Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் விடயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா முயற்சிப்பார். - அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களின் அவைத் தலைவர் திரு.மைத்திரேயன்

Featured Replies

இலங்கை தொடர்பான இந்தியக் கொள்கையில் பாரிய மாற்றத்தை பார்க்கும் உறுதியான தீர்மானத்தில் ஜெயலலிதா?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆக்ரோஷமான எதிர்ப்பானது இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையுடன் கொண்டிருக்கும் சிறப்பான அயலுறவுக்கு அச்சுறுத்தலை விடுப்பதாக அமைந்திருப்பதாக ஓபன் (Oணீஞுண) சஞ்சிகையில் வினோஜ்குமார் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார்.

வெளிநாட்டுக்கொள்கை தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் கடுமையான நிலைப்பாடானது உபகண்டத்தில் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் தொலைதூர விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றது என்பதை கவனத்திற்கு எடுக்க ஊடகங்களில் பெரும்பான்மையானவை தவறிவிட்டன. புலிகளுடனான தனது யுத்தத்தில் ராஜபக்ஷ வெற்றிபெறுவதற்கு இந்தியா உதவியிருந்தது. இப்போது போர்க் குற்றங்களுக்காக ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க ஜெயலலிதா விரும்புகிறார்.

கடந்த மாதம் முதலமைச்சராக மூன்றாவது தடவையாகப் பதவியேற்றுள்ள ஜெயலலிதா, மே 13 இல் ராஜபக்ஷவுக்கு எதிராக முதலில் கருத்துத் தெரிவித்திருந்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து முதற்தடவையாக கருத்துத் தெரிவிக்கையில்; இலங்கை ஜனாதிபதி மீது போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்ய வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த வேண்டுமென்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்தக் கருத்துகளுடன் அவர் நிறுத்தியிருக்கவில்லை. இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமென்றும் புதுடில்லியை வலியுறுத்தியிருந்தார். தமிழர்களுக்கு சமவுரிமையை வழங்க இலங்கை தவறிவிட்டதாகவும் அவர் சாடியிருந்தார். இந்த விடயமானது இலங்கை தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை அடியொற்றி சென்னையிலுள்ள ஆட்சியாக இருக்கப்போவதில்லையென்று விழித்தெழுவதற்கான அழைப்பை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசுக்கு விடுப்பதாக அமைகிறது.

அவ்வப்போது சிறியளவிலான எதிர்ப்புகளையே கடந்த கால தி.மு.க. நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இந்திய மத்திய அரசாங்கத்தின் ராஜபக்ஷ சார்பான கொள்கையை மீளாய்வு செய்யுமாறு உண்மையான அழுத்தத்தை ஒருபோதும் தி.மு.க. அரசு மத்திய அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கவில்லை. ஆனால், இலங்கை தொடர்பான இந்திய அரசாங்கத்தின் கொள்கையில் பாரிய மாற்றத்தை பார்ப்பதற்கு ஜெயலலிதா உறுதியான தீர்மானத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது.

அவருடைய செயற்பாடுகள் இதனை நிரூபிக்கின்றன. அவர் வெறுமனே பேசுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் செயற்பட்டுக்கொண்டும் இருக்கின்றார். கடந்த வாரம் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். யுத்தத்தில் இடம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது முகாம்களில் உள்ளனர். அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும்வரை இலங்கைக்கு எதிராக தடைகளை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அவர் மேற்கொண்டுள்ளார். அத்துடன், தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை போர்க் குற்றவாளிகளெனப் பிரகடனப்படுத்த வேண்டுமென ஐ.நா. வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சிங்கள மக்களின் உரிமைகளுக்கு சமனான உரிமையை இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் தவறியுள்ள அதேசமயம், உண்மைகளை குறிப்பிடுவதில் தமிழக சட்டசபையின் தீர்மானம் தவிர்த்துக்கொள்ளவில்லை. இரண்டாந்தரப் பிரஜைகளாக இலங்கையிலுள்ள தமிழர்கள் நடத்தப்படுவதாகவும் சமவுரிமைகளுக்கான அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனவும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக அண்மையில் வெளியான ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை தெரிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக இந்திய அரசாங்கம் மௌனமாகவிருப்பதற்கு முரண்பாடாக தமிழக சட்டசபையின் தீர்மானம் அமைந்துள்ளது. இலங்கை இராணுவம் மோதல் சூனிய வலயப்பகுதி மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆஸ்பத்திரிகள் மீது குண்டுவீச்சை மேற்கொண்டதாகவும் மனிதாபிமான உதவிகள் மக்களைச் சென்றடைவதை அரசாங்கம் தடுத்ததாகவும் உணவு,குடிநீர் பற்றாக்குறையால் பெருந்தொகையான தமிழர்கள் இறந்ததாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மறுநாள் கச்சதீவு தொடர்பான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியது. தமிழக வருவாய்த்துறையை கச்சதீவு வழக்கில் இணைத்துக்கொள்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு கச்சதீவை வழங்கியமை அரசியலமைப்புக்கு முரண்பட்டதென ஜெயலலிதா கூறியுள்ளார். பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படாமல் இரு நாடுகளுக்குமிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய ஆட்புல எல்லையை மற்றொரு நாட்டுக்கு வழங்குவதற்கு பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டுமென்று 1960 இல் இந்திய உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. கச்சதீவு விவகாரத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இலங்கைக்கு அதனை கையளிப்பதை நிறுத்துவதற்கு கருணாநிதி எதனையும் செய்திருக்கவில்லையென ஜெயலலிதா கூறிவருகிறார்.

பாக்கு நீரிணையில் சிறிய தீவாக கச்சதீவு இருக்கின்றபோதிலும் அது இராணுவ கேந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. இந்தியா அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமானால் பல மைல் தூரத்துக்கு நாட்டின் கடல்எல்லையை விரிவுபடுத்துவதாக அமையும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களும் புதுடில்லியை துரிதமாகச் செயற்பட வைத்தன. பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் விசேட விமானத்தில் சென்னைக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சென்றிருந்தார். அங்கு ஜெயலலிதாவை சந்தித்தார். கொழும்புக்கு சிவ்சங்கர் மேனன் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள், இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வு போன்ற விடயங்களை மேனனுடன் ஜெயலலிதா ஆராய்ந்திருந்தார். இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்கு சமனான உரிமையை தமிழர்களுக்கும் வழங்க வேண்டுமென்ற தனது கோரிக்கையை அவர் மீள வலியுறுத்தியிருந்தார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக கொழும்பு முன்னெச்சரிக்கையுடன் பிரதிபலிப்புகளை வெளியிட்டது. இந்திய அரசாங்கத்துடன் மட்டுமே கொழும்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் மாநிலங்களுடன் அல்ல எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, இலங்கையின் நிலைப்பாடு குறித்துத் தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவுடன் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான கொழும்பின் முயற்சிகள் தோல்வி கண்டிருந்தன. அண்மையில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொறகொட ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ஹைதராபாத்தில் சந்தித்திருந்தார். ஜெயலலிதாவுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதற்காக அவரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இச்சந்திப்பு இடம்பெற்றது. ஒத்துழைப்பதாக தனது உறுதிமொழியை நாயுடு வழங்கியிருந்தபோதிலும் தமிழ்நாட்டில் விடயங்கள் வேறு கட்டத்துக்குச் சென்றிருந்தன.

இலங்கை தொடர்பான ஜெயலலிதாவின் நிலைப்பாட்டால் அவர் புதிய நண்பர்களை வெற்றிகொண்டிருக்கிறார். தமது ஆதரவாளராக கருணாநிதியை முன்னர் கருதியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த் தேசியவாதக் குழுக்களும் தமது ஆதரவை ஜெயலலிதாவுக்கு வெளிப்படுத்தியுள்ளன.

மாநிலத்தில் தமிழ்க் குழுக்களின் ஆதரவானது ஜெயலலிதாவின் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்யும் வரவேற்புக்குரிய விடயமாகக் காணப்படுகிறது. சிறிது காலத்துக்கு முன்னர் அவர் தமிழர்களுக்கு எதிரானவராகப் பார்க்கப்பட்டார். புலிகளுக்கு எதிரான அவரின் நிலைப்பாடும் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்கு எதிரான அவரின் நிலைப்பாடும் தமிழ்த் தேசியவாதக் குழுக்களை தி.மு.க. சார்பு அணிக்கே ஆதரவானதாக சமீபகாலம் வரை கொண்டிருந்தன. தனது இரண்டாவது பதவிக் காலத்தில் (20012006) தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனையும் ம.தி.மு.க. செயலாளர் வைகோவையும் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டுகளில் ஜெயலலிதா தடுத்துவைத்திருந்தார்.

எவ்வாறாயினும் புலிகளுக்கு எதிரான தனது முன்னைய நிலைப்பாட்டுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குச் சார்பான தனது தற்போதைய நிலைப்பாட்டுக்குமிடையில் தெளிவான வேறுபாட்டை அவர் கொண்டிருக்கின்றார். 1992 இல் புலிகளை மத்திய அரசு தடை செய்வதற்கு தானே பொறுப்பென இப்போதும் பெருமையாக அவர் உரிமை கோருகிறார். அத்துடன், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடு கடத்துவதற்குக் கோரும் தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியதையும் அவர் நினைவுகூருகிறார்.

இலங்கையின் இன நெருக்கடிக்கு அவர்களுக்கு தனிநாடு மட்டுமே தீர்வாக அமையுமென 2009 பாராளுமன்றத் தேர்தலின்போது அவர் தெரிவித்திருந்தார். அந்தத் தருணத்தில் தனது நிலைப்பாடு தொடர்பாக அவர் சிலசமயம் முழுமையான நம்பிக்கையைக் கொண்டிராதவராக இருந்திருக்க முடியும். ஆனால், இப்போது அவர் தனது வேலையைச் செய்திருக்கிறார். ஐ.நா. அறிக்கை அவருக்கு உதவியிருக்கிறது. ஏதோவொரு விடயத்தை அவர் எப்போது எடுத்துக்கொள்ளப்போகிறார் என்பதே அவர் பற்றிய நல்ல விடயமாகும் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் திணைக்களத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறியுள்ளார்.

ஆனால், ஈழப் பிரச்சினை தொடர்பாக எடுத்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் நிகழ்ச்சிநிரல் தொடர்பாக ஊகங்கள் காணப்படுகின்றன. வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று நீங்கள் ஏன் நம்பவில்லை? இதிலுள்ள நோக்கம் என்ன? என்று சென்னையைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் பணியாளரும் இலங்கைத் தமிழர்களின் தீவிர ஆதரவாளருமான அக்கினி சுப்பிரமணியம் கேள்வியெழுப்புகிறார்.

அரசியல் ரீதியான தன்மையிலும் பார்க்க இந்த விடயமானது எதிர்ப்பு உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தந்திரோபாயமாக இருக்கக்கூடும் என்று பேராசிரியர் மணிவண்ணன் கூறுகிறார். தமிழ்நாட்டிலுள்ள சீமானின் கட்சி போன்ற தமிழ்க் கட்சிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு ஜெயலலிதா தானே அந்த நடவடிக்கைகளில் மும்முரமாக நின்று ஈடுபட விரும்பக்கூடுமென்று அவர் கருதுகிறார்.

தி.மு.க. வின் ஆதரவுத் தளத்தை தகர்ப்பதற்கான தாக்குதலாக ஈழச்சார்பு நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்திருக்கக்கூடுமென பலர் நம்புகின்றனர். தமிழர்களின் உண்மையான பிரதிநிதியாக தி.மு.க. இருப்பதாக நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால், இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்க தி.மு.க. தவறிவிட்டபோது அந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இலங்கை யுத்தமானது அப்பாவித் தமிழ் உயிர்களை ஆயிரக்கணக்கில் பலிகொண்டுள்ளது. தமிழர்களுக்கு ஆதரவளிக்க ஜெயலலிதா விரும்புகிறாரென்றால் நாங்கள் ஏன் அவருக்கு ஆதரவளிக்கக்கூடாது என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

http://www.thinakkural.com/news/all-news/india/6204-jayalalatha.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.