Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவத்தின் போர் அனுபவக் கருத்தரங்கில் யாழ். அரசஅதிபர் இமெல்டா சுகுமாரும் உரை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Friday, June 3, 2011, 9:58கட்டுரைகள், சிறீலங்கா, தமிழீழம்.

சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும் உரையாற்றியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற போர் நடவடிக்கையின் போது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான உதவிகள் குறித்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள் மத்தியில் விளக்கமளித்துள்ளார்.

நேற்றைய இறுதிநாள் அமர்வில் சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோருடன் இமெல்டா சுகுமாரும் மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றி விளக்கமளித்தார்.

போர் நடைபெற்ற காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிபராக இருந்த இவர், 2009 ஜனவரி மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்துடன் அங்கிருந்து வெளியேறி வவுனியாவில் தங்கியிருந்தார்.

இவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்த போதும் சிறிலங்காப் படையினர் போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே, நேற்று போர் அனுபவக் கருதரங்கிலும் இவர் போர் நடந்த பகுதிக்குப் பொறுப்பான அரசஅதிகாரி என்ற வகையில் கருத்துகளை வெளியிட்டதாகவும் தெரியவருகிறது.

இந்தப் போர்க் கருத்தரங்கில் சிறிலங்கா அரசுக்கு மிகவும் நெருக்கமான- தெரிவு செய்யப்பட்ட சில இராணுவ அதிகாரிகளும், அதிஉயர் நிர்வாக அதிகாரிகளும், வெளிநாட்டுப் பேராளர்களுக்குமே உரையாற்றச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் ஏற்பாட்டிலேயே இந்த போர்க் கருத்தரங்கில் இமெல்டா சுகுமார் உரையாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

source:tamilthai.

Edited by tamil arasu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.