Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ்ப் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரின் சித்திரவதை வழமை போலவே

Featured Replies

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ்ப் பகுதிகளில் இராணுவத்தினதும் பொலிஸாரினதும் சித்திரவதை என்பது வழமை போலவே நடைபெற்று வருகிறது என்று லங்கா கார்டியன் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்ப்பகுதிகளில் இருக்கும் இராணுவத்தினரும் பொலிஸாரும் தமக்கு வேண்டியவர்கள் தரும் முறைப்பாட்டிற்கமைய பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு சித்திரவதை செய்வதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தமக்கு நேரடியாகவே இவ்வாறான முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் லங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தமக்கு கிடைத்த முறைப்பாடொன்றைச் சுட்டிக்காட்டிய லங்கா கார்டியன் குற்றம் சுமத்தப்பட்டவர் மட்டுமல்லாது அவருடைய தந்தை மற்றும் அயலவர் கூட சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் இரு தரப்பாரிடையே ஏற்பட்ட சச்சரவு ஒன்றில் தமக்கு வேண்டியவர்களுக்காக மறுதரப்பைச் சேர்ந்த இளைஞரை இராணுவத்தினர் நள்ளரவில் அவரது வீட்டிற்குச் சென்று கைது செய்து அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து சித்திரவதை புரிந்துள்ளனர். அவர் மயங்கிவிழும் வரை இராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.

மறுநாள் வேலையால் வந்த இவ்விளைஞனின் தந்தையார் மகனுக்கு நடந்த நிலைமை குறித்து அறிந்து அயலவர் ஒருவருடன் மகனைப் பார்க்க இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளார்.

இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் கூட தடுத்து வைத்துத் தாக்கி உள்ளனர். அயலவர் மறுநாள் விடுவிக்கப்பட்டார். தந்தையார் இரண்டு நாட்களின் பி;ன்னரே விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட தந்தையார் யாழ். மனித உரிமைகள் ஆணையகத்தில் தமக்கு நேர்ந்த சித்திரவதை குறித்து முறையிட்டதோடு. தமது மகன் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றமை பற்றியும் முறையிட்டார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படக் கூடாது என்று மனித உரிமை ஆணையகம் பொலிஸார் மீது மேற்கொண்ட அழுத்தத்தை அடுத்து அவ்வளைஞன் தற்போது விளக்கமறியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் பின்னரே அவர் மீதான சித்திரவதை முடிவுக்கு வந்தது.

தற்போது அவர் மீதான வழக்கு ஏப்ரல் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்தினர் இவ்வாறு சட்டத்தை தமது கையிலெடுத்து செயற்பட்டமைக்குக் காரணம் இந்த இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கும் சுதுநோனா என்று இராணுவத்தினரால் அன்பாக அழைக்கப்படும் அன்ரி ஒருவர் தனது தங்க நகை காணாமல் போய்விட்டது என்றும் அதற்கு இந்த இஞைர் தான் காரணம் எனவும் முறைப்பாடொன்றை இராணுவத்தினருக்குக் கொடுத்திருந்ததே எனத் தெரிய வருகிறது.

சுது நோனா போம ஹொந்தாய். அபிட்ட தே, கோப்பி, பாயாசங்கடலை தெனவா ( வெள்ளை அன்ரி ரொம்ப நல்லவ, எங்களுக்கு தேநீர், கோப்பி, பாயாசம், கடலை தாறவ) என்று அருகிலிருக்கும் இராணுவ வீரர் ஒருவர் அந்த அன்ரி குறித்து சான்றிதழ் வழங்கி இருக்கிறார்.

globaltamilnews

இந்தச் சம்பவம் இராணுவத்தினரதும் பொலிஸாரினதும் இவ்வாறான நடத்தைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது.

எந்தவொரு சம்பவம் குறித்தும் எவர் மீதும் விசாரணை நடத்துவதெனினும் குற்றம்சாட்டப்பட்டவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படாமலிருப்பது உறதி செய்யப்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்படுபவர் அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என்பது எத்தகைய விசாரணையின் போதும்; பின்பற்றப்பட வேண்டிய ஒரு நடைமுறை என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

அவ்வாறான விசாரணை ஒரு நீதியான நியாயமான விசாரணையாக அமைதல் வேண்டும் என்றும் லங்கா கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

மாறிவரும் உலக ஒழுங்கில் சர்வதேச கதவுகளை புலம்பெயர் மக்கள் தொடர்ச்சியாக தட்டியவண்ணம் இருக்கவேண்டும். சிங்களத்தின் கொடூர முகத்தை உலகிற்கு சொல்லியவர்களாக நாம் இருக்கவேண்டும். நாம் வாழும் நாடுகளில் அரசியல்வாதிகளிடம் நிலைமைகளை கூறவேண்டும். அங்கு தேர்தல் காலங்களில் இதையும் எமது பட்டியலில் சேர்க்கவேண்டும்.

இல்லையேல் எமது இனம் எமது கண்முன்னே அழிவதை நாம் மட்டுமே கண்டவர்களாகவும் கதைத்தவர்களாக சரித்திரத்தில் இடம் எடுத்துவிடுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ்ப் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரின் சித்திரவதை வழமை போலவே

இனியாவது எல்லா பேதங்களையும் விட்டுட்டு ஈழத்தமிழர் நாங்களாவது ஒண்டாய்ச்சேர்ந்து புது உலகம் படைப்போம். வாங்கோப்பா.... :( :( :(

புலிகளையே எப்போதும் குற்றம் சாட்டுவோருக்கு, புலிகளுக்கு முன்னான நிலையும் பின்னான நிலையும் ஈழப் பிரதேசத்தில் எப்போதும் ஒன்றுதான் என்னும் சவுக்கடி இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.