Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த அரசின் உயர்மட்டக் குழுவுக்கு வட அயர்லாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வ வரவேற்பு!

Featured Replies

நாடுகடந்த அரசின் உயர்மட்டக் குழுவுக்கு வட அயர்லாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வ வரவேற்பு!

வட அயர்லாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர், வட அயர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.

நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவகாரத்துறை அமைச்சர் டிலக்சன் மொறிஸ் ஆகியோர் தலைமையில் சென்றடைந்துள்ள நா.த.அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினரை, அரச மரியாதையுடன் வட அயர்லாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளதாக நாதம் ஊடகசேவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

நேற்று செவ்வாய்கிழமை (யூன்21) வட அயர்லாந்து துணை முதலமைச்சர் Martin Mcguinness தலைமையிலான குழுவினருக்கும், நா.த.அரசாங்க குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. பாராளுமன்ற - துணை முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு, சுமார் 2மணி நேரம்வரை நீடித்தது.

தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற இனப்படுகொலை, இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமை மறுப்பு, ஈழத்தமிழ் அகதிகள் விவகாரம் ஆகிய விடயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் அபிலாசையான தமிழீழக் கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் அதனுடைய சனநாயக நடைமுறைச் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துரைத்த அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், தமிழ் மக்களுடைய சனநாயகவழி போராட்டத்தின் உயர்பீடமாக அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு, வெளிப்படையாகக் கிடைத்து வருகின்ற உலக நாடுகளின் அங்கீகாரமாகவே இதனைக் கருதுவதாக தெரிவித்தார்.

அமைச்சர் டிலக்சன் மொறிஸ் அவர்கள் கருத்துரைக்கையில், தமிழ் மக்களுடைய நிலைப்பாடு - நிலவரம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்ட வட அயலர்லாந்து அரச பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுவது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டதோடு, தமிழ் மக்களுடைய சனநாயக பொறிமுறையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும் வரவேற்றுள்ளனர்.

வட அயர்லாந்து அரச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களுடனான தொடர் சந்திப்புக்களை நா.த.அரசாங்க உயர் மட்டக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={E7DD41D3-F292-4250-A9E1-83F9AD7F3783}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.