Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்காக போராடிய போராளிகளும் வறுமையில் தற்கொலை செய்யும் நிலையில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=22328:2011-05-23-17-39-39&catid=125:2010-05-07-12-27-03&Itemid=675

porali_01.jpg

வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்தே வருகின்றன.

இவ்வாறானதொரு சம்பவம் நேற்று முன்தினமும் யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் முன்னாள் பெண் போராளியான லாவண்யா என்ற 21 வயதுடைய யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளாள்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்ப இதுவரை அரசாங்கத்தால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடந்தபாடில்லை.

சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் போராளிகளும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனாலேயே இவர்கள் சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்கின்ற நிலைமைக்கு ஆளாகின்றார்கள்.

இன்று தற்கொலை செய்து கொண்ட இந்த முன்னாள் பெண் போராளியான லாவண்யாவை அவளின் தகப்பன் தண்டித்ததனால் அன்றே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளாள்.

உண்மையில் போராட்ட களத்தில் துணிச்சலுடன் களமாடிய லாவண்யா அப்பா அடித்தார் என்ற காரணத்தால் மட்டுமா? தற்கொலை செய்ய துணிந்திருப்பால் என்பதை நாம் சற்று ஆராயந்து பார்க்கத்தான் வேண்டும்.

அவளின் குடும்பம் கடந்த வன்னி இடப்பெயர்வின் பின்னர் மிகவும் வறிய நிலையில் சீவியம் நடத்தவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. அப்பாவுக்கும் சுகமில்லை பாடசாலைக்கு போகும் நான்கு தம்பிகள். தாய்தான் கூலிவேலை செய்து குடும்பப் பொறுப்பை முழுமையாக பார்க்க வேண்டிய நிலைமை.

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து சொந்த இடமான புன்னாலைக்கட்டுவானுக்கு வந்து சுமார் ஒன்றரை வருடங்கள் ஆன போதும் அரசும் அரச அதிகாரிகளும் ஏன் அரசியல்வாதிகளும் இந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவில்லை. மிகச்சிறிய குடிசையிலேயே அடிப்படை வசதிகளே இல்லாமல் வாழ்க்கை நடத்தினார்கள்.

வன்னியில் போராட்டத்தில் இருந்து பின்னர் குண்டு மழை பொழிய அந்த நெருப்பாற்றில் இருந்து உடமைகளை இழந்து தப்பிவந்து இராணுவத்தின் நெருக்குவாரங்களுக்குள் இருந்து மீண்டு வந்த இந்த லாவண்யா யாழ்ப்பாணத்தில் சொந்த ஊருக்கு வந்தும் நிம்மதியில்லாத வாழ்க்கை.

குடும்ப கஸ்டம்; வீடு இல்லை; இவ்வாறே மன விறக்தியும் வறுமையும் நிறைந்ததாய் வாழும் வளரும் காலத்தில் வாழ்க்கை நடத்திய லாண்யாவிற்கு தந்தையின் கண்டிப்பு மனமுடைந்து போயிருந்த இவளை இலகுவாக தற்கொலைக்கு கொண்டு சென்றுள்ளது.

தனது மூத்த மகளை போரட்ட காலத்திலும் இடப்பெயர்விலும் இருந்து காப்பாற்றி வந்து இன்று அநியாயமாக இழந்து தவிக்கும் இத்தாயின் உள்ளக்குமுறல் இனியாவது இந்த அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கேட்குமா?

யுத்தத்தின் பின்பு தற்கொலைகள் அதிகரிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் மிகவும் அதிகம் இதனை நாளாந்தம் செய்தியாக வெளியிடுவதாலும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் புள்ளிவிபரம் எடுப்பதும் அறிக்கையிடுவதாலும் எப்பயனும் இல்லை.

அதற்கான காரணம் என்ன என்பதை கண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தற்கொலைகளுக்கான அடிப்படை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதற்கு லாவண்யாவின் தற்கொலை ஒரு உதாரணம்.

உண்மையில் இவ்வளவு கஸ்டப்பட்டு மன அழுத்தத்துடன் வந்து சேர்ந்த லாவண்யாவின் குடும்பத்துக்கு அவர்களின் இழப்பை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய அவர்களுக்குரிய நிரந்தர வீட்டையாவது இந்த அரசும் அதன் அதிகாரிகளும் அன்று அமைத்துக் கொடுத்திருப்பார்களேயானால் லாவண்யாவுக்கும் அவளது பெற்றோர் திருமணம் செய்து வைத்திருக்கலாம் இந்த துர்ப்பாக்கிய நிகழ்வும் நடந்திருக்காது.

ஆனால் என்ன நடந்தது இவர்களுக்கு குடிநீர் இல்லை, மலசலகூட வசதி இல்லை, வீடு இல்லை. இவர்களின் இழப்பை ஈடு செய்ய எவரும் இல்லை.

ஆனால் வாய்கிழிய வாக்குறுதிகளை மட்டும் இந்த அரசு இரண்டு வருடங்களாக அள்ளி வழங்கிக்கொண்டு எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டுள்ளது. அரசின் இச்செயல்பாடு இவ்வாறான சம்பவங்களை வேண்டுமென்றே உருவாக்க முயற்சிப்பதாகவே இருக்கிறது.

இதற்கு அரச உயர் அதிகாரிகள் சிலரும் தாங்கள் என்ன இனம் என்பதை மறந்து அரசுக்கு குடை பிடித்துக் கொண்டுள்ளனர். இன்று தமிழர் தாயகத்தில் யுத்த முடிவுக்குப் பின்னர் சமுகவிரோத செயல்களும் சமுதாய சீர்கேடுகளும் அதிகரிப்தற்கு முழுப்பொறுப்பும் அரசாங்கமே ஏற்கவேண்டும்.

அரசின் செயல்களே இவற்றுக்கு உரம் போடுவதாய் உள்ளதுடன் அரசின் வலுவில்லாத சிவில் நிருவாகத் திறமையின்மையையும் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த அரசு எமது தேசத்தை கட்டியெழுப்ப மனப்பூர்மாக அக்கறையில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இவர்கள் எமது புலம் பெயர் உறவுகளையும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் இம்மக்களுக்கு உதவிசெய்ய அனுமதித்தாலே போதும். ஆனால் இந்த அரசுக்கு அதற்கும் மனசில்லை.

[சுற்றிலும் காடுகளுக்கிடையில் உள்ள லாவண்யாவின் வீடு]

சுற்றிலும் காடுகளுக்கிடையில் உள்ள லாவண்யாவின் வீடு

இவ்வாறே தமிழினம் தொடாந்து பல்வேறு வழிகளில் முடிவில்லாது இன்னல்களை அனுபவித்து வருகிறது.

புலத்தில் எமதினத்தின் விடிவை எண்ணி அதற்காகவும் வாழும் உறவுகள் இருந்தாலும் வெறுமனே வீரவசனம் பேசிக்கொண்டு கொடியேந்திக் கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதோடு நின்றுவிடாது, மக்களுக்காக போராடிய போராளிகளும் போராட்ட அழிவில் இருந்து இன்னும் மீளமுடியாத மக்களினதும் வாழ்வை மீளமைக்கக் கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் அவசரமாக செயற்பட்டு எமது உறவுகளை காக்க வேண்டியது இன்று கட்டாய தேவையாகும் என்பதையும் எம்மவர் கருத்தில் கொள்ளவேண்டும்.

இக்குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள +94776761823 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

செய்தி மூலம் - http://tamilcnn.com

Edited by shanthy

உண்மையில் தற்கொலைக்குக் காரணம் வறுமையா அல்லது சிங்கள இராணுவத்தின் இளம் பெண்கள் மீதான அடக்குமுறையா?. என்றாலும் இச்சகோதரியின் குடும்பத்தினைப் போல வறுமையில் வாழும் போராளிகளின் குடும்பங்களுக்கு கட்டாயம் நாம் உதவி செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தத் தங்கையின் இழப்பை இட்டு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர் இயக்கத்தில் இணைந்து (அவரின் தந்தை பிடிச்சுக் கொண்டு போனது என்றார்.) பெற்றோரின் அழைப்பின் பேரில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அந்த வகையில் இவரை நாட்டிற்காக போராடிய போராளி என்றும் அடையாளம் காட்டுகிறார்கள். இயக்கத்துக்கு ஓடிப்போட்டு.. அப்பா அம்மா கூட்டி வாறது எல்லாம்.. வெளிநாடுகளில் உள்ளவர்களால்.. நாட்டுக்காக போராடினதா இப்ப சொல்லப்படுறதுதான் நிலை..!

எப்படி இருந்தாலும்.. போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் இவர்களுக்கான நிரந்தர மீட்சி அவசியமாகிறது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் சரியான பொருண்மிய.. சமூக.. மீட்சிக்குரிய... நீண்ட கால திட்டமிடல் இன்றிய செயற்பாடுகளின் விளைவுகளே இவை. போரின் முடிவின் போது.. உடுபுடவை.. ஒருவேளை உணவு கேட்ட மக்கள்.. பின்னர்.. தையல் மிசினும்.. கோழிக்குஞ்சும் கேட்ட மக்கள் இப்போ.. நல்ல வீடு.. சுற்று மதிலும்.. குடுக்க இலட்சம் சீதனங்களும்.. கேட்கும் நிலை தோன்றி இருக்கிறது..!

இதை அப்பவே சொன்னம்... நீண்ட கால இலக்குடன் பொருளாதார மீட்சியுடன் சமூக மீட்சியுடன்.. கூடிய செயற்திட்டங்களை வகுங்கோ செய்யுங்கோ இல்ல பின்னாடி பிரச்சனை வரும் என்று. அப்ப பகிடிவிட்டார்கள்.. அதுக்குள்ள எங்கள் மக்கள் செத்துடுவினம்.. இப்ப கோழிக்குஞ்சும்.. பிளாஸ்ரிக் குடமும் தான் அவைக்கு தேவை என்று. இப்போ மீண்டும்.. வந்து ஒப்பாரி வைக்கினம்.

இப்ப 5 இலட்சம் சீதனத்தோட வீடு வளவும் கொடுத்து கலியாணமும் கட்டிவைக்க கேக்கினம்.. என்ன செய்யப் போறியள்.. புலம்பெயர்ந்த மக்களே எல்லாவற்றையும் கைவிட்டிவிட்டு.. இதற்கு உதவுங்கோ.. இல்லை என்றால் நாங்கள் சபிச்சு கதை எழுதுவம்..!

உண்மையில்.. அந்தப் பிள்ளைக்கு ஒரு சரியான தொழில்வாய்ப்பு.. கல்வி வசதி.. அளிக்கப்பட்டிருந்தால்.. அந்தப் பிள்ளை இந்த முடிவுக்கு போயிருக்காது. இதற்கு ஆக்கிரமிப்பாளனும் ஒரு காரணம். புலம்பெயர் மக்களிடம் காசு வறுகும் கூட்டத்தினர்.. அங்கு சரியான திட்டங்களை கொண்டு செல்லாததும் ஒரு காரணம் ஆகும்.

சரியான தொழில்வாய்ப்பு பொருண்மிய மீட்சி என்பது கோழிக்குஞ்சால் தையல் மிசினால் மட்டும் வராது. அடிப்படை கட்டமைப்புக்கள் ஊர்கள் தோறும் மீளமைக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்களை உள்ளிளுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை பெருக்க வேண்டும். மக்களுக்கு கல்வி தொழில் வாய்ப்பை கூட்ட வேண்டும். தொடர்ச்சியாக புலம்பெயர்ந்த மக்களின் சில ஆயிரங்கள் உதவியோடு மக்களை சாந்தப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. மக்களின் தேவைகள் விருப்பங்கள் வளர்ந்து கொண்டே போகும். அவர்களும் பிற உலக நிலைக்கு ஏற்ப வாழவே விரும்புவர். அந்த வகையில் நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களும் சர்வதேச அமைப்புக்களின் பங்களிப்புடனான நிரந்தர வளர்ச்சிகளும்.. முதலீடுகளும் அவசியமாகின்றன.

இவற்றை புலம்பெயர் மக்கள் மட்டும் செய்ய முடியாது. உள்ளூர் அரசியல்வாதிகள்.. சிங்கள ஆட்சியாளர்கள்.. பக்கத்து வல்லாதிக்க சக்திகள் என்று எல்லோரும் சேர்ந்து செய்தாக வேண்டும்.

இந்தக் குடும்பத்தை எடுத்து நோக்கினால்.. அவர்களுக்கு வேலை செய்ய.. படிக்க நல்ல விருப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான சரியான வாய்ப்புக்கள் இல்லை. அதனை ஏற்படுத்திக் கொடுக்காமல்... புலம்பெயர்ந்தவர்கள் 100 டொலர்.. 250 டொலர் அனுப்பிவிட்டு.. மனிதாபிமானம் பேசிக் கொண்டிருந்தால்.. அது அவர்களுக்கு நிச்சயம் நிரந்தர மீட்சியை தர மாட்டாது. இதை உணர்ந்து கொள்ளாத திட்டங்களால் மக்களுக்கு நீடித்த பயனும் இல்லை. இதனை உணராது.. மக்களை திட்டும் கூட்டத்தினர் சரியாக தமது நிலைகளை நிலைப்பாடுகளை.. மீளாயவும் உணரவும் புதிய திட்டங்களை அமுல்படுத்தவும் முற்பட வேண்டும்..! சும்மா ஆக்களை திட்டி கதை எழுதி.. செய்தி எழுதி.. இப்படியான தற்கொலைகளையோ மக்கள் அவலங்களையோ தடுத்து நிறுத்த முடியாது. மாறாக கூட்டுவதையே செய்ய முடியும்.

இந்தப் பிள்ளையின் மரணத்திற்கு.. பெற்றோர்.. சமூகம்.. புலம்பெயர் நாடுகளில் இருந்து கோழிக்குஞ்சு திட்டம் நடத்துவோர் உட்பட பலரும் காரணமாவர். இந்த மக்களிடம் புலம்பெயர் மக்களை நோக்கிய ஒரு எதிர்பார்ப்பு வாழ்க்கையை வாழ வைக்கும்.. புலம்பெயர் மனிதாபிமானிகள்.. சற்றுச் சிந்தியுங்கோ. அந்த மக்களின் வளர்ந்து வரும் தேவைகளோடு நீங்கள் பயணிக்க கூடிய நிலையில் இருக்கிறீர்களா என்றும் சிந்தியுங்கோ..! அந்தந்த குடும்பங்களுக்கு நிரந்தர வருவாய்க்குரிய நல்ல வழிக்காட்டலை செய்வதை விடுத்து அவர்களை அடுத்தவர்களின் தயவில் சதா வாழ வைப்பதன் விளைவுகளில் ஒன்றே.. இந்த தற்கொலைகள்..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.