமையைவிட சுமார் 3.00 மணி நேரம் அதிகமாகச் சென்றிருக்கின்றது.

DSC02429.JPG

இந்த 3 மணி நேரத்துக்கு ஏ-9 வீதியின் மோசமான நிலைதான் காரணம். போக்குவரத்துச் செய்ய முடியாத அளவுக்கு ஏ-09 பாதை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பிட்ட இடங்களில் 5 முதல் 10 மைல் வரையிலான வேகத்தில் செல்லத்தக்கதாகவே வீதி காணப்படுகின்றது. ஏ-09 பாதையைப் புனரமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்று சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்ற போதிலும் அதற்கான அறிகுறிகள் எதனையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. வடக்கின் அபிவிருத்திக்கு வேகமாகச் செல்லக்கூடிய பாதை வசதி அவசியமானது என்பதால் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டியதாக இது உள்ளது.

இதேவேளையில், குன்றும் குழியுமாகக் காணப்படும் இந்த எ-09 வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் குடாநாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையிடுவதற்குத் தயாராகவுள்ளன. குடாநாட்டைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பொருளாதாரம் புலம்பெயர்ந்த மக்களின் கைகளிலேயே உள்ளது எனக் குறிப்பிடலாம். அதாவது யாழ்ப்பாண மக்களில் பெரும்பாலானவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் அனுப்பிவைக்கும் பணம்தான் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரமாக உள்ளது. இதனை இலக்கு வைத்த விளம்பரங்களையே ஏ-09 வீதியின் இரு மருங்கிலும் காணப்படுகின்றது.

குறிப்பாக கைப்பேசி இணைப்பைக் கொடுக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமது தமது அழைப்புக் கட்டணங்களை விளம்பரப்படுத்துகின்றன. இதற்கு அடுத்ததாக வங்கிகளின் விளம்பரங்களையே பெருமளவுக்குக் காணக்கூடியதாக இருந்தது. மூன்றாவது இடத்திலுள்ள விளம்பரங்கள் குளிர்பாணங்கள் - அதாவது கோக் போன்றவற்றின் விளம்பரங்களாகும். மிகவும் பிரமாண்டமான அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரங்கள் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி பற்றிய ஒரு மாயத் தோற்றத்தையே கொடுப்பவையாக அமைந்திருக்கின்றன. உண்மையில் இவை யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியையோ அல்லது முன்னேற்றத்தையோ பிரதிபலிப்பவையாக அமைந்திருக்கவில்லை. யாழ்ப்பாண மக்களிடமுள்ள பணத்தைக் கொள்ளையிட வந்தவையே இவை என்பதை குடாநாட்டிலுள்ள பொருளாதார நிபுணர்கள் பலரும் விளக்குகின்றார்கள்.

குடாநாட்டினதோ குடா நாட்டு மக்களினதோ அபிவிருத்திக்காக எதனையும் செய்யாத நிலையில், பல்தேசியக் கம்பனிகளும், தென்னிலங்கையைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தில் கடை விதித்திருப்பது குடாநாட்டு மக்களின் நலன்களுக்காக அல்ல. தமது வர்த்தக நலன்களுக்காக மட்டுமே அவை அங்கு கடை விரித்திருக்கின்றன. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து குடாநாட்டு மக்களுக்கு அதிகளவு பணம் வருவதைத் தெரிந்துகொண்டு அதிகளவில் வங்கிக் கிளைகள் அங்கு திறக்கப்படுகின்ற போதிலும், அதில் பணிபுரிபவர்கள் பெருமளவுக்குத் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள்.

இதனைவிட, இந்த வங்கிகளில் வைப்பிலிடப்படும் பணம் தென்னிலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கே அனுப்பப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் ஒருவர் ஒரு பண்ணையை அமைப்பதற்கோ அல்லது கைத்தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கோ ஒரு கடனைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. அதாவது வடக்கின் வசந்தம் என்ற பெயரில் திறக்கப்படும் வங்கிக் கிளைகள் மூலம் யாழ்ப்பாண மக்களின் பணம் அவர்களுக்குத் தெரியாமலேயே தென்பகுதியின் அபிவிருத்திக்காகப் பெறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தவர்களைப் பொறுத்தவரையில் தாம் வைப்பிலிடும் பணத்துக்கு வட்டி கிடைக்கின்றது என்பதுடன் நிம்மதியாக இருந்துவிடுகின்றார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளாதாரத்துறைப் பேராசிரியர் ஒருவரிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, இது ஒரு மிகப்பெரிய பணச் சுரண்டல் எனக் குறிப்பிடுகின்றார்.

இதனைவிட மற்றொரு அழிவையும் வடக்கு சந்திக்கின்றது. அதாவது வன்னிக் காடுகளில் வெட்டப்படும் மரங்கள் பெருமளவுக்குத் தென்னிலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. வன்னி முற்றுமுழுதாக இராணு ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருப்பதால் இராணுவ ஆதரவுடன் அரசுக்குச் சார்பான சிலர் இதனைச் செய்துவருகின்றார்கள். இதனால் வடபகுதியில் இயற்கை வளங்கள் பெருமளவுக்கு அழிக்கப்படுகின்றது. இதனைவிட வடபகுதியில் காணப்படும் சுண்ணாம்புக்கல், மற்றும் மணல் என்பனவும் பெருமளவுக்கு இராணுவத்தின் துணையுடன் தென்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது. இந்த நடவடிக்கைகள் இராணுவத்தின் துணையுடன் மேற்கொள்ளப்படுவதால் இதனை யாராலும் எதிர்க்க முடியாதிருப்பதாக யாழ்ப்பாணத்தில் கிறிஸ்த்தவப் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.

இவைதொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரமுகரிடம் கேட்டபோது, அவர் ஆக்ரோஷமாகப் பதிலளித்தார்:

DSC02439.JPG

'வடக்கில் அபிவிருத்தி இடம்பெறுவதாக தென்பகுதிக்குக் காட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்ற அதே வேளையில், எமது வளங்களைக் கொள்ளையிட்டு தென்பகுதிக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. 2009 மே 19 ஆம் திகதி போர் முடிவுக்கு வந்த காலப்பகுதியிலேயே இந்த நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துவிட்டது. தென்பகுதியிலுள்ள வங்கிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து எமது மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டுக்கொண்டு தென்பகுதிக்குச் செல்கின்றன.

யாழ்ப்பாணம் என்பது இன்று தென்னிலங்கையினதும், இந்தியாவினதும் வர்த்தக மையமாக மாறிவிட்டது. இந்தியர்களும் சீனர்களும் இங்கு வந்து வெவ்வேறு ஒப்பந்தங்களில் அல்லது உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுகின்றார்கள். இந்த ஒப்பந்தங்களில் ஒன்று கூட எமது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அனைத்து ஒப்பந்தங்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகின்றது. இங்குள்ளவர்களிடம் எதுவும் இல்லை. அவர்கள் எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதுமில்லை.

போருக்கு முற்பட்ட காலத்தில் நாடுமுழுவதற்கும் யாழ்ப்பாணத்திலிருந்தே முந்திரிகைப் பழம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரிகைப் பழங்களே யாழ்ப்பாணச் சந்தைகளில் விற்கப்படுகின்றது. முந்திரிச் செய்கை பண்ணப்பட்ட பெருமளவு காணிகள் இப்போது உயர் பாதுகாப்ப வலயங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டு இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அந்தத் தோட்டங்களின் உரிமையாளர்களுக்கு அங்கு செல்வதற்கான அனுமதி இன்றுவரையில் கிடைக்கவில்லை. போர் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியாகும் காலத்தில் உள்ள நிலை இது.”

யாழ்ப்பாணம் இன்று வெளிப் பார்வைக்கு உற்சாகமாகக் காணப்படுகின்றது. வெளிநாட்டுப் பொருட்களும், தென்னிலங்கைப் பொருட்களும் யாழ்.ப்பாண சந்தையில் குவிந்து கிடக்கின்றன. ஆனால், யாழ். பொருளாதார அபிவிருத்திக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் எதனையும் காணக்கூடியதாகவில்லை! பதிலாக யாழ்ப்பாணப் பொருளாதாரத்தையும், வளங்களையும் சுரண்டுவதற்கான நடவடிக்கைகளே நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலதிக படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

வடக்கின் வசந்தம் என்ற போர்வையில் ஏமாந்த வெளிநாடுகளிடம் பெருமளவு பணத்தை பெற்று தெற்கில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அம்பாந்தோட்டை, கதிர்காமம், பொலனறுவை, காலி, மாத்தறை, கொழும்பு, பத்தரமுல்லை, மதவாச்சி, பதவியா, சேருவில பகுதிகளில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடுகடந்த அரசினரும், புலம்பெயர் தமிழரும் தாம் வாழும் நாடுகளின் அரசுகளிடம், வெளிநாடமைச்சு அதிகாரிகளிடம் வட - கிழக்கு பகுதிகளுக்கு வழங்கப்படும் உதவிகளை தெற்க்குக்கு மாற்றும் சிங்கள பயங்கரவாதிகளின் நீண்ட வரலாறு கொண்ட நயவஞ்சக சதித்திட்டங்களை விளங்கப்படுத்தவேண்டும்.

இந்திய பயங்கரவாதிகள் வடக்கிற்கு என்று வழங்கும் பிச்சைத்தன உதவிகளில், 70 % ஆனவை சிங்களவனுக்கே போய்ச் சேருகிறது. இந்திய அடிவருடிகள் சம்பந்தன், சுரேஷ் போன்றவர்களும், இந்திய கைகூலிகள் டக்லஸ், சித்தார்த்தன், சங்கரி போன்றவர்களும் இவற்றைக் கண்டும் காணாதவர்களாக உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.