Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே?

ப.திருமாவேலன்

இறைவனின் வரைபடத்திலேயே விடுபட்டுப் போனவன் ஈழத் தமிழன் என்பதை இந்த உலகம் உணர்ந்து இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது!

ஈழம் குறித்து யார் எழுத உட்கார்ந்தாலும், வார்த்தைகளில் வறட்சியும் கடைசித் துளிக் கண்ணீரும் கரைந்துபோன சூழலே எச்சமாக இருக்கிறது.

''2009 ஜனவரி மாத மத்தியில் நான் மோட் டார் சைக்கிள் ஒன்றில் விசுவமடுவுக்குக் கிழக்கால், எனது நண்பர் ஒருவரைத் தேடிச் சென்றுகொண்டு இருந்தேன். ஒரு வீட்டின் முன்புறம் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது மனைவி அருகில் சமைத்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள். எனது நண்பரின் முகவரியைச் சொல்லி விசாரித்தபோது, சுமார் 50 பேர் கூடியிருந்த இடத்தை அவர் சுட்டிக்காட்டினார். அங்கே போவதற்காக நான் எனது மோட்டார் சைக்கிளை உசுப்பினேன். மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணெயைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்தி வந்தேன் என்பதால், அது ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணியது. அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம். உள்ளுணர்வின் தூண்டுதலால் அது ஒரு குண்டு என்பதைப் புரிந்துகொண்டு நான் சடாரென்று தாவி பக்கத்தில் இருந்த குழிக்குள் விழுந்தேன். அருகில் பெரிய வெடிச் சத்தம். சில நிமிடங்கள் கழித்து தலையை உயர்த்திப் பார்த்தேன். எனக்கு வழி சொன்ன ஆளின் கால்களுக்கு இடையேதான் குண்டு விழுந்து இருந்தது. அந்த ஆளைக் காணவில்லை. இரண்டு பெண்களும் இறந்துகிடந்தார்கள். அவரின் மனைவியின் கால்கள் இரண்டும் குண்டு வெடித்ததில் பிய்த்துக்கொண்டு போயிருந்தது. 'என்னை விட்டுவிட்டுப் போகாதே. காப்பாற்று...’ என்று அந்தப் பெண்மணி என்னிடம் கெஞ்சினார். நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லத்தான் விரும்பினேன். ஆனால், அருகில் மருத்துவமனை இல்லை. என்னால் முடிந்தது, அவரது உயிர் பிரியும் வரை அவர் அருகில் சிறிது நேரம் நிற்க முடிந்ததுதான்!'' என்று தொடங்குகிறார் வால்டர் வில்லியம்ஸ் என்ற இளைஞர். இந்தக் கட்டுரை எப்படி முடிகிறது என்பதையும் பார்த்தால் தான், 18 கல் தொலைவில் எப்படிப்பட்ட நாசம் நடந்தது என்பது தெரியும்.

''உயிர் வாழ்வதைப்பற்றி எவருக்குமே கவலை இல்லை. அங்கே இருந்த மருத்துவமனை செயல் படாமல் இருந்தது. மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லை. எப்போது வேண்டுமானாலும் மரணம் தாக்கலாம் என்ற நிலையில், அங்கே இருந்தவர்கள் தமது உறவினர்களோடு நெருக்கமாக இருக்க விரும்பியதைப் பார்த்தேன். சாகும்போது எல்லோரும் ஒன்றாகச் சாக வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிடக் கூடாது என்பது மட்டும்தான் அவர்களின் ஒரே எண்ணம். போராளிகளுக்கும் எந்தவித வாய்ப்பும் இருக்கவில்லை. சண்டை போடுவது அல்லது சாவது என்ற நிலையில் அவர்கள் போரிட்டுக் கொண்டு இருந்தார்கள். அங்குதான் நான் அது வரை பார்த்திராத, இனிமேல் ஒருபோதும் பார்க்க விரும்பாத அந்தக் காட்சியைப் பார்த்தேன். பசிகொண்ட நாய்கள் சுற்றிலும் சிதறிக்கிடந்த மனிதர்களின் உடல் உறுப்புகளைக் கடித்துக் குதறி தங்கள் பசியை ஆற்றிக்கொண்டு இருந்தன. எங்கு பார்த்தாலும் மரணத்தின் துர் நாற்றம். சாவுப் பறை அடிப்பதுபோல குண்டுகள் தொடர்ந்து வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தன. சாலை ஓரங்களில் காயம்பட்ட போராளிகள் குவியல் குவியலாகக்கிடந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு செஞ்சிலுவைச் சங்கத்தை சிங்கள ராணுவம் அனுமதிக்கவில்லை. 'யாராவது சயனைட் கொடுத்து எங்களைக் கொன்றுவிடுங்களேன்’ என்று அந்தப் பெண்கள் கதறிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த இரவில் எங்காவது படுத்துத் தூங்க வேண்டும் என்று பாதுகாப்பாக ஓர் இடத்தைத் தேடினேன். ஒரு டிராக்டர் இருந்தது. அதன் கீழே போர்வை போர்த்திக்கொண்டு ஒருவர் படுத்திருப்பது தெரிந்தது. நானும் இங்கே படுத்துக்கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் அமைதியாக இருந்தார். சரியென்று நான் அவர் அருகில் படுத்துக்கொண்டேன். காலை விழித்து எழுந்தபோதுதான், என் அருகில் படுத்திருந்தது மனிதர் அல்ல.... சில மணி நேரங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஒருவரின் பிணம் என்பது தெரிந்தது!'' இப்படி முடிகிறது அந்தக் கட்டுரை!

பிணங்களோடு நடைபிணங்களாய் நம் தமிழர்கள் கிடந்தார்கள். இப்போதும் கிடக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னாலும் இதில் எந்த மாற்றமும் இல்லை.

இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியல் தீர்வு குறித்து அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்ஷே பேசினாலும்... சென்னை தீவுத் திடலில் சோனியா சொல்லிச் சென்றாலும்... செத்த தமிழனுக்கு நிவாரணமும் இல்லை. வாழும் தமிழனுக்கு வழிவகையும் காட்டப்படவில்லை.

''போரின் இறுதிக் காலகட்டத்தில் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 13,130 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்த கருத்தரங்களில் தகவல் தரப்பட்டுள்ளது. இரண்டுக்கு மேற்பட்ட சாவுகளை 'வெறும் புள்ளிவிவரங்கள்’தான் என்பார்கள். ஆனால், முள்ளிவாய்க்கால் சோகம் உலக அரங்கில் புள்ளிவிவரங்களுக்குக்கூட பயன்படுத்த முடியாமல் கிள்ளி எறியப்பட்டது.

இதில் முதலும் கடைசியுமான நம்பிக்கையாக இருப்பது ஐக்கிய நாடுகள் சபை கொடுத்திருக் கும் அறிக்கை! உலகம் தடை செய்த அத்தனைக் குண்டுகளையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்தி, ஓர் இனத்தின் பாதிப் பேரை அழித்தும் சிதைத்தும் முடித்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தது அந்தச் சபை. தமிழ் சினிமாவின் கடைசி நேர போலீஸாக வந்து இன்றைக்கு விசாரணையைத் தொடங்கி உள்ளது.

இந்தோனேஷிய முன்னாள் தலைமை நீதிபதி மர்ஸ¨கி தருஸ்மான், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னா ஆகிய மூவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக இருந்து, தங்களது விசாரணையைச் சட்டத்துக்கு உட்பட்டும், மனிதாபிமான நெறிமுறைகளைப் பின்பற்றியும் நடத்தி முடித்து இருக்கிறார்கள். 220 பக்கங்கள் கொண்டதாக அறிக்கை தயார். இலங்கை அரசாங்கத்தின் அத்தனை சால்ஜாப்பு விளக்கங்களையும் புறம் தள்ளி இவர்கள் தங்களின் தீர்ப்பை எழுதி உள்ளார்கள். ராஜபக்ஷே எத்தகைய தந்திர வலைகளைத் தயாரித்தாலும், இந்த விசாரணை வளையத்தில் இருந்து தப்பிப்பது இனி சிரமம்!

மகிந்த ராஜபக்ஷேவின் கண்களில் முதன் முதலாகப் பயம் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், சிங்களவர்களுக்குத் தான் செய்து கொடுத்த நன்மையாக இதை உருவகப்படுத்தும் காரியங்களை அவர் பிரசாரம் செய்து வருகிறார். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இடங்களை அவரது கட்சிதான் கையில் வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர் தலில் மொத்தம் உள்ள 234 இடங்களில் ராஜ பக்ஷேவின் கூட்டணி 205 இடங்களைப் பிடித் தது. முக்கிய எதிர்க் கட்சியாகச் சொல்லப்படும் ஐக்கிய தேசியக் கட்சி 9 இடங்களைத்தான் பிடித்தது. அதாவது, இலங்கையில் சுதந்திரா கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும்தான் சரிக்குச் சமமான பலத்துடன் இருந்தன. ஆனால், இன்று சுதந்திரா கட்சி யானையாகவும் ஐக்கிய தேசியக் கட்சி எறும்பாகவும் சுருங்கிவிட்டன. எதிர்க் கட்சித் தலைவராக கம்பீரமாக வலம் வந்த ரணில் விக்கிரமசிங்கே இருக்கும் இடமே தெரியவில்லை. எனவே, ராஜபக்ஷே வைத்தது தான் சட்டம். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக வர முடியாது என்கிறது இலங் கையின் அரசியல் அமைப்பு. அதையே தனது பெரும்பான்மை வாக்குகளால் மாற்றிவிட்டார் மகிந்தா. 'இதன் தொடர்ச்சியாக மேலும் சில பயங்கரங்கள் அரங்கேற இருக் கின்றன’ என்கிறார்கள் கொழும்பு செய்தியாளர்கள்.

''சிங்கள இனத்தின் அசைக்க முடியாத மனிதராக உருவகப்படுத்திக்கொள்ளும் ராஜபக்ஷே, தன்னை இலங்கையின் மாமன்னராக ஆக்கும் காரியங்களை மறைமுகமாகத் தொடங்கிவிட்டார். அதாவது மக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, மன்னர் ஆட்சிக் காலம் இலங் கையில் வெகு சீக்கிரமே ஆரம் பமாக இருக்கிறது. 'லங்க ரட்ட’ என்று சொல்லப்படும் மன்னர் ஆக ராஜபக்ஷேவை முடிசூட்டப்போகிறார் கள்!'' என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. சிங்கள இனத்தின் பெருமை பேசும் 'மகா வம்ச’ வரலாற்றுப் புத்தகத்தைத் திருத்தி எழுதும் காரியங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தி, தமிழர்களை மிகமிகச் சிறுபான்மையினர் ஆக்கவும் மறைமுகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ''இலங்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அதன் ஜனநாயகத் தன்மையைப் பாதிக்கும்'' என்று அமெரிக்க அதிகாரி பி.ஜே.குரோவ்லி கொடுத்து இருக்கும் எச்சரிக்கை, தமிழர்களுக்கு மட்டும் அல்ல... சிங்களர்களுக்கே சிக்கலானதுதான்.

சமீப காலமாக பல நாடுகளில், மன்னர்கள் தான் நாட்டைவிட்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்!

http://new.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, உங்கள் துயரம்தான் எல்லோருக்கும். ஆனால் மனித வரலாற்றின் ஆதார சுருதியே எப்பவும் இருக்கும் நம்பிக்கை என்கிற நூல் ஏணிதான். உலக வரலாற்றில் எதிரி பற்றிய விமர்சனம் எப்பவும் எல்லா தரப்புகள் மதியிலும் இருப்பதுதான். ஆனால் மீண்டும் நிமிர்ந்து வென்றவர்கள் மத்தியில்தான் சுய விமர்சனமும் அதன் அடிப்படையில் புது அவதாரம் எடுத்தலும் நிகழ்ந்திருக்கிறது.

சுயவிமர்சனத்தில் இனி தவறுகள் இடம்பெறாது என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்த்து விடுதலைக்கான முனைப்பை காப்பாற்றிய இனங்களே வரலாற்றில் வெற்றி பெற்றுள்ளன. புதிய நிலமைகளை நம் மத்தியில் இடம்பெற்றிருக்க வேண்டிய அவசியமான ஆய்வுகளோ அவசியமான விவாதங்களோ ஒளி சேர்க்கும் கலை இலக்கிய வெளிப்பாடுகளோ இடம்பெறவில்லை. இன்னும் நாம் உடைந்த படகின் பாகங்கலைப் பற்றிக்கொண்டுதான் வெவ்வேறு திசைகளில் எதிர்காலத்துக்கு எங்கள் விவாதத்திறமையே முக்கியம் என நினைக்கிறோம். ஆனால் களத்தில் உள்ள மக்களின் அனுபவங்களும் பட்டறிவுமே முக்கியம்.

களத்தில் புண்பட்டு எதிரியின் மத்தியில் விழுந்து கிடந்தபோதும் நமது மக்கள் இணைந்த வடக்குக் கிழக்கு சுயாட்ச்சி என்கிற கோரிக்கையை பற்றிப் பிடித்திருக்கிறார்கள். தோல்வியின்[பின்னர் இதற்க்குச் சமமான மாவீரம் நம் மத்தியில் இல்லை. அவர்கள் நிராகரித்தவை பற்றியும் அவர்கள் ஆதரித்த குறைந்த பட்ச்ச நிலைபாடு பற்றியும் புரிந்துகொள்வது இன்றைய பணி என்ன என அங்கலாய்க்கும் புலம் பெயர்ந்த தமிழருக்கு அவசியம். அது எங்கள் இலக்கின் இறுதிப் புள்லியில்லாவிட்டலும் அதுதான் நம் இலக்கை நோக்கி மக்களுடன் செல்வதற்க்கான , நமது மக்களுடன் சேர்ந்து ஆரம்பிபதற்க்கான தொடக்கப் புள்ளியாகும். அது பற்றிய விசாரணைகள் கதையாடல்கள் சாத்தியமான வகையில் மக்களுடன் நேரடியாகவும் அவர்கள் இன்றைய பணிக்காக தெரிவுசெய்த பிரதிநிதிகளுடனும் இடம்பெறுதல் அவசியம். வீரமோ அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் பிழை திருத்தி சரிகளை வலுப்படுத்தும் வகையிலும் உண்மைகளைத்தேடி பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் அவசியம். ஆனாலும் அத்தகைய தலைமை பெண்களதும் தலித்துகளதும் பிரதி நிதிதுவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும்.

இதைவிட வடகிழக்குச் சார்ந்து சக மக்களான முஸ்லிம் மக்ககளின் தலைமைகளோடும் நாம் பொது கருத்துக்களை உருவாக்க வேண்டும். நமது புவி பிரதேசத்திலும் சர்வதேச அரங்கிலும் இயன்ற விட்டுக் கொடுப்புக்களோடு நாம்மை பலப்படுத்த வேண்டும். எதிரிகள் மத்தியில் உள்ள நன்நோக்குள்ள அணிகளை வென்றெடுக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா? உண்மையில் இவையெல்லாம் இலகுவான சவால்கள் இல்லை. வரலாற்றில் இன விடுதலைதான் மிக கடினமான சவால்.. கடந்த காலங்களில் பரந்து படுதலுக்கான இத்தைகைய சவால்களை எதிர்கொண்டோமா அல்லது துப்பாக்கி முனையில் அவற்றை முடக்க நினைத்து தனிமைப்பட்டோமா என்கிற கேழ்வி எம் முன் உள்ளது.

உலக வரலாறு முழுவதிலும் உள்நாட்டு யுத்ததிலும் இன விடுதலைக்கான ஆயுதப் போரிலும் விடுதலைக்கான பலமான அரசியல் உள்ள அணிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த அரசியலானது அரசியல் சமூக ஐக்கியமுன்னணிகள்மூலம் சாத்தியமானவைக்கும் பரந்து படுதல் மக்களளுக்கு பணி செய்யும் அடிபடையில் தொடந்து ஆய்வுகளும் விமர்சனம் சுயவிமர்சனம் அடிப்படையில் செம்மைப் படுதல் சரியான அரசியல் பொருளாதார அணுகுமுறை மூலம் விடுதலைக்கு உழைக்கக் கூடிய வர்க்கங்களையும் அணிகளையும் பலப் படுத்துதல், சர்வதேச சமூகத்துடனான உறவுகளை கையாழும் வல்லமையைத் தொடர்ந்து வளர்த்தல் இதற்கான புத்திஜீவிகள் கலைஞர்களுடனான ஐக்கியம் என்பவை அமையும்.

குறுங்காலத்தில் நாட்டில் புண்பட்டுக் கிடக்கும் மக்கள் மீண்டும் பிழைத்தலும் எழுதலும்தான் இன்றைய மிக முக்கியமான பணி. அதே சமயம் நிகழ்ந்த போர்க்குற்றம் தொடரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச ரீதியான போராட்டமும் முக்கியமான பணியாகும். ஆனால் இரண்டையும் ஒரே அணி செய்தல் சாத்தியமில்லை.

அந்தந்த காலக்கட்டத்து அரசியல் இராணுவ மூல உபாயங்களுக்கு strategy க்கு அவசியமான உத்திகளையும் Tactics வேலைப் பிரிப்புகலையும் கண்டடைய வேண்டும். இன்றைய காலக் கட்டத்தில் நாட்டில் புனர்வாழ்வு புனர் நிர்மானப் பணிகளில் ஈடுபடுகிறவர் நாட்டில் உள்ள விடுதலை சார்ந்த சிங்கள அரசு சார்ந்த பல்வேறு சமூக அரரசியல் சக்திகளோடு பணி புரிந்தே இனக்கொலைக்கு முகம் கொடுத்து வீழ்ந்து கிடக்கும் மக்களை தூக்கி விட வேண்டும். இது விடுதலைக்கான இன்றைய பணிகளில் முக்கியமானதாகும். அதே சமயம் நாம் நிகழ்ந்த போர்குற்றம் நிகழும் மனித உரிமை மீறல்கள் என்பற்றுக்கெதிரான போராட்டத்தை சிங்கள அரசுக்கு எதிராக நிகழ்த்த வேண்டும். இரண்டும் ஒரே அணியால் செய்யக் கூடிய காரியமில்லை. எனவே இந்த வகையில் செயல் படும் பல்வேறு அணிகளின் செயல்பாடுகள் நம் வரலாற்ற்ன் தற்காலிகத் தேவையாக உள்ளது. களத்தில் எதிரியின் அனுசரனையுடன் வரலாற்றுப் பணியை ஆற்றும் களம் சார் அமைப்புகளும் எதிரியோடு யுத்தக்குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பாக போராடும் புலம்பெயர் அமைப்புகளும் நிலமையைக் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை அனுபவம் சார்ந்தும் புரிந்து கொண்டு தம்முள் நேரடியாக சம்பந்தப் படாத அதே சமயம் ஒன்றை ஒன்று பலகீனப் படுத்தாத தனித்தனி வட்டங்களாகவே செயல் பட முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்வது அவசியம்.

நமது மக்களின் விடுதல நிச்சயம்

  • கருத்துக்கள உறவுகள்

'சிங்கள இனத்தின் அசைக்க முடியாத மனிதராக உருவகப்படுத்திக்கொள்ளும் ராஜபக்ஷே, தன்னை இலங்கையின் மாமன்னராக ஆக்கும் காரியங்களை மறைமுகமாகத் தொடங்கிவிட்டார். அதாவது மக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, மன்னர் ஆட்சிக் காலம் இலங் கையில் வெகு சீக்கிரமே ஆரம் பமாக இருக்கிறது. 'லங்க ரட்ட’ என்று சொல்லப்படும் மன்னர் ஆக ராஜபக்ஷேவை முடிசூட்டப்போகிறார் கள்!'' என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. சிங்கள இனத்தின் பெருமை பேசும் 'மகா வம்ச’ வரலாற்றுப் புத்தகத்தைத் திருத்தி எழுதும் காரியங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தி, தமிழர்களை மிகமிகச் சிறுபான்மையினர் ஆக்கவும் மறைமுகத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

0.jpg

:D :D :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.