Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி

Featured Replies

மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி

இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:

தங்கள் சுகத்திற்காகவும் தங்களின் நல்லாட்சி சிறந்தோங்கவும் ஈழ தேசத்தவரின் இதயபூர்வமான நல்லாசிகள் என்றும் உரித்தாகுக.

தாய்த் தமிழகத்தின் இனக்குழுமம் ஆகிய ஈழத் தமிழ் பேசும் மக்களாகிய எங்களின் இன உரிமைகளும் வாழ்வியல் அடிப்படைகளும் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள அரசால் மறுக்கப்பட்டு வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

தமிழ் பேசும் மக்கள் மீதான உயிர் வாழ்தலுக்கான தகுதி மறுப்பு என்பது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் குறிப்பாக மகிந்த ராஜபக்சஇ சிங்களக் குடியரசின் தலைவரான பின்னர் அதி தீவிரம் பெற்றுள்ளது.

சுருக்கமாக வெளிப்படுத்துவதானால் இலங்கைத் தீவு முழுமையும் வாழும் தமிழ் பேசும் மக்கள் மரணத்திற்குள்ளும் மரண பீதிக்குள்ளும் தினம்தோறும் வாழ்ந்து வருகின்றனர்.

புரிந்துணர்வு உடன்பாடு என்பது தற்பொழுது பெயரளவில் நடைமுறையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்பாடு என்பது சிங்கள அரசால் சாகடிக்கப்பட்ட வெற்று ஆவணமாகவே சமகாலத்தில் உள்ளமையைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

சிங்கள அரசின் கட்டுப்பாட்டு பிராந்தியங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் படுகொலைகள்இ கொலை வெறித்தனங்கள்இ பாலியல் வல்லுறவுகள் ஆட்கடத்தல்கள்இ காணாமற் போதல்கள்இ சித்திரவதைகள்இ சுற்றிவளைப்புக்கள்இ தேடுதல்கள்இ அச்சுறுத்தல்கள்இ கைதுகள்இ குடிப்பெயர்வுகள் என வகை தொகையின்றி சிங்கள ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ளன.

தமிழ் சிவில் மூகம் மீது சிங்களப் படைகள் சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுகின்றன. ஒவ்வொரு நாள் விடியற்பொழுதுகளும் பிணவாடை வீசவே மலர்கின்றது. மனித நேயத்தையே மரணிக்கச் செய்யும் சிங்கள நாசிவாதிகளின் ஆட்சி பிராந்தியமாக தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்கு மலையகம்இ கொழும்பு போன்ற பிரதேங்கள் மாற்றம் பெற்றுள்ளன.

இங்கு தமிழர் மீது பிரகடனம் செய்யாத பாசிச வெறித்தனம் சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சிங்கள அரசு தலைவரும் அவரது சகாக்களும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் வரட்டுத்தனமும் வக்கிரபுத்தியும் கொண்ட பௌத்த சிங்கள அரசுகளின் புதிய வடிவமாகவே உள்ளனர்.

இத்தகைய கொடூர வல்லாட்சிக்கு உட்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புக்களையும் தாங்கள் நிச்சயம் புரிந்து கொண்டு ஈழ விடுதலைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

மதிப்பிற்குரிய மக்கள் திலகம் அவர்கள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் வகுத்திருந்த தெளிவான அரசியல் அணுகுமுறை எமது தாயக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவரின் இலட்சியங்களுடன் தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்கும் தாங்களும் புரட்சித்தலைவர் அவர்கள் பின்பற்றிய கொள்கைகளை தீவிரமாக தாங்கள் நடைமுறைக்கு இட வேண்டும் என்று அவாவுகிறோம்.

அந்த வகையில் இலங்கை அரச தலைவர்இ பாரத தேசம் வந்திருந்த போது ஈழத் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தமிழக சகோதரர்களின் உணர்வு வெளிப்பாடாக இலங்கை அரச தலைவரை அனுசரிக்க தாங்கள் விரும்பவில்லை எனும் செய்தி அறிந்து நாங்கள் உணர்வு மேலிடப் பெற்றோம்.

பிரிக்க முடியாத இன உறவும் இனத்துவ அடையாளமும் உடைய தமிழீழமும் தமிழகமும் இணைந்தும் பிணைந்தும் செயல்புரிய வேண்டிய வரலாற்றின் தார்மிகப் பொறுப்பினை எமது விடுதலைக்காக தாய்த் தமிழகம் சார்பில் தாங்கள் ஆற்ற வேண்டும் என அன்புரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.

உலகின் ஈழதேசத்தின் வரைபடம் என்பது சிங்கள அரசாங்க இரத்தமும் வியர்வையும் வதையும் மிகுந்த ஒன்றாக வரையப்பட்டுள்ளது. பாரத தேசத்தில் தமிழகம் உள்ளிட்ட பிற பிராந்தியங்கள் பெற்றுள்ள சுய நிர்ணயம்இ தன்னாட்சிஇ இறைமை என்பவற்றைப் பெற்று நிம்மதியாக வாழ்வதே ஈழத்தேசத்தவரின் ஆழ்மன அரசியல் அபிலாசை ஆகும்.

இத்தகைய உயரிய இலட்சியத்தை அடைவதற்காக ஈழ மக்கள் எடுக்கும் எல்லா அரசியல் முயற்சிகளுக்கும் தாங்களும் தாய்த்தமிழகத்தின் சகோதரர்களும் அனைத்து தார்மீக ஆதரவினையும் தர வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தங்கள் நல்லாட்சியும் ஈழ விடுதலைக்கான பணியும் சிறக்க எமது வாழ்த்துக்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

எனது நண்றிகளும்...!

தமிழரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி எம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகம் பாராட்டு

இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,

தங்கள் சுகத்திற்காகவும் தங்களின் நல்லாட்சி சிறந்தோங்கவும் ஈழ தேசத்தவரின் இதயபூர்வமான நல்லாசிகள் என்றும் உரித்தாகுக.

தாய்த் தமிழகத்தின் இனக்குழுமம் ஆகிய ஈழத் தமிழ் பேசும் மக்களாகிய எங்களின் இன உரிமைகளும் வாழ்வியல் அடிப்படைகளும் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள அரசால் மறுக்கப்பட்டு வருவதை தாங்கள் நன்கறிவீர்கள்.

தமிழ் பேசும் மக்கள் மீதான உயிர் வாழ்தலுக்கான தகுதி மறுப்பு என்பது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் குறிப்பாக, மகிந்த ராஜபக்ஷ சிங்களக் குடியரசின் தலைவரான பின்னர் அதி தீவிரம் பெற்றுள்ளது.

சுருக்கமாக வெளிப்படுத்துவதானால் இலங்கைத் தீவு முழுமையும் வாழும் தமிழ் பேசும் மக்கள் மரணத்திற்குள்ளும் மரண பீதிக்குள்ளும் தினம்தோறும் வாழ்ந்து வருகின்றனர்.

புரிந்துணர்வு உடன்பாடு என்பது தற்பொழுது பெயரளவில் நடைமுறையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்பாடு என்பது சிங்கள அரசால் சாகடிக்கப்பட்ட வெற்று ஆவணமாகவே சமகாலத்தில் உள்ளமையைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

சிங்கள அரசின் கட்டுப்பாட்டு பிராந்தியங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் படுகொலைகள், கொலை வெறித்தனங்கள், பாலியல் வல்லுறவுகள், ஆட்கடத்தல்கள், காணாமற் போதல்கள், சித்திரவதைகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், அச்சுறுத்தல்கள், கைதுகள், குடிப்பெயர்வுகள் என வகை தொகையின்றி சிங்கள ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ் சிவில் சமூகம் மீது சிங்களப் படைகள் சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுகின்றன. ஒவ்வொரு நாள் விடியற்பொழுதுகளும் பிணவாடை வீசவே மலர்கின்றது. மனித நேயத்தையே மரணிக்கச் செய்யும் சிங்கள நாசிவாதிகளின் ஆட்சி பிராந்தியமாக தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்கு, மலையகம், கொழும்பு போன்ற பிரதேசங்கள் மாற்றம் பெற்றுள்ளன.

இங்கு தமிழர் மீது பிரகடனம் செய்யாத பாசிச வெறித்தனம் அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சிங்கள அரசு தலைவரும் அவரது சகாக்களும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் வரட்டுத்தனமும் வக்கிரபுத்தியும் கொண்ட பௌத்த சிங்கள அரசுகளின் புதிய வடிவமாகவே உள்ளனர்.

இத்தகைய கொடூர வல்லாட்சிக்கு உட்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கள் நிச்சயம் புரிந்து கொண்டு ஈழ விடுதலைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

மதிப்பிற்குரிய மக்கள் திலகம், இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் வகுத்திருந்த தெளிவான அரசியல் அணுகுமுறை எமது தாயக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவரின் இலட்சியங்களுடன் தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்கும் தாங்களும் புரட்சித்தலைவர் பின்பற்றிய கொள்கைகளை தீவிரமாக தாங்கள் நடைமுறைக்கு இட வேண்டும் என்று விரும்புகிறோம்.

அந்த வகையில், இலங்கை ஜனாதிபதி,பாரத தேசம் வந்திருந்த போது ஈழத் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தமிழக சகோதரர்களின் உணர்வு வெளிப்பாடாக இலங்கை ஜனாதிபதியை அனுசரிக்க தாங்கள் விரும்பவில்லை எனும் செய்தி அறிந்து நாங்கள் மகிழ்வடைந்தோம்.

பிரிக்க முடியாத இன உறவும் இனத்துவ அடையாளமுடைய தமிழீழமும் தமிழகமும் இணைந்தும் பிணைந்தும் செயல்புரிய வேண்டிய வரலாற்றின் தார்மிகப் பொறுப்பினை எமது விடுதலைக்காக தாய்த் தமிழகம் சார்பில் தாங்கள் ஆற்றவேண்டும் என அன்புரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.

உலகில் ஈழதேசத்தின் வரைபடம் என்பது சிங்கள அரசாங்க இரத்தமும் வியர்வையும் வதையும் மிகுந்த ஒன்றாக வரையப்பட்டுள்ளது.பாரத தேசத்தில் தமிழகம் உள்ளிட்ட பிற பிராந்தியங்கள் பெற்றுள்ள சுய நிர்ணயம், தன்னாட்சி, இறைமை என்பவற்றைப் பெற்று நிம்மதியாக வாழ்வதே ஈழத்தேசத்தவரின் ஆழ்மன அரசியல் அபிலாஷை ஆகும்.

இத்தகைய உயரிய இலட்சியத்தை அடைவதற்காக ஈழ மக்கள் எடுக்கும் எல்லா அரசியல் முயற்சிகளுக்கும் தாங்களும் தாய்த்தமிழகத்தின் சகோதரர்களும் அனைத்து தார்மீக ஆதரவினையும் தர வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தங்கள் நல்லாட்சியும் ஈழ விடுதலைக்கான பணியும் சிறக்க எமது வாழ்த்துக்கள்.

Thinakural

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு வைகோ கட்சி பாராட்டு

[செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 06:34 ஈழம்] [புதினம் நிருபர்]

இந்தியா பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மறுத்தமைக்கு வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று முன்நாள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

வருகிற சட்டசபை தேர்தல் முடிந்து சட்டசபையில் யார் ஆட்சியில் அமர்ந்தாலும், எதிர்க்கட்சி தலைவராக வைகோதான் அமர்வார். நாங்கள் கடந்த 12 வருடங்களாக நாட்டு மக்களுக்காக உழைத்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு தோல்விதான் கிடைத்தது. எத்தனையோ சறுக்கல்கள் ஏற்பட்டாலும் நாங்கள் துவண்டு விடவில்லை.

யாருக்கு பதவி ஆசை இல்லையோ அவர்தான் பதவியில் அமர வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறினார்.

எங்களை எந்த தொலைக்காட்சியிலும் இதுவரை காட்டியதே இல்லை. ஆனால் இப்போது பெயர் தெரியாத தொலைக்காட்சிகளில் எல்லாம் எங்களை காட்டுகிறார்கள்.

இந்த நேரத்தில் தமிழக முதலமைச்சருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஏன் என்றால் இலங்கை தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியா வந்தபோது தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்றார்.

அதற்கு முதல்வர், அவரை சந்திக்க மறுத்ததை பாராட்டுகிறேன்.

கலைஞர் மகள் கனிமொழியும், ப.சிதம்பரம் மகன் கார்த்திக்கும் இணைந்து நடத்தும் கருத்து என்ற இணைய தளம் சமீபத்தில் தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வருவார்கள் என்று கருத்துக் கணிப்பு நடத்தியது.

இதில் வைகோவுக்குத்தான் அடுத்த முதலமைச்சர் என்ற முறையில் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

மு.க.ஸ்டாலினுக்கு 10 விழுக்காடுதான் கிடைத்துள்ளது.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் மக்கள் எங்களை அங்கீகரிக்க தொடங்கி விட்டார்கள்.

2 முறை நாங்கள் ஏமாந்து விட்டோம். இந்த முறை ம.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் ஏமாற மாட்டோம். யார் ஆட்சியில் அமரப்போவது என்பதை தீர்மானிக்கும் கட்சியாக ம.தி.மு.க. இருக்கும்.

எங்களை எல்லா பெரிய கட்சிகளுமே அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேர்தல்களம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் வைகோ சரியாக முடிவு எடுப்பார். எங்களுக்கு எங்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவருக்கு தெரியும் என்றார் நாஞ்சில் சம்பத்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

ஜெ.ஜெ வை.கோவை சிறையில் போட்டார். இதனால் அ.தி.மு.க பாரளமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தோல்வி அடைந்தது. இவற்றை மறந்து வை.கோ அதிமுகவில் இணைவோர் ஆனால், இவரின் தோல்வி உறுதி. கேவலம் ராஜபக்க்ஷவின் சந்திப்பதை மறுப்பதின் மூலம் ஜெ.ஜெ என்ன சாதித்து விட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.