Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பினை தனது படையே தாக்கியது என கோத்தா ஒத்துக்கொண்டார்.

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அளவெட்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினரே என்பதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உறுதிப்படுத்தி உள்ளார்.

.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அதிகாரி ஒருவரின் தலைமையில் படையினர் குழுவொன்று சமூக மண்டபத்துக்குச் சென்ற போது அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிலருக்கும் படையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த (நாடாளு மன்ற உறுப்பினர்களின் மெய்க் காவலர்கள்) ஒருவருக்கே அடி விழுந்தது. நாடாளுமன்ற உறுப்பினரையோ கூட்டத்தில் பங்கேற்றவர்களையோ அவர்கள் தாக்கவில்லை. வாகனங்கள் சேதமாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை'' என்றும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

My link

அளவெட்டியில் நடந்த தாக்குதல் அமெரிக்காவில் விசாரணை நடக்கிறது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது படையினர் தாக்குதல் தொடர்பில் இலங்கை தூதுவரிடம் அமெரிக்கா விசாரித்துள்ளது. அளவெட்டியில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அமெரிக்கா உடனடியாகவே விசாரித்துள்ளதென்பது சாதாரண விடயமன்று.

வன்னியில் பெரும் போரின்போது அதீத ஈடுபாட்டை காட்டாத அமெரிக்கா இப்போது இலங்கை அரசின் செயற்பாடுகளில் மிகவும் தெளிவாக இருக்கிறதென்பதை உணர்ந்து கொள்ள முடியும். வன்னியுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படும்வரை, தமிழ் மக்களின் பாதுகாப்பு கவசம் விடுதலைப் புலிகளே என்ற நிலைமை இருந்ததை எவரும் நிராகரிக்க முடியாது.

ஏன்னெனில் விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பின்பு எமக்கான உண்மையான பாதுகாப்பு வெறுமையென்ற நினைப்பே தமிழ் மக்களிடம் காணப்பட்டது.

இருந்தும் இந்நிலைமை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்குள் ஈழத்தமிழ் மக்களின் வலுவான பாதுகாப்பு கவசம் உருவாகியுள்ளது. இந்த பாதுகாப்பு கவசத்தின் கருப்பை வன்னிப் பெருநிலப்பரப்பென்பதும், அக்கவசம் தமிழ் மக்களின் பிரிந்த உயிர்களில் இருந்த கருக்கட்டப்பட்டதென்பதும் உணர்தற்குரியது. அந்தக் கவசமே இலங்கையின் கொலைக்களம் என்ற சனல் 4 பிரசவித்த ஆவணப்படமாகும்.

ஆம், சனல் 4 வெளியிட்ட அந்த ஆவணப்படமே இன்று ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு கவசமாகும்.

குந்திதேவி தன் குழந்தை கர்ணனுக்கு அணிவித்த பாதுகாப்பு கவசம் போல சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு கவசம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த கவசமே அளவெட்டியில் நடந்த தாக்குதல் சம்பவத்தை அமெரிக்காவில் விசாரிக்க வைத்தது.

விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை இல்லாதொழிப்பதற்கான ஆயுதங்களை-ஆலோசனைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வழங்கியிருக்கலாம்.

சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தை-அதன் நிஜத்தை அழிப்பதற்கு யாராலுமே முடியாது.

சுருங்கக் கூறின் சூரிய சந்திரர் இருக்கும் வரை இந்த ஆவணப்படம் ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக இருக்கும். இந்த உண்மையை கூறும் அதேவேளை அளவெட்டிச்சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக யாழ்.கூட்டணி தளபதியைத் சந்தித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பின் போது அளவுகடந்து சிரித்து மகிழ்வதை இராணுவத்தினால் அனுப்பிவைத்த புகைப்படங்களில் பார்த்தபோது, எங்கள் வெகுளித்தனங்களை என்னதான் செய்யமுடியும் என்று மனம் நொந்து கொள்கிறது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20407

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.