Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடுமையான முறையில் தாக்கப்பட்டனர்.- 14.06.2011

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடுமையான முறையில் தாக்கப்பட்டனர்.

Friday, June 17, 2011, 21:28

சிறீலங்கா

கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14.06.2011 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளினால் கடுமையான முறையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது

கடந்த வாரம் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இரு சிங்களக் கைதிகளின் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விசாரிப்பதற்காக 14.06.2011 ம் திகதி அன்று சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே தரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 8 பேரும் கடுமையான முறையில் தாக்கப்பட்டு அங்குள்ள சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழப்பத்தில் ஈடுபட்ட சிங்களக் கைதிகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்கியதாகவும் அதன்போது “குட்டிமணி தங்கத்துரை போன்றோருக்கு நடந்த கதிதான் உங்களுக்கும் நடக்கம்” என அந்த சிறைச்சாலை அதிகாரிகள் சொல்லிக்கொண்டு தங்களைக் கடுமையான முறையில் தாக்கியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்குள்ளான கைதிகளின் பெயர் விபரங்கள் வருமாறு

ராமையா ரூபச்சந்திரன் (38 வயது) – வளேகல்ல கண்டி – கைதுசெய்யப்பட்ட திகதி : 13.05.2008 – 3 பிள்ளைகளின் தந்தை

வீரசாமி சிவசுப்ரமணியம் (35 வயது) – ரத்வத்தை மாத்தளை – கைதுசெய்யப்பட்ட திகதி : 10.08.2008 – 2 பிள்ளைகளின் தந்தை

கணேசன் புஸ்பராஜ் (29 வயது) – விந்துள கற்றன் – கைதுசெய்யப்பட்ட திகதி : 21.09.2008 – 1 குழந்தையின் தந்தை.

ராமையா தேவராசா (34 வயது) புதுக்குடியிருப்பு உடையார்கட்டு – கைதுசெய்யப்பட்ட திகதி : 01.06.2009

ஆர்.சண்முகராஜ் – விருசுவில் தெற்கு விருசுவில் – கைதுசெய்யப்பட்ட திகதி : 13.05.2008

விசுவநாதன் ரமேஸ்குமார் – ரத்வத்தை கீழ்பிரிவு உக்குவெல – கைதுசெய்யப்பட்ட திகதி : 09.08.2008 – 1 குழந்தையின் தந்தை

வேலு யோகராசா (24 வயது) – மாறுகோள உக்குவெல – கைதுசெய்யப்பட்ட திகதி : 09.08.2008

பெர்னாண்டோ (25 வயது) – தலவாகொய்ய உக்குவெல கைதுசெய்யப்பட்ட திகதி : 16.08.2008

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இது விடயமாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த தாக்குதலானது இங்கு நடைபெறுகின்ற இராணுவ ஆட்சியின் உச்சக்கட்டம் எனவும் தமிழர்களுக்கு இலங்கையில் எங்குமே பாதுகாப்பில்லை என்பதனை இந்த தாக்குதலானது தெளிவாக வெளிப்படுத்துவதாகவும் சட்டத்தையும்’ ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டியவர்களே இன துவேசத்தை விதைக்கிறார்கள் எனவும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilthai.com/?p=19539

Edited by கறுப்பி

நீங்கள் உடம்பால் தாங்கிக் கொண்டது உலகெல்லாம் பரந்து எங்கள் உள்ளம் வரைக்கும் வந்தது உறவுகளே.

தெய்வம் நின்றறுக்கும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்ககள் உடம்பால் தாங்கிக் கொண்டது உலகெல்லாம் பரந்து எங்கள் உள்ளம் வரைக்கும் வந்தது உறவுகளே.

தெய்வம் நின்றறுக்கும்.

இப்போ... தெய்வத்தையும் நப்பிப் பிரயோசனமில்லை.

அரசன் மாதிரி... அன்றறுத்தால் தான்... சிங்களவன் திருந்துவான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டிமணிக்கு நடந்தது தான் உங்களுக்கும் – சிறையில் தாக்குதல்

Sunday, June 19, 2011, 15:07

சிறீலங்கா

சிறீலங்காவின் போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறீலங்கா சிறை அதிகாரிகள் மேற்கொண்ட தாக்குதல்களால் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 14 ஆம் நாள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ரமேஸ் றூபச்சந்திரன் (38), வீரசாமி சிவசுப்பிரமணியம் (35), கணேசன் புஸ்பராஜா (20), இராமையா தேவராஜா (34), ஆர் சண்முகராஜா, விஸ்வநாதன் ரமேஸ்குமார், வேலு ஜோகராஜா, பெர்ணான்டோ ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி அரியனேந்திரன் சிறீலங்கா அரச தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு குட்டிமணிக்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கும் என தெரிவித்தவாறே சிங்கள சிறை அதிகாரிகள் தமிழ் கைதிகளை தாக்கியதாகவும், காயமடைந்தவர்கள் வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் சிறீலங்கா படையினரும், சிறை அதிகாரிகளும் இணைந்து வெலிக்கடை சிறையில் இருந்த தமிழ் கைதிகளை கோரமாக படுகொலை செய்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட 47 இற்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தியாவில் தங்கியிருந்த குட்டிமணி மற்றும் ஜெகன் ஆகியோரை தி.மு.க தலைவர் கருணாநிதியே சிறீலங்காவிடம் ஒப்படைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.tamilthai.com/?p=19639

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.