Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள்

Featured Replies

  • தொடங்கியவர்

22 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

நாட்டுப் பற்றாளர் கோவை மகேசன்

22.02.1938 - 06.07.1992

தமிழரசுக் கட்சி நடாத்திய 'சுதந்திரா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்து தமிழ் உணர்வை மக்களுக்கு ஊட்டிக்கொண்டுருந்த ஒரு தேச பக்தன் கோவை

மகேசன். சிங்கள படைகளால் சுதந்திரன் பத்திரிகை

தடுக்கப்பட்டதும் தமிழ்நாடு சென்று 'வீரவேங்கை' என்ற

பத்திரிகையை நடாத்தி போராட்டத்திற்கு ஆதரவு சேர்த்துக்கொண்டிர்ர்நதார்.....

............

பதிவுகள்

22.02.2002 அன்று தமிழ்- சிங்கள இன முரண்பாட்டை அமைதிவழியில், அரசியல்ரீதியில் தீர்த்துவைக்கும் உயரிய நோக்குடன் தேஎசியத் தலைவர் அவர்களும், சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், புரிந்துணர்வு உடன்பாடென்றில் கையொப்பமிட்டனர்.

மலைபோல மக்கள் சக்தி எமக்குப் பின்னால் இருக்கும் வரை, எந்தப் புட்திய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • Replies 94
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

23 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

கடற்கரும்புலி லெப். கேணல் மதன்

(யோகச்சந்திரன் ரதீஸ்குமார்)

வெல்வெட்டித்துறை, யாழ்.

14.02.1996

கடற்கரும்புலி மேஜர் வேங்கை(சூசைப்பிள்ளை செல்வகுமார்)

பொலிகண்டி, யாழ்.

14.021996

முல்லைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் பெறுமதியான ஆயுத தளபாடங்களைக் காப்பாற்றும் பொரிட்டு இந்திய, இலங்கை கடற்படைகளுடன் ஏற்ப்பட்ட

மோதலின்போது வீரச்சாவடைந்தார்கள்.

பதிவுகள்

புறூணை சுதந்திர தினம்(1984)

கயானா குடியரசு தினம்(1970)

தகவற் துளி

சர்வதேச மன்னிப்புச் சமை, உலகின் சிறைகளில் அடைக்கப்படும் அரசியல் கைதிகளின் அடிப்படை உரிமைகளைப் பேணும் நோக்கில் 1961-இல் பீற்றர் பெரென்சன் என்ற வழக்கறிஞரால் ஸ்தாபிக்கப்பட்டது.

பசுபிக் சமுத்திரத்தில் ஜப்பானியக் கரையோரத்திலேயே அதிக எரிமலைகள் காணப்படுகின்றன.

  • தொடங்கியவர்

24 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

கப்டன் உமையாள்

செல்லத்துரை புஸ்பராணி

நெடுங்கேணி

கப்டன் நெடியோன்

குலேந்திரன்

ஞானசங்கர்

யாழ்.

கப்டன் அருண்

அம்பிகாவதி அருட்சோதி

யாழ்.

சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும்.

கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான கப்டன் உமையாள், கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.................

பதிவுகள்

யாழ். குருநகரில் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்த இராணுவ முகாம் கட்டிடம் குண்டுவைத்து தகர்கப்பட்ட நாள்.

24.02.1984

எஸ்தேனியா சுதந்திர தினம்.

  • தொடங்கியவர்

25 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

பிரபல கடலோடி ஜேம்ஸ் குக்

கி.பி. 1728 - கி.பி. 1779

அவுஸ்திரேலியக் கண்டத்தை கண்ட்றிந்த மாலுமி ஜேம்ஸ் கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு திறமையான கடலோடி. இவரது வாழ்வில் பெரும்பகுதி கப்பலிலேயே கழிந்துள்ளது. அந்தளவுக்கு கடற்பயணங்களிலே வாழ்க்கையைச் செலவிட்டார்.

தகவற் துளி

1720 இல் ஹொலண்ட் நாட்டைச் சேர்ந்த கார்னீஸ் வரண்டிராபில் என்பவர் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார்.

அறிவு ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் எந்து இனமும் எந்து மக்களும் வளரவேண்டுமென்று நான் அதிகம் விரும்புகின்றேன்...............

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

26 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

மேஜர் தமிழினியன்

நடராஜா கிருபாகரன்

யாழ்ப்பாணம்

மேஜர் சுலோஜன்

குமாரலிங்கம் விஜேந்திரன்

திருமலை

மேஜர் குமரேஸ்

துரைராசா

செல்வகுமார்

வவுனியா

திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் மேஜர் தமிழினியன்,

மேஜர் சுலோஜன்,மேஜர் குமரேஸ் ஆகியோரும் அடங்குவர்.

தகவற் துளி

செஞ்சிலுவைச் சங்கம் 1864-இல் ஆரம்பிக்கப்பட்டது.

இம்மாநாட்டில் 26 நாடுகள் கலந்துகொண்டன.

ஒருவர் தம் நடுநிலைமைப் பொறுப்பிலிருந்து நீங்கித் தவறான செய்லில் இறங்குவது, பார் நான் கெட்டோ ஒழிவேன் எனத் தெரிவிப்பதற்குரிய அறிகுறியே!

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

27 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

மேஜர் வள்ளுவன்

செல்வராசா தவராசா

யாழ்ப்பாணம்

மேஜர் தமிழ்மங்கை

துரைராசா சத்தியவேணி

பூநகரி

கப்டன் மொறிஸ்

தர்மபாலசிங்கம் தயாபரன்

யாழ்ப்பாணம்.....

திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் மேஜர் வள்ளுவன், மேஜர் தமிழ்மங்கை, கப்டன் மொறிஸ் ஆகியோரும் அடங்குவர்.....

தகவற் துளி

உலகிற்கு முதன் முதல் கார்ல் மார்க்சினால் 1848-இல் கம்யூனிசக் கொள்கை வெளியிடப்பட்டது.

1954-இல் அமெரிக்க கான்சர் மையம், முதன் முதலாக சிகரட் பிடித்தால் கான்சர் வருமென்று கண்டுபிடித்துச் சொல்லியது.

தனது உயிர் என்ற பற்றும் தான் என்ற செருக்கும் கொள்ள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

28 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

கப்டன் ஜனார்த்தினி

கயிலைநாதன் சுகந்தி

முள்ளியவளை

கப்டன் நங்கை

பட்டுராசா கெளசலா

யாழ்ப்பாணம்

22.02.1998 திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் கப்டன் ஜனார்த்தினி,கப்டன் நங்கை ஆகியோரும் அடங்குவர்.

தகவற் துளி

நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று. நம்மைப் புகழ்ந்துரைக்கும்போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.

1897-இல் பாதுகாப்பு முகச் சவரக் கத்தியை சிங்.சி.கில்லட் என்பவர் கண்டுபிடித்தார்.

எகிப்து சுதந்திரதினம்(1922)

வரலாறு என்பது மனித விடுதலையை நோக்கி நகரும் ஒரு பேரியக்கம்.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

01 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

பேரரசன் ஜெங்கிஸ்கான்

கி.பி. 1162 - கி.பி. 1227

உலக வரலாற்றில் உலகம் முழுவதையும் வெற்றிகொண்டு ஒரு குடையின் கீழ் ஆளவேண்டும் என்ற கொள்கையில், ஆசியாவின் பெரும்பகுதியை வெற்றிபெற்று பல நூற்றாண்டு

காலத்திற்கு மொங்கோலியர்கள் ஆட்சியில் நிலைபெறுவதற்கு வித்திட்ட மொங்கோலிய பேரரசன்....

தகவற் துளி

இரையே இல்லானல் பாம்பு 25 மாதங்களும், தவளை 16 மாதங்களும், மூட்டைப் பூச்சி 6 மாதங்களும் உயிர்வாழும்.

அணுகுண்டு வெடித்தாலும் சாகாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சியாகும்.

விலாங்கு மீன் நிலத்திலும் வாழக்கூடியது....

சூரியக் கதிர்கள் பூமியை அடைய எடுக்கும் நேர்ம் 8 நிமிடங்கள் 19 செக்கன்கள்.

தென்கொரிய சுதந்திரநாள்....

மனித ஆன்மாவின் ஆழமன அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தகவல்கள்....நன்றி விஷ்ணு அண்ணா.....

  • தொடங்கியவர்

நல்ல தகவல்கள்....நன்றி விஷ்ணு

:P :P :P

விஸ்னுவா.? :lol::lol::lol:

  • தொடங்கியவர்

2 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

லெப். கேணல் நிர்மா

மேரி சாந்தினி ஞானானந்தம்

கிளிநொச்சி

(23.09.1973 - 28.04.2001)

தமிழீழத்தில் இடம்பெற்ற பல முக்கிய களங்கள் லெப். கேணல் பொன்னம்மான் கண்ணிவெடி அணியின் 2வது பொறுப்பாளராகச் செயற்பட்டவர். தீச்சுவாலை-01 எதிர் நடவடிக்கை வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தகவற் துளி

திருத்தியமைக்கப்ப்பட்ட இரு சக்கர வண்டியினை வடிவமைப்புச் செய்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டெரி என்பவராவார். 1885-இல் இதனை வடிமைத்தார்.

மொராக்கோ சுதந்திரநாள்(1956)

கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெய்யர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்குகின்ற போதும், அவ்ர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாத புகழ்பெற்று வாழும்.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

03 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

லெப். கேணல் இம்ரான்

(சங்கரப்பிள்ளை சதானந்தன்)

கொக்குவில், யாழ்.

(20.01.1961 - 03.03.1988)

யாழ்மாவட்டத் தளபதி லெப். கேணல் இம்ரான் நினைவுநாள்(1988)

தகவற் துளி

மாமனிதர் 'சிரித்திரன் சுந்தரம்' நினைவுநாள். 03.03.1996.

30 ஆண்டுகளுக்கு மேலாக 'சிரித்திரன்' என்ற இலக்கிய நயம் வாய்ந்த நகைச்சுவைப் பத்திரிக்கையை வெளிகொணர்ந்தவர்.

கிரேக்க நாட்டைச் சேர்ந்த இராடோஸ்தனிஸ் என்பவரே முதன் முதலில் உலகப் படத்தை வரைந்தவராவார்.

சோவியத் அதிபர் ஸ்டாலின் நினைவுநாள். (1879 - 1959)

எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளத

  • தொடங்கியவர்

04 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

பிரபல ஒவியர் லியனார்டோ டாவின்சி

(15.04.1452 - 02.05.1519)

உலகப் பிரசித்திபெற்ற் 'இறுதி விருந்து' (The Last Super), 'மொனலிசா' போன்ற ஓவியங்களை வரைந்தவர் லியனார்டோ டாவின்சியாகும். இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின்போது இவரது படைப்புகள் வகித்த பங்கு முக்கியமானதாகும். இவர் வரைந்த மொனலிசா ஓவியம் இப்போதும் பாரிஸ் நூதனசாலையில் இருக்கின்றது. மேலும் யுத்த டாங்கி, உலங்கு வானூர்தி ஆகியவைஇ எவ்வாறு வடிமைக்கப்படவேண்டும் என்பதையும் தீர்க்கதரிசனமாக வரைந்திருந்தார்.

தகவற் துளி

1783ம் ஆண்டு மொண்ட் கொல்வியர் என்ற பிரஞ்சு நாட்டவரே முதன் முதல் ஒஅறக்கும் பலூனைக் கண்டுபிடித்தவர்.

ஆபிரக்கக் கண்டமே அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டமாகும்.............

பலம் வாய்ந்த ஒரு எதிரியை படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அவனது மனோவுறுதியை உடைத்தெறிந்து, அவனது ஆயுத பலத்தை அழிப்பதற்கு கெரில்லாப் பாணியிலான போர்முறையே தலைசிறந்த யுத்த தந்திரமாகும்.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

5 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

சிறீலசிறீ ஆறுமுகநாவலர்

யாழ்ப்பாணம்

(18.12.1822 - 05.12.1879)

வசன நடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்பட்டவர் இவர். பழந் தமிழ் நூலகள் பலவற்றை ஆராய்ந்து அச்சேற்றக் காரணமாய் இருந்தார். மாணவர்களுக்காகப் பல பாடநூல்களையும் ஆறுமுகநாவலர் இயற்றினார்.

தமிழ்நாட்டில் நாவலர் என்ற பட்டத்தைப் பெற்றவர்.பெரும் பஞ்சம் ஊரை வாட்டியபோது ஏழைகளுக்காகப் பாடுபட்டார்.

தகவற் துளி

பேர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க பைபிளினை முதன் முதல் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தவர் ஆறுமுகநாவலராவார்.

உலகின் முதலாவது புத்தகம் விலியம் காக்ஸ்டன் என்பவரால்

1447-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

முதலாவது விலங்குகள் காட்சியகம் பாரிஸ் நகரத்தில் 1793-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்.

-குறள்-

  • தொடங்கியவர்

06 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

திருவள்ளுவப் பெருந்தகையர்

தமிழர் வரலாற்றில் மிகச் சிறந்த வாழ்வியல் நூலான திருக்குறளை உலகுக்குத் தந்தவர் இவர். மனித வாழ்வியல் பற்றி எழுதப்பட்ட உலகின் ஈடு இணையற்ற ஒரு படைப்பு என குறளைச் சொல்ல முடியும். தமிழினத்தின் தொன்மையையும், பெருமையையும் பறைசாற்றும் பண்டைய தமிழ் நூல்களுக்குள் திருக்குறளே முதன்மையானதாகும்.

தகவற் துளி

பாகிஸ்தான் என்ற சொல் பஞ்சாப், ஆப்கான், காஸ்மீர், சிந்து. பலுசிஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆங்கில முதலெழுத்துகளில் இருந்து பிறந்ததாகும். இச்சொல்லிற்கு உருது மொழியில் தூய பூமி என்றும் அர்த்தப்படும். இச்சொல்லினை முதன் முதலில் இந்திய முஸ்லீம் லீக் அறிமுகப்படுத்தியது.

'கெடேம்பே' என்ற செடியில் இருந்து கிடைக்கும் பதார்த்தமே உலகின் அதிக தித்திப்பான பொருள் ஆகும்.

கருமங்களைத் தொடங்குவது அல்ல, அவற்றைத் தொடர்ந்து முற்றுமுழுதாகச் செய்து முடிப்பதே சிறப்பு.

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

07மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

இங்கிலாந்து பிரதமர் வின்சன் சேர்ச்சில்

1874 - 1965

1874-ம் ஆண்டு பிறந்த வின்சன் சேர்ச்சில் இளம் வயதில் றோயல் இராணுவக் கல்லூரியில் கல்வி பயின்றதோடு இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார். 2ம் உலகப் போரின்போது இங்கிலாந்திற்குத் தேவைப்பட்ட உறுதியான தலைமையினை வழங்க பிரதம மந்திரியாக தெரிவுசெய்யப்பட்டதோடு, ஜேர்மனுக்கு எதிராக போரினை உறுதியாக நெறிப்படுத்தினார். நாடு எதிர்நோக்கும் பிரச்சனையை தெளிவாக மக்களுக்கு உடன்க்குடன் தெரியப்படுத்தியதோடு, வெற்றிப்பாதை நோக்கி மக்களை உறுதியாகவும் வைத்திருந்தார்.

பதிவுகள்

கவியோகி சுத்தானந்த பாரதியார் நினைவுநாள்.(11.05.1897 - 07.03.1990)

தகவற் துளி

உலகின் மிக நீளமான பாலம் ஜப்பானில் கொன்சு- சிக்கொகோ என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1,780 மீற்றர் ஆகும்.

உலகிலே மிக நீண்டகாலம் வாழ்பவர்கள் ஜப்பானியர்களே.

மானம் பெரிது! பகைவனின் பின்சென்று அவர் சொற்கேட்டு வாழ்வதா? அந்த இழிநிலை கொடியது, ஏற்கவே முடியாத்து.

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

08 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.

அனைத்துலகப் பெண்கள் நாள்

உலக சனத்தொகையில் பெரும்பானமையினராக உள்ள் பெண்ணினம் இன்றும் உலகின் பல பாகங்களிலும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி வினித்,தமிழ் நாட்காட்டிகளின் பதிவுகளினைத் தொடர்ந்து எமக்குத்தாருங்கள். ஏன் நிறுத்திவிட்டீர்கள்?

  • 2 months later...

வினித் மீண்டும் தொடரலாம் தானே அல்லது வேலைப்பழுவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.