Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள்

Featured Replies

நன்றி. முடிந்தவரையில் காலையில் இதை பதிவது நன்று.

பதிவதற்கு உதவுக்கரம் நீட்டுகிறேன்

  • Replies 94
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மாவீரன் அலெக்ஸாண்டர்

(கி.மு. 356_ கி.மு. 325)

கிரேக்க தேச மன்னனான மகா அலெக்ஸாண்டர் உலகின் கணிசமான பகுதியை போரின் மூலம் வெற்றிகொண்டு அரசாண்ட ஒரு மன்னனாவார்.

தனது ஆளுகைக்குள் அடங்கிய பகுதிகளிலெல்லாம் கிரேக்க நாகரிகத்தை பரப்பினார். இவர் இறந்த பின் சரியான வாரிசு இல்லாமல் இவரது சாம்ராஜ்யம் சதரிப் போனது.

தகவற் துளி

உலகின் மிகப்பெரிய பாலைவனம் வட ஆபிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 8,4000,000 சதுர கிலோ மீற்றர்களாகும்.(3,250,000 சதுர மைல்கள்)

நினைவிருக்கட்டும்! மகத்தான செயல் அனைத்தும் முதலில் முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டவைகளே.

-ஹிலிகல்-

உடன் செயற்படுத்தியமைக்கு நன்றி. தொடரவும்....

  • தொடங்கியவர்

14 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

பதிவுகள்

சந்திரிகா அரசுடனான 3ம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்ப நாள் (14.01.1995)

தைப்பொங்கல்

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயர குடி உயரும்

குடி உயர கோன் உயர்வான்

-ஒளவைப் பாட்டி-

தன்னிறைவான, தன்னில் தானே தங்கிநிற்க்கும் பொருளாதார

சமுகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

15 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

லெப். கேணல் குட்டிசிறி

(இராசையா சிறிகணேசன்)

சுதுமலை வடக்கு, யாழ்.

23.08.1967 - 16.01.1993

விடுதலைப் புலிகளின் முதுநிலை உறுப்பினர்களில் ஒருவரான

குட்டிசிறி இயக்கத்தின் இராணுவ தொழில்நுட்பப் பிரிவில்

கடமையாற்றியவர். தளபதி கிட்டுவோடு இனைந்து உருவாக்கிய. மோட்டார் எறிக்ணை செலுத்தி வகையிற்கு

'குட்டிசிறி' என இவரது பெயரே சூட்டப்பட்டது.

இவரது பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும்

'குட்டிசிறி மோட்டார் படையணி' பல சம்ர்களில் பெரு வெற்றிகளைத் தேடித் தந்திருக்கிறது. இவர் தளபதி கிட்டுவோடு இந்தியச் சதிக்குப் பலியாகி வீரச்சாவடைந்தார்.

தகவற் துளி

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கொல்ட் என்பவரால் முதன் முதல் 1830இல் பிஸ்டல் (றிவோல்வர் ரக துப்பாக்கி) கண்டிபிடிக்கப்பட்டது.

ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ -ஆயுதபலமோ அல்ல - அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும்,விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்..

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

யோவ் முகத்தார் :evil: :twisted: என்னிடம் தமிழ்த்தாய் நாட்காட்டி இருக்கு :!:

வெளிநாட்டில இருக்கிற உங்களுக்குத் தான் உபயோகமாயிருக்கும் அது தான் சொன்னேன். :idea:

ஓய் ஏன் எங்களிட்டை இல்லையா ளொள்ளா

:twisted: :twisted: :twisted: :twisted:

  • தொடங்கியவர்

16 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

கேணல் கிட்டு

(சதாசிவம் கிருஸ்ணகுமார்)

வல்வெட்டிதுறை, யாழ்

02.01.1961 - 16.01.1993

விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், முதுபெரும் தளபதியுமான கேணல் கிட்டு அவர்கள்,

போராட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு அத்தியாயம்.

யாழ். மக்களால் அன்புடன் நேசிக்கப்பட்ட இவர் சிங்களப் படைகளிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். வெளிநாட்டிலிருந்து 'குவேக்கர்ஸ்' இன் சமாதானச் செய்தியுடன் வந்துகொண்டிருந்தபோது இந்தியச் சதிக்குப் பலியாகி வீரச்சாவடைந்தார்.

பதிவுகள்

கேணல் கிட்டு, லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 வேங்கைகள் இந்தியச் சதிக்குப் பலியாகி வங்கக் கடலில் காவியமான் நாள்.

தகவற் துளி

டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது பயணிகளைக் காப்பாற்றிய கப்பலின் பெயர் 'கார்பாத்தியா' என்பதாகும்.

கேணல் கிட்டு ஒரு தனி மனித சரித்திரம். ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு...................

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

17 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

முதுபெரும் தளபதி கேணல் கிட்டுவினதும் ஏனைய போராளிகளினதும் நினைவாக.

எங்கே? எங்கே? வேங்கைகள் எங்கே?

இந்திய அரசே பதில் கூறு. அந்த சந்தன.

மேனிகள் செந்தணலான சங்கதி தெரியும் பதில் கூறு.

கடலில் வெடித்த கப்பலில் இருந்து

கரும்புலி ஆயிரம் பாயும், உனைத்

தடவும் தென்றல் காற்றும் - இனிமேல்

அனலாய்தானே வீசும்.

பதிவுகள்

17.01.2001 அன்று யாழ். பல்கலைக்கழகத்தின் தலைமையில்

'பொங்கு தமிழ்' என்ற நிகழ்வு மூலம் யாழ்ப்பாணச் சமுகம் தனது அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தி தமிழரின் விடுதலைப் போராட்ட அரசியலுக்கு வலுச்சேர்த்தது.

எம். ஜி. ராமச்சந்திரன் பிறந்தநாள்

17.01.1917 - 24.12.1987

கோடிக்கணக்கான மக்கள் இறந்து அழிந்துகொண்டே இருப்பர்

ஆனால் சா முலம் பயன்மிகு பெரு வாழ்வைப் ப்ர்றும் தீரர் ஒரு சிலரே.................

செய்திகளுக்கு நன்றி வினித்.....

எம்ஜியார் கண்டியில் தான் இதே நாளில் 1917ஆம் ஆண்டு பிறந்தார்..... (அவர் 1907ல் பிறந்தவர் என்று கூறுவோரும் உண்டு)

  • தொடங்கியவர்

இருக்கலாம் தமிழ்த்தாய் நாட்காட்டியில் இருந்ததைதான்

நான் பதிவு செய்து உள்ளேன் :P :P :P

ஆமாம்.... அவர் சினிமா கதா நாயகன் என்பதால் அவர் 10 வயதை குறைத்து விட்டார் என்பார்கள்....

எனக்கு தெரிந்து அவர் மரணமடையும் வரை வாலிபர் தான்.....

  • தொடங்கியவர்

18 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

லெப்.கேணல் எரிமலை

(தங்கராசா கிருபாகரன்)

யாழ். மாவட்டம்

12.01.1999

லெப்.கேணல்ஒஸ்கார்/ஆதிமான

(இமானுவேல் இமாறல்)

மன்னார் மாவட்டம்

12.01.19999

12.01.1999 அன்று குச்சவெளிக் கடற்பரப்பில் சிறிலங்காக்

கடற்படையினருடனான மோதலில் லெப். கேணல் எரிமலை லெப்.கேணல் ஒஸ்கார் ஆகியோரோடு 12 கடற்புலிகளும் வீர்ச்சாவடைந்துள்ளனர்..............

தகவற் துளி

முதன்முதல் அணுகுண்டுப் பரிசோதனை 1945ஆம் ஆண்டு நியூ மெக்சிக்கோவிலுள்ள அலமோகோர்டோவுக்குப் வடமேற்கில் உள்ள வைற் சாýட்சிø §Áü¦¸¡ûÇôÀð¼Ð.

Á¡Å£Ã÷¸ÇÐ «üÒ¾Á¡É þÄðº¢Â Å¡ú쨸 - «Å÷¸ÇÐ

¾¢Â¡¸í¸û, «Å÷¸û «ÛÀÅ¢ò¾ ÐýÀ ÐÂÃí¸û,

²ì¸í¸û, «Å÷¸û ¸ñ¼ ¸É׸û - þ¨Å ±øÄ¡ÅüÈ¢ÉÐõ ´ðÎ ¦Á¡ò¾ ¦ÅÇ¢ôÀ¡¼¡¸§Å ±ÁÐ §À¡Ã¡ð¼ ÅÃÄ¡Ú Óý§ÉÈ¢î ¦ºø¸¢ýÈÐ................

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

19 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

பிரசித்தி பெற்ற வானியல் விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி

76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால்நட்சத்திரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இறுதியாக இந்த ஹாலி வால்நட்சத்திரம் 1986-இல் தோன்றியது....................

பதிவுகள்

சிறீலங்கா அரசின் வாகனங்களில் சிங்கள சிறி பொறிக்கப்பட்டதற்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டம். (1957)

தகவற் துளி

வீடுகள் கட்டுவதற்காக அமேசன் காடுகளை அழிப்பதில் முன்னணியில் உள்ள நாடு பிரேசில்.

இங்கு ஒவ்வொரு வருடமும் 36,500 சதுரக் கிலோமீற்றர் காடுகள் அழிக்கப்படுகின்றன.

புதிய கருத்து ஒவ்வொன்றும், அதன் தொடக்க நிலையில் ஒருவரே ஆதரிக்கும் சிறுபான்மையாகத்தான் இருக்கும்.

-தாமஸ் கார்லைஸ்-

ஹாலி வால்நட்சத்திரம் இறுதியாக 1985ல் தோன்றியது என்பதாக திருத்தி வாசிக்கவும்..... இது பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு.....

பிரபல அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் 1835ல் பிறந்த அன்று வானில் இந்த வால் நட்சத்திரம் தோன்றியது.....

1910ல் சரியாக 75 ஆண்டுகள் கழித்து அவர் மரணமடைந்த அன்று இரவும் இதே நட்சத்திரம் வானில் தோன்றியது.....

மார்க் ட்வைன் தான் "அட்வென்சர்ஸ் ஆப் டாம் சாயர்" எனும் அழியா குழந்தை இலக்கியத்தை படைத்தவர்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் ,

நல்ல முயற்சி...தொடரட்டும் உங்கள் பணி....

தமிழ்தாய் நாட்காட்டி இல்லாத எம் போன்றவர்களுக்கு உங்கள் உதவி பெறுமதியானது...

  • தொடங்கியவர்

20 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

வீரவேங்கை ராஜ்மோகன்

(சிவராமலிங்கம் ராஜ்மோகன்)

தும்பளை - பருத்தித்துறை

29.03.1965 - 20.01.1984

ராஜ்மோகன் என்னும் போராளி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும்போது சிங்களப் பொலிசாரால் சுடப்பட்டு 1984 ஆண்டு வீரச்சாவடைந்தார்.

தகவற் துளி

சினிமாத்துறையின் மைய நிறுவனமாக 1913 ஆம் அண்டு

ஹொலிவூட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

அன்றுதொட்டு இன்றுவரை தமிழரின் போராட்டம் அறவழியைத் தழுவி நிற்கிறது. அகிம்சை வழியிலும் சரி,

ஆயுத வழியிலும் சரி, தமிழர் வரித்துகொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில்நெறிப்பட்டிருகின

  • தொடங்கியவர்

21 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

சோவியத் யூனியனின் சிற்பி லெனின்

10.04.1870 - 21.01.1924

லெனின் - சோவியத் புரட்சிக்கு தலைமை வகித்து உலகின் முதல் சோசலிச அரசை நிறுவியவரும் தத்துவஞானியுமாவார்.

இன்று லெனின் நினைவுநாள் ஆகும்.

பதிவுகள்

அறிஞர் ம.ப.பெரியசாமிதூரன் நினைவுநாள்.

(26.09.1908 - 21.01.1987)

தகவற் துளி

உலகின் முதன் அச்சிட்டு வெளியிடப்பட்ட நூல்

'டிமோன் சுட்ரா' என்பதாகும். இது 868- இல் சீனாவில் வெளியிடப்பட்டதாகும்...........

நத்தையின் நாக்குல் 135 வரிசைகளில் 14175 பற்கள் காணப்படுகின்றன.............

நாம் சுக்கிரன் எனக் கூறும் வெள்ளி(வீனஸ்) கிரகம்

'காதல் கிரகம்' எனவும் வர்ணிக்கப்படுகிறது. இதுவே மிகவும் பிரகாசம் கூடிய கிரகம் ஆகும்..........

சுதந்திர எழுச்சியின் உந்துதலால் தான் மனித வரலாற்றுச்சக்கரம் சுழல்கின்றது.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

வாழ்த்துக்கள் அண்ணா பல பேருக்கு உதவக்கூடியதாக உள்ளது தங்கள் தகவல்

  • தொடங்கியவர்

22 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

இலத்தீன் அமெரிக்கப் புரட்சி வீரன் சே குவாரா

14.06.128 - 09.10.1967

ஆர்ஜண்டீனாவில் பிறந்து

கியூபாவின் விடுதலைக்காகப் போராடி வென்று,

பின்னர்பொலிவியப் புரட்சியின்போது வீரச்சாவடைந்தவர்

சே குவேரா. உலகப் புகழ்பெற்ற புரட்சிவீரனும்,

கெரில்லாப் போர்முறையுக்கு புதுமெருகூட்டிய வித்தகனுமான இவர் ஒரு வைத்திய நிபுணனுமாவார்.

பதிவுகள்

சுவாமி ஞானப்பிரகாசர் நினைவுநாள்

(30.08.1875 - 22.01.1947)

தகவற் துளி

கூடிய எல்லைகளைக் கொண்ட

நாடுகள் சீனாவும். ருஸ்யாவும் ஆகும்.

இவை 14 எல்லைகளைக் கொண்டுள்ளன.

அதிர்ஷ்டம் என்ற சொல், எப்போதும்

துணிச்சல் உள்ளவர்களின் பக்கமே நிற்கும்.

-சீனப் பழமொழி-

ஒரு போராளி அமைச்சராய் மாறுவது அதிசயமில்லை....

ஆனால் கியூபாவின் பொருளாதார அமைச்சராக இருந்த சே-குவாரா காங்கோ புரட்சியின் போராளியாய் மாறியது தான் அதிசயத்திலும் அதிசயம்.... போராளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது சே-குவாரா தான்.... அவருக்கு என் வீர வணக்கங்கள்.....

  • தொடங்கியவர்

23 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மேஜர் தாரணி

(மதிவதனி சுப்பிரமணியம்)

பூநகரி

20.02.1968 - 23.01.1991)

மகளிர் படையணியின் முதன்மைத் தளபதிகளுள் இவரும் ஒருவர். பலாலித்தளத்தின் காவல்ரண்கள் மீது நடாத்தப்பட்ட

தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

தகவற் துளி

பாரிஸ் சின்னமாக விளங்கும் ஈபிள் கோபிரம் 1889-இல்

நடைபெற்ற உலகக் கண்காட்சிக்காகக் Gustave Eiffel என்னும்

பொறியியலாளரால் கட்டப்பட்டது. 317 மீற்றர் உயரக் கோபுரத்தில் 3 மாடிகளும் 1652 படிகளும் உள்ளன................

தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்ட நாள்.....

இலட்சியத்தால் ஒன்றுபடு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

24 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

தேசபக்தை ஜோன் ஒன் ஆர்க்

பிரான்ஸ்

26.01.1412 - 30.05.1431

இவர் பிரான்ஸ் நாட்டின் தேசிய வீராங்கனை. 15ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுபட இவரது முயற்சியே காரணம்.

பிரெஞ்சுக்காரர்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். ஒரு சண்டையில் காயமடைந்த இவரை கைதுசெய்த ஆங்கிலேயர்கள் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்றனர்........

தகவற் துளி

கண்டியின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கன்

ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு வோலூருக்கு நாடு கடத்தப்பட்ட நாள்............

நான் உயிருக்குயிராக நேசித்ததோழர்கள்.

என்னோடுதோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும்.

ஆயினும் சோகத்தால் நான் சோர்த்து போவதில்லை.

இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு

மேலும் உரமூட்டியிருக்கின்றன..

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

25 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

லெப். கேணல் தூயமணி/ லெனின்

(வைத்தியநாதன் சிவநாதன்)

கிளிநொச்சி

08.09.1968 - 22.08.1997

தமிழீழம் மீதான பெரும் படையெடுப்பான ஜெய்சிக்குறுய்

சமர்களத்தில் எதிரிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த இவர், சமரின் ஆரம்பகாலம் தொட்டு புலிகள் சேனையின் சிறந்த தளபதியாகக் கடமையாற்றினார். 22.08.1997 அன்று இடம்பெற்ற சமரில் வீரச்சாவடைந்தார்.

பதிவுகள்

சுண்ணாகம் குமாரசாமிப் புலவர் நினைவு நாள்.

(12.01.1855 - 25.01.1922)

தகவற் துளி

அதிவேகமாக நீந்தக்கூடிய மீனினம் 'டியுனா' ஆகும்

இது மணித்தியாலத்திற்கு 100 மைல்கள் நீந்தக்கூடியது.

காலம் காலமாக எமது மக்கள் அனுபவித்த அவலங்கள்,

சாவும் அழிவுமாக அவர்கள் சந்தித்த அநர்த்தங்கள் இவை யெல்லாம் பெளத்த தேசத்தின் காருணயத்தைத்

தொட்டதாகத் தெரியவில்லை.........

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

26 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

சேர் எட்வேட் ஜென்னர்17.05,1749 - 26.01.1823

சேர் எட்வேட் ஜென்னர் சின்னம்மை நோய்க்கான மருந்தான அம்மைப்பால் குத்தலைக் கண்டுபிடித்தவராவார்.

பதிவுகள்

தோலகட்டி ஆச்சிரம சுவாமி தோமஸ் நினைவு நாள்

(1886 - 26.01.1964)

அவுஸ்திரேலிய தேசிய தினம்

இந்தியக் குடியரசு தினம்

(1950)

தகவற் துளி

உலகின் இரண்டாவது பெரிய நகரம் மெக்சிக்கோ ஆகும்.

உலகிலேயே இலக்கியத்திற்கான நோபல் பரிசை முதலில் பெற்ற நாடு பிரான்ஸ் ஆகும்...

மக்களின் துன்ப, துயரங்களில் பங்குகொண்டு, அவர்களது

கஸ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.....

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

27 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுக்கல்

ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த வன்னிக் குறுநில மன்னன் பண்டாரவன்னியனுக்கு, ஆங்கிலத் தளபதியே இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். கப்டன் வொன் றிபேக் என்ற அந்த தளபதி, பண்டாரவன்னியனை தோற்கடித்த நிகழ்ச்சியினையே இந் நடுகல் காட்டுகின்றது.

இது கற்சிலைமடுவில் உள்ளது.

பண்டாரவன்னியன் நினைவுநாள் ஒக்டோபர் 31 ஆகும்.....

தகவற் துளி

யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை

அவர்கள். இவ் ஊர் பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ

கெளமுதி ஆகும்......

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம்

குறைவற்ற அமைச்சு, முறிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளிடை ஆண்சிங்கம் போன்ற அரசாகும்......

-குறள் விளக்கம்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.