Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்

Featured Replies

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்

இலங்கை தமிழர்களில் அரசியல் உரிமை போராட்டத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டு படுகொலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த படுகொலைகள் ஏன் எப்போது இடம்பெற்றன உள்ளிட்ட பல செய்திகள் நமக்கு தெரியாதவை. நான் இவை குறித்த செய்திகளை இணையத்தில் படித்தே அறிந்து கொண்டேன். அவற்றில் ஒரு கட்டுரையை இங்கே இணைக்கின்றேன்.

இந்த சம்பவம் குறித்த தகவல்களை அறிந்த பலர் களத்தில் இருக்க கூடும். அவர்களும் இது குறித்த மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

ஈழத்தமிழர் ஒடுக்குதலுக்குள்ளாகி வருதலை சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு உறுத்திய வரலாற்றுப் பதிவுகள்

"தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்"

சா.ஆ. தருமரத்தினம்

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான `பாரி' நகரில் ( பிரெஞ்சு மொழி உச்சரிப்பே பாரி) நடைபெற்ற மூன்றாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு அதே நகரை தலைமைப் பணியகமாகக் கொண்டியங்கும் யுனெஸ்கோவின் தலைவர் டாக்டர் ஆதிசேஷாவினால் வைபவ முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டமை தெரிந்ததே!

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் வரிசையிலான மேற்படி மூன்றாவது மாநாட்டில் வைத்தே அதன் நான்காம் மாநாட்டை இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்தில் நடாத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அத் தீர்மானத்திற்கு அமைவாக 1974 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 3 ஆம் நாளில் ஆரம்பித்து 9 ஆம் திகதி வரை நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதற்கான எற்பாடுகளை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கான கிளை மேற்கொள்ளமுயன்றபோதே இலங்கைக்கிளையில் பெரும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மேற்படி தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலும், இந்திய மாநிலமான தமிழக சென்னை நகரிலும் நடைபெற்ற முதலிரு மாநாடுகளையும் சம்பந்தப்பட்ட அந்தந்த நாடுகளின் ராஜாங்கத் தலைவர்களே திறந்து வைத்த பாங்கில் இலங்கையில் இடம் பெறவிருந்த நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடும் இத்தீவின் ராஜாங்கத் தலைவரினால் திறந்து வைக்கப்பட வேண்டுமென ஒரு சாரார் வலியுறுத்தினர்.

அதனை மேற்படி கிளையின் இளைய தலைமுறையினராகிய உறுப்பினர்கள் ஏகோபித்து பலமாக ஆட்சேபித்தனர். காரணம், சமீபத்தில்தான் 1972 இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இலங்கை சோசலிச குடியரசுக்கான அரசியல் யாப்பு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக நிராகரித்திருந்தமையால் தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், அதே யாப்பைக் கொண்டு வந்திருந்தவரான பிரதமர் சிறிமாவோவை மாநாட்டிற்கு அழைப்பதன் மூலம் சர்வதேசப் பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் கௌரவிக்கப்படுவது முரண்பாடானதாக அமையும் என்பதனாலேயே.

இளைய தலைமுறை உறுப்பினர்களது பலத்த எதிர்ப்பினை வெற்றி கொள்ள முடியாத நிலையில் முக்கூட்டு அரசின் தலைவியாராகிய சிறிமாவோ அம்மையாரின் ஆதரவாளர்களாகிய முற்போக்காளர் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையில் இருந்து விலகியதுடன் மாநாட்டையும் பகிஷ்கரிக்கத் தீர்மானித்தனர் . மேற்படி இலங்கைக் கிளையின் தலைவர் டாக்டர் எச். டபிள்யூ. தம்பையாவும் தமது தலைமைப் பதவியைத்துறந்தார்.

அந் நிலையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவராகவும்,கட்டடக்கலை விற்பன்னர்களாகிய துரைாஜாவும், கோபாலபிள்ளை மகா தேவாவும் செயலாளர், பொருளாளராகவும் முறையே தெரிவுசெய்யப்பட, மகாநாட்டு ஒழுங்குகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டன.

நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டைத் தலைநகர் கொழும்பில் நடத்துவதாயின் பண்டாரநாயக்கா சர்வதேச மகா நாட்டு மண்டபத்தை இலவசமாக உதவுவதாக முன்னர் அறிவித்திருந்த சிறிமாவே அம்மையாரின் அரசோ, இப்போது மகா நாட்டு ஏற்பாடுகளையே குழப்பும் எத்தனத்தில் இறங்கியது. பொது மக்களால் நிர்மாணிக்கப்பட்டதும் அரசினால் பொறுப் பேற்கப்பட்டதுமான வீரசிங்கம் மண்டபத்தினதும் மற்றும் அரசு ஆதரவாளர் யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா நிர்வாகத்திலிருந்த யாழ். திறந்த வெளியரங்கின் உபயோகமும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு முதலில் மறுக்கப்பட்டது. அரசாங்கப் பாடசாலை மண்டபங்களும் அவ்வாறே மறுக்கப்பட்டன.

எனவே, மாற்று ஒழுங்காக தனியார் மண்டபங்களை மாநாட்டு அமைப்பாளர்கள் எற்பாடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள்

மாநாட்டு இளையர் அணி தீவிர செயற்பாட்டாளராக விளங்கியமையும்,

9 அப்பாவித் தமிழர்களின் படுகொலையை அடுத்து

"சிங்கள"த்திற்கு "பாடம் புகட்ட" பல வழிகளிலும் அயாராது "உழைத்தமையும்"

வரலாற்று பாடங்களாக நினைவிற்கு வருகின்றன...

அத் தியாகி படித்த யாழ் இந்துக் கல்லூரியில் நாமும் படித்தோம் என்பது பெருமை.

1990களின் ஆரம்பத்தில்(1993 {?}) கல்லூரியில் வெளியான

"விழுதுகள்" ( தொகுப்பு- சுதாகரன் {?}) என்ர வரலாற்று ஆவண நூலில் இவரின் குறிப்பு முதலாவதாக இடம் பெற்றது...

¯Ä¸ò ¾Á¢Æ¡Ã¡ðº¢ Á¡¿¡ðÊø ÀΦ¸¡¨Ä ¦ºöÂôÀð¼Å÷¸Ç¢ý ¿¢¨É× Å½ì¸ ¿¢¸ú× Â¡Æ¢ø ¿¨¼¦ÀüÚûÇÐ

¿¡ý¸¡ÅÐ ¾Á¢Æ¡Ã¡ðº¢ Á¡¿¡ðÊý §À¡Ð ÀΦ¸¡¨Ä ¦ºöÂôÀð¼ Áì¸Ç¢ý ¿¢¨É× ¿¡Ç¡É þýÚ «õÁì¸Ç¢ý ¿¢¨ÉÅ¡¸ ÓüȦÅǢ¢ø «¨ÁóÐûÇ ¿¢¨É×ò àÀ¢Â¢ø ¿¢¨É× Å½ì¸ ¿¢¸ú× Áì¸Ç¡ø ¿¼¡ò¾ôÀðÎûÇÐ.

þýÚ ¸¡¨Ä 9.00 Á½¢ìÌ ¿¨¼¦ÀüÈ þ󿢸úÅ¢ø, ÀΦ¸¡¨Ä ¦ºöÂôÀð¼Å÷¸Ç¢ý ¿¢¨É×ò àÀ¢ìÌ ÁÄ÷Žì¸õ ¦ºÖò¾ôÀðÎ À¢ýÉ÷ «¸Å½ì¸Óõ ¿¨¼¦ÀüÈÐ.

þ󿢸ú¨ÅÂÎòÐ «ôÀ̾¢Â¡ø ¦ºýÈ Áì¸Ùõ, ¿¢¨É×ò àÀ¢ìÌ ÓýÉ¡ø ÅóÐ ¾ÁÐ «¸Å½ì¸ò¨¾î ¦ºÖò¾¢ ÅÕ¸¢ýÈÉ.

þáÏÅ ÁüÚõ Á¡üÚì §¾ºÅ¢§Ã¡¾ì ÌõÀø¸Ç¢ý ¬Ô¾ «¼¡ÅÊò¾Éí¸û ¸¡Ã½Á¡¸ þó ¿¢¸ú׸¨Ç ¿¼òОüÌ ¦À¡Ð «¨ÁôÒ츧ǡ «ýÈ¢ ¾Á¢ú «Ãº¢Âø ¸ðº¢¸§Ç¡ Óý Åá¾ ¿¢¨Ä¢ø ¦À¡Ð Áì¸û ¾ÁÐ ¯È׸û ¿ñÀ÷¸¨Ç ¿¢¨ÉòÐ ¾¡í¸Ç¡¸§Å þó ¿¢¨É× Å½ì¸ ¿¢¸ú¨Å ²üÀ¡Î ¦ºö¾¢Õó¾¨Á þíÌ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

சங்கதி

அன்று அப்பாவிகளாக மரணித்த அவ்வுயிர்களுக்கு இதயபுூர்வமான என் அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றேன்.

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் நெஞ்சங்களின் வடுவான தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்

சிங்களப் பேரினவாத சக்திகளின் இனவெறி தமிழ் மக்கள் மீதான குரோதமாக வெளிப்பட்ட குருதிக்கறை படிந்த வரலாற்றுச் சம்பவங்களுள், என்றும் அழிந்து போக முடியாத ஒன்றுதான் 1974ஆம் ஆண்டு தை மாதம் 10 திகதிப் படுகொலைகள். தமிழ் மொழியின் தன்னிகரற்ற தன்மை கண்டு பொருமிப் புகைந்த சிங்கள ஆட்சியாளரின் துவேசம் காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட இக் குரூர நிகழ்வு வீரத்தமிழரின் விடுதலையுணர்வு வெஞ்சினமாக வெளிப்படுவதற்கு வித்திட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று. அமிழ்திலுமினிய தமிழ்தனில் செம்மை காணச் சிறப்புடன் குவிந்த செந்தமிழர்கள் மத்தியில் வெறியின் வடிவமான வன்முறைப் பிரயோகம், ஒன்றல்ல ஒன்பது உயிர்களைக் குடித்து, ஏப்பம் விட்டது. தாய்மொழிப்பற்றில் திரளெனக் குவிந்த ஒரே குற்றம் தாங்கி, குதறப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த உத்தமர்கள் சிலைகளாகக் கூட நிலைத்து விடக்கூடாது என்று சிங்களம் செய்த சிதறடிப்புக்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவை. இன்றுடன் இருபத்தியேழு வருடங்கள் கடந்தாலும் ஈழத்தமிழ் மக்கள் மனங்களில் இரத்தம் கசிகின்ற ரணமாகிப் போய்விட்ட இக்கோரம் ஈழத்தமிழர் விடுதலைப் போரின் ஆழப்பதிந்த அத்திவாரக் கற்களில் ஒன்றாகி நின்று நிலைத்திருப்பது வரலாறு சொல்லும் உண்மை.

பரந்துபட்ட உலகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தம் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத நாட்களில் ஒன்றுதான் 10.01.1974 ஆகும். இந்த நாள் தமிழ் மக்களைவிட்டுக் கடந்து சென்ற 10ஆம் திகதி வியாழக்கிழமையோடு 27 வருடங்களாகின்றன. ஆயினும் அந்த நாளின் கொடிய நினைவானது இன்றும் தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத நெருப்பென எரியும் நினைவாக இருப்பதோடு இன்றைய விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்துவிட்டது.

1974 தை 10ஆம் நாள் அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வு கள் சிறீலங்கா ஆட்சியாளராலும் அதன் காவல்துறையினராலும் நன்கு திட்டமிட்டுக் குழப்பப்பட்டபோது, அப்பாவிப் பொதுமக்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டமையும் தமிழ் மக்களின் மனங்களிலிருந்து நீக்கமுடியாததொரு நிகழ்வாகவே இருக்கின்றது. உலகத் தமிழாராட்சி மன்றமானது 1960களின் நடுப்பகுதியில் அருட் தந்தை தனிநாயகம் அடிகளின் பெருமுயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டு பின் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு முதலாவதாக 1966ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தின் ஆதரவுடன் அதன் தலைநகரான கோலாலம்புூரில் நடாத்தப்பட்டது. அதன்பின் இரண்டாவது மாநாடு இந்திய தமிழக அரசாங்கத்தின் ஆதரவுடன் 1968இல் நடாத்தப்பட்டது. மூன்றாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடானது பிரான்சின் தலைநகரான பாரிசில் பல்வேறு தமிழ் அமைப்புக்களினதும் அந்த நாட்டு அரசாங்கத்தினரதும் ஆதரவோடு 1971ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது.

3வது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு பாரிசில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அடுத்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் அதுவும் தமிழ் மொழிபேசும் மக்கள் பரந்தளவில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாணத்திலேயே நடாத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் அனைத்துலக தமிழாராட்சி மன்றத்தினால் எடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் பொறுப்பையும் மேற்படி மன்றத்தின் இலங்கைக்கான கிளையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கைக்கான கிளை தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை இங்கு செயற்படுத்தமுனைந்தபோது யாழ்ப்பாணத்தில், அன்றைய யாழ். நகர மேயரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமாக இருந்த அல்பிரட் துரையப்பா என்பவரூடாக அது பல எதிர்ப்புக்களையும் இடையுூறுகளையும் எதிர்நோக்கவேண்டியிருந்தது. அத்தோடு அக்காலகட்டத்தில் அதாவது 27 வருடத்திற்கு முன்பு நாட்டு பிரதமர் என்ற hPதியில் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்கவே நடைபெறவிருந்த தமிழாராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கவேண்டும் என தமிழாராய்ச்சி மாநாட்டின் இலங்கைக்கான கிளைக்குள் இருந்த அரச சார்புள்ள சிலர் அழுத்தமாகக் குரல்கொடுத்தனர். அத்தோடு இந்தத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிறீலங்காவின் தலைநகரான கொழும்பிலேயே நடாத்தவேண்டுமென்றும் தீர்மானித்தனர்.

இவர்கள் இப்படித் தீர்மானிப்பதற்கு அன்று பல காரணங்கள் இருந்தன. திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்க தமிழ் மக்கள் மீது இன மொழி hPதியாகப் பாகுபாடுகள் காட்டி வந்ததோடு, பல்கலைக்கழக அனுமதிக்கு தரப்படுத்தல் போன்ற விடயங்களை மேற்கொண்டதும், வேறுபல அரசியல் பிரச்சினைகளை முன்னிட்டும், அவர் யாழ்ப்பாணம் வருவதில் பல சிக்கல்கள் இருந்தன. இதனால் தான், ஒருசாரார் திருமதி. சிறீமாவோ பண்டாரநாயக்காவிற்காக கொழும்பிலேயே தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்தவேண்டுமென முடிவெடுத்தபோது அதற்கு எதிர்மாறாக எழுந்த தமிழ் இளைஞர்கள் பலர் 'பாரிஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படியே அனைத்துலக தமிழாராட்சி மாநாடானது யாழ்ப்பாண மண்ணிலே நடாத்தப்படவேண்டும்' என ஒருமித்துக் குரல் கொடுத்தனர்.

இந்த விவகாரம் இரு பகுதியினருக்கும் இடையில் இழுபறி நிலையாய் இருந்தபோது, திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா என தமிழ் மக்கள் தமக்குள்ளே ஐயுறவு கொள்ளத்தொடங்கினர். மக்கள் மத்தியில் எழுந்த நம்பிக்கையீனத்தைக் கண்ணுற்ற மாநாட்டுப் பணியகத்தின் செயலாளர் அப்போது ஓர் அறிவித்தல் கொடுத்தார்.

'03.01.1974 தொடக்கம் தொடர்ந்த ஏழு நாட்களுக்கு அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு திட்டமிட்டபடியே யாழ்ப்பாணத்தில் நடைபெறும்'

செய்தியைக் கேள்விப்பட்டதும், மக்கள் பதற்றம் நீங்கி பரவசத்துக்குள்ளானார்கள். செய்தியை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டார்கள். மாநாட்டுக்கு வருகை தரவிருக்கும் கல்விமான்கள், அறிஞர்கள், அயல்நாட்டு மக்களை வரவேற்பதற்காக மாநகர ஆணையாளரின் அறிவித்தலுக்கமைய யாழ்ப்பாண நகரைத் துப்பரவு செய்யத்தொடங்கினர். வீதிகள் தோறும் வாழைகள் நட்டு, தோரணங்கள் கட்டி மகிழ்ந்தனர். சப்பறங்கள், சிகரங்கள் எனச் சந்திக்குச் சந்தி அலங்கரித்துக்கொண்டார்கள். மின் கம்பங்களில் கட்டப்பட்ட ஒலிபெருக்கிகளில் இருந்து நாதஸ்வர மேள தாள வாத்தியங்களும், தமிழ் மணக்கும் நல்லிசைப்பாடல்களும் ஒலித்துக்கொண்டிருந்தன. ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழி வாழ்வதற்காக தமது உழைப்பின் பெரும் பொழுதை மாநாட்டுக்காக செலவழித்திருந்தார்கள். நாட்கள் நகர நகர நகரமே களைகட்டத்தொடங்கியது. அயல் கிராமங்களிலிருந்து அலையலையாக மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தார்கள். அனைவரது முகங்களிலும் மகிழ்வின் புூரிப்புப் பொலிந்திருக்க தமிழாராட்சி மாநாடு நடந்துகொண்டிருந்தது.

இதேவேளை மாநாட்டின் இறுதி நாள் தமிழ் மக்களின் பண்பாட்டை, வலியுறுத்தும் வகையில் பல கிராமங்களிலிருந்து அலங்கார ஊர்திப் பவனிகள் யாழ் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. இவ வாறான ஓர் அணி பருத்தித்துறை வீதியுூடாக யாழ். நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, முத்திரைச் சந்தியில் வைத்து சிறீலங்கா காவல்துறையினரால் காரணமின்றி வழிமறிக்கப்பட்டு, மேற்கொண்டு செல்லவிடாது தடுக்கப்பட்டது. ஊர்வலத்தில் வந்த இளைஞர்களும் யுவதிகளும் ஆத்திரம் கொண்டு நடுவீதியில் சில மணித்தியாலங்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த, அதற்குப் பணிந்துபோன சிங்கள காவல்துறையினர் மேற்கொண்டு ஊர்வலம் செல்வதற்கு அனுமதித்தனர். தங்களைப் பெரும்பான்மை இனமெனக் கருதிக்கொண்டிருந்தவர்களால் ஒரு சிறுபான்மையினத்திற்கு முன்னால் தாம் தலைகுனிந்து போனதைத் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது.

அத்தோடு, திட்டமிட்டபடி மாநாட்டைக் கொழும்பில் நடாத்தமுடியாதுபோன மனக் கொந்தளிப்பும், தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதான தோற்றப்பாடும் சிங்களக் காவல்துறையினரின் இதயங்களில் இனவாத வன்ம வெறியை தோற்றுவித்துவிட்டது. நடைபெறும் அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டை அல்லோலகல்லோலப் படுத்துவதற்கான வழியை வகுத்தபின், அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமாகி நின்றார்கள் சிறீலங்கா காவல்துறையினர் இந்நிலையில் ஜனவரி 10ஆம் நாளில் ஊரே திரண்டுவந்து யாழ். நகரில் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி குழுமியிருந்து விழாவை ரசித்துக்கொண்டிருந்தது.

அப்போது நேரம் இரவு எட்டுமணி, போக்குவரத்திற்குப் பொறுப்பான சிங்கள காவல்துறை அதிகாரி ஒருவர் காங்கேசந்துறை வீதி வழியாக யாழ். காவல் நிலையம் செல்வதற்கு, தனது மோட்டார் வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். இச்சமயம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகாமையில் வீதிகளில் மக்கள் நிறைந்திருந்ததினால் அவரால் மேற்கொண்டு செல்லமுடியவில்லை. மக்களுக்கும் வழியை விட்டுக்கொடுப்பதற்கு போதுமான இடைவெளி இருக்கவில்லை. திரும்பி வேறு பாதையால் செல்வதற்கு அவருடைய 'காக்கி உடுப்பின் கௌரவம்' இடங்கொடுக்கவில்லை. அவருள் எழுந்த ஆத்திரமும் காக்கிச் சட்டையின் அதிகாரமும் மக்களை நோக்கி வசைமாரி பொழிய வைத்தன. பதிலுக்கு மக்களும் எதிர்த்துக் கதைக்கத் தொடங்கவே, நிலமை கட்டுமீறிச் செல்வதை உணர்ந்த அவர், ஒருவாறாக தனது மோட்டார் வண்டியை மக்களிடையில் வலிந்துசெலுத்தியவாறு காவல் நிலையம் போய்ச் சேர்ந்தார். ஆனால் அடுத்து நிகழப்போகும் கொடிய விபாPதத்தை அறியாத நிலையில், ஆனந்த மனோநிலையில் அமர்ந்திருந்தார்கள் தமிழ் மக்கள். வேக்காளத்தோடும், வெஞ்சினத்தோடும் காவல் நிலையம் சென்றடைந்த அந்த சிங்கள காவல்துறை அதிகாரி, தனக்கு நேர்ந்த அவமானத்தை அங்கு நின்ற ஏனைய காவல்துறையினருக்கு எடுத்துரைத்தார். மறுவினாடி, பெருந்தொகையிலான சிங்கள காவல்துறையினர், யாழ். காவல்துறை அதிபர் சந்திரசேகர தலைமையில் கண்ணீர் புகைக்குண்டுகளோடும், துப்பாக்கிகளோடும், யாராவது எதிர்த்துத் தாக்கினால் அவர்களைச் சமாளிப்பதற்கென உலோகத் தடுப்புகளோடும் கூச்சலிட்டபடி ஆவேசத்துடன் மக்களி னுள் புகுந்தனர். கண்ணீர் புகைகள் எங்கும் வெடிக்கத் தொடங்கின. மக்கள் கூட்டம் சிதறியோடத் தொடங்கியது. பெற்றோரைத் தவறவிட்ட குழந்தைகளின் கதறல் எங்கும் எதிரொலித்தன. வீதிகளில் நிறுவப்பட்ட சிகரங்கள் தீப்பிடித்து எரிந்தன. சப்பறங்கள் யாவும் மண்ணில் சரிந்து வீழ்ந்தன.

இவ வேளையில் சில சிங்கள காவல்துறையினர் மின்சாரக் கம்பங்களில் உள்ள கம்பிகளை குறிபார்த்துச் சுட்டனர். இப்படிச் சுட்டதில் மின்கம்பி ஒன்று அறுந்து வீழ்ந்ததில் அதன்மீது எதிர்பாராத விதமாக தங்கள் கால்களை வைத்த ஒன்பது அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். திட்டமிட்டபடியே சிங்களக் காவல்துறையினரால் அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு அன்றைய தினத்தில் குழப்பியடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் உயிர் தீத்த ஒன்பது தமிழ் மக்களின் நினைவாக முற்றவெளியில் ஓர் தூபி நிறுவப்பட்டபோதும் பின்னர் இது சிங்கள பொலிசாரால் அடித்து நொருக்கப்பட்டது. மீண்டும் அதேயிடத்தில் சிறிய அளவிலான ஒன்பது தூபிகள் நிறுவப்பட்டன. அப்படியே இத்தூபிகள் உடைப்பதும் பின் நிறுவுவதுமாக வரலாற்றில் பதியப்பட்டன. அனைத்துலக நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள காவல்துறையினர் நடாத்திய இனவாத காட்டுமிராண்டித் தனமான செயல் குறித்தும், உயிர் நீத்த ஒன்பது குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோரியும் தமிழ் மக்கள் அன்றைய ஆட்சிப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவிற்கு அடிக்கடி பல கோரிக்கைகள் விடுத்தபோதும் கடைசிவரை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு சிறீமாவோ செவிசாய்க்காது மௌனம் காத்துக்கொண்டார்.

இச்சம்பவம் நிகழ்ந்ததில் இருந்து, இம்மாதம் 10ஆம் திகதியுடன் 27 வருடங்கள் கழிகின்றன. ஆயினும் அன்று சிறீலங்கா சிங்கள காவல் துறையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை மற்றும் குண்டாந்தடிப் பிரயோகங்களையும் முற்றவெளியில் கொல்லப்பட்ட அந்த ஒன்பது தமிழர்களையும் இன்றுவரை எந்தவொரு தமிழனும் மறந்திருக்கமாட்டான். ஏனெனில் இலகுவில் எவராலுமே மறக்கக்கூடிய சம்பவமல்ல அது.

நன்றி - அலெக்ஸ் பரந்தாமன் / எரிமலை ஜனவரி 2002

  • தொடங்கியவர்

1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 திகதி இந்த படுகொலைகள் நடைபெற்றன. அவை இடம்பெற்று இன்றுடன் 31 ஆண்டுகளாகிவிட்டன. அன்று அரச பயங்கரவாதத்திற்கு பலியானவர்களுக்கு எனது நினைவஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.