Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின அடையாளத்தைப் பாதுகாக்க அனைவரும் அணி திரளவேண்டும் - மேதினச் செய்தியில் மாவை அழைப்பு :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அடையாளத்தைப் பாதுகாக்க அனைவரும் அணி திரளவேண்டும் - மேதினச் செய்தியில் மாவை அழைப்பு :

02 மே 2011

தமிழனாக இருந்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மன்னிக்க முடியாதளவுக்கு தொடர்ந்தும் குற்றம் இழைத்துவருகிறார். அதே சமயம் ஐ.நா. சபையில் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் அபத்தமானவை கண்டிக்கப்பட வேண்டியவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா நேற்று யாழ். நகரில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மேதினக் கூட்டம் நேற்று யாழ். நகர் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசு சார்ந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகிறார்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்கால் நோக்கி 4 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் சென்றனர். இதனை அப்போது அரச அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் உறுதிப்படுத்தியிருந்தார். அத்துடன் உலக உணவுத் திட்டத்தில் மூன்று லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பதியப்பட்டிருந்தனர்.இவ்வாறு ஆதார ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுடன் இணைந்து 70 ஆயிரம் மக்கள் மட்டுமே அங்கு உள்னர் என எண்ணிக்கையைக் குறைத்துக் கூறினார். அது தொடர்பாக தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். இது டக்ளஸ் தமிழ் மக்களுக்குச் செய்த முதலாவது தவறு ஆகும்.

எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும், கலாசாரம் சிதைக்கப்பட்டும், சிங்கள மயமாக்கப்படும் நிலையில் தமிழனாக உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு உண்மையை மூடி மறைத்துக் கூறுவது எவ்வளவு பெரிய குற்றம்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததை ஐ.நாவின் அறிக்கை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஒன்றுமே இறுதிப் போரில் இடம்பெறவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருப்பது இரண்டாவது மாபெரும் தவறு ஆகும்.

தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல் தீர்வு காண்பதற்காக அரச தரப்பு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தியது. அதன்போது 13 ஆவது அரசியல் திருத்தத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது அவரது மூன்றாவது மிகப்பெரிய தவறு ஆகும்.

13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்களுக்கென எந்த அதிகாரமும் இல்லாத வெறும் எலும்புக் கூடு போன்றது ஆகும்.

தமிழ்மக்களது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என இந்தியத் தலைவர்கள் அவ்வப்போது கூறியிருக்கின்றனர்.இந்த நிலையில் டக்ளஸ் தமிழ் மக்களது அரசியல் தீர்வு குறித்து அவசரப்பட்டு இப்படிக் கூறுவது ஏன்?அரசுடனும் ஏனைய அமைச்சர்களுடனும் இணைந்து சர்வதேசத்துக்கு இவ்வாறு உண்மைகளை மறைத்து டக்ளஸ் தேவானந்தா நடந்துகொள்வதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என மாவை சோனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

தமிழின அடையாளத்தைப் பாதுகாக்க அனைவரும் அணி திரளவேண்டும் - மேதினச் செய்தியில் மாவை அழைப்பு :

01-05-2011 - 07:23

இன்றைய மே நாளில் ஒட்டுமொத்த தொழிலாளர், விவசாயிகள் என உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளையும் அதற்கு மேலாக மனித உரிமை, வாழ்வுரிமைக்காகவும் தமிழ் இன அடையாளத்தையும் பாதுகாக்கவும் நாம் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மே தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: பேரினவாதக் கொள்கைகளுடன் இலங்கையில் இனரீதியாகவே தொழிலாளவர்க்கம் பிளவுபடுத்தப்பட்டு, தமிழ் மக்களும் உழைக்கும் வர்க்கமும் ஒடுக்கு முறைக்கு அரசியலமைப்பு மூலமாகவே ஆளாக்கப்பட்டு, தமிழ் இன அடையாளத்தையே இழந்து நிற்கும் நிலை மட்டுமல்ல, அரசியல் அடிப்படை உரிமைகளை இழந்து, மனித உரிமைகளை இழந்து, வாழும் உரிமை கூட இல்லாத, அந்த உரிமைகளுக்குப் போராடுவதற்கே உரிமையற்ற அடக்கு முறைக்கும் இன ஒடுக்கு முறைக்கும் உள்ளான ஒரு நிலையே தமிழ்த் தேசிய மக்களுக்கு இன்று இலங்கையில் ஏற்பட்டுவிட்டது.

மனித குலத்தின் மனித உரிமை, வாழும் உரிமை, அடிப்படை அரசியல் உரிமை, ஐ.நா. மன்றத்தின் அடிப்படை சாசனமாக இருக்கும் போது அந்த உரிமைகளை நிலை நாட்டுவதற்கு இலங்கையில் நாம் போராட வேண்டியுள்ளோம்.இன அடையாளத்தையே நிலை நாட்டப் போராட வேண்டிய நிலையில் தொழிலாளர், விவசாயிகள் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் போராடவேண்டிய கடப்பாடுடைய தமிழ் மக்களும் எழுச்சி பெற்றே ஆகவேண்டும். உழைப்பே இல்லாத அகதி வாழ்க்கையில் வீழ்ந்து கிடக்கும் பல லட்சக்கணக்கான மக்களும் எழுந்து வாழ்வுரிமைக்காகவே போராட வேண்டியுள்ளனர். இன்றைய 'மே' நாளில் ஒட்டு மொத்தமாக தொழிலாளர், விவசாயிகள் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளையும் அதற்கும் மேலாக மனித உரிமை வாழ்வுரிமைக்காகவும் தமிழ் இன அடையாளத்தையும் பாதுகாக்கவும் நாம் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டுமென அழைப்பு விடுவிக்கின்றோம் என்றுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)

2011 மே தினக் கூட்ட தீர்மானங்கள்

1) விசம் போல் ஏறி அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் நாட்டின் முழுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை சமாளிக்க முடியாத நிலையிலுள்ளனர். குறிப்பாக உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உழைப்பில்லாமல், நிவாரணமும் இல்லாமல் அகதிகளாக உள்ள மக்களின் நிலை மிகமோசமடைந்துள்ளது.அவர்களுக்கு நிவாரணம் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே அரசாங்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2) வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் அடிப்படையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படல் வேண்டும். அதிலும் தேர்தல் காலத்தில் அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டும்.

3) ஜனாதிபதி செயலகம் மற்றும் ஓய்வூதிய பணிப்பாளரினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2006ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வூதியம் பெற்றவர்களுக்கான ஓய்வூதிய முரண்பாட்டை நீக்கி அவர்களது ஓய்வூதியத்தை 2006ம் ஆண்டின் சம்பளத்திட்டத்தின் அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம்; கோருகின்றோம்.

4) வலி வடக்கு, வடமராட்சி கிழக்கு, வன்னி, கிளிநொச்சி, புலோப்பளை, இத்தாவில் மற்றும் முல்லைத்தீவு, சம்பூர் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் இன்னும் முறைப்படியாகவும் முழுமையாகவும் மீள் குடியேற்றப்படாத நிலையில் ஆயிரக் கணக்கானோர் தொடர்ந்தும் நண்பர்கள் உறவினருடனும் தற்காலிக கொட்டில்களிலும் அடிப்படை வசதிகளின்றியும் உரிய நிவாரண உதவிகளோ கொடுப்பனவுகளோ இன்றியும், வாழ்வாதார வசதிகள் எவையுமின்றியும,; நட்ட ஈடு எதுவும் வழங்கப்படாமலும், மிகுந்த வேதனையுடன் வாழ்கின்றனர்.

இந்தக் குறைபாடுகளை உடன் நீக்கி வேண்டிய உதவிகளையும், தேவைகளையும் பூர்த்தி செய் யவும் மீளக் குடியேறாமல் இருப்பவர்களை முஸ்லீம் மக்கள் உட்பட தத்தமது இடங்களில் குடியமர்த்தவும் அரசாங்கம்நடடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

5) இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக ஜ.நா.செயலாளர் நாயகம் பான் கீ. மூனினால்,நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் அதன் சிபார்சுகளின் அடிப்படையில், இலட்சக்கணக்கான உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து நிற்கும் தமிழ் தேசிய இனத்துக்கு இனியாவது நியாயம் கிடைக்கும் வகையில் தமிழக அரசும் இந்திய அரசும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பாக இனப்பிரச்சனைத் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்றும் அது சர்வதேச மேற்பார்வையில் இடம் பெற வேண்டுமென்ற இக் குழவின் சிபார்சை அமுல் செய்வதை உறுதி செய்யும் சர்வதேச நடவடிக்கைகளை முடிக்கி முன்னெடுக்க இந்தியா அரசு உரிய முனைப்புக் காட்ட வேண்டும் என்றும், தமிழினத்தின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான வழி;முறைகளை இந்தியா, சீனா, ரஸ்யா, போன்ற நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகளும் சர்வதேச ரீதியில் அக்கறையுடன் முன்னெடுக்கவேண்டும் எனக் கோரி நி;ற்கிறோம்.

6) யுத்தம் முடிவடைந்து, இரண்டு வருடங்களாகியும், யாழ்ப்பாண குடா நாட்டில், மர்மக் கொலைகளும், ஆட் கடத்தல்களும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றுக்குப் பின்னனியில் ஆயுதக் குழுக்களே இயங்குவதாக கருதப்படுவதால் சட்ட பூர்வமற்ற ஆயுதம் வைத்திருப்போர் சகலரிடமும் இருந்து ஆயுதங்களை உடனடியாக களைய வேண்டும் என அரசாங்கம் கோரப்படுகிறது.

7) யுத்த காலத்திலும் கல்விச் செயற்பாடுகளை சீர் குலைக்காமல் செயற்பட்ட பெருமைக்குரிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமும் பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் கல்வி சாரா சமூகமும் அந்த பெருமையைத் தொடர்ந்து பேணும் வகையில் தற்போது எழுந்துள்ள கருத்து வேறுபாட்டை சுமுகமாக பேசித் தீர்த்து கல்விச் செயற்பாடுகள் தடங்கலின்றியும் அச்ச சூழ் நிலை எதுவுமின்றியும் புரிந்துணர்வுடன் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

8) யாழ்ப்பாண குடா நாட்டு விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை திருப்தியாக மேற் கொள்ளக் கூடிய வகையில் அவர்களுக்கு வேண்டிய உள்ளீடுகள், மற்றும் உபகரணங்களை இலகுவில் பெற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற் கொள்வதுடன,; இடைத்தரகர்களின் சுரண்டல்களின்றி, தமது உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.

9) யாழ்ப்பாணக் குடா நாட்டின் மேற்கு கடற் பகுதிகளிலும் கிழக்குப் பகுதியான வடமராட்சி கிழக்கு, மற்றும் முல்லைத்தீவு கடற் பகுதிளிலும் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிப்பதால் எமது பகுதி கடற் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் பாதிக்கப்படுவது மிகவும் கவலைக்குரியது.

எனவே கடற்றொழிலாளர் அமைப்புக்களுடன் இலங்கை-இந்திய அரசுகள் கலந்தாலோசித்து இந்திய மீனவர்களின் அத்து மீறல்களைத் தவிர்க்கவும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாகஉயர் சக்தி வாய்ந்த படகுகளிலம் மீன் பிடிக்கக் கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டப்படுகிறது.

10) யுத்தம் முடிவடைந்த நிலையிலும் எமது பகுதி கடற் தொழிலாளர்கள் மீதான மீன் பிடிக் கட்டுப்பாடுகள் இன்னும் அமுல்படுத்துவதை நீக்கி அவர்கள் சுதந்திரமாக தொழில் செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

மேலும், இந்திய மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்hள் தமது தொழிலுக்காக பல

நாட்கள் படகுகளை –ஆரடவi னயல டீழயவள- பாவிக்கும் உரிமை எமது மீனவ சமூகத்தி ற்கும் வழங்கப்படல் வேண்டும் எனக் கோருகின்றோம்.

11) கள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அவர்கள் திறமைக்கு ஏற்ப கேட்கப்படுகின்ற பனை தென்னைகளிலிருந்து கள் இறக்குவதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்

ஊற்றுக் கள்ளு கழிபடக் கூடாது. முழுக் கள்ளும் அடைத்து விற்பனை செய்யப்படல் வேண்டும் பனை, தென்னை மூளவளத்தினால் வருகின்ற வருமானத்தில் இலாபத்தில் உற்பத்தியாளருக்கு தொழிலாளர்களுக்கு பங்கு வழங்க வேண்டும் என்பதுடன் அம் மக்களுக்கான நலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

12) யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுண்ணக்கல், மணல் போன்ற மூலவளங்கள் எதுவித கட்டுப்பாடுகளுமின்றி அகழப்பட்டு சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் இவற்றின் அகழ்வு நடவடிக்கைகளை ஆய்வுகளின் அடிப்படையில் நெறிப்படுத்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும.

13) இலங்கை அரசும் -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்தி வரும் பேச்சு வார்த்தையை வரவேற்கின்றோம். இந்த பேச்ச வார்த்தையில் பின்வரும் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்

1. உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அப்பிரதேசத்தில் அந்த நிலங்களுக்குச் சொந்த மக்கள் மீளக் குடியேற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. மீளக் குடியேற்றப்படுபவர்களுக்குத் தரமான வீடுகள் கட்டிக் கொடுப்பதுடன் வாழ்வாதாரங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும். உயிர் உடமைகளுக்கான நட்ட ஈடுகள் சர்வதேச மதிப்பீட்டின் அடிப்படையில் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

3. வாழ்க்கையை உழைப்பாளரை இழந்த குடும்பப் பெண்கள் மற்றும் அங்க ஈனர்களுக்கு வாழ்வளிக்க தகுந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதாரங்களும் வேலை வாய்ப்புக்களும் பயனுற உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

4. நீண்ட காலம் சந்தேகத்தின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் போர்க்காலத்திலும் அதன் பின்னரும் சரணடைந்தவர்களுக்கும் மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டுமென்றும், காணமல் போனவர்களைக் காண்பிக்கவோ, அல்லது பொருத்தமான விபரங்களையோ காணமல் போனோர் உறவகளுக்கு விரைவில் வழங்க வேண்டும்;.

5. தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு தமிழ் முஸ்லீம் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு சுயநிர்ணய உரிமைத் தத்தவத்தின் படியும் இணைந்த வடக்குக் கிழக்கு மாநிலத்தில் தன்னாட்சி உரிமைத் தத்துவத்தின் படி தீர்வு ஒன்றைக் காணும் வகையில் அரசு தீர்வை முன் வைக்க வேண்டும் என்றும் அந்த அடிப்படைக் கோட்பாடுகளில் எந்த விட்டுக் கொடுப்புக்களுமில்லாமல் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றோம்.

gtn

தமிழனாக இருந்தும் எம் மக்களுக்கு எதிராக குற்றமிழைத்து வருகிறார் அமைச்சர் டக்ளஸ்; நிபுணர் குழு அறிக்கை குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் அபத்தமானவை

தமிழனாக இருந்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மன்னிக்க முடியாதளவுக்கு தொடர்ந்தும் குற்றம் இழைத்துவருகிறார். அதே சமயம் ஐ.நா. சபையில் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் அபத்தமானவை கண்டிக்கப்பட வேண்டியவை.இவ்வாறு கூறினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா நேற்று யாழ். நகரில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மேதினக் கூட்டம் நேற்று யாழ். நகர் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.மாவை சேனாதிராசா அங்கு பேசும்போது மேலும் தெரிவித்தவை வருமாறு:

அரசு சார்ந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகிறார்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்கால் நோக்கி 4 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் சென்றனர். இதனை அப்போது அரச அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் உறுதிப்படுத்தியிருந்தார். அத்துடன் உலக உணவுத் திட்டத்தில் மூன்று லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பதியப்பட்டிருந்தனர்.இவ்வாறு ஆதார ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுடன் இணைந்து 70 ஆயிரம் மக்கள் மட்டுமே அங்கு உள்னர் என்று எண்ணிக்கையைக் குறைத்துக் கூறினார். அது தொடர்பாக தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். இது டக்ளஸ் தமிழ் மக்களுக்குச் செய்த முதலாவது தவறு ஆகும்.

எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும், கலாசாரம் சிதைக்கப்பட்டும், சிங்கள மயமாக்கப்படும் நிலையில் தமிழனாக உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு உண்மையை மூடி மறைத்துக் கூறுவது எவ்வளவு பெரிய குற்றம்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததை ஐ.நாவின் அறிக்கை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஒன்றுமே இறுதிப் போரில் இடம்பெறவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருப்பது இரண்டாவது மாபெரும் தவறு ஆகும்.

தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல் தீர்வு காண்பதற்காக அரச தரப்பு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தியது. அதன்போது 13 ஆவது அரசியல் திருத்தத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது அவரது மூன்றாவது மிகப்பெரிய தவறு ஆகும்.

13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்களுக்கென எந்த அதிகாரமும் இல்லாத வெறும் எலும்புக் கூடு போன்றது ஆகும்.

தமிழ்மக்களது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என இந்தியத் தலைவர்கள் அவ்வப்போது கூறியிருக்கின்றனர்.இந்த நிலையில் டக்ளஸ் தமிழ் மக்களது அரசியல் தீர்வு குறித்து அவசரப்பட்டு இப்படிக் கூறுவது ஏன்?அரசுடனும் ஏனைய அமைச்சர்களுடனும் இணைந்து சர்வதேசத்துக்கு இவ்வாறு உண்மைகளை மறைத்து டக்ளஸ் தேவானந்தா நடந்துகொள்வதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

http://onlineuthayan.com/News_More.php?id=88181206502825065

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை OK

சர்வதேச மேற்பார்வையுடனேயே பேசவேண்டும்

தமிழரசுக்கட்சி அறிக்கை (தமிழில்): http://www.tamilnet.com/img/publish/2011/05/ITAK_MayDay_2011.pdf

தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கை (தமிழில்): http://www.tamilnet.com/img/publish/2011/05/TNPF_mayday_1-5-2011.pdf

ITAK urges internationally supervised negotiations with GoSL

[TamilNet, Monday, 02 May 2011, 09:20 GMT]

Two veteran Ilangkai Thamizh Arasuk Kadchi (ITAK) politicians, C.V.K Sivagnanam and Mavai Senthirajah, on Sunday urged international supervision of a process that guarantees both a proper negotiation process and the implementation of results in the talks between the Tamil National Alliance (TNA) and the Government of Sri Lanka (GoSL). The two officials of ITAK, a key party of the TNA, in their address urged that both the governments of India and Tamil Nadu to play a sincere and constructive role to bring about an international supervision that should include China, USA and other world players. In the meantime, the Tamil National Peoples Front (TNPF) condemned the agents of the Sri Lankan state for forcing Tamils from all the districts in the North and East to take part in May Day demonstrations in Colombo, organized by Sinhala extremist elements against the UN Expert panel report.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33890

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.