Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவில்...

Featured Replies

சிரியாவில் மசூதி அருகே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் இரு மாதங்களாகவே அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. தலைநகர் டமாஸ்கஸில் இருந்து தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள தாரா நகரம் போராட்டத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியிருக்கின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளாக சிரியாவில் நடந்துவரும் ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

1963-ம் ஆண்டில் இருந்து சிரியாவில் அமலில் இருக்கும் அவசரச் சட்டங்களின்படி போராட்டம் நடத்தப்படுவது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, போராட்டக்காரர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் இறங்கினர்.

மசூதிக்குள் பாதுகாப்புப் படையினர் நுழைவதைத் தடுக்கும் வகையில் மசூதியைச் சுற்றிய சாலைகளில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இவற்றைக்கடந்து சென்ற பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தாரா பகுதியில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 11 வயது சிறுவன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்திருப்பதையடுத்து தாரா மாகாண ஆளுநர் ஃபைசல் கல்தெüம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அவர் தொடர்ந்து பதவியில் இருந்து வருவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே சிரியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஏஎஃப்பி புகைப்படக்காரர், விடியோ நிருபர் ஆகியோரை வழிமறித்த பாதுகாப்புப் படையினர் அவர்களிடமிருந்த கருவிகளைப் பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்களை பிடித்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. எனினும் பறிமுதல் செய்த கருவிகளை திருப்பித் தரவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

தாரா நகரையொட்டிய நோவா, ஜாஸம் உள்ளிட்ட நகரங்களுக்கும் போராட்டம் பரவி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை ஆர்வலர் கைது: அரசுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்த மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான லோய் ஹுசனை சிரிய அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக லண்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.

டமாஸ்கஸின் புறநகரப் பகுதியில் இருக்கும் அவரது வீடு தரைமட்டமாக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது. அரசுக்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஹுசைன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்தே அவரை அரசு கைது செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதற்கு முன்பு 1984 முதல் 1991-ம் ஆண்டுவரை இவரை அரசு சிறையில் அடைத்திருந்தது. அரசின் அடக்குமுறைக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது

சிரியா மக்கள் கிளர்ச்சியில் 100 பேர் பலி

சிரியாவில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று நாட்டின் தென்பகுதி நகரான தாராவில் ஐய்மான்-அல்-அஸ்வாத் என்ற மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர் அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்புப்புபடையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 18-ம் தேதி முதல் பொதுமக்கள் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தாஹரா நகரில் ஏற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து , நாட்டின் தலைநகரமான டமாஸ்கஸிலும் மக்கள் போராட்டம் பரவியுள்ளது. இதில் 75 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் புதிய சீர்திருத்த சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும் எனவும் அதிபர் பஷீர் ஆசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=212319

US in new condemnation of Syria protests

WASHINGTON — The United States on Thursday issued a new condemnation of Syria's "brutal repression" of demonstrations and killings of civilians and also hit out at the arrest of rights activists.

"The United States strongly condemns the Syrian government's brutal repression of demonstrations, in particular the violence and killings of civilians at the hands of security forces," said White House spokesman Jay Carney.

"We reject the use of violence under any circumstances. We are also deeply troubled by the arbitrary arrests of human rights activists and others.

"Those responsible for the violence must be held accountable. The United States stands for a set of universal rights, including the freedom of expression and peaceful assembly, and believes that governments must be responsive to the legitimate aspirations of their people.

"We call on the Syrian government to exercise restraint and respect the rights of its people and call on all citizens to exercise their rights peacefully."

Syria, the latest Middle Eastern country to witness an uprising against a long-running autocratic regime, has been hit by unprecedented protests demanding major change after almost five decades of rule by the Alawite-controlled Baath party.

The demonstrations began this month in Damascus but have been largely contained in the capital.They broke out in force instead in Daraa, where activists reported more than 100 people killed on Wednesday alone in clashes with security forces.

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5iQlFX6BbvSoaBhbG9HnRHKPBJKwA?docId=CNG.a2e7d43557882e0efe638a466cc3c275.b21

சிரியாவில் மக்கள் போராட்டம் வீறு கொண்டது 20 பேர் மரணம்

வடக்கு ஆபிரிக்காவில் பெரும் புயலாக வீசிக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டம் சூல் கொண்ட மேகமாக மாறி சிரியாவிற்குள் புகுந்துள்ளது.

நேற்று வெள்ளி ஆர்பாட்டக்காரர் மீது சிரிய இராணுவம் சரமாரியான துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தது. இதில் சுமார் 10 பேர்வரை மரணமடைந்துள்ளனர். நேற்று முழுவதும் பல நகரங்களில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் மொத்தம் 20 பேர் மரணமடைந்துள்ளனர். சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆசாத்திற்கும் அவரது படையணியினருக்கும் எதிராகவே மக்கள் திசை திரும்பியுள்ளார்கள்.

ஆசாத்தின் ஆட்சியாளர் கடந்த 40 வருடங்களாக அமலில் இருக்கும் அவசரகால சட்டத்தை அகற்றுவதாக ஆர்பாட்டக்காரருக்கு தெரிவித்துள்ளனர். இந்த ஆர்பாட்டங்களின் பின்னால் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக சிரிய வெளிநாட்டு அமைச்சர் குற்றம் சுமத்தினார். ஆனால் எகிப்து, ரூனிசியா, லிபியா, பகரைன் நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் ஓரங்கமே சிரியாவில் ஆரம்பித்துள்ளது.

இதை நிறுத்துவது இலகுவான காரியமாக தெரியவில்லை. சிரிய அதிபரின் சகோதரர் இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்து செய்யும் அநியாயம் சொல்லுந்தரமன்று. இவரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென ஆர்பாட்டக்காரர் தெரிவிக்கிறார்கள். அதிபர் ஆசாத்தின் தம்பியான மகார் அல் அசாட் சிரியாவில் இரண்டாவது சக்தி வாய்ந்த நபராகும்.

40 வருட அவசரகாலச்சட்டம் ! அதிபரின் தம்பி இராணுவத்தில் உயர் பதவியில் ! அரச பதவிகள் குடும்பத்தின் கையில் ! போராட்டம் தொடர்கிறது…

http://www.alaikal.com/news/?p=62507

Deaths as Syrian forces fire on protesters

At least 20 killed near Daraa, a witness tells Al Jazeera, as anti-government protesters defy security crackdown.

The bloody crackdown on protesters in Syria has left dozens dead as President Bashar al-Assad faces the greatest challenge to his 11-year rule. Security forces opened fire on anti-government protesters in the city of Sanamin near Daraa on Friday, killing at least 20 people, according to one witness.

"There are more than 20 martyrs .... they [security forces] opened fire haphazardly," the witness told Al Jazeera on Friday.

Rula Amin, Al Jazeera's correspondent in Damascus, said Syrian forces apparently fired after protesters set fire to a statue of the late president, Hafez al-Assad. Footage on YouTube also showed protesters in the cental square of Daraa dismantling a portrait of his son, Bashar al-Assad, the current president.Reuters reported that heavy gunfire could be heard in the southern city of Daraa, the focal point for demonstrations against Bashar al-Assad's regime in recent days. Three people were also reported killed in Mouadamieh district of Damascus after a crowd confronted a procession of cars driven by supporters of president Bashar al-Assad, residents said, according to Reuters.

http://english.aljazeera.net/news/middleeast/2011/03/2011325145817688433.html

சிரியாவிற்குள் பரவியுள்ள ஆர்பாட்டம் நேற்று 20 பேர்களின் உயிர்களை காவு கொண்டது தெரிந்ததே.

இன்று போராட்டங்கள் மேலும் உக்கிரமடைந்தன. போராட்டக்காரர் டீரா நகரத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தை தீயிட்டுக் கொழுத்தி, ஆளும் பாத் கட்சியின் காரியாலயத்தையும் தீயிட்டுள்ளனர். கமால் பாரடன் என்ற ஆர்பாட்டக்காரரை இப்பகுதி போலீஸ் சுட்டுக் கொன்றதால் ஏற்பட்ட கோபமே ஆர்பாட்டக்காரர் இரு கட்டிடங்களையும் தீயிட்டுக் கொழுத்தக் காரணமாகும்.

அதேவேளை அமைதியாக ஆர்பாட்டம் செய்த 200 பேரை சர்வாதிகார ஆசாட்டின் படைகள் கைது செய்துள்ளன. சுமார் 4000 பேர்வரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை அரசு 70 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளது. அவசரகால சட்டத்தை 40 வருடங்களாக பிறப்பித்து, மக்கள் சொத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் அல் ஆசாட்டின் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்துள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=62602

Syria's Assad faces crisis as mourners burn buildings

Thousands of mourners at a funeral for a Syrian killed in anti-government protests burned a ruling Baath party building and a police station on Saturday as authorities freed 260 prisoners in a bid to placate reformists.

Syrian President Bashar al-Assad was facing the deepest crisis of his 11 years in power after security forces fired on protesters on Friday, adding to a death toll that rights groups have said now numbers in the dozens.

Mosques across Deraa announced the names of "martyrs" whose funerals would be held in the southern city and on Saturday hundreds were gathering in the main square chanting for freedom.

http://www.reuters.com/article/2011/03/26/us-syria-idUSTRE72N2MC20110326

சிரிய பாராளுமன்றம் பதவி விலகியது – புதிய நாடகம் !

சிரியாவில் நடைபெறும் மக்கள் போராட்டத்தை தனது இரும்புக் கரங்களால் அடக்கி வரும் சிரிய அரசின் கடும்போக்கு நடவடிக்கைகளில் சிறிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு சகல நடவடிக்கைகளும் அதிபர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த 1963ம் ஆண்டில் இருந்து ஆட்சிக் கட்டிலில் இருக்கும் நீர்த்துப்போன பாத் கட்சி அரசே பதவி விலகியுள்ளது. பதவி விலகலை ஏற்ற அதிபர் பழைய பிரதமர் நஜி ஒற்றாரியையே தற்காலிக பிரதமராக இருக்கும்படி பணித்தார். சிரிய நாட்டின் அதிகாரம் முழுவதும் அதிபர் பஸார் அல் அசாத்தின் குடும்பத்தினரின் கைவசமே இருக்கிறது. பாராளுமன்றம் என்பது அங்கு ஓர் இறப்பர் ஸ்டாம்பாகவே இருக்கிறது. இந்த அதிகார ஒப்படைப்பு முடிந்ததும் சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு ஆதரவாக ஓர் ஆர்பாட்ட ஊர்வலமும் நடாத்தப்பட்டது. அதில் ஆஸாட் பதவி விலகக் கூடாது என்ற கோஷம் எழுப்பப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட நாடகம்போலவே தெரிந்தது.

மேலும் 24 மணி நேரத்தில் சிரிய அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். அவர் கடந்த 50 வருடங்களாக அமலில் இருக்கும் அவசரகால சட்டத்தை அகற்றுவார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. அவருடைய சீர்திருத்தங்கள் யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போலவே அமையும். சிரியாவில் சியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்கள் என்ற பல்வேறு முஸ்லீம் பிரிவுகள் இருப்பதால் அவர்களை இணைத்து ஒரு ஒழுங்குபட்ட புரட்சியை முன்னெடுப்பதில் பல சங்கடங்கள் உள்ளன.

கடந்த 21ம் திகதி ஆரம்பித்த சரிய ஆர்பாட்டங்களில் 20 பேருக்கு மேல் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அதிபர் ஆஸாட் ஆட்சியில் சொற்ப சீர்திருத்தங்களை அறிவித்தாலும் அதிபரும், அவருடைய குடும்பத்தினரும் ஆட்சிக் கட்டிலில் இருந்து வெளியேறாமல் இந்தப் போராட்டம் முடிவடையாது என்றே கருதப்படுகிறது.

http://www.alaikal.com/news/?p=63047

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் ஆர்ப்பாட்டம் உக்கிரம் : அமைச்சரவை ராஜினாமா _

வீரகேசரி இணையம் 3/30/2011 10:10:02 AM Share

சிரியாவில் அரசுக்கெதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சரவை பதவி விலகியுள்ளது.

இதனை அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல்- அஸாட் உறுதிபடுத்தியுள்ளார். பஷார் அல்-அஸாட் கடந்த 11 வருடங்களாக சிரியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தவராவார்.

இந்நிலையில் அங்கு சீர்திருத்தத்தைக் கோரி மக்கள் கடந்த சில வாரங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்தே அந்நாட்டு அமைச்சரவை நேற்று பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 1963 ஆம் ஆண்டு முதல் அங்கு அமுலில் இருந்து வரும் அவசரகால நிலையும் ரத்துச் செய்யப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுமுள்ளமை குறிப்பிடத்தக்கது. __

ஆஸாட்டின் ஆசாடபூதித்தனம் மக்கள் கொதிப்பு !

சிரிய அதிபர் அஸாட் மக்கள் முன்னிலையில் உரையாற்றப்போகிறார், அவசரகால சட்டத்தை விலக்கப்போகிறார் என்று எதிர் பார்த்தவர்கள் வாயில் மண் விழுந்திருக்கிறது. சிரிய அதிபரின் வேடம் ஓர் உருத்திராட்சப் பூனை வேடம் என்று நேற்று முன்தினமே அலைகளில் எழுதியிருந்தோம். அதுபோலவே அவருடைய செயற்பாடும் இருந்தது.

மக்களுக்காக உரையாற்றிய அவர் 50 வருடங்களாக அமலில் இருக்கும் கிழடுதட்டிப்போன அவசரகால சட்டத்தை அகற்ற முடியாது என்று தெரிவித்தார். அவசரகால சட்டத்தை பயன்படுத்தி படுகொலைகள், ஆள்கடத்தல், உரிமைகளை கேட்போரை சிறையில் அடைத்தல் போன்ற கொடுஞ்செயல்களை சிரிய இராணுவம் செய்து வருகிறது. சிரிய அதிபர் ஆஸாட்டின் ஆசாடபூதித் தனமான ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருப்பது அவசரகாலச் சட்டமே. அதை எடுத்தால் மக்கள் போராட்டம் வீதியில் பெருமெடுப்பில் இறங்கும் என்பது அவருக்கு தெரியும்.

அவருடைய பித்தலாட்டத்தனமான உரையைக் கேட்டு வேதனையடைந்த மக்கள் தமக்கு உரிமை வேண்டும் என்று வீதிகளில் கோஷமிட்டு சென்றனர். அவர்களை நோக்கி சிரிய இராணுவம் சகட்டு மேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.

அண்ணன் அதிபர், தம்பி அடுத்த பெரியவர், இன்னொருவர் இராணுவத்திற்கு பொறுப்பு, பொருளாதாரத்திற்கு அடுத்த குடும்பத்தவர் என்று லிபியாவில் கடாபி தனது குடும்பத்தால் ஒரு நாட்டையே ஆட்சி செய்த அதே அவலமே சிரியாவிலும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் லெபனான் பிரதமர் படுகொலை உட்பட பல குற்றச் செயல்களில் சிரியத் தலைமைக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆஸாட்டின் உரை ஜனநாயக ஆர்வலருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை வெள்ளி தொழுகை முடிந்ததும் சிரியாவில் அடுத்த கட்ட ஆர்பாட்டங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை தானும் மக்களை திரட்டி, ஆஸாட் பதவி விலகக்கூடாது என்ற போலி ஆர்பாட்டம் ஒன்றையும் இவர் ஒழுங்கு படுத்தியுள்ளார். மக்களுக்கு எதிராக மக்களையே கொம்பு சீவிவிட வசதியாக இவருக்கு முஸ்லீம்களிடையே உள்ள சியா – சன்னி பிரிவுகள் உதவியாக உள்ளன.

http://www.alaikal.com/news/?p=63296

சிரியாவில் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ள கிளர்ச்சியாளர்கள்–அதிபர் ஆஸாத்திற்கு நெருக்கடி

அவசர நிலை பிரகடனத்தை விலக்கிக் கொள்ளாததைக் கண்டித்து சிரிய அதிபர் ஆஸாத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை பேரணி நடத்துமாறு சிரியா கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தாங்கள் வசிக்கும் ஊர்களில் உள்ள சதுக்கங்களில் கூடி அதிபருக்கு எதிராக போராட வேண்டும் என பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிரியா புரட்சி 2011 எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

11 ஆண்டுகாலமாக அதிபர் பதவி வகிக்கும் ஆஸாத்திற்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகாலமாக அவசர நிலை பிரகடனம் அமுலில் இருக்கும் சிரியாவில் அரசுக்கு எதிராக கடந்த மூன்று வாரங்களாக புரட்சியாளர்கள் போரடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2011/04/01/assad-under-pressure-as-new-sriya-protests-called-aid0090.html

ஆகக்குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்

  • 2 weeks later...

சிரியா மீது போர்க் குற்றம் சுமத்தலாம் மனித உரிமைகள்

கடந்த வெள்ளியன்று சுதந்திரம் கேட்டு வீதிக்கு வந்த மக்கள் மீது கொடுமை மிக்க சிரிய இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்த செயல் மானிட படுகொலை குற்றத்திற்குள் வருவதாக சிரியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சுமத்தியுள்ளது. பொது மக்களை குறிவைத்து கண்ணீர்ப்புகை, துப்பாக்கிப் பிரயோகம் போன்றவற்றை சிரிய இராணுவம் தெட்டத் தெளிவாக மேற்கொண்டுள்ளது. சிரிய அதிபர் ஆஸாட் குற்றமுள்ள ஒருவராக நிற்கிறார் என்றும் அது தெரிவித்தது.

இது நடைபெற்றுக் கொண்டிருக்க ஐ.நா செயலர் பான் கி மூன் சிரிய அதிபருடன் நேற்று சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடி தனது அதிருப்திகளை வெளியிட்டுள்ளார். சிரிய இராணுவம் டாரா நகரத்தில் 17 பேரை சுட்டு படுகொலை செய்தது, பின்னர் வேறு வேறு இடங்களில் சுதந்திரம் கேட்ட 10 பேரை கொன்றது, மரணித்தவர்களை அடக்கம் செய்துவிட்டு வந்த மக்கள் மீது சரமாரியான துப்பாக்கிப்பிரயோகம் செய்தமை யாவும் தமக்கு தெரியும் என்று குறிப்பிட்ட ஐ.நா செயலர், இதற்கான விசாரணைகளை சிரியா சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இது இவ்விதமிருக்க ஏமன் நகரத்தில் இன்று ஞாயிறு நடைபெற்ற ஆர்பாட்ட ஊர்வலங்களில் சிரிய பாணியில் இராணுவம் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளது. இதில் சுமார் 100 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளார்கள். பதவி விலகுவதாக போலி நாடகம் காட்டி பின் தாக்குதல் நடாத்தும் ஐவரிக்கோஸ்ட் காபாக்போ பாணியில் ஏமன் அதிபர் நடந்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=64699

சிரியா அவசரகால சட்டத்தை அடுத்த வாரம் நீக்குகிறது

சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாட் அந்த நாட்டில் 48 வருடங்களாக அமலில் இருக்கும் அவசரகால சட்டத்தை அடுத்த வாரம் நீக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

நேற்று பல்லாயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர் டமாஸ்கஸ் வீதிகளில் தமக்கு சுதந்திர வாழ்வு வேண்டுமெனக்கோரி பாரிய ஆர்பாட்டங்களை நடாத்தினார்கள். உண்மையாகவே சர்வாதிகாரியான பஸார் அல் ஆஸாட்டின் பாத் கட்சி தேர்தல் மூலம் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல. 1963ம் ஆண்டு சதி மூலம் ஆட்சியை கைப்பற்றிய கட்சியாகும். அந்தச் சதிகாரரில் கைதேர்ந்த நயவஞ்சகராக இருந்து 1970 ம் ஆண்டு ஆட்சியை தந்திரமாகப் பிடித்தவர்தான் இன்றய அதிபரின் தந்தை ஹபீஸ் அல் ஆஸாட் அவரைத் தொடர்ந்து 2000ல் ஆட்சிக்கு வந்தவர்தான் இன்றைய இரட்டை நாக்கு அதிபர் பஸார் அல் ஆஸாட்.

இவர் அவசரகால சட்டத்தை வைத்து ஆட்சி செய்து வருகிறார். அங்கு மொத்தம் 43 வருடங்களாக அவசரகால சட்டம் அமலில் இருக்கிறது. இதை எதிர்த்து சுதந்திர வாழ்வு வேண்டுமென மக்கள் போராடுகிறார்கள். 200 பொது ஆர்பாட்டக்காரரை இவருடைய இராணுவம் இதுவரை கொன்று தள்ளியுள்ளது. இவருடைய பதவி நாற்காலிக்கு மக்கள் வேட்டு வைக்கும் நாட்கள் நெருங்குவதால் இப்போது முதல் தடவையாக அவசரகால சட்டத்தை விலத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர் இரட்டை நாக்கு கொண்ட பேர்வழி இதை நயவஞ்சக நோக்குடனேயே அறிவித்துள்ளார் என்று நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். அவசரகால சட்டத்தை ஒப்புக்கு அகற்றிவிட்டு

தனது சர்வாதிகார நாடகத்தை அவர் கச்சிதமாக தொடருவார் என்று டேனிஸ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

http://www.alaikal.com/news/?p=65482

  • 2 weeks later...

சிரிய ஆர்பாட்டங்கள் மோசமான துப்பாக்கிச் சூடுகள்

சிரியப்படைகள் ஆர்பாட்டக்காரர் மீது மோசமான தாக்குதலை நடாத்தியுள்ளதாக இன்றைய திங்கள் மாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் முக்கிய நகரான டீராவிற்குள் நுழைந்து சிரிய படையினரும் தாங்கிகளும் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளன. இவர்களால் கொன்று தள்ளப்பட்ட சடலங்கள் வீதிகள் தோறும் ஆங்காங்கு சிதறிக் கிடப்பதாக கண்கண்ட சாட்சிகள் தெரிவிக்கிறார்கள். சகல இடங்களிலும் மின்சாரத்தை துண்டித்து, தொலைபேசி உரையாடல்களை தடுத்து, சகல புறங்களில் இருந்தும் நாசகார துப்பாக்கிப் பிரயோகத்தை இவர்கள் நடாத்தியுள்ளார்கள்.

ஐந்து சடலங்களை தான் நேரடியாக பார்த்ததாக ஒரு சாட்சி தெரிவித்தார். அதேவேளை பெருந்தொகையானவர்கள் ஜனநாயக முரணாக கைது செய்யப்பட்டுள்ளதாக ராய்டர் செய்திச் சேவை கூறுகிறது. ஆனாலும் போராட்டங்கள் தடையின்றி நடந்து கொண்டிருக்கின்றன. சிரிய சர்வாதிகாரி ஆஸாட் அவசரகால சட்டத்தை இன்னமும் தளர்த்தவில்லை. அதேவேளை தாங்க முடியாத ஊழல் இவருடைய ஆட்சியில் தலைவிரித்தாடுகிறது. இதுவரை 350 ஆர்பாட்டக்காரர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களில் மட்டும் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=66726

  • 1 month later...

சிரியா மீது பொருளாதார தடை: கனடா அறிவித்தது

சிரிய அரசு மீதும், சிரிய ஜனாதிபதி மீதும் கனடா பொருளாதார தடைவிதித்துள்ளது. இதனை கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெய்ர்ட் தெரிவித்தார்.

சிரிய அரசு நிர்வாகத்தினர் மீது பொருளாதார தடை, பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. சிரியாவில் அமைதிப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் சிரிய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை ஒடுக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிரியா நாட்டைச் சார்ந்த குறிப்பிட்டத் தலைவர்கள் கனடாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கனடாவில் இருந்து சிரியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடையை தொடர்ந்து கனடா-சிரியா இருநாட்டு நல்லுறவு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஆயுதங்கள், அணு சக்தி மற்றும் இதர நிலைப்பாட்டு பொருட்கள், தொழில்நுட்ப பொருட்கள் ஆகியவற்றை சிரியாவுக்கு ஏற்றுமதி செய்யவும் கனடா தடைவிதித்துள்ளது.

தடை நடவடிக்கை உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக அமைச்சர் பெய்ர்ட் குறிப்பிட்டார். கடந்த மார்ச் மாதம் சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் மக்களை ஒடுக்குவதற்கு சிரிய அரசு நிர்வாகம் சர்வதேச அமைதி நடவடிக்கையை மீறி செயல்பட்டு வருகிறது.

சிரிய அரசு ராணுவத் தாக்குதலில் பல நூறு மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அதே போன்று ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களையும் சிரியா கைது செய்துள்ளது என கனேடிய அமைச்சர் பெய்ர்ட் குறிப்பிட்டார்.

http://www.newsonews.com/view.php?22UOld0bcO80Qd4e2eMM202cBnB2ddeZBnV303eCAA2e4C08qacb2lOe42

  • 2 weeks later...

சிரியா: கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதலில் 120 இராணுவ வீரர்கள் பலி

பெய்ரூட், செவ்வாய், 7 ஜூன் 2011( 18:41 IST )

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 120 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத்தின் 40 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் நாடு முழுவதும் 1,200 பேர் பலியானதால், அதிபர் மீது மக்கள் கோபம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இராணுவம் தனது கவனத்தை துருக்கியையொட்டி உள்ள எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் ஜிசர் அல் ஷூக்கூர் நகரில் திருப்பியது.

இந்த நகரில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் பிரதர்குட் அமைப்பினரின் செல்வாக்கு அதிகம். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 120 இராணுவ வீரர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1106/07/1110607044_1.htm

துருக்கிக்குள் மேலும் சிரியா அகதிகள் வருகை

சிரியாவில் அந்த நாட்டு ராணுவத்திற்கும் அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் துருக்கி - சிரியா எல்லைப்பகுதியிலிருந்து மேலும் 122 பேர் துருக்கிக்குள் அகதிகளாக வந்துள்ளனர்.

இத்துடன் சேர்த்து 450 சிரியா அகதிகள் துருக்கிக்குள் நுழைந்துள்ளனர். அனைத்து அகதிகளையும் துருக்கியின் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இணையான செம்பிறை சங்கம் பாதுகாப்பாக முகாம் அமைத்துத் தங்கச் செய்துள்ளது.

வடக்கு சிரியாவில் நடந்த சண்டையில் காயமடைந்து துருக்கிக்கு வந்து சேர்ந்த 30 அகதிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக துருக்கி அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1106/08/1110608036_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.