Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் தலைமையின் அணுகுமுறை குறித்து நம்மிடம் இம்மியளவு கூட சந்தேகங்கள் இருந்திருக்கவில்லை எங்களிடம் இருந்ததெல்லாம் ..?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித குல நம்பிக்கைக்கு எவரும் முற்றுப்புள்ளியிட்டுவிட முடியாது.

சூழ்நிலைமைகளால் உருவாகும் வாய்ப்புக்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு, முன்நோக்கி நகரும் ஆற்றல் இருக்கும் எவரது நம்பிக்கைப் பயணமும் ஒரு போதுமே முற்றுப்புள்ளிகளை தரிசிப்பதில்லை. ஆனால் சூழ்நிலைமைகளில் இருந்து கற்றுக் கொள்ளும் ஆற்றலற்று, பகை உணர்வை மட்டுமே தமது மூலதனமாகக் கைக்கொள்ளுவோர் முற்றுப்புள்ளிகளை மட்டுமே தரிசிக்க நிர்ப்பந்திப்படுவர். இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்படியொரு நாளில், நமது பெருமதிப்புக்குரிய விடுதலைப்புலிகளின் தலைவரான வே.பிரபாகரன் அவர்கள், யுத்தத்தில் கொல்லப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடகங்கள் அறிவித்த போது, இது ஒரு வஞ்சகமான அறிவித்தல் என்றே நாம் கருதினோம். பின்னர் அவரின் உடலம் என்று காட்டப்பட்ட போதும் கூட, அதுவும் சோடிக்கப்பட்ட ஒன்றென்றே நிராகரித்தோம். அப்போது நம்மிடம் இருந்தது விடுதலைப்புலிகளின் தலைமை குறித்த அதீத நம்பிக்கை மட்டுமே!

புலிகளின் தலைமையின் அணுகுமுறை குறித்து நம்மிடம் இம்மியளவு கூட சந்தேகங்கள் இருந்திருக்கவில்லை.

எங்களிடம் இருந்ததெல்லாம் ஒரு பக்தன் தான் வழிபடும் கடவுள் மீது வைத்திருக்கும் குருட்டுத்தனமான பக்தி மட்டுமே! ஆனால் அந்தப் பக்தி இன்று எங்களை எங்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது?

மிகவும் பிரமாண்டமாகத் தம்மை வெளிப்படுத்திய ஒரு இயக்கம் இவ்வளவு குறுகிய காலத்தில் அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டதை இன்றும் நம்புவது கடினமானதுதான்.

ஆனாலும், உலகின் அதிகார மையங்களுக்கிடையிலான போட்டியால் நகர்த்தப்படும் பூகோள அரசியலில் இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அனைத்துலக அரசியல் நகர்வில் விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்கள் வளர்வதற்கு எத்தகைய இடைவெளிகள் இருந்ததோ, அதே இடைவெளிகள் இவ்வாறான அமைப்புக்களை அழித்தொழிப்பதற்கும் வாய்ப்பாக இருக்கின்றன என்ற உண்மை 2009 மே 19ல் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. இந்த யதார்த்தத்தை உணர்ந்தவர்கள் எவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள்ளும் அவர்களது ஆதரவுத் தளங்களிலும் இருந்திருக்கவில்லையென்று சொல்ல முடியாது. இந்த எதிர்கால யதார்த்தத்தை உணர்த்த முற்பட்டு தோற்றுப் போனவர்கள் சிலராக இருக்க, நிலைமைகளை தெளிவாக உணர்ந்தும் அதனை வெளிப்படுத்த முடியாத மனச்சங்கடத்திற்கு ஆளானவர்கள் ஏராளம்.

இவ்வாறு உண்மையை உணர்த்த முற்பட்டவர்கள் அவ்வியக்கத்தின் தன்முனைப்பு வாதத்திற்கு முன்னால் மண்டியிட நேர்ந்தது.

இதில் முக்கியமானவர் விடுதலைப் புலிகளின் 'தத்துவ ஆசிரியர்' என புகழப்பட்ட அன்டன் பாலசிங்கம்.

இன்னொருவர் விடுதலைப் புலிகளின் 'முக்கிய உறுப்பினர்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட வே.பாலகுமார்.

பாலசிங்கம் மரணப்படுக்கையில் கிடக்கும் தறுவாயில் கூறியதான செவிவழிக் கதையொன்று உண்டு.

அண்ணே என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கேட்டதற்கு – தம்பி நான் தம்பியை ஐந்து தடைவைகள் காப்பாற்றியிருக்கிறேன் ஆனால் இம்முறை காப்பாற்றுவதற்கு நான் இருக்கப் போவதில்லை என்று கூறினாராம்.

இப்படித்தான் பாலகுமார் தனது நண்பரும் தோழருமான ஒருவருக்கு [புதினப்பலகை நெறியாளர்களில் ஒருவர்] அனுப்பிய மின்னஞ்சலில் we have to also pay the ultimate price,may be called 'பாவத்தின் சம்பளம்' என எழுதி இருந்தார்.

இவைகளிலிருந்து நாம் 'கற்றுக் கொள்ள எடுக்கும் முனைப்பு'தான் இனிவரப் போகும் காலத்தின் அரசியல் செல்நெறியை தீர்மானிக்கும்.

அது ஒன்றுதான் இனிமேல் வரலாறு வழங்கப்போகும் அபூர்வ வாய்ப்புக்களை மக்கள் மேன்மைக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலை நமக்கு வழங்கும்.

ஈழத்தமிழர்தம் வரலாற்று பெருந்துயரின் இரண்டாம் ஆண்டு.

இதனை ஈழத்தமிழ்த் தேசியத்தை வரலாறு தண்டித்த இரண்டாம் ஆண்டெனவும் கொள்ளலாம்.

அதாவது, ஆயுதவழி போராட்டத்தை நடாத்திய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் அழிக்கப்பட்டு, ஈழத்தமிழரது ஆயுதப்போராட்டம் தோல்விக்குள் தள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து போயுள்ளன.

இதுவரை கார்த்திகை மாதத்தில் தியாகத்தின் பெருமைகள் பற்றிப் பேசி வந்த நாம் தற்போது மே மாதத்தின் வலிகள் பற்றியும் பேசத் தொடங்கி உள்ளோம்.

சிறிது காலம் பெருமை. சிறிது காலம் கவலை என்பதாகத்தான் நமது காலம் கழியப் போகிறதா? இவைதான் நாம் நமது தலைமுறைக்கு விட்டுச் செல்லவிருக்கும் அரசியல் முதுசமா?

ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றில் மே மாதத்திற்கு ஒரு தனித்துவமான இடமுண்டு. அதாவது கடந்த முப்பது ஆண்டுகளாக நெறிப்படுத்தி வந்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பின் வரலாற்றுப் பயணம் கடந்த 2009 மே-19 உடன் முடிவுக்கு வந்தது.

1972ம் ஆண்டு தமிழ்ப் புதிய புலிகளாக தங்களை வெளிப்படுத்திய அவர்கள் 1975 மே மாதத்தில்தான் தமது பெயரை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பு என்று மாற்றிக் கொண்டனர்.

1975 மே 5ம் நாளில் தொடங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பயணம் 2009 மே 19ம் நாளில் நிறைவுக்கு வந்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்தொழிப்பதில் துணைபோன இந்திய அதிகார வர்க்கத்தின் வன்மத்திற்கு காரணமான ராஜீவ் காந்தியின் படுகொலையும் இப்படியொரு மே மாதத்தில்தான் நிகழ்ந்தது.

நேரு குடும்பத்தின் வாரிசும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாகவும் கருதப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலை நிகழ்ந்த அதே மே மாதத்திலேயே அதனை நிகழ்த்திய புலிகள் அமைப்பு முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது.

இவைகள் அனைத்தும் மே மாதத்தில் நிகழ்ந்திருப்பது தற்செயல் நிகழ்வுகள்தான் ஆனால் நமது அரசியல் வரலாற்றில் மே மாதம் ஒரு தீர்க்கமான இடத்தைப் பெற்றிருப்பதை மறுக்க முடியாது.

ஈழத்தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்களில் 2009 மே 19 இற்கு முன் - 19 இற்கு பின் என்று பிரித்து நோக்கும் ஓர் அரசியல் பார்வை நிட்சயம் இருக்கவே செய்யும்.

02.

நாம் இதுவரை இழந்தவைகள் அனைத்தும் இழந்தவைகள்தான் அவை இனித் திரும்ப போவதில்லை. எஞ்சியவை வடுக்கள்தான்.

ஆனால் எதிர்காலம், அதாவது இனிவரும் காலம் அது அப்படியேதான் இருக்கிறது. எமது கைகளால்தான், அது செதுக்கப்படுவதற்காக காத்து கிடக்கின்றது.

அப்படியானால் அதனை நமக்கான காலமாக எவ்வாறு நாம் மாற்றிக் கொள்ளப் போகின்றோம்? அது நம்மால் இயலுமானதா?

கடந்த அறுபதாண்டு காலத்தில் நிகழ்ந்துவிடாத ஒன்று இனிமேல் நடக்கக் கூடியதுதானா?

இப்படிப் பல கேள்விகள் நம்மை அலைக்கழித்தாலும் வரலாற்றில் இது ஒன்றும் புதியதல்ல.

உருக்குலைத்து அலைக்கழிக்கப்பட்ட யூதர்கள் தங்களை ஒரு தேசமாக செதுக்கிக் கொண்ட அனுபவத்தையும் வரலாற்றுப் பெட்டகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

முற்றிலுமாக நிலைகுலைந்து இனி நிமிர்ந்தெழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட யப்பானியர்கள், மீளவும் தங்களை அனைத்துலகில் தனித்துவமாக நிலைப்படுத்தியிருக்கும் சாதனையையும் வரலாறுச் சுவடி பதிந்து வைத்துள்ளது.

மனித குல நம்பிக்கைக்கு எவரும் முற்றுப்புள்ளியிட்டுவிட முடியாது.

சூழ்நிலைமைகளால் உருவாகும் வாய்ப்புக்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு, முன்நோக்கி நகரும் ஆற்றல் இருக்கும் எவரது நம்பிக்கைப் பயணமும் ஒரு போதுமே முற்றுப்புள்ளிகளை தரிசிப்பதில்லை.

ஆனால் சூழ்நிலைமைகளில் இருந்து கற்றுக் கொள்ளும் ஆற்றலற்று, பகை உணர்வை மட்டுமே தமது மூலதனமாகக் கைக்கொள்ளுவோர் முற்றுப்புள்ளிகளை மட்டுமே தரிசிக்க நிர்ப்பந்திப்படுவர்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்படியொரு நாளில், நமது பெருமதிப்புக்குரிய விடுதலைப்புலிகளின் தலைவரான வே.பிரபாகரன் அவர்கள், யுத்தத்தில் கொல்லப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடகங்கள் அறிவித்த போது, இது ஒரு வஞ்சகமான அறிவித்தல் என்றே நாம் கருதினோம்.

பின்னர் அவரின் உடலம் என்று காட்டப்பட்ட போதும் கூட, அதுவும் சோடிக்கப்பட்ட ஒன்றென்றே நிராகரித்தோம்.

அப்போது நம்மிடம் இருந்தது விடுதலைப்புலிகளின் தலைமை குறித்த அதீத நம்பிக்கை மட்டுமே!

புலிகளின் தலைமையின் அணுகுமுறை குறித்து நம்மிடம் இம்மியளவு கூட சந்தேகங்கள் இருந்திருக்கவில்லை.

எங்களிடம் இருந்ததெல்லாம் ஒரு பக்தன் தான் வழிபடும் கடவுள் மீது வைத்திருக்கும் குருட்டுத்தனமான பக்தி மட்டுமே! ஆனால் அந்தப் பக்தி இன்று எங்களை எங்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது?

மிகவும் பிரமாண்டமாகத் தம்மை வெளிப்படுத்திய ஒரு இயக்கம் இவ்வளவு குறுகிய காலத்தில் அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டதை இன்றும் நம்புவது கடினமானதுதான்.

ஆனாலும், உலகின் அதிகார மையங்களுக்கிடையிலான போட்டியால் நகர்த்தப்படும் பூகோள அரசியலில் இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

அனைத்துலக அரசியல் நகர்வில் விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்கள் வளர்வதற்கு எத்தகைய இடைவெளிகள் இருந்ததோ, அதே இடைவெளிகள் இவ்வாறான அமைப்புக்களை அழித்தொழிப்பதற்கும் வாய்ப்பாக இருக்கின்றன என்ற உண்மை 2009 மே 19ல் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த யதார்த்தத்தை உணர்ந்தவர்கள் எவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள்ளும் அவர்களது ஆதரவுத் தளங்களிலும் இருந்திருக்கவில்லையென்று சொல்ல முடியாது.

இந்த எதிர்கால யதார்த்தத்தை உணர்த்த முற்பட்டு தோற்றுப் போனவர்கள் சிலராக இருக்க, நிலைமைகளை தெளிவாக உணர்ந்தும் அதனை வெளிப்படுத்த முடியாத மனச்சங்கடத்திற்கு ஆளானவர்கள் ஏராளம்.

இவ்வாறு உண்மையை உணர்த்த முற்பட்டவர்கள் அவ்வியக்கத்தின் தன்முனைப்பு வாதத்திற்கு முன்னால் மண்டியிட நேர்ந்தது.

இதில் முக்கியமானவர் விடுதலைப் புலிகளின் 'தத்துவ ஆசிரியர்' என புகழப்பட்ட அன்டன் பாலசிங்கம். இன்னொருவர் விடுதலைப் புலிகளின் 'முக்கிய உறுப்பினர்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட வே.பாலகுமார்.

பாலசிங்கம் மரணப்படுக்கையில் கிடக்கும் தறுவாயில் கூறியதான செவிவழிக் கதையொன்று உண்டு.

அண்ணே என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கேட்டதற்கு – தம்பி நான் தம்பியை ஐந்து தடைவைகள் காப்பாற்றியிருக்கிறேன் ஆனால் இம்முறை காப்பாற்றுவதற்கு நான் இருக்கப் போவதில்லை என்று கூறினாராம்.

இப்படித்தான் பாலகுமார் தனது நண்பரும் தோழருமான ஒருவருக்கு [புதினப்பலகை நெறியாளர்களில் ஒருவர்] அனுப்பிய மின்னஞ்சலில் we have to also pay the ultimate price,may be called 'பாவத்தின் சம்பளம்' என எழுதி இருந்தார்.

இவைகளிலிருந்து நாம் 'கற்றுக் கொள்ள எடுக்கும் முனைப்பு'தான் இனிவரப் போகும் காலத்தின் அரசியல் செல்நெறியை தீர்மானிக்கும்.

அது ஒன்றுதான் இனிமேல் வரலாறு வழங்கப்போகும் அபூர்வ வாய்ப்புக்களை மக்கள் மேன்மைக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலை நமக்கு வழங்கும்.

03.

எதிர்காலத்தில் எத்தகைய அணுகுமுறைகள் நமக்குப் பயனுடையவைகளாக இருக்கும்.

இன்றைய சூழலில் இரண்டு முக்கியமான விடயங்கள் நமக்குத் தென்படுகின்றன. அவை தென்படுகின்றனவே தவிர அவை நமக்கு சாதகமானவை என்பது பொருளல்ல.

வெறும் உணர்சிப் பெருக்குகளுக்கு அப்பால் அறிவு பூர்வமாகவும் நிதானமாகவும் விடயங்களை கைக்கொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

இதில் முதலாவது தற்போது தமிழ்நாட்டில் மக்களால் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம். இவ்வாட்சி மாற்றத்தை நாம் அறிவு பூர்வமாகக் கையாளுவதற்கு, முதலில் செல்வி ஜெயலலிதாவின் அரசியல் பண்பு வெளிப்பாட்டினை நாம் தெளிவாகக் குறித்துக் கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா அடிப்படையிலேயே ஒரு விடுதலைப் புலி எதிர்ப்பாளர். கடந்தகாலங்களில் ஈழத் தமிழர்களின் எந்தவொரு பிரதிநிதியையும் அவர் சந்திக்க விரும்பியிருக்கவில்லை. காரணம் ஈழத்தமிழர்களின் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக விடுதலைப் புலிகளே இருந்தனர்.

ஜெயலலிதா முரண்பாடு கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் இன்றில்லை.

ஆதலால் இன்றைய ஈழத்தமிழ்த் தலைமைகள் தற்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவினை அணுகுவதற்கு சாதகமான சூழலாகும்.

இதனை வெறுமனே வீதிகளில் 'சீமான்' பாணியில் வெற்றுச் சொற்களை விசிறுவதால் மட்டும் சாதிக்க முடியாது.

இவ்விடயத்தில் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு, நமது தலைமைகளையும், செயற்பாட்டாளர்களையும், மக்கள் மீது அக்கறையுள்ளவர்களாக காட்டிக் கொள்ளும் அமைப்புக்களையும் சாருகிறது.

துக்ளக் சோ போன்றவர்கள் ஜெயலிதாவின் பின்பலமாக இருக்கின்றனர் என்பதையும் நாம் இந்த இடத்தில் குறித்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் அரசியல் முரண்பாடுகளையும், திராவிட அரசியல் பரப்புரைகளையும் நமது மக்களின் பிரச்சனையோடு இணைத்துக் குழப்பிக் கொள்ளும் முயற்சிகள் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு அடுத்து இரண்டாவது பலமான அணியாக தேதிமுகவின் தலைவராக நடிகர் விஜயகாந் இருப்பதையும் நாம் இங்கு குறித்துக் கொள்ளலாம்.

அத்துடன் அவருடன் கூடவே இருப்பவர் அரசியல் சூழ்ச்சித் திறனும், ஈழத்தமிழர் பிரச்சனையில் துல்லியமான அறிவும் கொண்ட பண்டுருட்டி ராமச்சந்திரன்.

விஜயகாந் ஈழத் தமிழர் தொடர்பில் வெளிப்படையான ஆதரவாளராகச் செயற்பட்டவர் குறிப்பாக புலிகளின் ஆதரவாளராகச் செயற்பட்டவர் ஆகவே அவரை நாம் அணுகுவதில் அதிக சிரமம் இருக்கப் போவதில்லை.

இரண்டாவது ஜ.நாவின் நிபுணர் குழு அறிக்கை.

முன்னையது பிராந்திய அரசியலை கையாளும் வழிமுறை சார்ந்தது என்றால், பின்னையது மேற்குலக அரசியலை கையாளுவதற்கு கிடைத்திருக்கும் சாதகமான வாய்ப்பாகும்.

இங்கும் அறிவார்ந்ததும், நிதானமானதுமான அணுகுமுறை நமக்கு அவசியமாகின்றது.

மேற்குலகு ஜ.நா அறிக்கையை முன்னிறுத்தி , எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கருதுகிறதோ அதற்கு சமாந்தரமாக நமது செயற்பாடுகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவற்றின் கருத்துத் தளங்களின் மேல் எமது வாதத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

உணர்சிவசப்பட்ட 'தமிழ்நாட்டு பாணி' செயற்பாடுகளும், தனித்து சிந்திக்கும் எதிர்மறையான போக்குகளும் எம்மக்களின் விடுதலைக்கு மேற்கின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு தடையாகவே அமையும்.

மூலோபாய ரீதியாக இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமாக செயற்பட்டுவரும் சூழலில் அவற்றின் நலன்சார் முன்னுரிமைகளை குறைத்து மதிப்பிடுதல் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

மே19, தரும் வேதனைகளில் ஒன்றித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றை அழுத்தி மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நேற்று, நாம் நமது அரசியலை இலக்கு நோக்கி முன்னகர்த்துவதில் எவ்வாறான சவால்களை எதிர் கொண்டோமோ அதனையே இனி வருங்காலத்திலும் எதிர் கொள்ளுவோம். இதில் நமக்கு எந்தத் தடுமாற்றமும் வேண்டியதில்லை.

ஏனெனில், பல மையங்களுக்கு இடையிலான போட்டியில் நிலை கொண்டுள்ள அனைத்துலக அரசியல் ஒழுங்கில் எந்தவொரு முடிவும் நம்மை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதில்லை.

அடிப்படையில் உலக அரசியல் ஒழுங்கில் எமக்காக எதுவுமே இல்லை. நாம்தான் அதனை நமக்காகக் கையாள வேண்டும்.

இதனை விளங்கிக் கொண்டு செயற்படுவதின் ஊடாகவே இனி வரப் போகும் காலத்தை நமக்குரியதாக்க முடியும். இதில் நாம் தவறுமோயின் நம்மால் ஓரடி கூட ஆரோக்கியமாக எடுத்து வைக்க முடியாது.

மீண்டும் மீண்டும் முள்ளிவாய்க்கால் வலிகளையே சுமக்க வேண்டி இருக்கும்.

- புதினப்பலகை மற்றும் : இன்போதமிழ் குழுமம்

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் சுய விமர்சன அடிபடையில் மட்டுமே சாத்தியமான எதிர்கலத்துக்கான தேடல் கட்டுரையில் தொனிக்கிறது. இகட்டுரை நமது விடுதலை பணிகள் சவால்கள் தொடர்பாக பயனுள்ள விவாததை முன்வைக்கிறது.

தயவு செய்து இவ் விவாததில் பங்குபெறுங்கள்.

Edited by poet

இது குற்றச்சாட்டுக்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் கட்டுரையாகத்தான் எனக்குத் தெரிகிறது. தமிழ் நாட்டின் ஆட்சி மாற்றத்தையும் ஐ நா விசாரணைக் குழுவின் அறிக்கையையும் தற்காலிக நிகழ்வாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள ஒரு விடயமிது.

குறிப்பாக இங்கு முந்நிலைப்படுத்தப்படுபவர்கள் தத்துவவாதிகள்தான். பாலகுமார் எழுதிய பாவத்தின் சம்பளம் என்றவிடயம், அவர் அடிக்கடி மேடைகளில் சொல்லும் பிரசாரத்தின் சாரமே. ராஜீவ் காந்தியின் கொலை விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா தேர்ந்தெடுத்த காரணங்களில் ஒன்றாக எனக்குப்படவில்லை. அதற்கான பழிவாங்கலை இந்தியா ஏற்கெனவே செய்து முடித்திருக்கலாம். இவ்வளவு காலம் தாழ்த்தி அதைச் செய்திருப்பது நியாயமாகாது.

தமிழ்நாட்டு அரசியல் மாற்றம் ஒரு தற்செயலான நிகழ்வல்ல. அது பல வேலைத்திட்டங்களையும் பிரசாரங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. ஆட்சியின் தலைவியும் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார். மத்திய அரசை வலியுறுத்த மட்டுமே தன்னால் முடியுமென்ற அறிவிப்பு அவரின் செயற்பாட்டை மட்டுப்படுத்தும் என்பது இந்தக் கட்டுரையாளருக்குத் தெரியாமல் போய்விட்டது.

ஐ நா வின் அறிக்கையின் சூட்சுமம் இனிவரும் காலங்களில்தான் வெளிப்படும். ஐ நா மீதான நம்பிக்கையீனம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டிருக்கிறது. யுத்த காலத்தில் பேரவலம் நிகழப்போகிறது என்று தெரிந்திருந்தும், அதனை வெளிப்படுத்தி அறிவித்தபின்பும் இவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்படியானால் யுத்தக் குற்ற விசாரணை தற்போது தமிழருக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்துவிடுமா? என்ற வினாவிற்கு கட்டுரையாளரின் விடை என்ன?

இன்று எது வெளிப்படையாகத் தெரிகிறதோ அதனைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இக் கட்டுரையின் கருத்தாகவுள்ளது. நாடு கடந்த அரசும் தமிழர் பேரவையும் எடுக்கும் முயற்சிகள் இங்கு எள்ளளவும் குறிப்பிட்டுக் காட்டப்படவில்லையே ஏன்?

கவிஞர், கீழ்வரும் வினாக்களிற்கு முடியுமானால் விடை பகருங்கள்:

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை பற்றி நான் பார்த்த அளவில் நம்மவர் ஊடகங்களில் ஓர் கோணத்தில் மட்டுமே அணுகி எதிர்வு கூறுகின்றார்கள்.

ஐ.நா போர்க்குற்ற அறிக்கையில் த.வி.பு, புலம்பெயர் தமிழ் மக்கள் பற்றி கூறப்பட்டுள்ள குற்றசாட்டுக்களை எந்தவகையில் இவர்கள் சிறீ லங்கா அரசின் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கு நிகரானதாக நினைக்கவில்லை?

ஐ.நாவில் குற்றவிசாரணை எனவரும் போது அங்கு விசாரணை செய்யப்போகின்றவர்கள் புதினப்பலகை குழுமத்தினரோ அல்லது பதிவு, சங்கதி, தமிழ்நெட் ஆசிரியர் குழுமமோ அல்லது யாழ் கருத்துகள உறவுகளோ அல்ல.

எனவே, ஓர் கதைக்கு ஐ.நா போர்க்குற்ற அறிக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுக்கப்படுகின்றது என வைத்தாலும்.. விசாரணையின் முடிவில் த.வி.புவின் சித்தாந்தங்களை அல்லது அபிலாசைகளை திருப்தி செய்யக்கூடிய வகையில் முடிவு அமையும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

சரி, விசாரணையின் முடிவில் மகிந்த ராசபக்ஷ மற்றும் சிறீ லங்கா அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள் என வைப்போம். ஆனால்… ஐக்கிய இலங்கையினுள்ளேயே பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும் எனக்கூறி நீதிமன்றத்தினால் சிபாரிசுகள் செய்யப்படும்போதும், அவ்வாறே த.வி.பு சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் விசாரணையின் முடிவில் குற்றவாளிகளாக காணப்படும்போதும்.. இவ்வாறான நிலையில்.. இவை எவ்வாறு தமிழருக்கு தனிநாடு கிடைப்பதற்கு உதவும்?

நம்மவர்கள் தமது ஆத்திரங்களையும், வெறுப்புக்களையும் வெளிப்படுத்துவதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகள் தாயகத்தில் நம்மவருக்கு சுபீட்சமான ஓர் வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பதில் எவ்வாறு உதவும்?

சிலர் கூறுகின்றார்கள், தற்போது த.வி.பு இல்லைத்தானே, அது அழிந்துவிட்டது என்றுதானே கூறுகின்றார்கள், எனவே போர்க்குற்ற விசாரணையில் இது பிரதிகூலங்களை ஏற்படுத்தாது என்று. ஆனால்..

த.வி.புவுடன் தொடர்புடையை எத்தனை நூறு அல்லது ஆயிரம்பேர் சிறீ லங்கா அரசுக்கு ஆதரவாக சாட்சியம் கூறுவார்கள் என்று இவர்களால் கூறமுடியுமா? சிறீ லங்கா அரசின் பாதுகாப்பில் எவராது த.வி.பு மூத்த உறுப்பினர்கள், தளபதிகள் காணப்பட்டு, அவர்கள் ஓர் சர்வதேச விசாரணை எனவரும்போது முன்னிலைப்படுத்தப்பட்டால் அவர்கள் த.வி.புவின் சித்தாந்தங்கள், அபிலாசைகளிற்கு ஏற்புடைய வகையில் சாட்சியம் கூறுவார்கள் என்பது என்ன நிச்சயம்?

நம்மவர்களின் ஊடகப்பிரச்சாரங்கள், உத்திகள், சிந்தனைகளின் நோக்கம் உண்மையில் என்ன? சனங்களை மேய்ப்பது ஒன்றுதானா?

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.