Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ மயமாக்கல் - டக்ளஸின் தேவையற்ற தலையீடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் சரவணபவன் காட்டம்

Featured Replies

இராணுவ மயமாக்கல் - டக்ளஸின் தேவையற்ற தலையீடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் சரவணபவன் காட்டம்

வடக்கிலே மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் சிறிலங்காவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தேவையற்ற தலையீடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நேற்று (07.04.11) நாடாளுமன்றத்தில் காட்டமாக விசனம் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் சகலவிதமான நிர்வாகப் பணிகளும் இராணுவ மயமான பாணியிலேயே இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட இவர், எந்த விடயத்திலும் ஆளுனரோ, படை அதிகாரிகளோ தலையிடும் நிலை உருவாகியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:'

முப்பது வருடங்களின் பின்பு அபிவிருத்திக் காற்று மெல்ல மெல்ல வடக்கை நோக்கி வீச ஆரம்பித்திருக்கின்றது. அடிக்கடி இடம்பெறும் அடிக்கல் நாட்டு விழாக்களும் எப்போதாவது ஒருமுறை இடம்பெறும் திறப்பு விழாக்களும் எமது மக்கள் மத்தியில் சில எதிர்பார்ப்புக்களை உருவாக்கி வருகின்றது.போர் ஓய்ந்த பின்பு அமைதி நிலவும் ஒரு சூழலில் எமது தேசம் ஒரு வளரும் நாடு என்ற வகையில் இது ஒரு பெரிய அதிசயமுமல்ல ஆச்சரியமுமல்ல.

ஆனால் 30 வருடங்கள் அபிவிருத்தியில் பின்னடைந்து போயிருந்த வடக்கு கிழக்குப் பகுதிகள் முறையானதும் மக்களுக்குப் பயன்தரும் வகையிலும் அபிவிருத்தித் திட்டங்களை வேண்டி நிற்பதை எவரும் தவறென்று கூறிவிட முடியாது. ஆனால் இப்படியான திட்டங்கள் நிறைவேறவும் அவற்றின் பலாபலன்கள் மக்களுக்குச் சென்றடையவும் ஓர் அமைதியான, சுமுகமான சூழல் நிலவ வேண்டியது அவசியமாகும். அது மட்டுமன்றி அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையே ஒரு அன்னியோன்னியமான உறவு நிலவ வேண்டும். மக்கள் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அச்சமின்றியும் திறந்த மனத்துடனும் தெரிவிக்கக் கூடிய ஒரு சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அப்படி ஒரு சூழல் உருவாகதவாறு தடைக்கற்களாக இடையில் சில சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இது அபிவிருத்தி நடவடிக்கைகள் சரியானதாகவும் நேர்மையானதாகவும் முன்னெடுக்கப்படுவதை மக்கள் கண்காணிக்கவும் பங்களிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.அரசுக்கும் மக்களுக்குமிடையே உறவுப் பாலமாக விளங்கி வருபவர்கள் அரச அதிகாரிகளே!. மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் திட்டங்களை வகுத்து நிர்வாகத்தை மேற்கொள்வது அவர்களின் பாரிய பொறுப்பாகும்.ஆனால் யதார்த்தமோ அவர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாத வகையில் வெளித்தலையீடுகள் மூலம் அவர்களின் மேல் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. அவர்கள் சில சக்திகளின் கட்டளைகளுக்கு ஏற்பவே பணியாற்ற நிர்ப்பந்திக்கப்டுகின்றனர். இதன் காரணமாக இன்று வடக்கில் சிவில் நிர்வாகம் இடம்பெறுகின்றதா அல்லது இராணுவ ஆட்சி இடம்பெறுகின்றதா என்று சந்தேகப்படும் வகையில் சம்பவங்கள் இடம்பெறுகினறன.

ஒரு மாகாண சபைக்கு ஆளுனர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் எனப் பல்வேறுப்ட அதிகார பீடங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அதிகாரங்களும் பணிகளும் உண்டு. ஆளுனர் மத்திய அரசின் பிரதிநிதியாகவே செயற்படுவார். முதலமைச்சரோ, அமைச்சர்களோ இல்லாத பட்சத்தில் அமைச்சின் செயலாளர்களே அமைச்சர்களின் பணிகளை மேற்கொள்வர். இவ்வழிமுறை சட்டபூர்வமானது மட்டுமன்றி காலம் காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் வழிமுறையும் கூட.ஆனால் வடக்கு மாகாண சபையின் ஆளுனரோ முழு அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக் கொண்டு சகலவற்றையும் தனது கட்டுப்பாட்டின் கீழே இயங்க வைக்கிறார்.இவர் ஓர் இராணுவ அதிகாரி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இராணுவ நிர்வாகம் வேறு. சிவில் நிர்வாகம் என்பது வேறு. ஒரு இராணுவ அதிகாரி தனக்கு இடப்படும் கட்டளைக்கு கேள்விக்கு இடமற்ற வகையில் கீழ்ப்படிய வேண்டும். அதேபோல் அவர் இடும் கட்டளைகளையும் கீழ் உள்ளவர்கள் அப்படியே நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் சிவில் நிர்வாகம் என்பது அப்படியல்ல. எல்லா விபரங்களும் ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். திறந்த விபரங்கள் மூலம் சரியான தீர்வுகள் எட்டப்படும். நிறைவேற்றப்படும் திட்டங்களும் சிவில் சமூகத்தால் கண்காணிக்கப்படும்.

வடக்கிலோ சகலவிதமான நிர்வாகப் பணிகளும் இராணுவமயமான பாணியிலேயே இடம்பெறுகின்றன. எந்த விடயத்திலும் ஆளுனரோ, இராணுவ அதிகாரிகளோ தலையிடும் நிலை உருவாகியுள்ளது.கிளிநொச்சியில் மக்களுக்கு வழங்குவதற்காக இந்தியா கொடுத்த கூரைத் தகடுகள் மக்களுக்கு வழங்கப்படாமலே அங்கு வைக்கப்பட்டிருந்தது. அது பற்றிக் கேட்ட போது இராணுவம் அனுமதி தரவில்லை எனக் கூறப்பட்டது.

ஆனால் அவற்றில் ஒரு பகுதி இராணுவம் தமது தேவைகளுக்கு எடுத்துச் செல்வதாக மக்களால் புகார் கூறப்பட்டது. காணிகள் தொடர்பான பிரச்சனைகளை நிர்வகிக்க காணி அதிகாரிகள் உண்டு அவர்கள் சமூகமளிக்காத சந்தர்ப்பங்களில் பிரதேச செயலர், அரச அதிபர் என உயர் அதிகாரிகள் உள்ளனர். ஆனால் கிளிநொச்சியிலோ காணிப் பிரச்சனைகளில் இராணுவ அதிகாரிகள் நேரடியாகவே தலையிடுகின்றனர். குடியேற்றத் திட்டங்களில் பல வருடங்கள் ஒரு காணி பராமரிக்கப்படாமல் விடப்பட்டால் அதன் உரிமம் ரத்துச் செய்யப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்படுவது வழமையாக சட்டபூர்வமான வழிமுறை. இப்போது முன்பு இரத்துச் செய்யப்பட்ட உரிமையாளர்கள் பழைய அனுமதிப்பத்திரங்களைக் காட்டி இராணுவத்தின் உதவியுடன் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை அபகரிக்கினறனர்.

அதுமட்டுமன்றி தங்கள் காணிகளை இலட்சக்கணக்கான ஷரூபா விலைக்கு விற்றவர்கள் கூட தங்கள் பழைய அனுமதிப்பத்திரங்களைக் காட்டி இராணுவ உதவியுடன் உரிமை கொண்டாடுகின்றார்கள்.ஆனால், சிவில் நிர்வாகம் சுதந்திரமாகச் செயற்பட்டால் அவர்கள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும்.வடக்கில் எந்த ஒரு பொது நிகழ்வு இடம்பெற்றாலும் அதில் இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதிப்பாகிவிட்டது. அப்படி ஒரு விழாவுக்கு அவர்கள் அழைக்கப்படாவிட்டால் அவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் நிலமை உருவாகிவிட்டது. பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு விழாக்கள் கூட இந் நடைமுறைகளுக்குத் தப்ப முடியாது. இது ஒரு இராணுவமயப்பட்ட தோற்றப்பாட்டையே ஏற்படுத்துகிறது. அது மட்டுமன்றி சிவில் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பணியாளர்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு இராணுவ மேலாதிக்கம் மேலோங்கும் நிலையொன்று உருவாகிறது.பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது அமைச்சுச் சாராத பிரச்சனைகளிலும் தலையிடுவார். அவர் தனக்கு அதிகாரமில்லாத விடயங்களிலும் தலையிட்டு வாக்குறிகளை வழங்குவது, தானே தீர்த்து வைக்கப் போவதாகப் பாசாங்கு செய்து பிரச்சனைகளைத் திசை திருப்புவது, சில மக்கள் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது, சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.குறிப்பாக நாவற்குழியில் சிங்கள மக்கள் சட்டவிரோதமாகக் குடியேற்றியது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வெளிக்காட்டி வடபகுதி மக்களின் கோபாவேசத்தைத் திசை திருப்பினார். அதைத் தீர்க்கும் அதிகாரத்தை ஐனாதிபதி தனக்கே வழங்கிவிட்டதாகவும் கூறினார். அது இன்றுவரை தீர்க்கப்படவில்லை. விடயமும் ஆறின கஞ்சி பழங் கஞ்சி என்ற நிலைக்குப் போய்விட்டது. இப்போதும் சிங்கள மக்கள் அங்கேயே குடியிருக்கின்றனர்.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி வந்து வலைகளை அறுத்தெறிந்த 136 இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் பிடித்து காவற்துறையினரிடம் ஒப்படைத்த போது கனிமொழிக்கு, தமிழக முதல்வருக்குக் கடிதங்கள் எழுதி ஆரவாரம் செய்தார். அதன் பின்பும் இந்திய மீனவர்கள் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். அமைச்சரோ எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப் பிரச்சனைகளில் மீள் குடியேற்ற அமைச்சரோ, மீன்பிடித்துறை அமைச்சரோ அழைத்து வரப்பட்டு பிரச்சனைகளை நேரடியாகக் காண வைத்திருந்தால் சில சமயங்களில் ஏதாவது பலன் கிடைத்திருக்க முடியும்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில் ராஐபக்ஷ அவர்கள் ஒருமுறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கின் அரசனாக இருக்கலாம், ஆனால் அபிவிருத்தி வேலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே இந்த இடைத்தரகர்கள் எவ்வித பயனள்ள பணிகளையும் செய்யப்போவதில்லை என்பதை எமது அனுபவங்கள் தெளிவாகவே புலப்படுத்துகின்றன. மாறாக இவர்களால் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்தி மக்களை ஏமாற்றும் பணியை மட்டுமே செய்ய முடியும்.எமது மக்கள் சுதந்திரமான, சுமுகமான, அமைதியான ஒரு சுழலிலே வாழ விரும்புகின்றனர். இராணுவக் கெடுபிடிகள், தலையீடுகள் அற்ற ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பையே வேண்டி நிற்கின்றனர். இங்கு இனி மேற்கொள்ளப்படப்போகும் அபிவிருத்திப் பணிகள், மக்களை சென்றடையவும், மக்கள் அவற்றுக்குத் தங்கள் பங்கை வழங்கவும் ஒரு சுமுகமான தலையீடுகள் அற்ற நிலமையை எதிர்பார்க்கிறோம'; என நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நாடாளுமன்றத்தில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={E5E8E37A-1D68-4D07-B5B1-7C82EB817792}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.