Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடியவனின் கைது மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் என்கிறார் – குணரட்ன

Featured Replies

நெடியவனின் கைது மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் என்கிறார் – குணரட்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் நெடியவன் கைது செய்யப்பட்டமை மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனை குறிப்பதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்று முனைகளில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வணக்கத்திற்குரிய பிதா இமானுவல் தலைமையிலான க்ளோபல் தமிழ் N;பாராம் அமைப்பு, ருத்ரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ இராச்சியம் மற்றும் நெடியவன் தலைமையிலான அமைப்பு ஆகியன செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் நெடியவனின் அமைப்பே மிகவும் வன்முறையான அமைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டதன் காரணமாக மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன எனக் கருத முடியாது என தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நோர்வே போன்ற நாடுகள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற வலயங்களை நேரில் பார்வையிடுமாறு ஜெயலலிதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடனேயே இலங்கை யுத்தத்தை வெற்றி கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

.GTN

வடக்கு கிழக்கில் பிரதான தமிழ் தலைமைத்துவங்களை உருவாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பேராசிரியர் படித்தது சர்வதேச உறவுகள் / சர்வதேச அமைதிகள் பற்றி, ஆனால் இரட்டைகோபுர தாக்குதலின் பின்னர் சில நாடுகளுக்கு பிரயாணம் செய்து அல்-கைடா பற்றி எழுதி ஒரு 'நிபுணர்' ஆனார். ஒரு புத்தகமும் எழுதினார். இவரின் பல கருத்துக்கள் பல மேற்குலக நிபுணர்களாலும் நிராகரிக்கப்பட்டது.

கனடாவுக்கு அண்மையில் வந்த 72 அடங்கிய கப்பலில் பல "புலிகளும்" உள்ளார்கள் என்று இவர் கனேடிய அரசுக்கு கூறினார். விசாரணைகளின் பின்னர் எல்லோருமே விடுவிக்கப்பட்டனர். இவரின் சேவையை பெற்றமைக்கு நீதிபதிகளும் அரசை கடிந்துகொண்டனர்.

இந்த புத்தி ஜீவியின் சேவைகள் எல்லாம் தமிழின அழிப்பே!

Prof Rohan Gunaratna

Education

M.A. (International Peace Studies) University of Notre Dame

Ph.D. (International Relations) University of St Andrews

Research Interests

Terrorist organisations, terrorist operational and support networks, maritime terrorist tactics, technologies and techniques, suicide terrorism, and terrorism in the Asia-Pacific

Edited by akootha

மேற்குல நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ... அண்மையில் ஐரோப்பிய யூனியனும், ஐநாவினால் சுமத்தப்பட்ட யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயத்தில் எமக்கெதிரான நிலைப்பட்டை எடுத்திருக்கிறது .... இவைகள் எதனை சுட்டிக்காட்டுகின்றன????

.... எமக்காக வந்த சந்தர்ப்பங்களை நாம் சரியாக அணுகவில்லை? கையாளவில்லை? ... மாறாக கைகட்டி, வாயை மூடி நடப்பது நடக்கட்டும் என பார்த்துக் கொண்டிருக்கிறோம்!!!!!!

.... இங்கு எமது அரசினதும், பேரவைகளினதும் பிரதிநிதிகள் ... தம் பிள்ளைகளின் படிப்புகள், கோடைகால சுற்றுலாக்களுக்காக ... வேலைத்திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்களாம்!!!! ... அவர்களின் வேலைத்திட்டங்கள் இனிது முடிபுற வாழ்த்துக்கள் <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.