Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தாலும் அவர்கள் புலிகளே! கனேடிய அரசு திட்டவட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தாலும் அவர்கள் புலிகளே! கனேடிய அரசு திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011 10:04

எம்.வீ சன் சீ கப்பலில் சென்ற அகதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுமானால், பயங்கரவாத அமைப்பு என தீர்ப்பளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு அர்த்தமற்றுப் போய்விடும் என்று கனேடிய குடிவரவு மற்றும் குடியகல்வு சபை தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனச் சந்தேககிக்கப்படும் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தொடர்பான வழக்கு நேற்று இடம்பெற்றது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர் விவசாயியாக காணப்பட்டதாகவும், இவரிம் இருந்து விடுதலைப்புலிகள் நெல் மூடைகளை கொள்வனவு செய்துள்ளனர்.

அத்துடன் உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் குறித்த நபர் விடுதலைப்புலிகளின் ஹோட்டலில் சேவகராக பணிபுரிந்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்காக செயற்பட்டவர் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இதேவேளை தான் கட்டாயப்படுத்தப்பட்டே அங்கு வேலையில் இணைந்தாகவும் சுயவிருப்பின் பேரில் செயற்படவில்லை என்றும் குறித்த புகலிடக் கோரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இவர் சார்பில் கனேடிய குடிவரவு சபையின் வழக்கறிஞர் மார்க் டெஸ்லர் வாதிட்டார். இறுதியில், குறித்த புகலிடக் கோரிக்கையாளர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் அல்ல எனவும், இவருக்கு அகதி அந்தஸ்து வழங்க அனுமதிக்கும்படியும் மார்க் டெஸ்லர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் இணைந்து விவசாயம் முதல் கராஜ் தொழில் செய்தாலும் அவர்கள் விடுதலைப்புலிகளின் ஒரு பகுதியே ஆவர்.

விடுதலைப்புலிகள் அமைப்பானது கனடாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமாகும் என கனேடிய பெடரல் அரசாங்கம் வாதிட்டுள்ளது.

சன் சீ கப்பலில் பயணித்த விடுதலைப்புலிகள் எனச்சந்தேகிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து தாம் கனேடிய அரசிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று அரச தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர்.

எனினும் இந்தக் கூற்றிற்கு டெஸ்லர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது இந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இழைக்கப்படும் அசாதாரணமாகும்.

இவ்வாறு இவர்கள் விண்ணப்பித்தாலும் விடுதலைப்புலிகள் என்றே குற்றம் சாட்டப்பட்டால் மீண்டும் நாடு கடத்தப்படுவார்கள் என்று டெஸ்லர் தெரிவித்துள்ளார்.

சன் சீ கப்பலில் பயணம் செய்த 492 தமிழ் அகதிகளில் 45 பேர் மீது சட்டவிரோத ஆட்கடத்தல், போர்க்குற்றம், விடுதலைப்புலிகளுடன் செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கராஜில் வேலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான வழக்கும் கடந்த மாதம் இடம்பெற்றது.

இதன்போதும் அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை டெஸ்லர் நிராகரித்திருந்தார்.

இந்த மக்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள். எனவே விடுதலைப்புலிகளுடனான தொடர்பு தவிர்க்க முடியாததாகும்.

விடுதலைப்புலிகள் பஸ் சேவை முதல் சிறுவர்களுக்கு கல்வி போதிக்கும் பாடசாலைகளையும் உருவாக்கியுள்ளது என்று டெஸ்லர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சன் சீ கப்பலில் பயணித்தவர்களில் இருவருக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilenn

இந்த தேர்தலில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தால், தடையை எடுக்காவிட்டாலும், பல வழிகளிலும் கனடா வாழ் தமிழர்களின் மீது ஒரு காட்டப்படும் வெறுப்புபோக்கில் மாற்றம் வரும்.

இந்த தேர்தலில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தால், தடையை எடுக்காவிட்டாலும், பல வழிகளிலும் கனடா வாழ் தமிழர்களின் மீது ஒரு காட்டப்படும் வெறுப்புபோக்கில் மாற்றம் வரும்.

சிறிலங்காவை விட மோசமான கருத்துக்களை கனடா நாடு தமிழர் மேல் வைப்பது கவலைக்குரியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.