Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் இடையிலான முறுகல் நிலையில்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் இடையிலான முறுகல் நிலையில்?

15 ஏப்ரல் 2011

ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் இடையிலான முறுகல் நிலை உச்சமடைந்துள்ளதை நேற்று நடைபெற்ற சம்பவம் ஒன்றும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற புதுவருட சம்பிரதாய வைபவத்தில், ஜனாதிபதி இளைய சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ மாத்திரமே கலந்துக்கொண்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ அவரது குடும்பத்தினரோ இந்த வைபவத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

ஏனைய வருடங்களில் ஜனாதிபதியுடன், இந்த வைபவத்தில் கலந்துக்கொள்ளும், அவரது மூத்த சகோதரர் ஷமல் ராஜபக்ஷவும் நேற்றைய வைபவத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

பசில் ராஜபக்ஷவை வெட்டும் மற்றுமொரு நடவடிக்கையாகவே, பாதுகாப்புச் செயலாளர் தற்போது, அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகள் தொடர்பில் தனது பிடியை இறுக்கி வருகிறார். பசில் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு, மேர்வின் சில்வா விடுத்த கோரிக்கையினால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ், கோத்தபாய மற்றும் ஜனாதிபதியின் குடும்பத்தினர் அதிருப்தி கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக மேர்வின் சில்வாவின் சிஷ்யர்களை கைதுசெய்து, சிறையில் அடைத்து, மேர்வின் சில்வாவின் சிறகுகளை வெட்டி, பசிலை மட்டம் தட்டும் வகையில், திடீரென நித்திரையில் எழுந்தவர்கள் போல், பேலியகொட மீன் சந்தையில் கப்பம் வெற்றவர்களின் கைது நடவடிக்கை அமைந்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவர் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, எதிர்க்கட்சிக்குள் ஒற்றுமையின்மை ஆகிய நிலைமைகளில் தேவை ஏற்படும் பட்சத்தில் பசில் ராஜபக்ஷவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவது தொடர்பாக பலம்வாய்ந்த வெளிநாடு ஒன்றின் தூதரக மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக அலரி மாளிகைக்கு அறியக்கிடைத்ததன் பின்னர் பசில் ராஜபக்ஷவை புறந்தள்ளும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

gtn

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள் இடையிலான முறுகல் நிலையில்?

Basil gets axed more sharply – Basil absent for President’s Carlton House New year meals

முந்தியும் ஒருக்கால்....,

சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த போது.....

புதுவருச இரவு விருந்துக்கு, தோசை சுட்டு.... குடும்பதினரை அழைத்த போது.....

தள்ளாத வயதிலும், தாய் சிறிமாவோ பண்டாரநாயக்கா கலந்து கொள்ள,

தம்பியார் அநுரா பண்டாரநாயக்கா கலந்து கொள்ளவில்லையாம்.

அதுக்குப் பிறகு.... அந்தக் குடும்பம் பட்ட பாடு.... கொஞ்சமா? நஞ்சமா?

மா புளிக்கிறது, அப்பத்துக்கு நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.