Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கும் ஆயுதமாக மாற்றப்படும் புத்தர் சிலைகள்

Featured Replies

யாழ்ப்பாணத்தை சிங்கள, பௌத்த மயப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்தேறத் தொடங்கியுள்ளன. அண்மையில் வெசாக்கை முன்னிட்டு யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு வண்ண விளக்குகளாலும், வெசாக்

பந்தல்களாலும், வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தைப் படையினர் கைப்பற்றிய பின்னர் எத்தனையோ வெசாக் பௌர்ணமிகள் வந்து போய் விட்டன. ஆனால் இந்த முறை போன்ற ஏற்பாடுகள் இதற்கு முன்னர் நடைபெற்றிருக்கவில்லை.

இதற்கு ஒரு காரணம் 2,600ஆவது சம்புத்தத்வ ஜெயந்தி மட்டும் அல்ல.அதற்கும் அப்பால் யாழ்ப்பாணத்தை சிங்கள,பௌத்த மயப்படுத்தும் முயற்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தான்.

முன்னரெல்லாம் படைகாம்களையும், அதைச் சுற்றியும் தான் வெசாக் பந்தல்கள் அலங்காரம் செய்யப்பட்டன.

ஆனால் இம்முறை அது நகரப் பகுதிகள் எங்கும் ஆக்கிரமித்திருந்தது. யாழ்ப்பாணத்தை ஏதோ ஒரு பௌத்தர்கள் அதிகம் வசிக்கும் பகுதி போன்று காண்பித்தன. இந்த அலங்காரங்கள். யாழ்ப்பாணத்தில் இப்போது வசிக்கும் படையினரைத் தவிர, பௌத்தர்கள் என்று கூறுவதற்கு ஒரு வீதமானோர் கூட இருக்க மாட்டார்கள்.

இருந்தபோதும், பௌத்தர்கள் கொண்டாடும் இந்த நிகழ்வுக்காக செய்யப்பட்ட இந்த மிகையான ஏற்பாடுகள் தமிழ்மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வெசாக் கொண்டாட்டங்களுக்காக பலாலி படைத் தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்ட 28 புத்தர் சிலைகள், அதன் சுற்றுப் புறத்தில் சிறிய விகாரைகள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

ஏற்கெனவே படைத்தளங்கள் தோறும் புத்தபெருமான் குடிகொண்டு விட்டார். நயினாதீவு நாகவிகாரை, காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை, மாதகல் சம்பில்துறை விகாரை, யாழ்ப்பாணம் நாகவிகாரை என்று இப்போது யாழ்ப்பாணத்தில் புத்தபெருமானின் குடியிருப்புகள் பெருகிப் போயுள்ளன.

இது நாளுக்கு நாள் அதிகத்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் 28 புத்தர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முயற்சியானது உயர் பாதுகாப்பு வலயத்தை பௌத்த மயப்படுத்தும் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளலாம்.

உயர் பாதுகாப்பு வலயங்களே இல்லை கண்ணிவெடி அபாயமுள்ள பகுதிகள் தான் உள்ளன என்று கூறும் அரசாங்கம், பலாலி படைத்தளச் சுற்றுப்புறத்தை மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கத் தயாராக இருக்கிறதென்றால், அங்கு எதற்காக புத்தர்சிலைகளை பிரதிஷ்டை செய்ய முனைய வேண்டும்.

வலிவடக்கின் பல பகுதிகளிலும் புத்த பெருமானின் குடியிருப்புகள் தான் அதிகரிக்கப் போகின்றன குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் மட்டு மன்றி வன்னியிலும் கூட இதே அச்சம் மேலோங்கி வருகிறது. தென்னிலங்கையில் தமிழர்கள் கோவிலைக் கட்ட வில்லையா அதற்கு யாராவது குறுக்கே நின்றனரா என்று சிலர் கேள்வி எழுப்புகின் றனர்.

தமிழர்கள் வசிக்கின்ற நிலையில் தான் அங்கு கோவில்கள் அமைக்கப்பட்டன.

ஆனால் பௌத்தர்கள் வசிக்காத தமிழர் பகுதிகளை குறிவைத்து விகாரைகள் கட்டப் படுவதும், புத்தபெருமானின் குடில்கள் கட்டப்படுவதும் சந்தேகம் நிறைந்த விடயங்களே.

இதுபோதாதென்று இப்போது வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்படும் காரியங்களும் நடக்கின்றன. ஏற்கெனவே தமிழர் தாயகம் என ஒன்று இல்லை என்றும், இலங்கை முழுவதும் சிங்களபௌத்த பிரதேசம் என்றும் கூறும் பொய்யான வரலாற்றுச் சான்றுகளும் முளைக்கத் தொடங்கி விட்டன. இந்தநிலையில் பௌத்த மயப்படுத்தும் முயற்சிகளை தமிழர்கள் அச்சத்துடன்தான் நோக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பௌத்த தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் ஒன்று உருவானது. இப்போது இந்து பௌத்த சங்கம் என்ற ஒன்று முளைத்துள்ளது.

பௌத்த தமிழ்ச் சங்கம் அமைப்பதற்கு யாழப்பாணத்தில் தமிழ் பௌத்தர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அப்படி உள்ள எவராவது தமது பிறப்பு, திருமணச் சான்றிதழ்களில் அல்லது வேறேதும் ஆவணங்களில் அதை நிரூபிப்பார்களா? அப்படியான எவரும் இல்லை என்பதே உண்மை. வடக்கில் சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் மொழி ரீதியான வெறியைப் புலப்படுத்தும் என்பதால் தான் புத்தரை ன்னிலைப்படுத்திய நகர்வுகள் இடம்பெறுகின்றன. இதற்கெல்லாம் அரசாங்கத்தின் பின்புல ஆதரவு இல்லாமல் இல்லை.

சிங்கள மயப்படுத்தினால் அது தமிழருக்கு எதிரான இனவாதமாகப் பார்க்கப்படும்.ஆனால் ஒருவர் தான் தமிழ் பௌத்தர் என்று கூறினால் அதற்கான எந்த ஆதாரம் தேவையில்லை.

அப்படிக் கூறக் கூடியவர்களை வைத்தே இப்போது காய்கள் நகர்த்தப்படுகின்றன.இவர்கள் மூலமே யாழ்ப்பாணம் சிங்கள,பௌத்த மயப்படுத்தப்பட்டு வருகிறது.

பௌத்த தமிழ்ச் சங்கம் விகாரைகள் அமைக்க காணி தருவோருக்கு வீடு கட்ட உதவி செய்வோம் என்கிறது. இப்படிப் பெறப்பட்ட காணியில் உடுவில் கிழக்கில் ஒரு விகாரை அமைக்கப்படவுள்ளது.

வரணியில் தர்ம பாடசாலை அமைக்கும் திட்டம் உள்ளது. வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு மேற் கொள்ளப்படும் இந்த முயற்சிகளுக்கு நாக விகாரையும், யாழ். படைத்தலைமையகம் தான் உறுதுணையாக இருக்கின்றன.

இப்போது புதிதாக முளைத்துள்ள இந்து பௌத்த சங்கம் அரசியல் ரீதியான இலக் குகளையே குறிவைத்துள்ளது. யாழ்ப்பாணத்தை தமிழன் தனியான அடையாளம் கொண்ட பகுதியாக இருக்க விடாமல் செய்வதும், அதற்கான அடையாளங்களை அழிப்பதும் தான் இந்த நடவடிக்கையின் அடிப்படை நோக்கம்.

விகாரைகள் அமைப்பது, பௌத்த சங்கங்கள் அமைப்பது போன்ற காரியங்களின் ஊடாக நல்லிணக்கம் என்பது ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை. இவையெல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் உண்டுபண்ணுமே தவிர, ஒற்றுமைக்கான அடித்தளமாக அமையாது. ஆனால் அதையெல்லாம் அரசாங்கமோ, படைத்தளபதிகளோ உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இலங்கைத் தீவு ழுவதும் சிங்கள பௌத்த ஆதிக்கத்துக்குட்பட்ட பகுதி என்று உலகின் முன்கொண்டு செல்வதே அவர்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் சிலரே துணைபோவது தான் வேடிக்கையானதும், வேதனையானதுமான விடயம். புத்த பெருமான் போதித்த உயர்ந்த தத்து வங்கள் ஒருபோதும் இன்றைய இலங்கையின் அரசியல் நடப்புகளுடன் ஒத்துப் போகக் கூடியவையல்ல. புத்தன் பெயரால் சிங்கள, பௌத்த பேரினவாதமே வளரத் தொடங்கி யுள்ளது.

அது தெய்வேந்திர முனையில் இருந்து பருத்தித்துறை முனை வரை வியாபித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பய தாயகக் கோட்பாட்டை நிராகக்கும் ஒரு ஆயுதமாக இப்போது புத்தபெருமான் வடிவெடுத்துள்ளார்.

இதன் காரணமாக தமிழர்கள் புத்தபெரு மானையே வெறுப்போடு பார்க்கின்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இதற்குக் காரணம் தமிழர் தரப்பு அல்ல. சிங்களத் தரப்பே இத்தகைய அச்சத்தை ஏற்படுத்தி, வெறுப்பை உண்டாக்கியுள்ளது.

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அரசாங்கம் அதைச் சார்ந்தவர் களும் தவறுக்கு மேல் தவறுகளைச் செய்கின்றனர்.

இந்தத் தவறுகளின் மீது ஒருபோதும் நிரந்தர சமாதானத்தையோ, நல்லெண்ணத்தையோ ஏற்படுத்திவிட முடியாது. இதன் மூலம் உருவாக்கப்படுவதெல்லாம் வெறுப்பும், இன, மத ரீதியான துவேசமாகவே இருக்கும்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.