Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் - என் பார்வையில்

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க எடுக்கப்பட்ட இலங்கை அரசின் மிகப் பாரிய ராணுவ நடவடிக்கையில் இருசாராருமே சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாகவும், மனிதத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகவும் ஐ. நாவின் அறிக்கை சொல்கிறது என்பது தான் கடந்த ஒரு வார காலமாக என் போன்றவர்களின் கவனத்தை, கருத்தை ஈர்த்து வைத்திருக்கிறது. ஒரு விதத்தில் சர்வதேச ஊடகங்கள் கூட இது பற்றி பேசுவது அந்த அறிக்கையை முழுமையாக 196 பக்கங்களையும் வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஐ. நாவின் செயலர் பாங்கி மூனுக்கு உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் பிரித்தானியாவின் Channel 4 இன் ஈழம் குறித்த செய்திகள் பாராட்டப்பட வேண்டியவையே.

எப்போதுமே மாற்றுக்கருத்தை தேடிப்படிப்பதில் ஓர் ஆர்வமும், சுவாரசியமும் இருப்பவர்களுக்கு இலங்கை பற்றி Brian Seniwerane, இந்தியா பற்றி அருந்ததி ராய், அமெரிக்க பற்றி Noam Chomsky போன்றோரது, பெரும்பாலும் கார்பரேட் ஊடகங்களால் வெளியே கொண்டுவரப்படாத அவர்களது காலத்தின் தேவையானதும், காலத்தால் அழியாததுமான எழுத்துகள் இந்த உலகம் பற்றிய அதன் எழுதப்படாத இயங்குவிதிகள் பற்றிய புதியதோர் பார்வையை, புரிதலை கொடுக்கும். கார்பரேட் நலன்களுக்காக பறிக்கப்படும் மனித உரிமைகள், மனித உயிர்கள் என்பவற்றுக்காய் குரல் கொடுப்பவர்கள். எந்தவொரு தத்துவத்தையோ, விதியையோ பின்பற்றாமல் அனுபவ அடிப்படையில் வாதப்பிரதிவாதமாக எழுதப்படும் அவர்களின் எழுத்துகளிலேயே நானும் உலகத்தை படிக்க ஏதோவொரு கத்துக்குட்டித்தனமான முயற்சியில் எப்போதும் இருக்கிறேன்.

அப்படியானால், புலிகள் பற்றிய சில ஈழத்து சிட்டிசன்களின் மாற்றுக்கருத்தை ஏன் நான் ஏற்றுக்கொள்வதில்லை என்கிற கேள்வி எழலாம். தனிப்பட்ட காரணங்களுக்காக புலிகள் மீது சேறு அடிப்பவர்கள் ஐ. நா. சொன்னதைத்தானே நானும் சொன்னேன், சொல்லுவேன் என்கிற வெற்றுவீரத்தை, மேதாவித்தனத்தை நான் புறக்கணிக்கவே விரும்புகிறேன். நிச்சயமாய் சர்வதேசத்தின் புலிகள் குறித்த பார்வையே இதுபோன்ற சில மாற்றுக்கருத்து - மாற்றுத் திறனாளிகளிடமிருந்தான் உருவப்பட்டது என்பது இங்கே பலருக்கு தெரியும்.

அதனால் தான் நான் ஈழத்தில் பிறந்து இனப்பாகுபாட்டு கொள்கைகளால் பாதிக்கப்படிருக்கிறேன் என்பதை தவிர; ஈழம், புலிகள் பற்றிய என் பார்வை, கருத்து என்பது நான் மேற் குறிப்பிட்டவர்களின் எழுத்துகளை படித்து நான் என்வரையில் புரிந்துகொண்டதன் அடிப்படையிலும் எனக்குள் உருவாகிறது. மேற்சொன்ன மூவருமே புலிகள் பற்றி அதிகம் பேசுபவர்களே கிடையாது. ஆனாலும், அவர்களின் எழுத்தில் பிறந்த தெளிவில் தான் புலிகள் பக்கமுள்ள நியாயம் எனக்குப் புரிகிறது. Brian Senewiratne, Noam Chomsky, அருந்ததி ராய் மூன்றுபேருமே தங்கள் நாட்டு ராணுவம் செய்த, இன்னும் செய்துகொண்டிருக்கும் அட்டூழியங்களை விமர்சிப்பவர்கள். ஈழத்தமிழர்களின் புலிகள் பற்றிய கருத்து என்பது புலிகள் பக்கமுள்ள போராட்ட நியாயங்கள் குறித்து மட்டுமே உருவானது. இலங்கை ராணுவத்தின் கொடுமையை அனுபவித்தவர்களுக்குத் தான் புலிகள் அருமை தெரியும். தவிர, புலிகள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்லவே. இனவாதத்தை எதிர்த்து உருவான போராட்டம் இன்று யார், யாரோ நலன்களுக்காக தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இன்று புலிகள், தமிழீழம் என்று பேசுவதால் அதிகம் விமர்சிக்கப்படுபவர்களாக புலம் புலம்பெயர் தமிழர்களே இருக்கிறார்கள்.

சில ஆங்கில ஊடங்கங்கள் ஐ. நா. அறிக்கையில் மேற்கோள் காட்டி புலம் பெயர் தமிழர்கள் ஐ. நாவின் அறிக்கையில் புலிகள் செய்ததாக சொல்லப்படும் போர்க்குற்றங்களை உள்வாங்கவோ ஏற்றுக்கொள்ளவோ மறுக்கிறார்கள் என்றும் தங்கள் பங்கிற்கு குறைப்பட்டுக்கொள்கிறார்கள். அது சமாதான முயற்சிகளுக்கு தடையாய், தடங்கலாய் அமையுமாம்!! வாணி ஞானகுமார் என்கிற ஈழப்பெண் ஈழத்திலிருந்து இறுதிக்கட்டப் போரின் பின் திரும்பியபின் சர்வதேச ஊடகங்களும் ஏறக்குறைய இதே கேள்வியத் தான் கேட்டு அவரை துளைத்தெடுத்தார்கள். புலிகளின் குற்றங்களை நீ பார்த்தாயா, பார்த்தாயா என்று. அதற்கு அவர் சொன்ன பதில் தனக்கு அப்படி ஏதும் அனுபவம் ஏறபடவில்லை என்பது தான்.

2009 May மாதத்திற்குப் பிறகு இலங்கையின் பாதுகாப்பு செயலர் சொன்னது, புலிகளை "வேரோடு" அழித்துவிட்டோம் என்பது தான். ஆனால் அவர்களே இன்றும் கொஞ்சம் கூட சளைக்காமல் அதற்கு மாறாகவும் சொல்லுகிறார்கள். புலிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பதெல்லாம் இப்போ இரண்டாம் பட்சம் தான். அந்த இழப்பையும் தாங்கி சுதாகரித்து ஈழத்தமிழர்கள் விடுதலையை நோக்கி எதையெதையோ முயற்சிக்கிறார்கள். கருத்துக்களால் சேர்ந்தும், பிரிந்தும், சிதறியும் கிடக்கிறார்கள்.

புலிகள் என்பவர்கள் ஈழவிடுதலை நோக்கிய ஓர் பயணத்தில் நீண்டதோர் சகாப்தம். முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்ட அந்த சகாப்தத்தோடு ஈழம் என்கிற எங்கள் அரசியல் அபிலாசையும் தீய்ந்து, தேய்ந்து போகவேண்டும் என்றால் எப்படி! புலிகளை போர்க்குற்றவாளிகள் ஆக்கினால் எங்கள் உரிமைகள் சர்வதேசத்தால் மறுக்கப்படுமா! புலிகள் குற்றம் இழைத்தவர்கள் என்று நம்பினால் தாராளமாய் விசாரித்துக்கொள்ளுங்கள் என்று தான் நான் நினைப்பதுண்டு. யாருடைய புதிய கண்டுபிடிப்பும் ஈழத்தமிழர்களுக்கு புலிகள் மேலுள்ள மதிப்பையோ இல்லையென்றால் வெறுப்பையோ கூட்டமுடியாது. வெறுப்பவர்கள் எப்போதுமே வெறுத்துக்கொண்டே தான் இருக்கப்போகிறார்கள்.

அரசியல் யாப்பு, சர்வதேச சட்டதிட்டங்கள், தார்மீக விழுமியங்கள், கூடவே எப்போதுமே கவர்ச்சியான இறையாண்மை என்கிற கருத்தியல் இதெல்லாம் பார்த்துப் பார்த்து செதுக்கித்தானே ஓர் நாடு அல்லது தேசம் என்கிற வரையறை வகுக்கப்படுகிறது. ஒரு தேசமே ஒட்டுமொத்த சிறுபான்மை தேசிய இனத்தை தொடர்ச்சியாக பழிவாங்கி, கொன்று குவிக்கிறது என்று உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிந்த பின்னும், அதை தண்டிக்கவோ, கண்டிக்கவோகூட ஐ. நா. என்கிற ஓர் வலுவான அமைப்பு திண்டாடுகிறது. 'வீட்டோ அதிகாரம்' என்கிற குரங்கின் கை பூமாலையாய் ஓர் ஆயுததத்தை வைத்து மிரட்டுபவர்களின் பின்னாலேயே ஐ. நா. செயலர் ஓடுகிறார்.

இயற்கை அழிவை உலங்கு வானூர்தியிலிருந்து அரசியல்வாதி பார்ப்பதுபோல், இலங்கை ராணுவத்தால் தமிழனுக்கு உருவாக்கப்பட்ட அழிவுகளை ஐ. நாவின் செயலரும் உலங்குவானூர்தியில் போய் பார்வையிட்டார். இழப்பு அதிகம் இல்லை என்று தனக்கு கீழே பணிபுரியும் விஜய் நம்பியாரை கொண்டே சொல்லவைத்தார். ஆனால், அது மட்டுமே ஐ. நா. செயலர் பதவியை இன்னோர் முறை அலங்கரிக்க முடியும் என்கிற கணக்கில் இப்போ ஈழப்பிரச்சனை, அறிக்கை என்பன குறுக்கே வருகின்றன. போர்க்குற்றங்களில் விசாரிக்கப்பட வேண்டியவர் என்கிற தற்போதைய இலங்கைக்கான ஐ. நாவின் நிரந்தர பிரதி வதிவிடப் பிரதிநிதியும் முன்னாள் இலங்கை ராணுவத்தின் ஓர் கட்டளைத்தளபதியிடம் (சவேன்திரா செல்வா) அறிக்கையை கையளிக்கிறார்கள். வெள்ளைக்கொடி கொலைகள் புகழ் விஜய் நம்பியார் இன்னமும் அதே பதவியில் நிலைத்திருக்கிறார். இவர்களை யார் விசாரிப்பார்கள்?? இலங்கை அரசு சொல்லும் "Fundamentally Flawed" இவர்களுக்கு பொருந்தாதா! உங்கள் நடுநிலைமை இங்கே பல்லிளிக்கவே இல்லையா!!

புலிகள் அமைப்பு சர்வதேச சூழ்ச்சியால் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்தப்பட்ட ஓர் விடுதலை அமைப்பு. அவர்களால் அமைக்கப்பட்ட ஓர் De Facto State, இங்கே எத்தனையோ நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை விடவும் சிறப்பாய் கட்டியமைக்கப்ட்ட ஒன்று. அமெரிக்காவுக்குப் பிடித்துப்போனதால் தென் சூடான் விடுதலை அமைப்பு சுதந்திர தேசத்தை உருவாக்கலாம். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பிடிக்காமல் போனதால் புலிகள் மட்டுமல்ல தமிழர்கள், தமிழர்களின் தேசியம், அதற்கு கொடுக்கப்பட்ட வடிவம் கூட அழிக்கப்படலாம், சிதைக்கப்படலாம்.

புலிகள் போர்க்குற்றம் இழைத்திருந்தால் தாராளமாய் விசாரியுங்கள் என்பது தான் எனது நிலைப்பாடு. புலிகள் தான் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை சரியாய் புரிந்துகொண்டவர்கள் என புலம் பெயர் தமிழர்கள் சர்வதேசத்திடம் புலிகளை தடைசெய்யாதே என்றபோதே கேட்காதவர்கள், இப்போ மட்டும் நாங்கள் சொல்வதை கேட்கவா போகிறார்கள். நாங்கள் என்ன இலங்கை அரசு போல ஐ. நாவிடம் முழு அறிக்கையை வெளியிடாதே, எங்கள் தலையை மண்ணுக்குள் புதைக்க எங்களுக்கு கால அவகாசம் கொடு, ஐ. நாவுக்கு எதிராக மே மாதம் ஓராம் திகதியில் போராடுவோம் என்றா சொல்கிறோம். ஐ. நா. அறிக்கையை முழுதாய் வெளியிடு. போர்க்குற்றம் விசாரிக்கப்பட ஓர் சர்வதேச சுயாதீன குழுவை உருவாக்கு என்று தானே சொல்கிறோம். பிறகேன் எங்கள் மீது இன்னும் பகை.

ஆனாலும், புலிகளை அழித்து தமிழர்களாகிய எங்களுக்கு தீர்வு சொல்லும் சர்வதேச அரசியல் சாணக்கியம் தான் விந்தையாயிருக்கிறது. இதில் International Crisis Group இன் புலம்பெயர் தமிழர்களுக்கான புலிகளின் கனவை மறவுங்கள்; ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை தேடுங்கள் என்கிற சர்வதேச அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் அறிவுரைகள். ஐ. நாவின் தீர்வுக்கான பரிந்துரைகளை கூட நடைமுறைப்படுத்துங்கள் என்று இலங்கை அரசுக்கு இவர்களால் சொல்லமுடியுமோ தெரியாது. உடனேயே இலங்கையின் இறையாண்மையில் தலையிடுகிறார்கள், அவமதிக்கிறார்கள் என்கிற வெற்றுக்கூச்சலுக்கே அமைதியாகிவிடுவார்கள். எப்படியோ, சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு உருவாக்கப்பட்டால் நன்றாக விசாரித்து, இல்லாத கற்பனைப் புலியை தூக்கில் போடுவார்களோ? புலிகள் இழைத்ததாக சொல்லப்படும் போர்க்குற்றங்களை ஏன் புலத்தில் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதற்கு ஓர் தமிழ்நாட்டு தமிழர் சொன்ன விளக்கம் தமிழ் நெட்டில்.

"......Diaspora's refusal to accept the crimes of the LTTE is another point cited in the panel report as hindrance to peace. When was the diaspora provided with an opportunity to assess the politics of its nation in an environment free from unjustifiable support to state terrorism?.." ( http://tamilnet.com/art.html?catid=79&artid=33822).

உண்மையில் என்னை பாதித்த பதிவு.களநண்பர்களது கருத்துகளை எதிர்பார்கின்றேன்.

நன்றி

http://lulurathi.blogspot.com/2011/04/blog-post_20.html

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது மனிதவுரிமைகளைப் பாதுகாக்க முனையும் சர்வதேச நாடுகள் வன்னிப் போரின்போது பாகுபாட்டுடன் நடந்தது உண்மைதான். அதற்கு ஐ.நா.வும் துணைபோய்த்தான் இருந்தது. தற்போது கூட பாதுகாப்புச் சபைப்புக்குள்ளும், ஏன் ஐ.நா. மனிதவுரிமை அமைப்புக்குள்ளும் இலங்கையரசின் செல்வாக்கு உள்ளது. இவ்வாறான செல்வாக்குகளை வைத்தே சிறிலங்கா அரசு போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்கொள்ளமுடியும். எனினும் தமிழர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகித்தால் நன்மைகள் கிடைக்கும்.

  • தொடங்கியவர்

தற்போது மனிதவுரிமைகளைப் பாதுகாக்க முனையும் சர்வதேச நாடுகள் வன்னிப் போரின்போது பாகுபாட்டுடன் நடந்தது உண்மைதான். அதற்கு ஐ.நா.வும் துணைபோய்த்தான் இருந்தது. தற்போது கூட பாதுகாப்புச் சபைப்புக்குள்ளும், ஏன் ஐ.நா. மனிதவுரிமை அமைப்புக்குள்ளும் இலங்கையரசின் செல்வாக்கு உள்ளது. இவ்வாறான செல்வாக்குகளை வைத்தே சிறிலங்கா அரசு போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்கொள்ளமுடியும். எனினும் தமிழர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகித்தால் நன்மைகள் கிடைக்கும்.

கருத்திற்கு நன்றிகள் கிருபன்.மீண்டும் தெருவில் இறங்கிப் போராடுகன்ற மனோபலம் புலம்பெயர்ந்த மக்களுக்கு ஊட்டப்படுள்ளதா?இன்றய களத்தைப் பாருங்கள் எமது நிகத்தை தோண்டி நாமே மணந்து பார்கின்ற நிலை சன நாய் அகம் என்ற பெயரில் நடக்கின்றது.இப்படிப் பட்டவர்களாலேயே பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.