Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித வேள்வியும் இசை வேள்வியும்.

Featured Replies

மனித வேள்வியும் இசை வேள்வியும்.

essay உங்களில் யாருக்கேனும் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற பட்டம் கிடைக்க வேண்டுமா? 5 லட்சத்தை எம்மிடம் தூக்கியெறிந்தால் உலகத் தமிழினத் தலைவர் பட்டத்துடன் இலவச இணைப்பாக ஒரு வாழ்த்துப்பாவும் வழங்கப்படும்! என்று விளம்பரம் செய்யாத குறையாக, பணத்தை வாங்கிக் கொண்டு பட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த அமைப்பொன்று இப்போது தமிழ் மக்களின் ஆன்மாவை விற்கும் செயலிலும் இறங்கிவிட்டது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதவேள்வியின் இரண்டாமாண்டு நினவுகளில் ஒட்டுமொத்தத் தமிழினமும் கண்ணீருக்குள் புதைந்திருந்த வாரத்தில், கொழும்பில் இசை வேள்வியை நடத்தி தமிழ் மக்கள் எல்லோரும் இசையால் இன்புற்றிருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை வெளிக்காட்ட அந்தக்கழகம் படாதபாடு பட்டிருக்கிறது.

"மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதுவோஉன்னை நம்பியோ தமிழை ஓதி னேன்..'' என்று குலோத்துங்க சோழமன்னனைப் பார்த்தே நியாயம் கேட்டவர் கவிச்சக்கரவர்த்தி என்று வர்ணிக்கப்படும் கம்பர். ஆனால் அந்தக் கம்ப நாமத்தை சொல்லிக் கொண்டு தங்கள் பணப்பெட்டியை நிரப்பிக் கொள்ளும் சிலர் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டத் தொடங்கியுள்ளனர். சரி, தங்களுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதற்கு அவர்கள் என்ன வேண்டுமானலும் செய்துவிட்டுப் போகட் டும். ஆனால் திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களுடைய மனங்களைப் புண்படுத் துவதும், பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி மக்களின் மனவலிகளை மறைப்பதற்கான திரையிடலில் ஈடுபடுவதும் பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியாத விடயங்கள்.

காலம் எவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் தமிழ்மக்களின் மனங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை களின் ரணங்கள் ஆறாவடுக்களாகவே இன்னமும் இருக்கின்றன. இறுதிப்போர் உக்கிரம் கொண்டபொழுதுகளில் எப்படி யெல்லாம் ஒரு மரணம் நிகழக்கூடாதோ அதைவிடவும் கோரமாக ஆயிரக்கணக் கான மரணங்கள் ஒருசில நாள்களில் நடந்துமுடிந்திருந்தன. வீதிகளெங்கும் பிணக்குவியல்கள். சாவு விழாத வீடு களேயில்லை. எண்ணிக்கையில் மட் டும் தான் வித்தியாசம். பக்கத்து வீட்டில் நான்கு பேர் இறந்திருந்தால் தமது வீட்டில் இரண்டு பேர் மாத்திரமே மரண மானதை நினைத்து ஆறுதல் கொள்வது மட்டுமே அப்போது அங்கிருந்த மக் களின் நிலை. மரணப்படுகுழியில் இருந்து போர் முடிவுடன் மீண்டவர்களின் வாழ்வு இன்னமும் ஊ\லாடிக் கொண்டே இருக் கிறது.

`னியங்களாலும், விலகமுடியாத இரு ளாலும் நிறைந்திருக்கும் அவர்களின் வாழ்வியலைப் பழைய நிலைக்குக் கொண்டுவர நீண்டகாலம் பிடிக்கும். ஏனெனில் உடலாலும், உள்ளத்தாலும் அவர்கள் வாங்கிய வலிகள் அத்தனை விரைவில் மறைந்துபோகக்கூடியவை யல்ல. தம் முன்னால் வெடித்துச் சிதறிய குண்டின் ஒலி அடங்குவதற்கு முன் னரே தலை பிளந்து, துடிதுடித்தபடி உயிரை விட்டிருந்த உறவுகளின் சடலத்தைக் கூட தூக்கியழவும் முடியாமல் , கண்ணீரைப் புதைத்தபடி புறப்பட்ட மக் களின் வேதனைகள் இன்னமும் ஆற வில்லை.

இந்த நிலையில் ஓரளவேனும் உயிர் வாழ்தலை உறுதிப்படுத்திக்கொண்டு, கொஞ்சமேனும் தம்மை ஆசுவாசப் படுத்துவதற்கான காலவெளி, போரின் பிடியில் இருந்து மீண்டுவந்திருந்த மக்களுக்கு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. சென்ற வருடம் முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஒருவருடம் நிறைவுக்கு வந்திருந்த போது அந்த மக்களில் பெரும்பான்மையானோர் நலன்புரி நிலையங்களில் அடைக்கப்பட்டிருந்தனர். இறுக்கமான கண்காணிப்புக்குள் அவர்கள் இருந்ததால் அங்கும் இறந்து போனவர்களுக்கான நினைவு நிகழ்வுகளை நடத்த முடியவில்லை. வெளியில் இருந்தவர்களும் அஞ்சலிப்பதற்கு படைத்தரப்பு அனுமதி கொடுக்கவில்லை.இப்போது முள்ளிவாய்க்கால் பேரழி வின் இரண்டாவது வருடம். போரின் தாண்டவம் உச்சமடைந்திருந்த மே12 தொடக்கம் மே18 வரை நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்க ஏற்பாடாகியிருந்தது. புலம்பெயர் நாடுகளில் நினை வேந்தல் வாரத்தை, கொலைவெளியில் புதைந்துபோனவர்களுக்காக நினைவுச் சுடர்களை ஏற்றியும், விஷேட வழிபாடுகளை நடத்தியும் உணர்வுபூர்வமான தாக்கினர் அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ்மக்கள். தமிழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன. அங்கும் கண்ணீரோடு உயிரிழந்து போன ஈழத்து உறவுகளுக்காக இந்த நிகழ்வுகளில் தமி ழக மக்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையிலும் தமிழர் பகுதிகளி லும் மௌனமாக அஞ்சலிநிகழ்வுகள் இடம்பெறவே செய்தன. குறிப்பாக யாழ்.பல்கலை மாணவர்கள் ,மிக இறுக்க மான சுழலிலும் இறுதிப்போரில் மாண்டு போனவர்களுக்காக அஞ்சலி செய்யும் வலிகள் தந்த வாரம் என்ற தொனிப் பொருளிலான நிகழ்வை நடத்திமுடித்துள்ளனர். அதை விடவும் இந்த நினை வேந்தல் வாரத்தில், கேளிக்கையான நிகழ்வுகளை நடத்துவதை இயன்ற வரை மக்கள் தவிர்த்தனர். ஆயிரக்கணக் கான உறவுகள் கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நாள்களில் தாம் இத்தகையை கொண்டாட்ட நிகழ்வு களை நடத்துவது அவர்களின் மனங் களை இன்னும் வலிக்கச்செய்யும் என்ற மனிதநேயத்தின் வெளிப்பாடே இது. இத்தகைய விழாக்களை வலி சுமக்கும் வாரத்தில் தவிர்ப்பது, இறுதிப்போரில் உயிர்நீத்தவர்களுக்குச் செய்யும் அஞ்சலியாகவும் இருக்கும் என அவர்கள் நம்பினர்.

ஆனால் மிக இலகுவான இந்த யதார்த்தத்தைக் கூட அறப்படித்த சிலர் மறந்து விட்டு, அல்லது மறந்தது போன்று பாவனை செய்துகொண்டு , தென்னிந்திய மற்றும் உள்ளூர் இசைக் கலைஞர்களைக் கொண்டு கொழும்பு இராம கிருஷ்ணமிஷனில் மே 13 முதல் மே 18 வரை இசைவேள்வியொன்றை நடத்தி முடித்திருக்கிறார்கள். தமிழர்தாயகத்தில் ஒப்பாரிகளின் ஒலி காதைப்பிளந்து கொண்டிருக்கையில் கொழும்பில் , கர்நாடக இசைக்கச்சேரிகளை நடத்த வேண்டியதன் காரணமென்ன? இன்ன மும் காய்ந்து போகாத கல்லறைகளின் மீது நின்றுகொண்டு கதிரி கோபல் நாத்தின் சக்ஷபோன் கருவியின் டூயட் கானங்களை இசைக்கச் செய்யவேண் டியதன் கட்டாயம் என்ன? ஐயோ! எங் களை யாராவது இசை மழையில் நனையச் செய்யுங்கள் என்று விழாவை நடத்தியவர்களை யாரேனும் கெஞ்சினார்களா? இல்லையே! அப்படியானால் தமிழர்களின் துயரங்கள் எல்லாம் ஓருருக் கொண்டு நிற்கும் இக்காலப்பகுதியில் அதையெல்லாம் மறந்து விட்டு நாடேபற்றியெரிகையில் பிடில் வாசிப்பதைப் போன்று இன்னிசைக் கச்சேரிகளை கம்பன் கழகத்தார் பெருமெடுப்பில் நடத்தி முடித்திருப்பதன் மர்மம் என்ன?

இந்த முறை முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் இரண்டாமாண்டு நினைவு நிகழ்வு அரசியல் ரீதியாகவும் தமிழர்களுக்கு முக்கியமானது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் முள்ளி வாய்க்காலில் கொடுத்த ஆன்மாக் களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் சமிக்ஞையை வெளிப்படுத்துவது போன்று ஐ.நா அறிக்கை வெளிவந்திருக்கிறது. தமிழர்களுக்கு இப்போதுள்ள ஒரே யொரு துருப்புச்சீட்டு ஆயுதம் இது தான். இதை இப்போது சரியானபடி பயன்படுத்தாவிட்டால் எப்போதுமே பயன்படுத்தமுடியாமல் போய்விடும். எனவேதான் ஐ.நா அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீதிகேட்கும் குரல்கள் பலமாக எழத்தொடங்கிவிட்டன. அந்தக் குரல்களைப் பலவீனப் படுத்தும் செயலில் அரசும் முனைப்போடு செயற்படுகின்றது. முள்ளிவாய்க் காலில் கேட்கத்தொடங்கிய ஓலங்கள் இன்னும் அடங்கவில்லை என்ற உண்மை நிலையை மறைக்க அதிகாரம் வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றது. அதன் ஒரு செயற்பாடாகவேஇந்த இசைவேள்வியையும் நோக்கவேண்டியுள்ளது.

தமிழர்கள் எல்லோரும் இசைவெள் ளத்தில் நீந்தி விளையாடி, இன்புற்றிருக் கிறார்கள். சர்வதேசம்தான் தேவையில்லாமால் அமைதியாக இருக்கும் நாட்டைக் குழப்ப முனைகின்றது என்ற கருத்து நிலையை உருவாக்க இத்தகைய இசை வேள்விகள் அரசுக்கு உதவக்கூடும். ஏற்கனவே 5 லட்சம் ரூபா கிடைத்ததுமே, உச்சி குளிர்ந்து போய், காசு கொடுத்தவரை தலைவராக்கி காவியம் பாடியவரை தன் வலையில் வீழ்த்துவ தற்கு அரசுக்கு அதிக சிரமம் இருந்திருக்காது.எனவே கச்சிதமாகக் காரியத்தை அதிகாரம் சாதித்திருக்கிறது.பெருமளவு பணத்தைச் செலவழித்து, இந்தியாவில் இருந்து ஸ்ரீ சகேதராமன், மும்பை சகோதரிகள், மல்லாடி சகோதரர்கள், நெய்வேலி சந்தான கோபாலர், பம்பாய் ஜெயஸ்ரீ, கதிரி கோபால்நாத் போன்ற இசைப்பிரபலங்களை அழைத்து வந்து கம்பன் கழகத்தினர் இசைவேள் விக்கு கூட்டம் சேர்க்க முனைந்தனர். ஆனால் கொழும்பில் வசித்தாலும் தமிழர்கள் என்றைக்குமே தன்மான உணர்வுள்ளவர்கள்தான் என்பதை இசை வேள்வியில் வெறுமையாகக் கிடந்த பார்வையாளர் பகுதி உரத்துச் சொன்னது.இந்த ஆடம்பர இசை நிகழ்வுக்காக வீணாகக் கொட்டிய பணத்தை வன்னியில் மீளக்குடியமர்ந்த பத்துப் பதி னைந்து குடும்பங்களுக்கு கொடுத்தி ருந்தாலாவது அவர்களின் வாழ்வு மீளத் தலையெடுக்கும் நிலை வந்திருக்கும்.

தமிழகத்தில் எவ்வளவோ தொலைவுகளுக்கு அப்பால் உள்ள உறவுகள் கூட எமக்காகத் தீக்குளித்து தம் உணர்வை வெளிப்படுத்துகையில் இவர்கள் இசை வேள்வி என்ற பெயரில் நினைவு நிகழ்வு களின் வலிமையை வெளிப்படுத்தவிடாமல் செய்யமுனைந்துள்ளனர். ஆனால் முடியவில்லை. கம்பன் புகழ் பாடிக் கன் னித் தமிழ் வளர்ப்பதாகப் பீற்றிக் கொள் ளும் கம்பன் கழகத்தினர்தான் மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாமல் அவர் களின் அவலங்களை மதிக்காமல் இசை நிகழ்வினை நடத்தி னார்கள் என்றால், அந்த நிகழ்வுக்குச் சென்றிருந்த ,தமிழ்த் தேசியத்துக்காகக் குரல் கொடுக்கும் சிலருக்கும் சுழ்நிலையின் கனதியும் மக்களின் கண்ணீரும் தெரியவில்லையா? என்ற கேள்வியும் எழுகின்றது.நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி போன்றோர் நினைவேந்தல் நிகழ்வுகள் உலகெங்கும் நடக்கும் காலப்பகுதியில் இந்த இசைநிகழ்வுக்கு செல்ல ஒத்துக் கொண்ட செயல் அவர்களின் கொள்கை மீதும் தமிழ் மக்களின் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறை மீதும் சந்தேகத்தையே தோற்றுவிக்கின்றது.

மக்களின் மனங்களின் ரணங்களே இன்னும் வலித்துக் கொண்டிருக்கை யில் எந்த இசையாலும் மனங்களை ஒற்றுமைப்படுத்த முடியாதுஆனாலும் என்றோ ஒருநாள் வர லாற்றின் கேள்விகளுக்கு முன்னால் மக் களின் மனங்களைப் புரிந்து கொள்ளா மல் இசைவேள்வியை நடத்தியவர்கள் வெட்கித் தலை குனியவேண்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1850316022873893

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.