Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீரிஸின் சீன விஜயம், இந்தியாவின் “பிளக்மெயிலை” தடுப்பதுக்கே

Featured Replies

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியா தொடர்ந்தும் இலங்கை எதிர் பார்க்கின்ற நிலைப்பாட்டுக்கு ஒத்துவராமல் இருப்பது இலங்கைக்கு மனக் கசப்பை உண்டு பண்ணியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெவிக்கின்றனர்.

அதேவேளையில், இந்திய அரசாங்கம் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை; அது சர்வதேசரீதியில் இலங்கைக்கு ஏற்படுத்தி யுள்ள அழுத்தங்கள், நெருக்குவாரங்களை வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம், “பிளக்மெயில்' பண்ணுவதாக இலங்கைத் தரப்பு மிக ஆழமாக உணர்வதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் விளைவாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜி.எல். பீஸ் சீனாவுக்கான பயணத்தை மேற் கொள்ளவுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மேற்கொண்ட இந்தியப் பயணம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்ற பிரதிபலிப்பே அவரது சீன விஜயம் என்றும் கூறப்படுகின்றது. அதாவது இந்தியாவின் நிலைப்பாட்டை தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டே அமைச்சர் ஜி.எல்.பிஸின் சீனாவுக்கான பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அப்படியில்லை எனில் சீனாவுக்கான பயணம் இந்தியப் பயணத்திற்கு முன்பாகவே இடம்பெற்றிருக்கும் என்ற கருதுகோளை முன் வைக்கும் அரசியல் நோக்கர்கள் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக சீனா ஆரம்பத்திலேயே தனது நிலைப் பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்ததையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்த கையோடு சீனா விடுத்த அறிக்கையில், “இலங்கை அரசும் மக்களும் தமது உள்நாட்டுப் போர் சம்பந்தமான சர்ச்சைகளை முறையாகத் தீர்த்துக் கொள்வார்கள். சர்வதேச சமூகம் இவ்விவகாரத்தை சிக்கலாக்கக் கூடாது' எனத் தெவித்திருந்தது.

பின்னர் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அலுவலர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தனது கவலைகளைத் தெவித்துக் கொண்டதுடன் இவ்வாறான நடவடிக்கைகள் தொடருமானால் இலங்கை அரசுக்கு தாம் வழங்கி வரும் ஆதரவை மறுபசீலனை செய்ய வேண்டிவரும் என சீனா தெரிவித்திருந்தமையையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் இந்திய இலங்கை உறவுகள் என்ற தலைப்பில் முன்னாள் ராஜதந்தியான எம்.கே. பத்ரகுமார் எழுதியுள்ள கட்டுரையில் இலங்கையானதுவெகுமதியளிக்கப்பட்ட நாடாக உள்ளது.

சர்வதேச ராஜதந்திரத்தின் எல்லைகள் அற்ற மர்மங்களை அசாதாரணமான முறையில் இலங்கை பற்றிப் பிடித்திருக்கின்றது. மென்மையாகப் பேசுபவரும், புத்திஜீவியுமான இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிஸை துரும்புச்சீட்டாகக் கொழும்பு வைத்திருக்கின்றது.

அ.தி.மு.க. தலைவர் செல்வி ஜெயலலிதா போர்க் குற்றங்களுக்காக ஜனாதிபதி ராஜபக்ஷவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும் ஜெயலலிதாவுக்கு அவரின் தேர்தல் வெற்றியை பாராட்டியும் அவருடன் இணைந்து செயற்படுவதற்கான ஆவலை வெளிப்படுத்தியும் கண்ணியமான முறையில் பீரீஸ் கடிதம் எழுதியுள்ளார்.

பீரிஸ் தனது நீண்ட பயணத்தை டில்லியில் ஆரம்பித்து பீஜிங்கில் முடிப்பது குறிப்பிடத்தக்கதாகும் என்று குறிப்பிட்டுள்ளதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1832:2011-05-22-01-32-25&catid=1:latest-news&Itemid=18

இந்த அரசியல் நோக்கர்களெல்லாம், இந்தியாவின் வலுவையும் சீனாவின் தந்திரத்தையும் அறியாதவர்களோ? போர்க்குற்ற விசாரணை சர்வதேச ரீதியாக விசாரணைக்கு உட்படுத்தும் நோக்கம் இப்போது எதுவும் வெளிப்படவில்லை. ராஜபக்ஷசே பதவியில் இல்லாதபோதுதான் அது விசாரணைக்கு வரலாம்.

சீனாவின் நெருக்கம் ஒரு தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்துகின்றது.

மகிந்தர் ஒரு ஆட்சி மாற்றத்தை உலகம் விரும்புகின்றது என பயம் கொண்டுள்ளார். அதை மேற்குலகம் மறுத்து வருகின்றது. அதற்கும் சீனாவே காரணமாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்

சீனாவின் நெருக்கம் ஒரு தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்துகின்றது.

மகிந்தர் ஒரு ஆட்சி மாற்றத்தை உலகம் விரும்புகின்றது என பயம் கொண்டுள்ளார். அதை மேற்குலகம் மறுத்து வருகின்றது. அதற்கும் சீனாவே காரணமாக இருக்கலாம்.

சீனா அதற்கான முயற்சியை எபோவோ தொடங்கிட்ட்டு.சிங்கள மொழியில் சீனப் பத்திரிகையை வெளி வருகின்றது......

இனி வரும் நூற்றாண்டில் ஆசியாவே உலக பொருளாதாரத்தில் மிகமுக்கிய இடம் பிடிக்கும், அதிலும் தென்கிழக்காசியா. எனவே அரசியலிலும் ஆசியா/தென்கிழக்காசியா முக்கியமாகின்றது.

ஏற்கனேவே பல போட்டிகள் இருந்தாலும், சீனா உலகப்பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்தில் ஜப்பானை தாண்டி வந்துள்ளமையும், தமது சரிந்து வரும் பொருளாதார நலன்களுக்காக புதிய சந்தைகளை உலகத்தில் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனா/இந்தியா நாடுகளில் தேடுவதாலும் புதிய வியூகங்கள் வகுக்கப்படுகின்றன, அவை சீனா/இந்தியா என்ற அச்சாணியை வைத்தே பிரிக்கப்படுகின்றன.

அவை இந்த பிராந்தியத்தில், முப்பதுவருட சோவியத்யூனியன் / அமெரிக்கா நாடுகளுக்கு இடையான ஒரு குளிர் யுத்த காலத்தை (cold war era) ஒத்த பிளவை ஏற்படுத்தலாம். இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பிரிவினைகளையும் ஏற்படுத்தாலம்.

பீரிஸின் சீனவிஜயத்தின் நோக்க்கம் இந்திய நிலைப்பாட்டை தளர்த்துவதே:அரசியல் நோக்கர்கள் கருத்து _

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியா தொடர்ந்தும் இலங்கை எதிர்பார்க்கின்ற நிலைப்பாட்டுக்கு ஒத்துவராமல் இருப்பது இலங்கைக்கு மனக் கசப்பை உண்டு பண்ணியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், இந்திய அரசாங்கம் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை; அது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ள அழுத்தங்கள், நெருக்குவாரங்களை வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம், "பிளக்மெயில்' பண்ணுவதாக இலங்கைத் தரப்பு மிக ஆழமாக உணர்வதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேற்கொண்ட இந்தியப் பயணம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்ற பிரதிபலிப்பே அவரது சீன விஜயம் என்றும் கூறப்படுகின்றது. அதாவது இந்தியாவின் நிலைப்பாட்டை தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டே அமைச்சர் ஜி.எல்.பிரீஸின் சீனாவுக்கான பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அப்படியில்லை எனில் சீனாவுக்கான பயணம் இந்தியப் பயணத்திற்கு முன்பாகவே இடம்பெற்றிருக்கும் என்ற கருதுகோளை முன் வைக்கும் அரசியல் நோக்கர்கள் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக சீனா ஆரம்பத்திலேயே தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்ததையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்த கையோடு சீனா விடுத்த அறிக்கையில், "இலங்கை அரசும் மக்களும் தமது உள்நாட்டுப் போர் சம்பந்தமான சர்ச்சைகளை முறையாகத் தீர்த்துக் கொள்வார்கள். சர்வதேச சமூகம் இவ்விவகாரத்தை சிக்கலாக்கக் கூடாது' எனத் தெரிவித்திருந்தது.

பின்னர் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அலுவலர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தனது கவலைகளைத் தெரிவித்துக் கொண்டதுடன் இவ்வாறான நடவடிக்கைகள் தொடருமானால் இலங்கை அரசுக்கு தாம் வழங்கி வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும் என சீனா தெரிவித்திருந்தமையையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் இந்திய இலங்கை உறவுகள் என்ற தலைப்பில் முன்னாள் ராஜதந்திரியான எம்.கே.பத்ரகுமார் எழுதியுள்ள கட்டுரையில் இலங்கையானது வெகுமதியளிக்கப்பட்ட நாடாக உள்ளது.

சர்வதேச ராஜதந்திரத்தின் எல்லைகள் அற்ற மர்மங்களை அசாதாரணமான முறையில் இலங்கை பற்றிப் பிடித்திருக்கின்றது. மென்மையாகப் பேசுபவரும், புத்திஜீவியுமான இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸை துரும்புச்சீட்டாகக் கொழும்பு வைத்திருக்கின்றது. அ.தி.மு.க. தலைவர் செல்வி ஜெயலலிதா போர்க் குற்றங்களுக்காக ஜனாதிபதி ராஜபக்ஷவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும் ஜெயலலிதாவுக்கு அவரின் தேர்தல் வெற்றியை பாராட்டியும் அவருடன் இணை ந்து செயற்படுவதற்கõன ஆவலை வெளிப்படுத்தியும் கண்ணியமான முறையில் பீரிஸ் கடிதம் எழுதியுள்ளார். பீரிஸ் தனது நீண்ட பயணத்தை டில்லியில் ஆரம்பித்து பீஜிங்கிற்கு முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும் என்று குறிப்பிட்டுள்ளதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31722

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.