Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் மே மாதம் தேசிய பாராளுமன்ற தேர்தல்?

Featured Replies

கனடாவில் மே மாதம் தேசிய பாராளுமன்ற தேர்தல் ?

இன்று கனடாவில் ஆட்சியில் உள்ள பழமைவாத கட்சி தனது வருடாந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து. சிறுபான்மை எண்ணிக்கையை கொண்ட ஆளும் கட்சிக்கு எந்த எதிர்க்கட்சியும் ஆதரவு தர மறுப்பதால் மீண்டும் ஒரு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மே மாதம் நடக்கலாம்.

Spring election likely as all three opposition parties reject Tory budget

Opposition leaders have signalled they will not support the Conservative budget, making a spring election all but inevitable.

The budget, tabled Tuesday by Finance Minister Jim Flaherty, had been carefully crafted to try to meet the NDP halfway in a bid to avoid a trip to the polls, but it was also designed – sprinkled with targeted tax credits for families, for example – to serve as a campaign platform if the government is defeated in a no-confidence vote, which could come as early as this week.

http://www.theglobeandmail.com/news/politics/budget/news/spring-election-likely-as-all-three-opposition-parties-reject-tory-budget/article1935056/

  • தொடங்கியவர்

கனேடிய சிறுபான்மை அரசு 156-145 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் சற்று முன்னர் தோற்கடிக்கப்பட்டது. எதிர்க்கட்சித்தலைவர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் இது ஏற்பட்டது.

எப்பொழுது பொதுத்தேர்தல் நடக்கலாம் என நாளை அறிவிக்கப்படலாம். மே மாதம் 9 ஆம் இல்லை 2ஆம் திகதிகளில் நடக்கலாம்.

ஆண்ட பழமைவாதி கட்சி பெரும்பான்மை ஆட்சி அமைக்கலாம் என ஒரு அண்மைய கருத்துக்கணிப்பு கூறியது. ஆனால் எதுவும் நடக்கலாம்.

Harper government falls in historic Commons showdown

http://www.theglobeandmail.com/news/politics/harper-government-falls-in-historic-commons-showdown/article1956416/

என் ஆதரவு Harper அரசுக்கே.. உலகலாவிய ரீதியில் பொருளாதார கஷ்டம் வந்த நேரத்திலும் கனடாவை ஓரளவுக்கேனும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியது Harper அரசே

  • தொடங்கியவர்

வேலை தேடிக்கொண்டு இருப்பவர்கள், மாணவர்கள்... தேர்தல் அன்று ஒரு நாள் வேலை செய்வதன் மூலம் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்: http://www.elections.ca/content.aspx?section=emp&lang=e

  • தொடங்கியவர்

நாம் கனடாவில் முற்று முழுதாக எமது பலத்தில் ஒருவரையும் எந்த ஒரு தொகுதியிலும் வெல்ல வைக்கும் பலம் அற்றவர்கள். அதேவளை எமக்கும் பல அரசியல், சமூக தேவைகள் உள்ளன. எனவே தொகுதிவாரியாக குழுக்களை அமைத்து யாருக்கு நாம் ஆதரவு அளிப்பதன் மூலம் எமது தேவைகளை பூர்த்தி செய்யலாம் என தந்திரோபமயமாக வாக்களித்தல் பலம் சேர்க்கும்.

எமது மக்கள் மத்தியிலும் பல கட்சிகளுக்கு குழுக்கள் உள்ளன. அவர்களுடன் இணைந்து வேலை செய்வதும் எமது சமூகத்திற்கு பலன் தரும்.

  • தொடங்கியவர்

இன்று காலை பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியை சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்க அனுமதி பெற்றார் கனேடிய பிரதமர்.

கனடாவின் 41 ஆவது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் இரண்டாந் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் 41 ஆவது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் இரண்டாந் திகதி, நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நாடாளுமன்றத்தை அவமதித்ததென லிபரல் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசு நேற்றுத் தோல்வியடைந்த நிலையில், இன்று பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர், ஆளுநர் நாயகத்தைச் சந்தித்து, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரினார்.அந்தக் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்ரன் அறிவித்தார்.

பின்னர் உரையாற்றிய பிரதம மந்திரி ஸ்ரீபன் ஹாப்பர், உலக பொருளாதாரம் பலவீனமாக உள்ள நிலையில் நாட்டிற்குத் தலைமை தாங்கும் திறமை யாருக்கு உள்ளதென்று மக்கள் முடிவு செய்ய வேண்டுமெனக் கூறினார். எதிர்க்கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைக்க முற்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், அவர் உரையாற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கூட்டணி ஒன்றை அமைக்கப்போவதில்லையென லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாட்டியெஃப் வலியுறுத்தினார்.

கனேடிய நாடாளுமன்றத்தில், 308 ஆசனங்கள் உள்ளன. பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 300 மில்லியன் டொலர் செலவாகும்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7128

  • தொடங்கியவர்

புளொக் குபேக்குவா வெளியிட்ட கடிதமொன்று, கொன்சவ்வேட்டிவ் கட்சிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.

புளொக் குபேக்குவா கட்சியின் தலைவர் ஜில் டுசெப் வெளியிட்ட கடிதமொன்று, கொன்சவ்வேட்டிவ் கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுவதாக, கனடிய ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட எதிர்க்கட்சிகள், தமக்குள் கூட்டாட்சி ஒன்றை உருவாக்குவதையே நோக்காகக் கொண்டுள்ளனரென, ஸ்ரீவன் ஹாப்பர் குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த எதிர்க்கட்சிகள், தமக்குள் எவ்வித கூட்டாட்சிக்கான திட்டமும் இல்லையெனவும், சிறுபான்மை ஆட்சியமைக்கும் சூழல் வந்தால், கட்சிகளுக்கிடையில் கருத்திணக்கம் மட்டுமே காணப்படுமென வலியுறுத்தியுள்ளன.

இதற்கிடையில், புளொக் குபேக்குவா கட்சியின் தலைவர் ஜில் டுசெப் வெளியிட்ட கடிதமொன்று, கொன்சவ்வேட்டிவ் கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுவதாக, கனடிய ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.

2004ம் ஆண்டு இலையுதிர் காலத்தில், போல் மார்ட்டீனின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, எதிர்க்கட்சிகளுக்கிடையில் ஓர் கூட்டாட்சியை அமைப்பதற்கு ஸ்ரீவன் ஹாப்பர் முயற்சிகளை எடுத்ததுடன், அதற்கான கடிதமொன்றிலும் ஹாப்பர் கைச்சாத்திட்டதாக டுசெப் தெரிவித்தார். இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை கனடிய ஊடகவியலாளர்களிடம் நேரில் காட்டிய டுசெப், ஸ்ரீவன் ஹாப்பர் ஏற்கெனவே கூட்டாட்சிக்கு வித்திட்டவர் என்றும், தற்போது அதே குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் மீது வைப்பதாகவும் குறை கூறியுள்ளார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7139

  • தொடங்கியவர்

கனேடிய ஆளும் கட்சியின் விளம்பரம் அண்மையில் "சண் சீ" கப்பல் மூலம் வந்தவர்களை உள்ளடக்கி உள்ளது

http://www.youtube.com/watch?v=N1eoGi5omvU&feature

  • தொடங்கியவர்

தனியாக விவாதத்திற்கு வருமாறு விடுத்த சவாலை, லிபரல் கட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டார்

தன்னுடன் தனியாக விவாதத்திற்கு வருமாறு கொன்சவேற்றிவ் தலைவர் ஸ்ரீபன் ஹாப்பர் விடுத்த சவாலை, லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாட்டியெஃப் ஏற்றுக் கொண்டார்.

எந்தவேளையிலும், எந்த இடத்திலும், ஹாப்பருடன் நேருக்கு நேராகத் தனியாக விவாதத்தில் ஈடுபடுவதற்குத் தயாராக இருப்பதாக மைக்கல் இக்னாட்டியெஃப் அறிவித்தார்.

அது தொடர்பான ஏற்பாடுகளில் குழப்பம் நிலவுகிறது. தனித்தனியாக இரு தலைவர்களும் விவாதம் ஒன்றில் ஈடுபட்டாலும், ஏனைய தலைவர்களும் கலந்து கொள்ளும் விவாதம் ஒன்றும் இடம்பெறவேண்டுமென லிபரல் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். லிபரல் கட்சியின் தலைவருடன், ஆங்கிலம், பிறெஞ்சு என இரண்டு மொழிகளிலுமாக இரண்டு விவாதங்களை மட்டும் நடத்துவது போதுமானதென கொன்சவேற்றிவ் கட்சியினர் கருதுவதாக லிபரல் கட்சியினர் கூறுகிறார்கள்.

எதிர்வரும் பன்னிரெண்டாந் திகதி, கட்சித் தலைவர்கள் பங்குபற்றும் ஆங்கில மொழி தொலைக்காட்சி விவாதமும், பதின்நான்காம் திகதி பிறெஞ்சு மொழி விவாதமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பசுமைக் கட்சித் தலைவி அதற்கு அழைக்கப்படவில்லையென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களின் குரல், தனக்கு ஆதரவான முடிவை எடுக்குமாறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்குமென பசுமைக் கட்சியின் தலைவி எலிசபெத் மே எதிர்பார்ப்பு வெளியிட்டார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7212

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.