Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ. நா. அறிக்கை இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கானது அல்ல - ரொபேட் பிளேக்

Featured Replies

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒன்று அல்லவென தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு இலங்கை ஓர் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடு ஆகவே அந்த நாட்டுடனான பலமானதும் நீண்டதுமான உறவு வைத்திருக்க விரும்புகின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபர்ட் ஓ பிளெக். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸீற்கும் றொபர்ட் ஓ பிளெகிற்கும் இன்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடற் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு போன்ற செயற்பாடுகளில் இலங்கையுடன் ஐக்கிய அமெரிக்கா நெருங்கி செயற்பட வேண்டியுள்ளதாக றொபர்ட் ஓ பிளெக் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, ஐக்கிய அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான அரசியல் பேச்சுவார்த்தை, மீள்குடியேற்றம், முன்னாள் போரளிகளுக்கான புனர்வாழ்வு, அரசியற் கைதிகள் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் றொபர்ட் ஓ பிளெக்கிற்கு விளக்கமளித்துள்ளார். இதேவேளை, தருஸ்மனின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாக கருதமுடியாது. அத்துடன் நிபுணர் குழுவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் றொபர்ட் ஓ பிளெக்கிடம் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்படுவதுடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விரிவான கடிதமொன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இச்சந்திப்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசீயா புட்டேனிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Eelanatham

தமிழரை பொறுத்தவரையிலும் பிளேக்கின் கூற்று சரியானதே, அதாவது, சிங்களத்தை அதன் தலைமை மாற்றமோ இல்லை எமது தேவை, எமது தாயகத்தில் நாமே எம்மை சுதந்திரமாக ஆளும் உரிமையே.

அதேவேளை பிளேக் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூட உண்மையில் என்ன கதைத்தார்கள், கூட்டமைப்பு என்ன சொன்னது என்பது மறைக்கப்படும். இதையடுத்து இந்தியா மற்றும் ஐ.நா. என்ன செய்கிறன என்பதிலேயே அமெரிக்காவின் நிலைப்பாடு தெரியும்.

------------------------------------------------------------------------------

இலங்கைக்கு வரமுன்னர் அளித்த செவ்வி

QUESTION: What will be on the agenda in your trips to these two countries? And what would [inaudible] to the Sri Lankan government especially after the release of this UN report on war crimes on this country?

ASSISTANT SECRETARY BLAKE: I think I’ll keep my message to the Sri Lankan government private until I actually give it to the Sri Lankans, but I’ll be having a press conference afterwards. In general we want to move forward on our relations with Sri Lanka. Although everybody is very focused on the Panel of Experts Report, we have wider relations with Sri Lanka than just that. I want to discuss the full range of issues on our agenda.

I’m looking very much forward to having the opportunity to travel up to the north for the first time ever in my career to Killinochi and to Mullativu which were formerly LTTE-controlled areas when I was there. So I’ve never actually seen either of those cities. We have quite a lot of U.S. Agency for International Development cooperation going on there, and I’m going to have a chance to not only see some of that but also to meet with some of the NGOs that are active there. I’m very much looking forward to that.

My second day will of course feature meetings with senior government officials and civil society and other people. I’ll have a press conference at the end of that.

http://www.state.gov/p/sca/rls/rmks/2011/162333.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.