Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சனல்-4 : அரசாங்கம் சாதகமான கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறது

Featured Replies

ச்சனல்-4 தொலைக்காட்சி காணொளி தொடர்பாக அரசாங்கம் சாதகமான கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறது

ச்சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இலங்கையின் போர்க்குற்ற காணொளிக்காட்சி ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியுள்ளது.

இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல இது குறித்த கருத்தை வெளிப்படுத்தினார்.

செனல் 4 காணொளி ஆவணத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தொடர்பில் விசாரணை நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். ஆயுதங்கள் அற்ற நிலையில் சரணடைந்த மூன்று விடுதலைப்புலிகளை சுட்;டுக்கொல்லும் காட்சியே அதுவாகும் குறித்த சம்பவம் நடைபெற்ற இடம் தொடர்பான தகவல்களை வழங்கினால் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று உபய மெதவெல தெரிவித்தார்.

இந்த காட்சி குறித்து தொழில்நுட்ப ரீதியில் பரிசோதனைகளை நடத்த தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரைக்காலமும் செனல் 4 போர்க்குற்ற காட்சிகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வந்தது அத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, செனல் 4 தொலைக்காட்சி காணொளி, தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக தயாரிக்கப்பட்டது என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை பயங்கரவாத முறியடிப்பு தொடர்பில் கொழும்பில் இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற மாநாட்டின் பின்னர் கருத்துரைத்த இலங்கையின் இராணுவ தளபதி, ஜகத் ஜெயசூரிய, குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் போர்க்குற்ற விசாரணைகளை நடத்த தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8253

  • தொடங்கியவர்

Lanka seeks dialogue with UN rapporteur on Channel 4 allegations

The offer to engage with Rapporteur Christof Heyns was made when Minister Mahinda Samarasinghe, who led Sri Lanka’s delegation to the UN Human Rights Council sessions in Geneva, tabled the Government’s response to the Channel 4 video at the sessions last week. The 17th sessions concluded last Friday and the next is in September this year.

http://www.sundaytimes.lk/110619/News/nws_02.html

எந்தப் பகுதி என்று தெரிந்தால் - அந்தப் பகுதியில் இருந்து யார் இதை வெளியிட்டிருப்பார்கள் என்று கண்டுபிடிக்கலாம் என்ற நப்பாசை - சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4ற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கிறதாம் அரசு!

Published on June 19, 2011 No Comments

சனல்4” யுத்தக் குற்ற ஆவணப்படம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பாக அங்குள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த வியாழக்கிழமை(16) நீதிபதிகளுடனும், சட்டத்தரணிகளுடனும் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பான கலந்துரையாடல்களும், ஏனைய நடவடிக்கைகளும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில். கண்டி மாவட்டத்தின் பல நீதிமன்ற எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படவிருப்பதால் அது தொடர்பில் நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் அவ்வப்பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளினதும் அபிப்பிராயங்களை அறிந்துகொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான விளக்கங்களை அளிப்பதற்காகவும் இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்டி மாவட்ட நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யும்பொழுது அவற்றின் சில எல்லைகள் நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களின் எல்லைப்புறங்களோடு சம்பந்தப்பட்டிருப்பதால் எவ்வாறான உசிதமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதைப் பொறுத்தமட்டில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சில நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளை தொலைவில் உள்ள வேறு நீதிமன்றங்களின் கீழ் கொண்டு வருவதன் காரணமாக சட்டப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக நீதிமன்றங்களை நாடும்பொது மக்கள் போக்குவரத்து, பணச் செலவு போன்ற பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக நேரிடுவதாக அமைச்சரிடம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

நீதியை நிலைநாட்டுவதில் எவருக்கும் எந்தவிதமான அநீதியும் இழைக்கப்பட இடமளிக்காத வகையில் நேர்மையாக சகல அம்சங்களும் ஆராயப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் உயர் அதிகாரிகளைப் பணித்துள்ளதாக ஹக்கீம் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=23030

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.