Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு உறவு (தென்னிலங்கைச் சிறையிலிருந்து…)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சதீஸ் என்ற கைதி தனது விடுதலையின் நாளுக்காகக் காத்திருக்கிறான். 29வயது நிரம்பிய இவன் ஒரு முன்னாள் போராளி. 2008இல் தென்னிலங்கையில் கைதுசெய்யப்பட்டு குடும்பமாக சிறு குழந்தை மனைவி உட்பட சிறைவாசத்தை அனுபவித்து வருகிறான். தமிழர்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் பேரைப்போல் இவனும் ஒருகாலம் போராடியிருக்கிறான்.

இந்தக் கைதியின் கைதுபற்றி 2008இல் வந்த பத்திரிகைச் செய்தியிது….

பணமிருந்தால் மட்டுமே ஒருவனின் வாழ்வை முடிவு செய்யும் உரிமைமிக்க இன்றைய காலத்தில் பணம் இல்லை ஆகையால் விடுதலையின்றி மனவுளைச்சல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கும் உடல்நலம் உடற்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

5வயது நிரம்பிய அவனது மகன் `அப்பா எப்ப வருவீங்கள்…? என்ற கேள்விகளோடு அப்பாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். எம்மால் முடிந்தது அவனது குழந்தைக்கும் மனைவிக்கும் வாழ்வதற்கான உதவி மட்டுமே. ஆனால் 6லட்சம் இருந்தால் வெளியில் தன்னால் வர முடியுமென்று நம்பும் இவனுக்காக 2மாத முயற்சியின் பயன் எதுவுமில்லை. வழக்கை நடாத்துவதற்கோ வழக்காடுவதற்கோ இவனிடம் வசதியில்லை.

இறுதி முயற்சியாக இவனது மனைவியின் வீட்டை விற்க முயற்சியெடுத்தோம் அதுவும் இப்போது விற்க முடியாத நிலமையில் இருக்கிறது. உறவுகளே இவனுக்கும் இவனது 5வயதுக்குழந்தைக்கும் மனைவிக்கும் வாழ்வுப்பிச்சை தாருங்கள். இவர்கள் வெற்றிகள் படைத்த போது மகிழ்ந்த நாங்கள் இன்று தோற்றுப்போய் கைதிகளாகத் துன்பங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இளைஞனின் ஒரு வழக்கின் பிரதியை 5ஆயிரம் ரூபா செலவழித்து மொழிமாற்றம் செய்து பெற்றுள்ளோம். இவனுக்கு உங்கள் உதவிகளை வழங்கி சதீசினதும் அவனது குழந்தை மனைவியினதும் வாழ்வை காப்பாற்றுங்கள் உறவுகளே…..!

இந்தக் கைதியின் கைதுபற்றி 2008இல் வந்த பத்திரிகைச் செய்தியிது….

Bild1.jpg

சதீசின் ஒரு வழக்கின் தமிழாக்கம் கீழே :-

Bild-14.png

sathesh2.png

sathesh3.png

sathesh4.png

sathesh5.png

sathesh6.png

sathesh7.png

sathesh8.png

sathesh9.png

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழக்கின் மீதி பிரதிகள்:-

sathesh10.png

sathesh11.png

sathesh12.png

sathesh13.png

sathesh14.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதியாக உள்ள சதீஸ் அவர்களுக்கு உதவுவதாக தொலைபேசியில் நம்பிக்கை கொடுத்து ஏமாற்றிய கனடா நபர் ஒருவர் பற்றிய பின்னிணைப்பு :-

தினமும் அவனது மனைவியிடமிருந்து வருகின்ற குறுஞ்செய்தியும் இவனிடமிருந்து வாரம் ஒருமுறை வருகின்ற துயரம் நிறைந்த உதவி வேண்டுதலும் எம்மால் நிறைவேற்ற முடியவில்லை. பலரிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதுவித பயனுமில்லை.

எங்களைப்போல் இவனது நிலமையை சிறையில் இருந்து நேரில் பார்த்த ஒரு நண்பனும் பலரிடம் உதவி கேட்டான். அதன் பயன் கனடாவிலிருந்து ஒருவரின் தொடர்பு கிடைத்தது.

கனடாவிலிருந்து இவனுடன் பேச விரும்பியவருக்கு பேசுவதற்கான ஏற்பாட்டையும் நண்பன் செய்து கொடுத்தான். கனடாவிலிருந்து இவனை அழைத்த அழைப்பை இவன் அதிகமாய் நம்பிவிட்டான். இவன் இயக்கவேலை செய்த காலங்களில் தொடர்போடிருந்தவர்களை இவன் செய்து முடித்த வெற்றிகளுக்கெல்லாம் இனிப்பு அனுப்பி மகிழ்ந்தவர்களையும் இன்னும் பலரையும் பற்றி விசாரித்த கனடாக்காரர் எல்லோரையும் இணைத்து இவனை வெளியில் எடுக்க பண உதவி செய்வதாக வாக்குறுதியளித்தார்.

தனது இருள் நிறைந்த வாழ்வுக்கு ஒளிவரப்போகிறதென நம்பியவன் ஒருநாள் கனடாக்காரரின் தொலைபேசியிலக்கத்தை எனக்குத் தந்து அவருடன் பேசும்படி கேட்டிருந்தான். நம்பிக்கையோடு அந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டேன். தான் வேலையில் நிற்பதாகவும் என்னுடன் தொடர்பு கொள்வதாகக்கூறி எனது தொலைபேசியிலக்கத்தைப் பெற்றுக்கொண்டார். நம்பிக்கையுடன் இருந்த எனக்கு மறுநாள் கனடாவிலிருந்து இன்னொருவர் தொடர்பு கொண்டார். தனது நண்பரே என்னுடன் முதல்நாள் கதைத்ததாகவும் அவரும் தானும் இணைந்து இந்தக் கைதிகளுக்காக ஒருபெரும் திட்டத்தை வைத்திருப்பதாகச் சொன்னார். நல்ல திட்டமானால் அதில் இணைந்து செயற்படுவதில் உதவுவதில் என்ன மறுகருத்தென ஒப்புக்கொண்டு திட்டத்தைக் கேட்டேன்.

திட்டம்:- கனடா அமெரிக்கா ஐரோப்பாவில் புலிகளின் பணங்களை கையில் வைத்திருப்பவர்களின் தொலைபேசியிலக்கங்களைத் தருவதாகவும் அவர்களிடம் தொடர்பு கொண்டு அவலப்படுவோருக்கு உதவுமாறு கேட்கச்சொன்னார். அடுத்த ஆயுதப்போராட்டம் அடிபட்ட மக்களின்¸ மனவுணர்வுகளையெல்லாம் படம்பிடித்து வைத்திருப்பது போல விளக்கம் தந்தார். ஏற்கனவே பலர் தந்ததை இந்த நண்பர் திருப்பி அரைத்துத் தந்தார்.

இறுதியில் இப்போது நான் கேட்கும் கைதிக்கான அவரது பங்கென்ன என்பதைக் கேட்டேன். வளமையாக பலர் சொல்லி ஒதுங்கிய…, ஐயோ நான் கனக்கச் செய்திட்டேன் என்னால ஏலாதென்ற என்ற பதில்தான் வந்தது.

அடுத்தநாள் இந்த நபர்கள் பற்றி கனடா நண்பர்களிடம் விசாரித்து இவர்களது தொலைபேசியிலக்கங்களை சரிபார்த்தபோது இடி தான் விழுந்தது. ஒரு கைதி எப்படி தொலைபேசி பாவிக்கிறான் எப்படி அவனது மனைவி இருக்கிறாள் ? கைதிகளின் மனைவிமாரை இராணு அதிகாரிகளுடன் தொடர்பபடுத்திக் கதைபுனைவது இவர்கள் தொழில் என்பதனையும் அறிந்தேன். குறிப்பாக மேற்படி கைதியின் புதினங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே பேசியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த அரிய வேலையைச் செய்தவர் கனடாவில் வாழும் யாழ், ஏழாலையைச் சேர்ந்த கேதீஸ் என்பவர் என்ற உண்மையையும் அறிந்தேன்.

இந்த நபர்கள் 2009ம் ஆண்டு முகாம்களிலிருந்து தப்பி தமிழகம் போயிருந்த பல போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதாகக் கதையளந்து முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததென்ற புதினம் கேட்டுவிட்டு அத்தோடு அவர்களைக் கைவிட்டார்கள். அதுதான் போகட்டும் அவர்களுக்கு உதவிய சிலருக்கு அந்தப்போராளிகள் உளவாளிகள் என்று கதைகட்டி அவர்களது வாழ்வுக்கு உலைவைத்தவர்கள்.

சாவோடும் வாழ்வோடும் போராடும் முன்னாள் போராளிகளுக்கு துரோகிப்பட்டம் வழங்கி தங்களது தேசிய உணர்வை காக்கிற இவர்கள்…., 2009 இந்தத் என்னுடன் கதைத்திருந்தார்கள். பல போராளிகள் பற்றி புலனாய்வுக்கதைகளைச் சொன்னார்கள். நான் தொடர்பில் இருந்த போராளிகளின் குடும்பங்களை போராளிகளை அரச உளவாளிகள் என்று விளக்கவுரையும் தந்து கிடைக்கவிருந்த உதவிகளைக்கூட குறுக்கே நின்று தடுத்தவர்கள். குரல்களை இனங்காண முடியாதவாறு தங்களை உருமாற்றி இப்போதும் அந்தப்பிள்ளைகளின் வாழ்வைக் கருக்கக் கங்கணங்கட்டி நிற்கிறார்கள்.

இந்தத் தொலைபேசியில் நான் உதவி வேண்டும் கைதியுடன் பேசிய ஏழாலையைச் சேர்ந்த கேதீஸ் அவர்கள் பொட்டுஅம்மானின் அணியில் பணியாற்றிய மாதவன் மாஸ்ரருக்காக தான் பணியாற்றியதாகவும் 2009 மே18 தன்னுடன் மாதவன் மாஸ்ரர் தொலைபேசியில் கதைத்து மாறிமாறி கண்ணீரால் பிரியாவிடை பெற்றதாகவும் கனடாவில் கதைசொல்கிறார்.

(மாதவன் மாஸ்ரரின் மனைவியின் மனநலம் பாதிக்கப்பட்டு சிறையில் இருப்பதாக நம்பப்பட்டது. கனடாவிலிருக்கும் மாதவன் மாஸ்ரரின் மனைவியின் சகோதரர் தனது சகோதரியை வெளியில் எடுத்துத் தருவதாகச் சொன்னவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தார். கடைசியில் தானே இலங்கைக்கப் போய் தனது சகோதரியை (மாதவன் மாஸ்ரரின் மனைவியை) இலங்கையின் சிறைகளெங்கும் தேடியும் இன்னும் அந்த அக்காவைக் காணவில்லை. ஒரு சகோதரனாக இயன்ற முயற்சிகளையெல்லாம் செய்தார் அந்தச் சகோதரன். ஆனால் மாதவன் மாஸ்ரரின் மனைவியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தனது குடும்ப உறவுகளுக்கே தனது இறுதி நேரம் பற்றிச் சொல்லாது போன மாதவன் மாஸ்ரரின் கடைசிப்பயணத்தைக் கண்ணீருடன் முடித்து வைத்ததாகச் சொன்ன கேதீஸ் அவர்கள்…..,

மாதவன் மாஸ்ரர் பணியாற்றிய தென்னிலங்கையில் சயனைட் அருந்தி உயிர் தப்பவைக்கப்பட்ட ஒரு போராளிக்கு உதவாவிட்டாலும் பறவாயில்லை நம்பிக்கையைக் கொடுத்து ஏமாற்றாமல் விட்டிருக்கலாமல்லவா…?

பல போராளிகள் மாவீரர் குடும்பங்களுக்கு உதவுவதாக விபரங்களைப் பெற்று அவர்களுடன் தொடர்பு கொண்டு புதினம் கேட்டறிந்துவிட்டு அவர்களுக்கு எதுவுவித உதவியும் செய்யாமல் அவர்களெல்லாம் இராணுவ புலனாய்வாளர்கள் என்று பரப்புரை செய்து பலரைத் துரோகியாக்கியுள்ளார்கள்.

இவர் போல இன்னும் பலர் பொட்டுஅம்மானின் ஆட்கள் மாதவனின் றமணாவின் ஆட்களென்று சொல்லி வருகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்கின்ற அவர்கள் நேசித்த தளபதிகள் வளர்த்த போராளிகளுக்கு உதவியென்று கேட்கிறபோது மட்டும் ஒதுங்கிவிடுகிறார்கள். ஏன் ?

சில மாதங்கள் முதல்வரை இன்றுள்ள அனைத்துலகச்செயலகத்துடனும் அறிக்கைப்புலியாக மலேசியாவிலிருந்து அறிக்கைவிட்ட இராமு சுபனுடனும் நேரடியாக ஸ்கைப்பில் விடுதலைப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போது இராமு சுபன் ஓய்வுபெற்று ஆ.அன்பரசன் என்று அறிக்கைப் போர் செய்யும் அனைத்தையும் வைத்திருக்கும் அனைத்துலகச் செயலகத்தின் தூணாக இயங்குகிறார்கள் இவர்கள் என்பதனையும் இப்போது அறிய முடிகிறது.

உதவாவிட்டாலும் பறவாயில்லை. நம்பிக்கைகளைக் கொடுத்து ஏமாற்றாமல் விட்டுவிடுங்கள். புலத்தில் இருந்து நாங்களோ எங்கள் பிள்ளைகளோ ஊரில் போய் வாழப்போவதில்லை. ஆனால் எங்களையெல்லாம் நம்பி சிறைகளிலும் தெருக்களிலும் வாழும் முன்னாள் போராளிகளுக்கு அவர்கள் செய்த தியாகங்களுக்கு துரோகிகள் பட்டம் வழங்காமல் விடலாமே. முடிந்தால் ஆளுக்கொரு குடும்பத்தை உயிர் வாழ வைப்போம். இயன்றால் இத்தகைய சதீஸ் போன்ற நிலமையில் உள்ள 638அரசியல் கைதிகளின் (இவர்கள் சந்தேகத்தின் பெயரிலும் சம்பவங்களின் பெயராலும் கைதாகி வருடக்கணக்கில் சிறையில் இருப்பவர்கள்) விடுதலைக்கு இயலுமான உதவிகளை வழங்கி அவர்களை வாழ வைப்போம்.

... முன்னாள் போராளிகள், அவர்கள் குடும்பங்கள் ...

... நிச்சயமாக அவர்கள் இன்று படும் வேதனைகள் சொல்லில் அடங்காதவை, அவற்றை யாரும் மறக்கவில்லை! அவர்கள் மட்டுமல்ல அங்குள்ள பொதுமக்களின் நிலையும் அதனை விட கேவலமானது/வேதனையானது! ஆனால் ...

... இப்போராளிகள் புறப்பட்டது எம் மக்களின் விடிவிற்கு! அவர்கள் அதற்காக தம் உயிரை துறக்க எந்நேரத்திலும் தயாராக இருந்தனர், பல்லாயிரக்கணக்காணோர் மண்ணோடு மண்ணாகினர்!! அந்த மண்ணுக்குள் கலந்தவரின் கற்பனைகளை, தியாகங்கள் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை!

ஆனால் இன்று ... எம் மக்களுக்காக போராட புறப்பட்டவர்களின் அவலங்களை வைத்து, எம் மக்களின் எதிர்காலம்/சுபீட்சமான வாழ்வு/சுதந்திரம் எல்லாம் சிங்களத்தினால் பிளாக் மெயில் செய்யப்படுகின்றது!!! ...

... இதனை நாம் அனுமதிக்க வேண்டுமா? தொடர்ந்து????

என்னைப் பொறுத்தவரை முன்னால் போராளிகள், அவர்கள் குடும்பங்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தவல்ல ... சில காலங்களுக்காவது அவர்களை நாம் மறப்பது ... மறப்பது என்பது, அவர்கள் மக்களுக்காக புறப்பட்டவர்கள், அம்மக்களின் வாழ்வு சுபீட்சமடையும் மட்டுமாவது, அவர்களை வைத்து பிளாக் மெயில் செய்ய அனுமதிக்காமல் விடுவதற்கு, அவர்கள் சார்ந்த நலனை முன்னனிப்படுத்தாமல் விடுவது ...... காலத்தின் தேவை!!!!! ... இது எனது கருத்து!!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி கைதியான சதீஸிற்கான உதவி வேண்டி 04.11.10 அன்று ஒரு பதிவை எழுதியிருந்தேன். யாழ் களத்தில் அப்பதிவு பெரும் விவாதமாக நீண்டது. இவன் ஒரு போராளியே இல்லை வயிற்றுக்காக பிச்சை கேட்கிறான் அவமதிக்கப்படான் கருத்துக்களால்.

அக்கருத்துக்களின் பழைய பதிவின் இணைப்பு இது:-

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77207http://www.yarl.com/forum3/index.php?showtopic=77207

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... முன்னாள் போராளிகள், அவர்கள் குடும்பங்கள் ...

... நிச்சயமாக அவர்கள் இன்று படும் வேதனைகள் சொல்லில் அடங்காதவை, அவற்றை யாரும் மறக்கவில்லை! அவர்கள் மட்டுமல்ல அங்குள்ள பொதுமக்களின் நிலையும் அதனை விட கேவலமானது/வேதனையானது! ஆனால் ...

... இப்போராளிகள் புறப்பட்டது எம் மக்களின் விடிவிற்கு! அவர்கள் அதற்காக தம் உயிரை துறக்க எந்நேரத்திலும் தயாராக இருந்தனர், பல்லாயிரக்கணக்காணோர் மண்ணோடு மண்ணாகினர்!! அந்த மண்ணுக்குள் கலந்தவரின் கற்பனைகளை, தியாகங்கள் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை!

இத்திரியில் நான் கொண்டு வந்துள்ளவன் பற்றி கடந்த வருடம் நீங்கள் எழுதிய கருத்துக்களையும் ஒருதரம் திரும்பிப்பாருங்கள் நெல்லையன். உங்களைச் சீண்டுவதாக எண்ண வேண்டாம். இவன் பற்றி பல்வேறு விமர்சனம் படு மோசமான விமர்சனம் வைத்த பெருமைக்குரியவர்களில் நீங்களும் ஒருவர். வார்த்தைகளை அள்ளியெறிந்து ஒருவனின் தற்கொடையை எத்தனை மோசமாக்கிவிடுகிறது நமது உணர்வுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை முன்னால் போராளிகள், அவர்கள் குடும்பங்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தவல்ல ... சில காலங்களுக்காவது அவர்களை நாம் மறப்பது ... மறப்பது என்பது, அவர்கள் மக்களுக்காக புறப்பட்டவர்கள், அம்மக்களின் வாழ்வு சுபீட்சமடையும் மட்டுமாவது, அவர்களை வைத்து பிளாக் மெயில் செய்ய அனுமதிக்காமல் விடுவதற்கு, அவர்கள் சார்ந்த நலனை முன்னனிப்படுத்தாமல் விடுவது ...... காலத்தின் தேவை!!!!! ... இது எனது கருத்து!!!

மக்களின் சுபீட்சம் எப்போது கிடைக்கும் ? எந்த மாதம் ஆண்டு என்பதைச் சொன்னால் அதுவரை இவர்களை முன்னிலைப்படுத்தாமல் விடலாம்.

மன்னித்துக் கொள்ளுங்கள் நெல்லையன் நீங்கள் சொல்கிற சுபீட்சத்தை எதிர்பார்த்திருக்கும் வரை இந்த உயிர்களும் அங்கு மிஞ்சாது எங்கள் நிலமும் மிஞ்சாது. இயன்றவரை இப்போது இத்தகைய உயிர்களைப்பாதுகாத்தலும் நிலங்களை தக்க வைத்தலுமே இப்போரைதய தேவை. உயிர்களும் நிலமும் கையில் இருந்தால் தான் நாங்கள் விரும்புகிற சுபீட்சத்தையும் விடுதலையையும் அடையலாம்.

இப்போது வன்னி யாழ் நிலங்களில் வணிகத்தை சிங்களவர்களே கைப்பற்றிவிட்டார்கள். முறிகண்டியிலிருந்து நல்லூர்வரை அவர்களே ஆட்சி செய்கிறார்கள். நிலமையைப்புரிந்து சிலவற்றைச் செய்வதே புத்திசாலித்தனம் என்பது எனது கருத்து. இது எனது கருத்து மட்டுமே.

மற்றும் நாட்டுக்காகத் தங்களை இழந்தவர்கள் எவரிடமும் இப்போது தேசியப்பற்றுக்கு முக்கியத்துவம் இல்லை. உயிர்வாழ தங்கள் உறவுகளுடன் வாழத்தான் விரும்புகிறார்கள். இது யதார்த்தம் இதனை நாங்கள் ஏனோ புரிந்து கொள்கிறோமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.