Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே த.தே.கூவுடன் அரசு பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே த.தே.கூவுடன் அரசு பேச்சு நடத்துகிறது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

[Monday, 2011-05-23 04:52:21]

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சு நடத்துகிறது என்று தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசுடனான கூட்டமைப்பின் பேச்சுகள் பயனுள்ளனவாக அமைவதற்கு இந்தியாவின் அழுத்தம் முக்கியமானதாக அமைந்துள்ளதோடு அது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டம், 13 ஆம் திருத்தச்சட்ட மூல அமுலாக்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சு ஆகியன தொடர்பில் கூட்டறிக்கையின் ஊடாக இந்தியா அழுத்தங்களை பிரயோகித்து வருகிறது.

அதிகாரப் பகிர்வு குறித்து விரிவாகப் பேசவும், கைதிகளை விடுதலை செய்யவும் அரசு இணக்கம் தெரிவித்து பல மாதங்கள் ஆன போதும் அதற்கான உறுதியான தீர்வேதும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆக்கபூர்வமான முறையில் பேச்சுகளை நடத்துவதற்கு அரசு ஆர்வம் காட்டி வருகிறது அதற்கு இந்தியாவின் அழுத்தம்தான் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

source:seithy.

Edited by tamil arasu

இந்தியா / மேற்குலகம் இந்த தரப்பிலிருந்தே அழுத்தம் (lobbying) தமிழக / புலம்பெயர் மக்கள் மூலம் கொடுக்கப்படல் வேண்டும்.

எம்மில் சிலர் விரும்புவது, தாயக மக்களிடம் இருந்துதான் பிரச்சனைகளுக்கு தீர்வு வரவேண்டுமே அன்றி புலம்பெயர் மக்கள் திணிக்கக்கூடாது என்பதாகும். உண்மைதான், ஆனால், இன்று அந்த தாயக உறவு எந்தவித உரிமைக்குரலும் இன்றி நலிந்து, பயந்து அடிமையாக வாழ்கின்றது. அந்த உறவு சுயாமாக பேசி சொந்தக்காலில் நிற்கும்வரை மட்டுமே நாம் உதவுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இந்தியாவை முழுமையாக நம்பி நடப்பதிலும்.. இந்தியா எமது பிரச்சனை தொடர்பில் சிறீலங்காவிற்கு மட்டுப்படுத்திய அழுத்தம் கொடுக்க வேண்டி எழுந்துள்ள தேவையை பயன்படுத்தி தமிழ் மக்கள் அடையக் கூடிய அதி உச்ச பயனைப் பெற வேண்டியதுதான் தற்போதைய தேவை.

தற்போதைய காங்கிரஸ் அரசிற்கு.. திமுக வை விரட்டி அடித்துவிட்டு தமிழகத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சிறீலங்காவை சீனாவிடம் அணைய விடாமல் தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

பிராந்தியத்தில் தனது செல்வாக்கை தென்முனையிலாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

ஈழத்தமிழர்களின் மனதில் எழுந்திருக்கும் இந்திய விரோத எண்ணத்தை சரிக்கட்ட வேண்டும் என்ற தேவை இருக்கிறது.

இனப்படுகொலையில் தனது பங்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உலகின் முன் தன்னை பஞ்சீலக் கொள்கை கொண்ட நாடு என்று காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

பழிவாங்கலை மறைத்து... பயங்கரவாதத்தை அழிக்க உதவியது என்று உச்சரிக்கவும் ஆசை இருக்கிறது.

தன்னை தனது ஆசையை மீறி ஈழத்தமிழர்களுக்கு அதிகம் கிடைக்கக் கூடாது என்ற நிலையும் இந்தியாவிடம் வலுவாக உள்ளது.

இப்படி எங்களை வைச்சு இந்தியாவிற்கு அரசியல்.. வியாபாரம்.. இராஜதந்திரம்... வல்லாதிக்கம் செய்ய பல விடயங்கள் இருக்கின்றன. நாம் அவற்றுக்குள் உள்ள நெழிவு சுழிவுகளைக் கற்றுத் தேறி எம்மை மீட்சிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக இந்தியாவையே மட்டும் நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறும் ஏமாளிகளாக இருக்கவும் கூடாது.

புலம்பெயர் தமிழ் மக்கள் இந்தியா மீது காட்டமாக.. அதன் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை செய்து கொண்டிருப்பதும்.. இந்தியாவிற்கு தலைவலி கொடுத்துக் கொண்டிருப்பதும்.. தாயக மக்களுக்கு ஓரளவுக்கு என்றாலும் நல்ல நிவாரணி கிடைக்க உதவும்..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.