Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் புதிதாக 37வங்கிக்கிளைகள் திறக்கப்பட்டுள்ளன-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் புதிதாக 37வங்கிக்கிளைகள் திறக்கப்பட்டுள்ளன- மத்திய வங்கி ஆளுநர்!

Published on May 21, 2011-10:07 am · No Comments

2009 மே மாதம் தொடக்கம் 2011 மே மாதம் வரை 37 வங்கிக்கிளைகளும் 22 விரிவாக்கல் நிலையங்களும் வடக்கு மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவின் மத்திய வங்கியின் ஆளுநர் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

அவசரமாக நிதி உதவி தேவைப்படும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அகதி மக்களுக்கு மீள்கடனுதவி வழங்குவதற்கும் மத்திய வங்கி பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது என்றும் மீண்டும் நெற்செய்கை மற்றும் கடற்றொழில் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதி உதவியை விரைவாகக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் விரைவுச் செயற்றிட்டத்தின் கீழ் 4,097 பில்லியன் ரூபா பெறுமதியான 38,277 கடன்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. 2,170 மில்லின் ரூபா பெறுமதியாக 26,577 கடன்கள் தனியார் மற்றும் அரச வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் 2011 இலிருந்து 2013 வரை 251 பில்லியன் ரூபா பணத்தை வடக்கில் முதலீடு செய்யவிருக்கின்றது. அப்பணத்தில் 2011 இல் மட்டும் 50.9 பில்லியன் ரூபா பணத்தை முதலீடு செய்யவிருக்கின்றது, கிழக்கில் 2006 இலிருந்து 2010 வரை 116 பில்லியன் ரூபா பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது 2011 ஆம் ஆண்டில் 26.6 பில்லியன் ரூபா பணத்தை முதலீ செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்..

30 வருட கால யுத்தத்தின் பின்னர் நாட்டின் எல்லா பிராந்தியங்களிலும் உயர்ந்த பெயரளவிலான வளர்ச்சி காணப்படுவதாகவும் அது தொடரும் என்று

எதிரப்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நிவார்ட்

கப்ரால் தெரிவித்தார்.

2009 மே மாதம் வடக்கில் யுத்தம் முடிவுக்கு வந்தது. கிழக்கு மாகாணத்தில் அதற்கு முன்னரே முடிவுக்கு வந்தது. 2009இல் வடக்கில் 14.1 சதவீத பெயரளவிலான அளவில் வளர்ச்சி காணப்பட்டது. அது தான் நாட்டின் ஏனைய மாகாணங்களை விட உச்சமாக இருந்தது. கிழக்கில் 14 சதவீத வளர்ச்சி காணப்பட்டது. வடக்கில் 2006 இல் 2.8 வீதம் இருந்த மொத்த உள்ளுர்

உற்பத்தி 2009 இல் 3.3 சதவீதமாக அதிகரித்தது. மொத்த உற்பத்தி (GDP) வீதம் 2006 இல் 4.9 ஆக இருந்தது. அது 2009 இல் 5.8 சதவீதமாக அதிகரித்தது. 2010 ஆம் ஆண்டுக்குரிய புள்ளிவிவரங்கள் இறுதியாக்கப்படவில்லையாயினும் பெறுபேறுகள் 2009 ஆண்டுக்கு சமமாகவே இருக்கும் என நம்புவதாக என்று மத்திய வங்கியின் ஆளுநர் நிவார்ட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மக்களுக்கு நிதி வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு திட்டம் ஒன்றைத் தயாரித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். வழமையாக நீண்ட காலம் எடுக்கும் நடைமுறைக்கு பதிலாக விண்ணப்பம் கிடைத்து இரண்டு வாரங்களுக்குள் வங்கிக்கிளைகளைத் திறப்பதற்கு மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கி வருவதாகவும்

அவர் தெரவித்தார்.

thinakkathir.

இந்த சேவைகள் மூலம் தமிழர்களுக்கு சேவைகள் / நலன்கள் இருக்கலாம். ஆனால் இதன் முதன்மை நோக்கம் புலம்பெயர் தமிழர்களின் மூலம் அனுப்பப்படும் பணத்தை தமது வங்கிகளில் முதலீடு செய்ய வைத்தல். இந்த பணம் மூலம் தான்:

- சிங்கள பகுதிகளை முன்னேற்றலாம்

- தமிழர்களை அடக்கும் இராணுவ, காவல்துறைக்கு சம்பளம் தர உதவும்

போருக்கு முன்னரும், இடம்பெயர்ந்த / காணாமல் போன / கொல்லப்பட்ட / புலம்பெயர்ந்த தமிழர்களின் அறவிடமுடியாக்கடன் பல கோடி ரூபாய்கள்! உருசி பட்ட பூனை ஆச்சே!!

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதியில் 9 லட்சம் தமிழர்கள் வாழ்வதாகவும், எனினும் வங்கிகள் பெருமளவில் வடபகுதிக்குப் படையெடுத்து, தமிழ் மக்களின் பணத்தை சேமிப்பில் எடுக்க முயல்வதாகவும், இப்படி எடுக்கப்படும் சேமிப்புப் பணத்தில் வடபகுதியில் தொழில் செய்யக் கடனுதவிக்கு 30 இலிருந்து 50 வீதத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் தரவுகள் உள்ளன. அத்துடன் யாழ் குடா நாட்டில் 60 000 குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணத்தில் தங்கியுள்ளதாகவும், 30 வீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதகாவும் அதே தரவுகள் சொல்லுகின்றன. வன்னியில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் 90 வீதத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக்குடிசை கட்டி

பொன்னான உலகென்று பெயருமிட்டால் பூமி சிரிக்கும் அந்தச்சாமி சிரிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.