Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பீரிஸ் நடத்திய சந்திப்பை புறக்கணித்தாரா சீனத் தூதுவர்?

Featured Replies

பீரிஸ் நடத்திய சந்திப்பை புறக்கணித்தாரா சீனத் தூதுவர்? - கொழும்பு விசாரணை

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை சர்வதேச தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் Yang Xiuping கலந்து கொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பின் நிலைப்பாடு குறித்து சர்வதேச தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்த போதிலும், சீனத் தூதுவர் Yang Xiuping மட்டும் கலந்து கொள்ளவில்லை. அத்துடன், இச் சந்திப்பில் கலந்து கொள்ளாதிற்கான காரணத்தை அவர் இதுவரை கூறவில்லை.

இச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் Yang Xiupingகுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இவ்வழைப்பு கிடைத்ததை அவர் தொலைபேசி வாயிலாக உறுதிப்படுத்தி இருந்ததாகவும் சிறிலங்கா வெளிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இவ் விவகாரம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச் சந்திப்பில் சீனத் தூதுவர் கலந்து கொள்ளாதிற்கான பின்னணி குறித்து கொழும்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={6FC60C61-9AE1-478D-83C9-1600A0AB24DB}

  • தொடங்கியவர்

Why didn’t Chinese envoy come?

The Chinese Ambassador Yang Xiuping was a notable absentee when External Affairs Minister G.L. Peiris briefed heads of diplomatic missions in Colombo last Thursday regarding the Government’s stance on the report of the UN Panel.

While a ministry official confirmed that an invitation was sent to the Chinese Ambassador and was followed up by a call to confirm it was received, the ambassador was not present at the meeting.

The Sunday Times learns that the ministry is trying to find out why the ambassador of China, one of Sri Lanka’s strongest allies in its fight to ensure the UN report does not lead to any action against the country, was absent.

http://www.sundaytimes.lk/110424/News/nws_06.html

  • தொடங்கியவர்

குழுவின் அறிக்கை தொடர்பில் பான் கீ மூனுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார் பீரிஸ்!

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாட முயற்சிகளை மேற்கொண்டமை தெரிய வந்துள்ளது. இக் கலந்துரையாடல் நேற்று (23.04.11) இடம்பெற ஏற்பாடாகி இருந்ததாகவும், இதனாலேயே நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது. நிபுணர்கள் குழுவின் அறிக்கை கடந்த 21ஆம் திகதி முழுமையாக வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை முன்பு கூறியிருந்தது.

இந் நிலையில், நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை இவ்வறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டாமென பீரிஸ் விடுத்த கோரிக்கையை பான் கீ மூன் ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது. ஆனால் இப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதா என்பது குறித்து இதுவரை தகவல்கள் எவையும் வெளிவராத நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதை தடுப்பதற்கான முயற்சிகளை பீரிஸ் தீவிரமாக மேற்கொண்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவருவதை எவராலும் தடுக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை தொடர்பான விவகாரங்களை ஆராயும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மீது சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களும், மேற்கத்தைய நாடுகளும் பிரயோகித்து வரும் அழுத்தங்கள், இவ்வறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் என இவர்கள் கூறுகின்றார்கள்.

இந் நிலையில், நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதில்லை என பான் கீ மூன் உறுதி அளித்துள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்ற போதிலும், இச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. அதேவேளை, பான் கீ மூன் ரஸ்ய விஜயத்தை முடித்துக் கொண்டு நாளை (25.04.11) நியூயோர்க் திரும்பியதும் நிபுணர்கள் குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={C3C57419-AFCC-46D7-901E-AEFDD084F117}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.