Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தாவையும், கோத்தபாயாவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May 1, 2011 / பகுதி: செய்தி /

மகிந்தாவையும், கோத்தபாயாவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்

சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு மேற்குலகம் மேற்கொண்டுள்ள முதலாவது படிமுறை தான் பான் கீ மூனின் அறிக்கை. மகிந்தாவையும், கோத்தபாயாவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தனது ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு மேற்குலகம் மேற்கொண்டுள்ள முதலாவது படிமுறை தான் பான் கீ மூனின் அறிக்கை. ஐ.நாவின் அறிக்கைக்கான ஆதரவுகளை திரட்டுவதற்கே கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீஸ் பல நாடுகளினதும், அரசசார்பற்ற நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை அழைத்து இரகசியக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

எதிர்வரும் வாரம் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வரும்போது, மகிந்தாவை வெளியேற்றும் மேற்குலகத்தின் நடவடிக்கைகள் ( “Operation Exit Rajapakse”) ஆரம்பிக்கப்பட்டுவிடும்.

அமைதி நடவடிக்கைகள் மற்றும் ஆழிப்பேரலைக் கட்டமைப்புக்கள் மூலம் மேற்குலகம் சிறீலங்காவில் கால்பதிக்க முனைந்திருந்தது. ஆனால் அவை நிறைவேறவில்லை. விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்களை அமைதி முயற்சிகளின் ஊடக தக்கவைக்கவே மேற்குலகம் விரும்பியிருந்தது.

அதற்காகவே நோர்வேயில் இருந்து எரிக் சொல்ஹெய்மையும் அனுப்பியிருந்தது. சிறீலங்காவில் உள்ள இரு முக்கிய அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்தவும் மேற்குலகம் முயன்றிருந்தது. தமது சொற்படி சிறீலங்கா நடக்கவேண்டும் என மேற்குலகம் விரும்புகின்றது.

ஆனால் மகிந்தா முரண்டு பிடிப்பதால், சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்குலகம் முனைந்துள்ளது. அரச தலைவர் தேர்தலில் மேற்குலகம் பொன்சேகாவை ஆதரித்ததே, மகிந்தாவுக்கான செல்வாக்கை சிங்களவர்களிடம் அதிகரித்திருந்தது. மேற்குலகத்தின் தலையீட்;டை சிங்களவர்கள் விரும்பவில்லை.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நாவின் அறிக்கை என்பது மகிந்தாவின் தலைக்கு மேல் தீர்க்கப்பட்ட துப்பாக்கி வேட்டாகும். வரும்காலத்தில் அவரினதும், அவரின் சகோதரர்களினதும் தலைகளை நோக்கியும் வேட்டுக்கள் தீர்க்கப்படும்.

ஈராக்கில் இடம்பெற்ற போர் வரையிலும் கடந்த 110 வருடங்களில் 14 நாடுகளின் அரசுகளை அமெரிக்கா தூக்கி வீசியுள்ளது. அதற்கு அவர்கள் பல காரணிகளை முன்வைத்திருந்தனர். ஹவாய் பகுதியில் 1893 ஆம் ஆண்டு முதலாவது ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா மேற்கொண்டது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான், குவந்தமாலா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் தலைவர்களை கூடஇராணுவப்புரட்சிகளை ஏற்படுத்தி அமெரிக்கா கவிழ்த்திருந்தது.

தனது அதிகாரத்தை தக்கவைக்கவும், வளங்களை கைப்பற்றவுமே அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மகிந்தாவையும், கோத்தபாயாவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்.

எனவே மேற்குலகத்தின் அடுத்த கட்ட நகர்வு என்பது பொருளாதாரத் தடைகளே என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pathivu

-- மேற்குலகம் நிச்சயம் இந்தியாவுடன் இணைந்தே முக்கிய முடிவுகளை எடுக்கும். தமிழகம் மூலம் புதுடெல்லியில் எமக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவைத்தால் எமது இலக்கிற்கு உதவும்.

-- சகல வல்லமை கொண்ட சனாதிபதி ஏற்கனவே அரசின் யாப்பில் பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளார் (பதவிக்காலத்தை நீடித்தது உட்பட). இதை மகிந்தாவை வைத்தே மாற்றி அதன் பின்னர் பதவியில் இருந்து இறக்குவது நன்மை பயக்கும்.

-- தொடர்ச்சியான ஒரு உறவை மேற்குலக அரசுகளுடன் நாமும் பேணுவது மூலம் இந்த மேற்குலக - சிங்கள நகர்வுகளுக்குள் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கவேண்டும்.

-- மேற்குலகம் நிச்சயம் இந்தியாவுடன் இணைந்தே முக்கிய முடிவுகளை எடுக்கும். தமிழகம் மூலம் புதுடெல்லியில் எமக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவைத்தால் எமது இலக்கிற்கு உதவும்.

-- சகல வல்லமை கொண்ட சனாதிபதி ஏற்கனவே அரசின் யாப்பில் பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளார் (பதவிக்காலத்தை நீடித்தது உட்பட). இதை மகிந்தாவை வைத்தே மாற்றி அதன் பின்னர் பதவியில் இருந்து இறக்குவது நன்மை பயக்கும்.

-- தொடர்ச்சியான ஒரு உறவை மேற்குலக அரசுகளுடன் நாமும் பேணுவது மூலம் இந்த மேற்குலக - சிங்கள நகர்வுகளுக்குள் எமது மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கவேண்டும்.

இல்லை இவங்கள் இருக்கும்போதே கொடியவங்களை காட்டி ஒரு தீர்வை பெற்றிடனும்.இவன் போனால் புது மாற்றம் சாதகமாக இருக்காது. பிறகு அது பழைய குருடி கதவை திறவடி கதை தான்

அவன் அபபடியே இருக்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை. இவர்கள் ஆட்சியிலுருந்து அகற்றப்பட்டு வேறு ஆட்சி அமையுமானால் தீரவுத்திட்டங்கள் கிடப்பில் போய்விடும். மேற்குலகம் தனக்குச்சாதகமானவர்களை ஆட்சிக்குப்கொண்டுவர முயற்சிக்கும். அது சரிவராவிட்டால் பலாத்காரத்தை பாவிக்கமுற்படுவது இனறு இலங்கையுள்ள சூழ்நிலையில் மிகவும் சுலபமல்ல. தன்னுடைய, தனக்குச்சாதகமான நகர்வுக்ள வரும் வரைக்கும் மேற்குலகமும் இந்தியாவும் விடமாட்டாது. இந்த நகர்வுகளுக்கிடையில் தமிழர்நலன்கள் பிறக்கும்படி தமிழர்கள் நகரவேண்டும்.

இன்று ராஜபக்ஷ செய்யும் அட்டூழிங்களைப்பதிவு செய்து கொண்டிருக்கும் மேற்குலகம், அவற்றைக்கண்டுகொண்டும் மௌனம் சாதிப்பது ஏனெனில் இறுதியில் தூக்கி முன்வைத்து இவ்hகளை அகற்றுவதே. சதாமிற்கு உயிரியல் ஆயுதங்களைக் கொடுத்த குர்டிஷ் இனத்தின்மீது சதாம் பாவித்து லட்சம் லட்சமாகக்கொன்றபோது அமெரிக்கா மௌனமாகத்தான் இருந்தது. பின்னர் சதாமை அகற்றும்போது தூக்கிமுன்வைத்து அவரைக்கொன்றது. இதுதான் அமெரிக்காவின் அரசியல் திருவிளையாடல்கள். ராஜபக்ஷ அன் கோ ஏற்கனவே போதியளவு தில்லுமுல்லுக்களும் கொலைகளும் செய்தது ஆதாரங்களுடன் அமெரிக்காவிடம் இருக்கின்றது. இவர் இவர்கள் பிடியிலிருந்து தப்புவது சிரமம் தான் இருந்தாலும் சீனாவும் ரஷ்சியாவும் பக்கபலம் இருப்பதால் நிறைய சிரமங்களை இலங்கை எதிர்நோக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.