Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா அறிக்கை பற்றி வன்னி மக்கள் சிலரின் கருத்துக்கள்..

Featured Replies

My linkபரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து வன்னி மக்களின் எண்ண ஓட்டங்களை அறிய முற்பட்டபோது வெளிவந்தவை...இவை ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்பதை கவனத்தில் கொள்க.....பலர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில் ஒரு சிலரின் கருத்துக்களின் கோர்வையே இது.....

பரிமளாதேவி (சந்தையில் மரக்கறி வியாபாரி)-(வயது46)

இது கடவுளின் தீர்ப்பு. வினை விதைச்சவன் வினையை அறுப்பான். தினை விதைத்தவன் தினையை அறுப்பான் என்றது ஒரு நாளும் பிழைக்காது. நாங்கள் விட்ட கண்ணீர். ஒரு நாளும் இந்தக் கொ லைக்காரரை சும்மாவிடாது.

ஆனால் இப்படித்தான் அறிக்கை விடுவினம். குறை, குற்றம் எல்லாம் கான்பிப்னம்.

ஆனால், கடைசியில் அரசாங்கத்துக்கு உதவி அதைப் பாதுகாத்து விடுவார்கள்.

இதுகளை நம்பி நம்பி நாங்கள் ஏமாந்தது தான் மிச்சம்.

இப்ப வந்திருக்கிற அறிக்கையில் நாங்கள் பட்ட கஸ்டங்களையும் வன்னியில் நடந்த கதைகளையும் எழுதியிருக்கிறார்கள். இதை மெச்ச வேணும். ஆனால் இதோட நிக்கக்கூடாது. வன்னியில் நடந்த யுத்தத்தால் பாதிக்கப் பட்ட சனங்கள் நிறையப் பேர் சாப்பிடவே கஷ்டப்படுகிறார்கள். அகதிகளுக்கு ஒரு வழியை உதவி ஒத்தாசையை யாரும் செய்யலாம். பாவப்பட்ட சனங்களுக்கு உதவி செய்கிறது கட்டாயம். இதைச் செய்யட்டும்.

சுரேஷ்குமார் கூட்டுறவுப் பணியாளர் பரந்தன் (வயது 30)

நடந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை விட நடக்கப் போவதைப் பற்றியே நாங்கள் சிந்திக்க வேணும். யாரைக் கேட்டாலும் ஒரு விடயத்தைப் பற்றியே சொல்லுவார்கள். என்னதான் சொன்னாலும் இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது நல்லது. இப்போது பாருங்கள், அநியாயமான உயிரிழப்புகள் இல்லை.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப் பட வேணும்.

யாருக்கும் தண்டனைகளை வழங்குவத னால் எங்களுக்கு என்ன நன்மைகள் வரப் போகிறது? இந்த அறிக்கைகள் எல்லாம் மேலும் மேலும் பிரச்சினைகளை நீடிப்பதாக இருக்குமே தவிர, எங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு வராது.

ஆகவே இந்த அறிக்கையை நான் பெரிதாகப் பார்க்கவில்லை. இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பினர் புலிகள் இப்போது இல்லை. இந்த நிலையில் எப்படி விசாரணைகளைச் செய்ய முடியும்? இப்போது நாங்கள் அமைதியாகவே இருக்க விரும்புகிறோம்.

இப்போதுள்ள அரசாங்கம் பெரும்பான்மை பலத்தோடு இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு முயற்சிக்கலாம். அதற்கான வழி வகைகளுக்கு உதவுவதே சர்வதேசத்தின் பங்காக இருக்க வேண்டும். இதுவே என்னுடைய விருப்பம்.

திருமதி வ. கீதாமிர்தினி, மருத்துவமாது பூநகரி (வயது 30)

இப்பத்தான் முழு உண்மையும் உலகத்துக்குத் தெரியவந்திருக்கு. உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்பது உண்மை என்பதை இப்ப எல்லாரும் உணர்ந்திருப்பினம்.வன்னியில் என்ன நடக்கிறது என்பதை அப்போது புலிகளும் மறைத்தார்கள். இல்கை அரசாங்கம் மறைத்தது. ஆனால் இப்ப இந்த அறிக்கையில் எல்லா உண்மையும் தெரியவந்திருக்கு.

பொது மக்களை கேடயமாகப் பாவித்த வைக்கும், பொது மக்களைக் கொன்று குவிக்க வைக்கும் இப்ப வெளிவந்திருக்கும் அறிக்கை ஒரு நல்ல தூக்குக் கயிறுதான். அநியாயம் செய்தவர்கள் தப்ப முடியாது. குற்றவாளிகள் உலகத்தின் கண்களை ஏமாற்ற டியாது என்பதை இந்த அறிக்கை நிரூபித்துள்ளது. இந்த அறிக்கை இப்படியே பேச்சோடு நின்று விடாமல் உண்மையிலேயே விசாரணைக்கு ஏற்பா டுகளைச் செய்ய வேணும்.

குற்றவாளிகள் தப்பக் கூடாது. அப்போது தான் இனிமேலும் குற்றவாளிகள் உருவாகாமல் இருப்பார்கள். எல்லாத்தையும் விட நாங் கள் விட்ட கண்ணீருக்கு ஒரு பதில் கிடைக்க வேணும். குற்றவாளிகள் தப்பினால், உலகத் தில் நியாயம் பிழைக்க முடியாது.ஆகவே வன்னி மக்களின் மனம் சாந்தி அடைய வேண்டும் என்றால் இந்த அறிக்கை விசாரிக்கப்பட்டு தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

திலகராஜ் கிளிநொச்சி-(வயது 30)

போர்க் காலத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதல் வேலையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது இதை இந்த உலகம் செய்யவில்லை. போர் நெருக்கடியில் நாங்கள் சிக்கித் தவிக்கும் போது எங்களுக்கு உதவி செய்யவோ எங்களைக் காப்பாற்றவோ யாரும் வரவேயில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் அரசாங்கத்தினாலும் புலிகளாலும் பாதிக்கப்பட்டோம். அப்போது நடந்த எல்லாத் தவறுகளுக்கும் இடமளித்துவிட்டு இப்போது அறிககை விடுவதால் என்ன பயன்?

உண்மையில் அப்போது தான் எங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டும். இது என்ன வென்றால், காலம் பிந்தி வந்த ஞானோதயத்தைப் போல இப்போதுதான் உண்மைகளைக் கண்டது மாதிரி அறிக்கை விடுகிறார்கள்.

ஆனால் இப்படி அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதைவிட யுத்தத்தால் பாதிக்கப் பட்ட இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் இவர்கள் உதவட்டும். இப்பவும் நாங்கள் சொந்த வீடில்லாமல், தொழில் இல்லாமல் கஷ்டப்படுகிறம். இதுக்கு முதலில் இவர்கள் உதவி செய்யட்டும்.

அற்புத ரூபன் (கல்வி உத்தியோகத்தர் கிளிநொச்சி)-(வயது 50)

இந்த அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இந்த அறிக்கையைத் தயாரிக்கும்போது பின்பற்றப்பட்ட நேர்மையான அணுகுறையை இந்த அறிக்கையை நடை முறைப்படுத்துவதிலும் காட்ட வேண்டும்.

போர்க் குற்றங்கள் விச

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1708:2011-04-24-11-58-05&catid=1:latest-news&Itemid=18

Edited by சிறிலிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலிங்கம் அவர்களே இவர்களது இடங்களைப் போடுவதால்; பிறகு இவர்களைத் தேடி ஐநா குழு அமைக்கும் நிலை வராதா? இடங்களைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசாங்கமொன்று பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியிலிருந்தால் தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வொன்றைத்தரும் என்று நம்புகிற மக்கள் கூட்டம் இன்னுமிருக்கிறதே?? இவர்கள் எப்போதுதான் விழித்தெழுவார்களோ??? உதாரணம் பரந்தன் கூட்டுறவுப் பணியாளர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.