Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவை சீண்டிய அமெரிக்க அதிகாரி டேவிட் கில்குலேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 02/06/2011 in செய்தி

கொழும்பில் நடைபெறும் போர்க்கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் டேவிட் கில்குலேன் வெளியிட்ட கருத்துக்களை சிறிலங்கா ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளன.

நேற்று கொழும்பில் ஆரம்பமான சிறிலங்கா இராணுவத்தின் போர் அனுபவக் கருத்தரங்கில் உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரும், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் பெட்ராயசின் சிறப்பு ஆலோசகருமான- அவுஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் லெப்.கேணலான டேவிட் கில்குலேன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

அவர் நேற்று தனது உரையில் போர்க்குற்றங்களை ஒருபோதும் மூடி மறைத்து விட முடியாது என்று கூறியுள்ளதாக ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் வாழ்க்கை நிலையை சிறிலங்கா அரசாங்கம் உயர்த்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

மீண்டும் ஒரு மோதல் நிலை உருவாவதை தவிர்க்க வேண்டுமானால், முடிவான மாற்றங்களைச் செய்வது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும், சிறிலங்கா ஊடகங்கள் இவரது இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தாமல் இருட்டடிப்புச் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

source:Eelam press.

Edited by tamil arasu

David Kilcullen னின் கருத்துத் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கை!

சிறிலங்கா படைத்தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பு கலதாரி நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற போர்க் கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் David Kilcullen வெளியிட்ட கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

'தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம் - சிறிலங்காவின் அனுபவங்கள்' என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா படைத்தரப்பின் மூன்று நாள் கருத்தரங்கு கடந்த 31ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில், உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரும், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தளபதியின் விசேட ஆலோசகருமான அமெரிக்க படைத்துறை நிபுணர் David Kilcullen கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இவரின் உரையை கொழும்பு அரசாரப்பு ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்திருந்தன.

இந்நிலையில், சிறிலங்கா படைத்தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச படைத்துறைக் கருத்தரங்கில் உரையாற்றிய போது David Kilcullen தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என அந்நாட்டின் இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தனது பணிகளின் ஒரு கட்டமாகவே David Kilcullen இக்கருத்தரங்கில் கலந்து கொண்டதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஆழ்ந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச மனிதவுரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான வகையில் மேற்கொள்ளப்பட்ட இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது.

இவ்விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு. அவ்வகையில் இதுதொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய குற்றச்செயல்களுக்கு பொறுப்புக் கூறுவதன் மூலமே இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தையும், நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும்' என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களை உலகின் கண்களில் இருந்து ஒருபோதும் மூடி மறைத்துவிட முடியாது என David Kilcullen குறிப்பிட்டதாக ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

அத்துடன், போரினால் மிகவும் பாதிப்படைந்த இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைமைகளை உயர்த்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் மீண்டும் ஒரு மோதல் நிலை உருவாவதை தவிர்க்க வேண்டுமானால், ஆக்கபூர்வமான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் எனவும் David Kilcullen தனதுரையில் வலியுறுத்தியிருந்தார்.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={5BB99C67-ABF0-4673-A6E5-6DC698E01DFA}

Sri Lanka Defense Symposium

Press Statement

Mark C. Toner

Deputy Spokesperson, Office of the Spokesman

Washington, DC

June 3, 2011

Remarks earlier this week by the U.S. Embassy’s Defense Attaché at a conference in Colombo reflected his personal opinions. They do not reflect the policy of the United States Government. The United States declined invitations to participate in this conference, and our Defense Attaché attended to observe the proceedings as part of his normal duties.

The United States remains deeply concerned by the findings of the Secretary-General’s Panel of Experts on Sri Lanka. We are committed to ensuring that there is a credible accounting of, and accountability for, violations of international human rights law and international humanitarian law in Sri Lanka. We believe that the Sri Lankan Government must act quickly and credibly to address the violations alleged in the report and to adopt the measures necessary to achieve national reconciliation and build a united, democratic, and peaceful Sri Lanka.

http://www.state.gov/r/pa/prs/ps/2011/06/164992.htm

ஐ.நா அறிக்கையை முழுமையாக ஏற்பதாக..

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகள் சரணடைய முயற்சித்தமை குறித்து சந்தேகம் எழுப்பிய இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பணியாற்றும் அமெரிக்க இராணுவ இணைப்பு அதிகாரியின் கருத்தானது அமெரிக்காவின் கருத்தல்ல என்றும், அது அந்த அதிகாரியின் சொந்தக் கருத்துத்தான் என்றும் அமெரிக்க அரசுத்துறையின் துணைப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால், போர் வெற்றிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பாதுகாப்புத்துறை கருத்தரங்கில் கலந்துகொண்ட அந்த அமெரிக்க தூததரக அதிகாரி, அங்கு பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்கள், அமெரிக்காவின் இலங்கை நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தைக் காண்பிக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமெரிக்க அரசுத்துறையின் துணைப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட அழைப்பை அமெரிக்க அரசாங்கம் மறுத்து விட்டது என்று கூறிய துணைப்பேச்சாளர், அந்த தூதரக அதிகாரி தனது வழமையான கடமையின் நிமித்தம் குறிப்புக்களை எடுப்பதற்காக மாத்திரமே அங்கு அனுப்பப்பட்டிருந்தார் என்றும் கூறினார்.

அத்துடன் அங்கு அவர் கூறியததாக கூறப்படும் கருத்துக்கள் எதுவும் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்து அல்ல என்றும் அவை அந்த அதிகாரியின் தனிப்பட்ட கருத்துக்களே என்றும் டோனர் கூறியுள்ளார்.

அது மாத்திரமல்லாமல், இலங்கை போர் நிகழ்வுகளைப் பொறுத்தவரை தாம் ஐநா செயலரின் குழுவின் அறிக்கையை முழுமையாக ஏற்பதாகவும், அதன் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தமது முன்னைய நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது என்றும் மார்க் டோனர் கூறியுள்ளார். அதன் மூலமே இலங்கையில் தேசிய மட்டத்திலான ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=72873

US Defence Attaché in Colombo ‘embarrasses’ Obama administration

“Remarks earlier this week by the U.S. Embassy’s Defense Attaché at a conference in Colombo reflected his personal opinions. They do not reflect the policy of the United States Government,” said a spokesman for the U.S. State Department Friday. The comment came in a statement officially distancing the USA from remarks made this week by its own defence attaché Lt. Col. Lawrence Smith in Colombo at the controversial 3-day seminar organised by the Sri Lankan military to expound on its defeat of the LTTE. The USA had earlier declined Sri Lanka’s invitation to attend the controversial seminar. The latest US controversy has raised questions whether the US military officials were also playing a ‘personal counter-insurgency’ role in the Sri Lankan State's war against Eezham Tamils.

The Sri Lankan defence ministry, in its final report on the seminar, had included the USA amongst those countries who attended. The US statement Friday reiterated Washington had declined the invitation.

http://tamilnet.com/art.html?catid=13&artid=34030

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.