Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலித்தேவனுக்கு பாலித கோஹன்ன தகவல் வழங்கினாரா? அவுஸ்ரேலிய ஊடகம் ஆராய்வு

Featured Replies

Death by text: Australian accused of war crimes

Ben Doherty Sri Lanka

May 14, 2011

BEATEN, bloodied and with nowhere left to run, they received the text message just before 9 o'clock on the Sunday morning.

It came, through an intermediary, from the foreign secretary of the Sri Lankan government, apparent instructions for a surrender: "Just walk across to the troops, slowly. With a white flag and comply with instructions carefully. The soldiers are nervous about suicide bombers."

Read more: http://www.smh.com.au/world/death-by-text-australian-accused-of-war-crimes-20110513-1emg6.html#ixzz1MG44Iilp

to: letters@theage.com.au

Subject: re : 'Walk to the troops': SMS sent Tamils to their death

Dear Editor,

Mr.Kohena, also an Australian citizen, is in the thick of the alleged war crimes. Thanks to your story ( http://www.theage.com.au/world/walk-to-the-troops-sms-sent-tamils-to-their-death-20110513-1emin.html ) it is abundantly clear he was involved directly in crimes that are in direct violation of Geneva conventions. And such, one would hope Australia would take necessary steps to follow justice on Mr.Kohena.

This would send a message to all those that Australia does in fact punish those commit crime against humanity.

Sincerely,

  • தொடங்கியவர்

Australian accused of war crimes

AUSTRALIAN citizen and senior Sri Lankan diplomat Palitha Kohona has been accused of complicity in the murder of surrendering Tamils two years ago.

In the final hours of the Tamil Tigers' war, Dr Kohona sent a text message though an intermediary with apparent instructions for a surrender, The Sydney Morning Herald reported today.

read more http://www.heraldsun.com.au/news/breaking-news/australian-accused-of-war-crimes/story-e6frf7jx-1226055699301

Edited by hari

சரணடையுமாறு பாலித்த ஹோகன்ன புலித்தேவனுக்கு அறிவித்தார்! அவுஸ்திரேலிய ஊடகம் தகவல்!!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை அறிவுறுத்தல்களுக்கு அமைய வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சென்று படைத்தரப்பினரிடம் சரணடையுமாறு விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவனுக்கு பாலித்த ஹோகன்ன அறிவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகமான தி ஏஜ் செய்தி வெளியிட்டுள்ளது.

'தற்போது படைத்தரப்பினரை நோக்கி வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு மெதுவாகச் செல்லுங்கள். அறிவுறுத்தல்களை கவனமாகப் பின்பற்றுங்கள். தற்கொலைக் குண்டுதாரிகள் குறித்து படைத்தரப்பினர் அச்சம் கொண்டுள்ளனர்' என சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் பாலித்த ஹோகன்னவால் புலித்தேவனுக்கு தகவல் அனுப்பப்பட்டதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இவ் விடயம் குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும்பாலான போராளிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதைவிட சாகும் வரை போராடவே விரும்பினார்கள். ஆனால் தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் வேறுவழியின்றி சரணடைய முன்வந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் நிபந்தனையின்றி சரணடைய முன்வருவதாக ஐரோப்பிய அனுசரணையாளர்கள் ஊடாக பாலித்த ஹோகன்னவுக்கு அறிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், கேணல் ரமேஸ் ஆகியோருடன் தானும் மற்றும் பொதுமக்கள் சிலரும் நிபந்தனையின்றி சரணடைய முன்வருவதாக இந்த அறிவிப்பில் புலித்தேவன் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்தே 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை 8.46 மணியளவில் மூன்றாவது தரப்பின் ஊடாக பாலித்த ஹோகன்ன புலித்தேவனுக்கு மேற்குறிப்பிட்ட தகவலை அனுப்பியிருந்தார்.

இத் தகவல் அனுப்பப்பட்ட மறுநாள் காலை 6.30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட்ட சுமார் 15 பேர் சிறிலங்கா படைத்தரப்பின் 58வது படைப்பிரிவை நோக்கி வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சென்றனர். இவர்களை சிறிலங்கா படைத்தரப்பினர் தமது வாகனங்களுக்கு பின்னால் அழைத்துச் சென்ற சில நிமிடங்களில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும், அபயக் குரல்களும் கேட்டன. இச் சம்பவத்தை நேரில் பார்த்த தமிழர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இச் சம்பவம் இடம்பெற்று அரை மணித்தியாலத்துக்குள் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரின் மரணங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. இச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புலித்தேவனின் மனைவியின் உடலமும் கண்டுபிடிக்கப்பட்டது' என இவ்வூடகம் தெரிவித்துள்ளது. அத்துடன், நிபந்தனையின்றி சரணடைவது தொடர்பில் புலித்தேவனுக்கு பாலித்த ஹோகன்ன தகவல் அனுப்பியதை இவ்வூடகம் மூன்று சுதந்திரமான தரப்புகள் ஊடாக உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களின் இந்த நிபந்தனையற்ற சரணடைவு குறித்த விவகாரம் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் படைத்தரப்பினரின் உயர்பீடங்களுக்கும் தெரிந்திருந்தது.</p>

இந்த விவகாரத்தில் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றிருந்த பாலித்த ஹோகன்ன முக்கிய பங்கை வகித்திருந்தார் எனவும் இவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களின் சரணடைவுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின்&nbsp; உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு வெளியிட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களின் சரணடைவு தொடர்பில் பாலித்த ஹோகன்னவுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் இரு தமிழர் அமைப்புகளால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதி பாலித்த ஹோகன்னவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக கடந்த 4ஆம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டவல்லுனர் Luis Moreno Ocampo தெரிவித்திருந்தார்.

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கைச்சாத்திடாத போதிலும், பாலித்த ஹோகன்ன அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதால் அவர் மீது விசாரணைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் இன்னர் சிற்றி பிரஸூக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={AA42BE2D-68CC-4328-B6A4-946ABDDFE390}

மூன்றாந்தரப்பொன்றிற்கு செய்தி ஒன்று ஹோகன்னவால் அனுப்பப்பட்டது என்பதை மூன்று வெவ்வேறு தரப்புக்களின் மூலம் Herald உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அ!வுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் Sydney Morning Herald ஊடகத்தின் செய்தியாளர் Ben Doherty எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

சிறிலங்காவில் முல்லைத்தீவு விடுதலைப்புலிகளின் இறுதி யுத்தம் இடம்பெற்ற இடம். அவ்வேளையில், தொலைபேசி ஊடாகவும் வேறுவழிமுறைகளிலும் நிபந்தனையற்ற சரணடைதலுக்குப் ஒப்புக்கொண்ட புலிகள் போர் வலயத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியேறுவதற்கான வழிகளை கோரியிருந்தனர்.

தற்போது இச்சம்பவம் நிகழ்ந்து இரு ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியப் குடியுரிமை பெற்றவரும், மூத்த சிறிலங்கா இராஜதந்திரியுயான பாலித ஹோகன்ன, சரணடைய வந்த தமிழர்களைக் கொலை செய்தமைக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இரத்தம் தோய்ந்த முல்லைத்தீவுக் கடற்கரையில் முடிவுற்ற சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு Herald [sydney Morning Herald] ஊடகத்தின் விசாரணையானது ஒரு இறுதி முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளால் தனிநாடு கோரி சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கால் நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட போரானது மே 2009ல் முடிவுக்கு வந்தது.

சிறிலங்காத் தீவின் மூன்றில் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த பயங்கரவாத புலிகளின் இராணுவம் கடலால் சூழப்பட்ட, கடல்நீரேரியான, குறுகிய கரையோரப்பகுதிக்குள் தள்ளப்பட்டு சிறிலங்கா இராணுவத்தின் முன்னேற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைச் சந்தித்துக்கொண்டது.

பெரும்பாலான புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதைவிட சாகும் வரை போராடவே விரும்பினார்கள். ஆனால் தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறுவழியின்றி சரணடைய முன்வந்தனர்.

மூர்க்கமான எறிகணைத்தாக்குதல்களின் மத்தியில் போதியளவு சார்ஜ் அற்ற பற்றறிகளைக் கொண்ட செல்லிடத்தொலைபேசிகளின் உதவியுடன் புலிகள் தம்மைக் காப்பாற்றக்கூடிய எல்லோருக்கும் தமது நிலைப்பாடுகள் தொடர்பான தகவல்களை அனுப்பினர்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் தமக்குத் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் போன்ற அனைத்துத் தரப்பினரின் உதவியையும் புலிகள் இறுதி நேரத்தில் நாடினர்.

அவர்கள் பல அழைப்புக்களை தொலைபேசிகளின் வழியே மேற்கொண்டனர். சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலரும், புலிகளிற்கெதிரான சிறிலங்காப் படைகளின் யுத்தத்தின் போது தமது தரப்புத் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பாலித ஹோகன்ன விற்குப் புலிகள் ஐரோப்பிய இடைத்தரகர் ஒருவரின் ஊடாக தகவல் ஒன்றை வழங்கியிருந்தனர்.

சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித ஹோகன்ன வெளிநாட்டு வர்த்தக மற்றும் விவகாரங்கள் என்ற திணைக்களத்தின் அவுஸ்திரேலியாவிற்கான இராஜதந்திரியாகவும் வர்த்தகத் துறைக்கான சமரசவாளராகவும் செயற்பட்டிருந்தார்.

இவர் தற்போது சிறிலங்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் அவுஸ்திரேலியத் தூதராகவும் உள்ளார்.

புலிகளின் சமாதானச் செயலகத்திற்குப் பொறுப்பாகவிருந்த புலித்தேவனால் அனுப்பப்பட்ட தகவலைப் இவர் பெற்றிருந்தார். புலித்தேவன் ஒரு இராணுவ வீரர் அல்லர். ஆனால் இவர் புலிகளின் கொள்கை தயாரிப்பாளர்களில் மிகவும் முக்கியமான நபராவார். அவர் நிபந்தனையற்ற சரணடைதலுக்கான தகவலை வழங்கியிருந்தார்.

இவருடன் இணைந்து இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் புலிகளின் அரசியற் பொறுப்பாளராகச் செயற்பட்ட நடேசன், புலிகளின் கேணல்களில் ஒருவரான ரமேஸ், மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடன் முல்லைத்தீவுக்கரையிலிருந்து செல்ல விரும்பினர்.

சில மணித்தியாலங்களின் பின்னர் வெள்ளைக்கொடியுடன் இவர்கள் பாதுகாப்பாக சரணடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 58வது இராணுவ நிலைக்கூடாக பாதுகாப்பான வழியில் இவர்கள் சரணடைவதற்குரிய ஒருவழியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. படைவீரர்களிடமும் இவர்களை எதிர்பார்க்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மே 17 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.46 மணிக்கு மூன்றாந்தரப்பின் உதவியுடன் புலித்தேவனுக்கு ஹோகன்னவிடமிருந்து எழுத்து மூலத்தகவல் ஒன்று தொலைபேசி ஊடாக வழங்கப்பட்டது.

"படையினர் நிலைகொண்டிருக்கும் இடத்திற்கூடாக மிக மெதுவாக நடந்து வரவும். அத்துடன் வெள்ளைக்கொடியைக் கையில் ஏந்தியவாறு தரப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். இராணுவ வீரர்கள் தற்கொலைக் குண்டுதாரிகள் தொடர்பாக அச்சமடைகிறார்கள்" என அந்ததகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்தநாள் காலை 6.30 மணிக்கு புலித்தேவன், நடேசன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உள்ளடங்கலாக வெள்ளைக் கொடிகளைத் தமது தலைக்கு மேலால் உயர்த்தியவாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக 58வது இராணுவ நிலைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

யுத்த வலயத்தில் இவர்கள் இராணுவத்திடம் சரணடையச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த தமிழர் ஒருவர் பின்வருமாறு தனது கருத்தை Herald இடம் கூறுகிறார். இவர் இச்சம்பவத்தின் பின்னர் சிறிலங்காவை விட்டு வெளியேறிவிட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இவரது பெயர் தெரியப்படுத்தப்படவில்லை.

"எனது இரு கண்களாலும் அவர்களை நான் கண்டேன். புலித்தேவன், நடேசன் முன்செல்ல ஏனையோர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களின் கைகளில் ஆயதங்கள் இருக்கவில்லை. அவர்கள் நிராயுதபாணிகளாகவே இருந்தார்கள். இராணுவ வீரர்களை நோக்கி அவர்கள் நடந்து சென்றார்கள். அந்த வீரர்கள் truck வாகனங்களை வைத்திருந்தனர். அந்த வாகனங்களின் பின்னால் சரணடையச் சென்றவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்னர் எங்களால் அவர்களைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் எமக்குத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. அவர்கள் முனகும் ஒலியும் கேட்டது. துப்பாக்கிப் பிரயோகம் இயந்திரத் துப்பாக்கிகள் போன்று மிகவேகமானதாக இருந்தது".

"அவர் சரணடைய முன்வருகிறார். ஆனால் நீங்கள் அவரை சுடுகிறீர்கள்" ஒரு சிங்களப் பெண்ணான புலித்தேவனின் மனைவி படைவீரர்களிடம் இவ்வாறு கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இடம்பெற்று அரை மணித்தியாலத்தில் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி ஊடகங்களின்; வாயிலாக வெளிவந்தது. புலித்தேவனது மனையிவின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. அன்றைய நாள் யுத்தமும் ஓய்வுக்கு வந்தது.

அதன் பின்னர் வந்த சில நாட்களில் சரணடையச் சென்றவர்கள் சிலரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் நிறையப் பேரின் உடலங்கள் கிடைக்கவில்லை. இராணுவத்திடம் சரணடையச் சென்றவர்கள் உயிருடனில்லை என நம்பப்படுகிறது.

புலிகளுடன் எவ்வித சமரச முயற்சிகளையும் மேற்கொள்ளும் நோக்குடன் தான் எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை என Herald இடம் ஹோகன்ன தெரித்தார். "நான் சிறிலங்காவின் வெளியுறவுச் செயலர். படையினருக்குக் கட்டளையிடும் அதிகாரமோ அல்லது பயங்கரவாதிகள் சரணடைதல் தொடர்பாகக் கலந்தாலோசிப்பதற்கான அதிகாரமோ எனக்கில்லை. இதனை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்யமுடியாது" சரணடையச் சென்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தன்னால் நம்பமுடியாமல் உள்ளதாக ஹோகன்ன தெரிவித்தார்.

"தொலைபேசி வழிவந்த எழுத்த மூலத்தகவல் ஒரு விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்திருந்தது. ஆனால் புலிகளுடன் தொடர்புடைய எவரும் இந்த விடயத்தில் தொடர்புபடவில்லை. சரணடைவதற்குரிய முயற்சிகளைச் செய்யவேண்டும் என்ற ரீதியில் அந்தத்தகவல் அனுப்பப்படவில்லை. அதனைச் செய்வதற்குரிய அதிகாரமும் எனக்கிருக்கவில்லை" என்கிறார் ஹோகன்ன.

மூன்றாந்தரப்பொன்றிற்கு செய்தி ஒன்று ஹோகன்னவால் அனுப்பப்பட்டது என்பதை மூன்று வெவ்வேறு தரப்புக்களின் மூலம் Herald உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரனான பாதுகாப்புச் செயலர் பசில் ராஜபக்ச ஆகிய இருவரதும் ஒப்புதலுடனும் புலிகளின் தலைவர்களால் அனுப்பப்பட்ட சரணடைவதற்கான வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட சிறிலங்கா விவகாரம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பசில் ராஜபக்சாவின் ஆலோசனைக்கமைவாக வெள்ளைக்கொடிகளை உயர்த்தியவாறு இராணுவ முன்னரங்கை நோக்கி மெதுவாக நடந்துவரும்படி புலிகளின் தலைவர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது"

புலிகள் சரணடைவதை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுத்த பசில் ராஜபக்ச மற்றும் அவரது மற்றுமொரு சகோதரனான கோத்தாபய ஆகிய இருவரிடமும், புலிகளின் தலைவர்களிடமும் நோர்வேத் தூதர் தொடர்பைக் கொண்டிருந்தார் என்பது அமெரிக்கத்தூதரக வட்டாரத் தகவல்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளன.

சரணடையும் சகல புலிகளையும் வழமையான நியமங்களுக்கு உட்படுத்தாமல் உடனடியாக கொலைசெய்யுமாறு சண்டைக்களத்திலிருந்த இராணுவத்தளபதி ஒருவரால் படைவீரர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக மூத்த இராணுவ அதிகாரி ஒருவரிடம் Herald மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. நிராயுதபாணிகளாகச் சரணடைந்த புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொன்று ஏனைய தமிழ்மக்கள் சரணடைவதை உறுதிப்படுத்திக்கொண்டது.

மனிதாபிமான மீடபு நடவடிக்கையைத் தான் மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

"பொதுமக்கள் தரப்பில் எவ்வித இழப்புக்களுமின்றி அரசாங்கம் தனது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது" என இவ்வாரம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

புலித்தேவன் மற்றம் நடேசனின் மரணம் தொடர்பாக தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை என Herald இடம் ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காணப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரியான ஆதாரங்கள் காணப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஏறறுக்கொள்ளமுடியாதது போல் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தென்படுகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20110514103859

Kohona admits to sending "Killer SMS"

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33944

Edited by Nellaiyan

to: otp.informationdesk@icc-cpi.int

cc: sonia.robla@icc-cpi.int

Subject: Dr.Kohana text messged to war crimes

Information and Evidence Unit

Office of the Prosecutor

Post Office Box 19519

2500 CM The Hague

The Netherlands

May 14, 2011

Dear Sir/Madam:

New media reports have reconfirmed that Sri Lankan/Australian citizen Dr.Palitha Kohana has directed civilians and members of Tamil Tigers to surrender via text message. Most were killed once they did surrender with white flags and others fate remain unknown.

These accusations have been confirmed by a surviving witness.

The ICC should add these info in the case against Sri Lanka’s war crimes and proceed investigation as soos as possible. Please do not delay justice and do not deny justice!

Sincerely,

---------------

Reference:

http://www.theage.com.au/world/walk-to-the-troops-sms-sent-tamils-to-their-death-20110513-1emin.html

http://www.smh.com.au/world/death-by-text-australian-accused-of-war-crimes-20110513-1emg6.html#ixzz1MG44Iilp

http://www.heraldsun.com.au/news/breaking-news/australian-accused-of-war-crimes/story-e6frf7jx-1226055699301

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி சென்ற சனிக்கிழமை சிட்னி மோர்னிங் கரல் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்தது. சிட்னியில் வெளிவரும் பத்திரிகைகளில் அதிகளவு மக்கள் விரும்பி வாங்கிப்படிப்பது சிட்னி மோர்னிங் கரல் பத்திரிகை. மேலும் பத்திரிகையின் நடுவிலும் பாலித கோகன்னாவின் போர்க்குற்றம் பற்றி செய்தி வெளியிட்டு இருந்தது. இன்னுமொரு பக்கத்தில் சிறிலங்கா பற்றிய Peace a battleல் என்ற தலைப்பில் செய்தி ஒன்று வந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.