Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் தமிழ் இளைஞர்களின் வன்முறையைச் சித்தரிக்கும் முழு நீளத் திரைப்படம் ‘tooting broadway’

Featured Replies

லண்டனில் வாழும் தமிழ் இளைஞர் குழுக்களின் வன்முறையைச் சித்தரிக்கும் ‘ரூற்றிங் புரோட்வே’ என்ற முழுநீளத் திரைப்படம் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. இந்தியன் சமர் பில்ம்ஸ் தொடரில் 500,000 பவுண் செலவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

லண்டனில் வாழும் 200,000 வரையான தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்த தமிழ் இளைஞர் குழுக்களிடையே தோன்றிய மிகக் கோரமான வன்முறைகள் பிரித்தானிய தேசிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டன. 2000ம் ஆண்டு முதல் 20 வரையான கோரமான கொலைகள் தமிழ் இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் நிகழ்ந்தது.

இந்தத் தமிழ் இளைஞர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக ஸ்கொட்லன்ட் யாட் தனிப்பிரிவையே உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது. ஈஸ்ற்ஹாம், இல்போர்ட், வோல்தம்ஸ்ரோ, வெம்பிளி, ஹரோ, ரூற்றிங், குரொய்டன் என்பன இந்த தமிழ் இளைஞர் குழுக்களின் நடவடிக்கைகள் மையங்கொண்ட பகுதிகளாக ஸ்கொட்லன்ட் யாட் இனால் அறிவிக்கப்பட்டது. இந்த மையங்களில் ஒன்றான ரூற்றிங் புரோட்வே என்ற தெற்கு லண்டனில் உள்ள ஒரு இடமே தற்போது படத்தின் பெயராக அமைந்துள்ளது.

ஜோசு க்ளமன்ற் தயாரிக்கும் ‘ரூற்றிங் புரோட்வே’ திரைப்படத்தை தேவானந்த சண்முகம் இயக்குகின்றார். இவர்கள் இருவரும் சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தற்போது முறையே லண்டனிலும் ஒக்ஸ்போர்டிலும் வாழ்கின்றனர்.

இப்படத்தின் தயாரிப்பு மேலாளராக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ரூபி லவ்வல் உள்ளார். இவர் தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்தவர். தனது சிறுவயதில் இருந்து தெற்கு லண்டனில் வாழ்கின்றார். இவர் தெற்கு லண்டன் பட்னியில் உள்ள தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார்.

கயல் என்ற கவர்ச்சிகரமான இளம் பெண்ணின் கொலையுடன் ‘ரூற்றிங் புரோட்வே’ படம் ஆரம்பிக்கின்றது. படத்தில் வருகின்ற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமே ஒவ்வொரு கதை இருந்த போதும், முன்னர் வன்முறைக் குழுவில் இருந்த அருண் என்ற இளைஞனின் கதையே இப்படமாக விரிகின்றது.

இத்திரைப்படம் லண்டன் தமிழ் சமூகம் அறிந்துகொள்ளாத, ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளை முன்வைக்கின்றது.

மருத்துவக் கல்லூரியில் படிக்கின்ற பகுதிநேரமாக விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவி, மதத்துக்கு அடிமையான கணவனைப் பிரிந்து வாழும் தாய், வன்முறைக் குழுவின் தலைவன், அவருடைய காதலி, வன்முறையைத் தூண்டும் அதற்கு ஈடுகொடுக்கும் பெண்கள் எனப் பல்வேறு அம்சங்களையும் இப்படம் வெளிக்கொண்டு வருகின்றது.

இப்படத்தில் ஹரோவைச் சேர்ந்த கபிலன் வேலுகுமார் படத்தின் பிரதான பாத்திரமான அருனுடைய தம்பி ருத்தி யாக நடிக்கிறார்.

மிகவும் மூடிய சமூகமாக வாழும் தமிழர்கள் பொதுவாக தங்களுக்கு உள்ள சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதில் தயக்கத்தையே காட்டி வருகின்றனர். ‘ரூற்றிங் புரோட்வே’ யும் அவ்வாறான நெருக்கடியைச் சந்திக்கும்.

இது தமிழர்களைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் இது படமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் தெற்கு லண்டனில் இருந்து வெளிவந்துள்ளது.

அதேசமயம் இவ்வாறான சமூகப் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படுவதன் அவசியமும் சிலரால் வலியுறுத்தப்படுகின்றது.

படங்கள்:

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1971:-tooting-broadway&catid=314:2011-06-07-14-43-55

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை தயாரிப்பவர்களின் பிண்ணனி என்ன?

  • தொடங்கியவர்

இப்படத்தை தயாரிப்பவர்களின் பிண்ணனி என்ன?

அதுதான் ஜோசிக்க வேண்டியுள்ளது.....

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஜோசிக்க வேண்டியுள்ளது.....

இப்படத்தில் வரும் பாத்திரம் ஒன்று - மருத்துவக் கல்லூரியில் படிக்கின்ற பகுதிநேரமாக விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவி

இலண்டன் வாழ் ஈழத்தமிழர்களைக் கொச்சைப் படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டதா?.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஜோசிக்க வேண்டியுள்ளது.....

இந்தப் படத்தைத் தயாரிப்பவர்களுக்கும், புலிகள் கொழும்பைத் தாக்குவதாக எடுக்கப் படும் படத்தைத் தயாரிப்பவர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம்!

இவர்களின் நோக்கமே புலம் பெயர் வாழ் இளைய தமிழ்த் தலைமுறையினரைப் பற்றியும், புலிகளைப் பற்றியும் ஒரு தப்பான பார்வையை உருவாக்குவதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.