Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்!

வியாழக்கிழமைஇ ஏப்ரல் 14இ 2011இ 12:46ஜஐளுவுஸயு யு யு

மேலும் படங்கள்

குசநந நேறளடநவவநச ளுபைn ரி

யுனள டில புழழபடந

டுழழமiபெ வழ அழஎந hழஅந? றறற.குiனெயீசழிநசவல.உழஅ

குiனெயீசழிநசவல.உழஅ hயள வாந டயவநளவ ருமு pசழிநசவல கழச ளயடந யனெ சநவெ

தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும்இ ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் நம்பப்படும் (இன்னமும்) ரஜினிகாந்த்இ இந்த விஷயத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சறுக்கியிருக்கிறார்.

நேற்று அவர் வாக்களித்த போதுஇ எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போதுஇ ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது.

அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர் புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும். அவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை!

ஓட்டுப் போட்ட கையோடுஇ வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரைஇ ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்கஇ அவரும் ஊழல்இ விலைவாசிஇ விவசாயிகள் நலன்இ அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும்இ முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேரஇ ஆட்சி மேலிடம் ஏக அப்செட்.

இந்த நிலையில்இ நேற்று மாலையே முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல் ரஜினிக்கு. ரஜினி ஓட்டுப் போட்ட விவகாரம் முதல்வருக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டதால்இ ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்.

முதல்வருடன் இருந்த ஒரு முக்கிய அதிகாரி நம்மிடம் இப்படிச் சொன்னார்: "படம் ஆரம்பிக்குமுன்இ அங்கு நின்றிருந்த வைரமுத்துவிடம்இ 'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா.. வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?"இ என்று முதல்வர் கேட்கஇ இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்த ரஜினிஇ படம் முடிந்த கையோடுஇ காரில் ஏறிப் பறந்தாராம்!

ஆட்சியாளர்களிடம் மிகுந்த நெருக்கமாக இருந்த ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம்இ அந்த 'பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர்' கம் விமர்சகர்தான் என்றும் உடன் படம் பார்த்தவர்களிடம் கமெண்ட் அடித்தாராம் முதல்வர்!

ஏற்கெனவே 2004ம் ஆண்டு தேர்தலில் பாமக மீதான கோபத்தில்இ அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறி ரஜினி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

நன்றி-தற்ஸ்தமிழ்கொம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி பேச்சு?-வறுத்தெடுத்த முதல்வர்!

ரஜனி தேர்தல் பிரச்சாரம் நடக்கும் போதே....

தனது ஆதரவை ஜெயலலிதாவுக்கு என்று முன்பே, அறிவித்திருந்தால்,

கருணாநிதி படுதோல்வியை சந்திக்க வேண்டி வந்திருக்கும்.

அவர் கடைசி நேரத்தில் வாக்குச் சாவடியில் வைத்து.... ஜெயலலிதாவுக்கு வாக்குப் போட்டதன் மூலம் கருணாநிதிக்கு நன்மையே செய்திருக்கிறார். வாக்குச் சாவடிக்குள் புகைப்படக் காரரை ஒரு எல்லைக்கு மேல், படம் எடுக்க அனுமதித்ததற்கு அங்கு காவல் கடமையில் ஈடுபட்ட தமிழக காவல் துறையினரே.... பதில் சொல்ல வேண்டும். கருணாநிதியின் பேரப்பிள்ளைகளின் சினிமா ஆதிக்கத்தால்.... சினிமாத்துறையினர் கருணாநிதியின் மேல் வெறுப்பாக உள்ளதை கருணாநிதி அறியாமல் இருப்பதுதான்.... ஆச்சரியம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.