Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூத்துக்குடி -- கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்

Featured Replies

வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை, இன்று மாலை மத்திய அமைச்சர் வாசன் ஆரம்பித்து வைக்கிறார். இதற்கான கட்டண விபர ங்கள், விதி முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.“பிளமிங்கோ லைனர்ஸ்' என்ற தனியார் நிறுவனம் சார்பில், ஸ்காட்டியா பிரின்ஸ் பயணிகள் கப்பல் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கும், புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கும் இயக்கப்படவுள்ளது. இருவழித் தடத்திலும், மாலை 6 மணிக்கு புறப்படும் இக்கப்பல், மறுநாள் காலை 8 மணிக்கு (14 மணிநேரம்) மறு முனையை சென்றடையும். ஆரம்பத்தில், வாரம் இருநாட்கள் இயக்கப்படவுள்ள இச்சேவை, பின் வாரம் முன்று முறையாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஒன்பது அடுக்குகளைக் கொண்ட இந்த, குளிரூட்டப்பட்ட கப்பலில், 1,044 பயணிகளும், 200 ஊழியர்களும் பயணம் செய்யலாம். மேலும் ஒன்பது மாலுமிகளைக் கொண்ட இக்கப்பல், மணிக்கு 13 தல் 18 கடல் மைல் வேகத்தில் செல்லும். 111 எக்கனாமி வகை அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 2 சிறப்பு வசதி அறைகள், 22 டீலக்ஸ் அறைகள், 169 சூப்பர் டீலக்ஸ் அறைகள், 11 முதலாம் வகுப்பு அறைகள், 2 சூட் அறைகள் என மொத்தம் 317 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் 250 பேர் அமர்ந்து உணவு உண்ணக்கூடிய ஹோட்டல், கூட்ட மண்டபம், மருத்துவமனை, நடன அரங்கம், மதுபான சாலை ஆகியவை உள்ளன.

இது தவிர, அக்கப்பலில் 300 தொன் சரக்குகளையும் கொண்டு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. கட்டண விவரம் வெளியீடு: இந்நிலையில் இக்கப்பலில் செல்ல அறவிடும் கட்டணம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி இங்கிருந்து கொழும்பு செல்ல, குறைந்தபட்ச கட்டணம், 2,990 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 19,550 ரூபாய். கொழும்பில் இருந்து தூத்துக் குடி வர குறைந்தபட்ச கட்ட ணம், 3,128 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 20,470 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப விழா சிறப்பு கட்டணம், 2,243 ரூபாய். கப்பலுக்குச் சென்றவுடன் தரப்படும் குளிர்பானம் மற்றும் வரையறுக்கப் பட்ட இரவு உணவு விலை ஆகியவையும் பயணக் கட்டணத்தில் அடங்கும். இது தவிர, கப்பலிலுள்ள சிற்றுண்டிச்சாலையிலும் பணம் கொடுத்து தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை வாங்கலாம். இதில், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு, கட்டணச் சலுகையும் உண்டு. இதற்கான டிக்கெட் விற்பனை உமத்தை, தூத்துக்குடி மூன்று தனியார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர். டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.

பயணிகளுக்கான விதிறைகள்: கப்பலில் பயணம் செய்பவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே வரவேண்டும். பயணப்பை, மடி கணினி பை உள்ளிட்ட ஏதாவது இருபொருட்களை தங்களது அறைக்கு எடுத்துச் செல்லலாம். இதுதவிர, எக்கனாமி வகுப்பு பயணிகள், 100 கிலோ எடை வரையும், முதல் வகுப்பு பயணிகள், 200 கிலோ எடை வரையும் பொதிகளை கொண்டு செல்லலாம். வெளியில் வாங்கப்பட்ட மதுபானங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

கடவுச்சீட்டு அவசியம்: இக்கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக கடவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும். இலங்கை சென்றவுடன், அவர்களுக்கு அந்நாட்டு அரசு சார்பில், சுற்றுலா விசா வழங்கப்படும். 30 நாட்கள் வரை இது செல்லுபடி ஆகும். அதற்குள், அவர்கள் கொழும்பிலிருந்து தூத்துக்குடி வரவேண்டும்.

இன்று ஆரம்ப விழா: இக்கப்பல் சேவை ஆரம்பவிழா, இன்று மாலை தூத்துக்குடி வ.உ.சி. துறைகத்தில் நடக்கிறது. மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன், கொடியசைத்து, கப்பலை இயக்கி வைக்கிறார். இச்சேவை மூலம் இந்தியா இலங்கை நாடுகளிடையே கலாசாரம், பண்பாடு, சுற்றுலா, வணிகம் மேம்படும்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

இச்சேவை மூலம் இந்தியா இலங்கை நாடுகளிடையே கலாசாரம், பண்பாடு, சுற்றுலா, வணிகம் மேம்படும்.

அத்துடன் இந்திய மேலாதிக்கமும் மேன்படும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறோம்

அத்துடன் இந்திய மேலாதிக்கமும் மேன்படும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறோம்

தீர்வு வரும் வரை தமிழகம் இதை நிறுத்த வேண்டும்.

ஏமாற்று வேலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.