Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் தாயக தமிழ்மக்களுக்குப் பயன்பட வேண்டும்-ஐ.நா அறிக்கை

Featured Replies

புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான தனது பரிந்துரையை தனது அறிக்கையில் மிகத் தெளிவாக வழங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.இது தொடர்பான விடயம் யுத்தக் குற்ற அறிக்கையின் பக்கம் 132ல் இடம்பெற்றுள்ள பரிந்துரை இல.417ல் இருந்து பரிந்துரை 420 வரையே இடம்பெற்றுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர் சமூகமே விடுதலைப் புலிகளிற்கு மனவலிமையும் நிதி ஆயுத வலிமையையும் பல தசாபத்தங்களாக வழங்கி வந்தது என்றும் இதனால் புலம்பெயர்ந்த சமூகத்திடையே இந்த இறுதிப் போரைப் பற்றிய ஒரு மனவலி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளதோடு, இறுதிப் போரின் பேரவலத்தின் பின்னைய நாட்களில் புலம்பெயர்ந்த தேசங்களில் புலிகள் தனிப்பட்ட வியாபாரங்கள், ஆலய வருமானங்கள் போன்றவற்றின் மூலம் தொடர்ந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் இவற்றைக் மேற்குலக நாடுகள் அவதானத்தில் எடுத்து,மேற்கு நாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்கள், வருமாணங்கள் போன்றவற்றை போரினால் பாதிக்கப்பட்ட தாயகத தமிழர்களிற்கு பயன்படும் வகையில் போய்ச் சேர ஆவண செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர் சமூகத்தின் அங்கத்தினர்கள் தாங்கள் விடுதலைப் புலிகளிற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவால் இலங்கையின் இரு இனங்களிடையேயும் விரிசலை பலப்படுத்த உதவியதாகவும் இது மறுபுறமாக சிங்களத் தேசியவாதத்தை வளர்க்க உதவியதாகவும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளது.

அதே போன்று புலம்பெயர்ந்த சமூகத்தின் பெரும்பாண்மையான பகுதி சமாதானம் ஏற்படுவதற்குத் தடையாக இருக்கிறது என்றும், போரின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற புலிகளின் வன்முறைகள் குறித்து இந்தச் சமூகம் அக்கறையின்மையாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1718:2011-04-26-15-46-49&catid=1:latest-news&Itemid=18

untamildias.png

இனி சில வேளைகளில் நம்மவர்களே உந்த அறிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி விடிவினம்.

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசில் தங்கட பறியிலே கையை வைக்கின்றாங்கள் பாவிகள்.சில பேர் அயல் நாடுகளுக்கு பதுக்கி வைக்க ஓடுப்பட்டு திரியினம் என்றும் கேள்வி.பல பேருக்கு ஆப்பு அடிக்க போறார்கள் என்றும் கதை அடிபடுது.

கனடாவில் பொறுப்புகளில் இருந்த இருவர் "தங்களுக்கு காட்டுக்குள்ள இருக்கின்ற புலிகளை மாத்திரம் தெரியும்" என ஏற்கனவே அறிக்கை விட்டுவிட்டார்கள்

எம்மால் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்களில் ஒன்று சிங்களத்தின் மீது தொடர் அழுத்தத்தை வைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வரும்வரை அதற்கும் உதவும் வகையில் பல்வேறு வழிகளிலும் ( அரசியல், பொருளாதார) நெருக்கடிகளை கொடுக்கவேண்டும்.

ஐ.நா.வால் கூறப்பட்ட பல குற்றங்களில் ஈடுபட்ட ஒரு தரப்பு ஐ.நா.வில் அங்கத்துவம் கொண்டது, பல சரத்துக்களில் கைச்சாத்திட்டது. அதை மற்றைய தரப்புடன் ஒப்பிட முடியாது. மேலும், பல நாடுகளிலும் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

- ஏற்கனவே பல உறவுகள் கூறியது போன்று நாம் ஒரு குழுவை அமைத்து எது சாத்தியம் என்பது பற்றி ஆராயவேண்டும்

-எமக்கு சாதகமாக ஒரு நாட்டை இல்லை நாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிங்கள தலைவர்களை விசாரிக்க பரிந்துரைக்க வைக்கவேண்டும்

- பிளேக் அவர்களின் சந்திப்பை, அவர் என்ன கூறுகிறார் என அவதானிக்க வேண்டும்

- பொருளாதார தடைகளை சிங்களம் மீது மேற்குலகம் பிரயோகிக்க அழுத்தம் கொடுக்கவேண்டும்

- தனிப்பட்ட நபர்கள் (இரு நாட்டு பிரசாவுரிமை கொண்டவர்கள்) மீது போர்குற்ற சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்கள் சொத்துக்கள் முடக்கப்படல் வேண்டும்

  • தொடங்கியவர்

யாழ் கள உறவுகளே....ஒரு விடயத்தை நான் தெளிவாக கூறுகின்றேன்..இங்கு இணையத்தில் ஆய்வு எழுது பவர்களில் எத்தனைபேர் இன்னும் தாயகத்துடன் நேரடி தொடர்புகளில் உள்ளார்கள் என்பதே கேள்வி குறி,.......அத்துடன் ஒரு வேளை உணவுக்காக கையேந்தும் அந்த மக்களுக்கு ஒரு வாய் சோறு கொடுப்பதை விட ராஜபக்சேவை தூக்கில் போடுவது முக்கியம் இல்லை...தூக்கில் போடத்தான் வேண்டும் ஆனால் நாம் அங்கே உள்ள உறவுகளுகும் உதவ வேண்டும்.....

அன்பான தமிழீழ மக்களே , ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு போட்டது, ஆனால் ஒரு சில வருடங்களிலே அவர்கள் மீண்டும் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா “இன்னும் நாற்பது வருடங்களுக்கு நாம் சண்டை பிடிப்பதில்லை”,,, தற்போது பொருளாதரத்தால் அவனை வெல்வோம் என சபதம் செய்தனர். இன்று அதன் வளற்சியை பாருங்கள்.......நான் சொல்வது என்ன வென்றால், அங்கே நமது நிலம் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றது, அதை தடுக்க அவற்றை நீங்கள் கொள்வனவு செய்யுங்கள், பல தேசங்களில் அகதியாய் திரிந்தாலும் எந்த இடத்தில் எது விக்கலாம், வாங்கலாம் என தெரிந்த மக்கள் தமிழ் மக்கள்.

நீங்கள் ஒரு தொழிலை தாயகத்தில் தொடங்கி அதில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஒரு தொழிலை கொடுத்தால் என்ன குறையப் போகுது. நீங்கள் சொல்லலாம் ஆமி கடத்துவான் என்டு, நீர் செய்ய வேண்டியது ஐரோப்பாவிலிருது முதலிடும் போது சரியான பணவர்த்தனை (ஐரோப்பிய யூனியன்) ஊடாக சட்டப்படி மேற்கொள்ளவம், உங்களுக்கு நெருக்குவாரம் வராது.

அதை விட்டு விட்டு உண்டியலில் கொண்டுவதால்தான் பிரச்சனை சரி......

நான் துரோகி அல்ல..அந்த மக்களின் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.....

நான் விரைவில் தாயகத்தில் ஒரு தொழில் செய்ய திட்ட மிட்டுள்ளேன்.......

யுத்தத்தால் பாதிக்கப் பட்ட 50 பேர் நேரடி தொழில் வாய்ப்பையும், 1000 குடும்பங்களுக்கு தற்காலிகமாக உதவும் ஒரு திட்டமும் உள்ளது.......

பொருளாதார போரில் நான் சிங்களவனை வெல்வேன்......என்று நான் சபதம் எடுக்கன்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.