Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு எதிரான இரகசிய இராணுவம் தொடர்பில் வாசுதேவ என்ன செய்ய போகின்றார்?

Featured Replies

இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழுவினரே கூட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இக்குழு தொடர்பில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற முறையில் வாசுதேவ நாணயக்கார என்ன செய்யபோகின்றார் என்பதை தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ் மாவட்ட தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்படவே இல்லை என்று முதலில் சொன்னார்கள். பின்னர் இந்த சிறுசம்பவத்தை பயன்படுத்தி, நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றார்கள் என்று கூட்டமைப்பினர் மீதே குற்றம் சொன்னார்கள்.

பின்னர் இது அமைச்சரவை பாதுகாப்பு பிரிவிற்கும், இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற அடிதடி என்று சொன்னார்கள். தற்சமயம் அமைச்சர் வாசுதேவ இது இராணுவத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழுவின் வேலையென கண்டுபிடித்து சொல்கிறார். அத்துடன் புலிகளின் தலைவர் பிராபகரனின் தயாரின் தகனகிரியைகள் நடைபெற்ற இடத்தில் நாய்களை சுட்டு வீசியவர்களும் இவர்களே என்றும் கூறியுள்ளார். இவை இலங்கை இராணுவத்திற்கு எதிரான மிகவும் பாரதூரமான தகவல்களாகும்.

இந்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்கு அப்பால் சென்று அமைச்சர் இந்த இரகசிய குழு தொடர்பில் என்ன செய்யப்போகின்றார் என்பதை தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றார்கள். தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறை செலுத்திவரும் சர்வதேச சமூகமும் நிச்சயமாக இதுதொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விரும்புகின்றதாக எனக்கு தெரியவந்துள்ளது.

தற்போதைய தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஒரு காலத்தில் தமிழ் மக்களுக்காக பெருங்குரலில் பேசிவந்தவராகும். அவரது கூற்றுப்படி இராணுவத்தின் இந்த இரகசிய குழுவின் இத்தகைய செயற்பாடுகள் இன நல்லுறவிற்கு ஊறுவிளைவிப்பவையாகும். இதை அவரே ஊடகங்களில் கூறுகின்றார்.

இவ்விவகாரம் தொடர்பிலான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் செயற்பாடு, ஊடக அறிக்கைகளுக்கு அப்பால் செல்லவேண்டும் என்பது அவரது நீண்டகால நண்பர் என்ற முறையில் எனது வேண்டுகோளாகும்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தமிழ்நாட்டில்..

ஆதி திராவிடர் நலத்துறை க்கு தனியே அம்மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் பரமாரிப்பு பொறுப்பாளர்கள் நியமனம், ஸ்காரலர் சிப்பு வழங்குதலுக்கு தகுந்த மாணவர்களை தேர்வு செய்தல்.அரசு பாடத்திட்டம் போக இலவச கையேடுகள் அதாவது தமிழ் கோனார் நோட்சு போல.. விநியோக்த்தல்..

பிற்பட்டோர் நலத்துறைக்கும் அதுவே..

போக சமூக நலத்துறைக்கு.. அங்கன்வாடி 3 முதல் 1 வகுப்பு வரை மதிய உணவு முட்டை காய்கறி வழங்குதல் நிர்வாகம் .. அந்த அதற்குரிய பயனாள்ர்களை கண்டறிந்து சேர்த்தல் முதியோர் கல்வி,முதியோருக்கு இலவச மாத ஊதியம் ... தலித் பெண்களுக்கு உரிய திருமண உதவி தொகை போலியோ சொட்டுமருந்து..கிராமங்களில் குறைந்தபட்ச மருத்துவ சேவையை உறுதி செய்தல்(பாம்புகடி தேள்கடி..)...

தற்போதைய தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

போகட்டும் .. இந்த மாதிரி ஒரு வெளகெண்ணய் போஸ்டிங்க இப்பத்தான் கேள்விபடுறேன்.. இவரின் கட்டுபாட்டில் இருப்பவை எவை என்று தோழர்கள்தான் தெளிவு படுத்தவேண்டும் .. ஒருவேளை இது புளுகும் துறையா? :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.