Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சற்று நேரத்தில் உரோமாபுரி அழிந்து விடுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சற்று நேரத்தில் உரோமாபுரி அழிந்து விடுமா?

புதன், 11 மே 2011 10:01

E-mail அச்சிடுக PDF

இன்னும் சற்று நேரங்களுக்கு பின் உரோமாபுரி பாரிய பூமி அதிர்வில் அழிந்து விடுமா?

ஏனெனில் தலை சிறந்த வானியல் நிபுணர்களில் ஒருவரும், பூகம்பவியல் அறிஞரும், விஞ்ஞானியுமான Raffaele Bendandi உரோமாபுரி நகரம் 2011 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி பாரிய பூமி அதிர்வினால் முற்றாக அழிந்து விடும் என்று எதிர்வு கூறி உள்ளார்.

இவர் 1979 ஆம் ஆண்டு இறந்து விட்டார். 86 வருடங்கள் உயிர் வாழ்ந்து இருக்கின்றார்.

இவர் வாழ்நாளில் எதிர்வு கூறி இருந்த பூமி அதிர்வுகள் பல சொல்லி வைத்தபடி நடந்து இருக்கின்றன.

கோள்கள், சூரியன், சந்திரன் ஆகியவற்றின் அசைவுகள் காரணமாகவே பூமி அதிர்வு ஏற்படுகின்றது என்பது இவரின் நம்பிக்கை.

romeu.jpg

http://www.youtube.com/watch?v=F24D64QWVCU&feature=player_embedded

tamilenn

  • கருத்துக்கள உறவுகள்

_52665586_spain_lorca_quake_0511.gif

Spain: Earthquake rocks Lorca, Murcia, killing 10

At least 10 people were killed after a magnitude-5.3 earthquake toppled several buildings in southern Spain near the town of Lorca, officials say.

The quake struck at a depth of just 1km (0.6 miles), some 120km south-west of Alicante, at 1850 (1650 GMT), the US Geological Survey reported.

Lines of cars lay crushed under tonnes of rubble and a hospital was evacuated as a precaution.

The quake followed a 4.4-magnitude tremor about two hours earlier.

It is not clear how many people were injured, although Spanish media say there are dozens.

இத்தாலியை அடுத்துள்ள ஸ்பெனின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தால்.. உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவுமானியில் 5.3 அளவுள்ள பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இன்று பூகம்பம் ஏற்பட்டுள்ள பகுதியில் 2005 மற்றும் 1999 களிலும் பூகம்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஸ்பெனில் ஏற்பட்ட பூகம்பம் அதன் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் பெரியது என்று சொல்லப்படுகிறது. ஸ்பெனில் அடிக்கடி உணர முடியாத அளவுக்கு சிறிய பூகம்பங்கள் ஏற்படுவது வழமை ஆகும்.

இத்தாலியை அண்டிய ஐரோப்பிய - மத்திய தரைக் கடற் பகுதியில் இன்று பூகம்பம் நிகழுக் கூடும் என்ற எதிர்வுகூறல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று பூகம்பம் ஏற்பட்ட பகுதியிலேயே ஐரோப்பிய பூமித்தடும்.. ஆபிரிக்க பூமித்தகடும்.. மத்திய தரைக் கடலை ஒட்டி இணைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பூகம்ப நிகழ்வுகளின் முன்னைய பதிவுகளின் அடிப்படையில் சில பூகம்ப நிகழ்வுகள் பற்றிய எதிர்வு கூறல்களை வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/news/world-europe-13368599

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரெபேல் பெண்டாண்டியின் எதிர்வு கூறல் பொய்யாகியதா? _

வீரகேசரி இணையம் 5/11/2011 3:26:30 PM

இத்தாலியின் தலைநகரமான ரோமில் இன்று 11 ஆம் திகதி மே மாதம் 2011 இல் பாரிய நிலநடுக்கம் ஏற்படுமெனவும் இதனால் அந்நகரம் முற்றாக அழிந்துவிடுமெனவும் பூகம்பவியல் அறிஞர் ஒருவர் 1915 ஆம் ஆண்டு எதிர்வு கூறியிருந்தார்.

ஆனால் தற்போது இவரது எதிர்வு கூறல் ரோம் நகரில் இருந்து மக்களை பீதியில் வெளியேற வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது வதந்தியா? அல்லது உண்மையாக பேரழிவு ஏற்படப்போகின்றதே என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை இது தொடர்பான பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த எதிர்வு கூறலை மேற்கொண்டவர் யார்? இது ஏன் மக்களை இவ்வளவு தூரத்திற்கு பாதித்துள்ளது?

இதனை எதிர்வு கூறியரெபேல் பெண்டாண்டியின் என்ற இத்தாலிய விஞ்ஞானியான இவர் அக் காலத்தில் பூகம்பவியல் துறையிலும் நிபுணராக திகழ்ந்தார்.

1893 இல் பிறந்த இவர் தனது 86 ஆவது வயதில் 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி உயிரிழந்தார்.

இவர் வாழ்ந்த காலப் பகுதியில் இவர் பல பூகம்பங்களை சரியாக எதிர்வு கூறியுள்ளார்.

இதன் காரணமாக இவரின் எதிர்வு கூறல் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்தது.

1915 ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி ஏற்படுமென இவர் எதிர்வு கூறிய பூகம்பமும், 1976 மே மாதம் 6 ஆம் திகதி பிரியுலி நகரத்தில் ஏற்படுமென இவர் எதிர்வு கூறிய பூகம்பமும் சரியாக ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கன.

இவர் கோள்களின் அசைவுகளின் மூலமே இவர் பூகம்பங்களை எதிர்வு கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு மாத்திரமன்றி 2012 ஆம் ஆண்டில் பாரிய பூகம்பங்கள் ஏற்படுமென அவரது குறிப்பில் எழுதியுள்ளார்.

12603832.jpg

எனினும் இவர் எந்த இடங்களில் ஏற்படுமென அதில் குறித்துவைக்கவில்லை.

அதில் ஒன்று தான் ஜப்பானில் ஏற்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது. மற்றையவை பற்றி குறிப்புக்கள் இல்லாத போதிலும் ரோமில் ஏற்படலாம் என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே வேகமாக பரவிவிட்டது.

இதற்கு சமூக வலைத்தளங்களின் பங்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களில் இச்செய்தி காட்டுத் தீ போல பரவியுள்ளது.

குறித்த செய்தினானது விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியெனவும் பெண்டாண்டியின் குறிப்புக்களில் ரோமில் பூகம்பம் ஏற்படுமென எவ்வித குறிப்புக்களும் இல்லையென பெண்டாண்டி சங்கத் தலைவர் பஹாலோ லகோரியோ தெரிவித்துள்ளார். _

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.