Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசைக் காப்பாற்றும் வச்சிர ஆயுதம் தமிழர்களே!

Featured Replies

இலங்கை அரசைக் காப்பாற்றும் வச்சிர ஆயுதம் தமிழர்களே!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-31 07:05:32| யாழ்ப்பாணம்]

நீண்ட பயணத்தை ஆரம்பித்த கப்பல் ஒன்றில் இருந்த குடிநீர் முற்றாக தீர்ந்து போனது. கப்பலில் இருந்தவர்கள் தண்ணீர்... தண்ணீர் என்று கண்ணீர் விட்டனர்.

அந்தக் கப்பலின் மாலுமியோ வயர்லஸ் மூலமாக ஏனைய கப்பல் தளபதிகளுடன் தொடர்பு கொண்டு எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்கின்றார்.

எங்கிருந்தும் நல்ல பதில் வரவில்லை.

கப்பலில் இருந்தவர்கள் வாடிவிட்டனர். மீட்சி பெறுவது சந்தேகமே என்ற நினைப்பு அவர்களைச் சூழ்ந்த வேளை கப்பல் மாலுமி கண்ணுக்கு தெரியக் கூடியதான தூரத்தில் வந்துகொண்டிருந்த கப்பல் தலைவனுடன் தொடர்பு கொண்டு, ஐயா எங்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீர் தந்துதவுங்கள் என்று கெஞ்சினான்.

அதற்கு, நீங்கள் நங்கூரம் இட்டுள்ள இடத்தில் உள்ள தண்ணீர் குடிக்கக்கூடியது. அதனை அள்ளி தாராளமாக பருகிக் கொள்ளுங்கள் எனப் பதில் வந்தது.

கப்பல் மாலுமி அதிர்ந்து போனார். அட! நாங்கள் நிற்கின்ற இடத்திலேயே குடிநீர் இருக்கும் போது தாகத்தால் வாடிப்போக நேரிட்டதே என்ற மன உறுத்தலோடு தண்ணீரை அள்ளிக் கப்பலிலிருந்த அனைவரும் பருகினர். என்னே அருமை. கிடைத்தற்கரிய குடிநீர் என நினைந்து மகிழ்ந்தனர்.

இந்தக் கதையில் வரும் கப்பல், கப்பல் மாலுமி, கப்பலில் இருப்பவர்கள் என்ற ஒழுங்கு முறையில் இந்த நாடு, நாட்டின் அரசியல் தலைமை, அங்கிருக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகள் என ஒப்பிட்டுப்பார்ப்பது பொருத்துடையது போல் தெரிகிறது. அந்தக் கப்பல் மாலுமிபோல் இந்த நாட்டின் அரசியல் தலைமை, ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக உலக நாடுகள் முழுவதிடமும் கெஞ்சி மன்றாடுகின்றன.

ஐ.நா.சபையின் போர்க்குற்ற விசாரணையிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என உலக நாடுகளிடம் கெஞ்ச, அந்நாடுகளோ இலங்கையின் ஆட்சி பீடத்திற்கு உதவத் தயாராக இல்லையென அறிவிக்கின்றன.

அதேநேரம் இலங்கையின் பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் சில நாடுகள் இலங்கைக்குள் நுழைந்து இலங்கையில் இருக்கக் கூடிய வளங்களை தமக்காக்கிக் கொள்வதுடன் தங்கள் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான தளமாகவும் இலங்கையைப் பயன்படுத்துகின்றன.

உண்மையில் ஐ.நா.சபையின் போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை தன்னை விடுவித்துக் கொள்வதற்கான வச்சிர ஆயுதம் இலங்கையிலேயே இருக்கிறது. அந்த வச்சிர ஆயுதம் இலங்கைத் தமிழர்களே.

இந்த உண்மையை இலங்கை அரசு அடியோடு மறந்து - மறைத்து இருக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு பரிபூரணமான தீர்வு உடனடியாக வழங்கப்படுமாக இருந்தால், ஈழத்தமிழர்கள் ஐ.நா. சபையிடம் சொல்வார்கள் ‘மன்னித்தோம் நாம் ஒன்றாக வாழ்வோம்’ என்று.

நாடெல்லாம் ஓடி உதவிகேட்டு மானம் போவதைவிட, இந்தநாட்டில் இருக்கக் கூடிய ஆயுதத்தைப் பயன்படுத்திதப்பித்துக் கொள்வது மகா புத்திசாலித்தனம்.

அட! தமிழர்கள் முன்பு இலங்கைக்கு எதிரான ஆயுதமாக இருந்தார்கள் இப்போது அவர்கள் இலங்கையைக் காப்பாற்றக் கூடிய ஆயுதமாக இருக்கிறார்கள்.

புரிகிறதா! உண்மை புரிந்தால் நீங்கள் தீர்வை தாருங்கள். நாங்கள் அஸ்திரத்தை ஏவுகின்றோம். அது ஐ.நாவை அமைதி கொள்ள வைக்கும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=19616

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.