Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எங்கும் தப்பிச் செல்ல வில்லை; என் மீது எந்த குற்றமும் இல்லை :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 3, ஜூன் 2011 (18:48 IST)

நான் எங்கும் தப்பிச் செல்ல வில்லை;

என் மீது எந்த குற்றமும் இல்லை :

சீமான் பரபரப்பு பதில்

01.06.2011 அன்று மாலையில், நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவரும், இயக்குனருமான சீமான் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் விஜயலட்சுமி வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். தேவைப்பட்டால் விஜயலட்சுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விஜயலட்சுமி புகார் குறித்து சீமான் நேரடியாக பதில் எதுவும் கூறவில்லை. வழக்கறிஞர் ஒருவர் மூலம் விஜயலட்சுமியின் புகாரை மறுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோச‌டி, பாலியல் வல்லுறவு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வலசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சீமான் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், ‘’நடிகை விஜயலட்சுமி கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று அழுதார்.

நான் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். எனது கட்சித் தோழர்களும் அவருக்கு உதவி உள்ளனர். இது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. என்னிடம் உதவி கேட்டு யார் வந்தாலும் அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்வது எனது சுபாவம். அந்த அடிப்படையில் தான் நடிகை விஜயலட்சுமிக்கு உதவி செய்தேன். இதன் பிறகு அவரிடம் இருந்து எனது செல்போனில் இருந்து எனக்கு எஸ்.எம்.எஸ்.கள் வரத் தொடங்கின.

என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று தகவல் வரும். மேலும் ஆவிகளை ஏவி விட்டு நீங்கள் என்னை கொல்லப்பார்க்கிறீர்கள், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன் என்று ஒரு தடவை மிரட்டல் எஸ்.எம்.எஸ். வந்தது. உடனே நான் என் நண்பரான டைரக்டர் சேரனை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தேன்.

விஜயலட்சுமி மீது போலீசில் புகார் கொடுக்கலாமா என்று அவரிடம் ஆலோசனை கேட்டேன். சேரன் வேண்டாம் என்றும், விஜயலட்சுமியை கண்டிப்பதாகவும் கூறினார்.

அதன் பிறகு நான் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகி விட்டேன். தி.மு.க., காங்கிரசை எதிர்த்து கூட்டங்களில் பேசினேன். தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. என்னால் பாதிக்கப்பட்டவர்கள் தான் நடிகை விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர்.

நான் தலைமறைவாகி விட்டதாக அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எங்கும் தப்பிச் செல்ல வில்லை. அப்படி ஒரு கோழைத் தனமான முடிவு எடுக்க எனக்குத் தெரியாது.

என்னைப் பொறுத்தவரை வழக்குகளை கண்டு நான் பயப்படுபவன் அல்ல. நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் என் மீது போடப்பட்டுள்ள பாலியல் வல்லுறவு வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்.

எமது அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எமது போராட்டத்தை எள்ளவும் தளரவைக்க முடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

:

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே காங்கிரஸ் கட்சி இப்படியான கிழ்த்தனமான வேலை செய்வதுண்டு அதன் அதில் ஒரு அங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே காங்கிரஸ் கட்சி இப்படியான கிழ்த்தனமான வேலை செய்வதுண்டு அதன் அதில் ஒரு அங்கம்.

உண்மை தான்...

இத்தாலி எருமை கூட்டத்தை ஓட ஒட அடிக்கனும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.