Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 தொடர்பான தமது உணர்வுகளை வெளிப்படுத்த அச்சமடையும் சாதாரண தமிழ்மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 ஆவணப்படம் தொடர்பான தமது கருத்துக்களை கூற சாதாரண தமிழ் மக்கள் ஆவலாக உள்ள போதிலும், தமது உணர்வுகளை வெளிப்படையாகக் கூற அச்சமடைகிறார்கள் என தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சிங்கள சட்டவாளர் ஒருவர் ஏ.எப்.பி. செய்திநிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஏ.எப்.பி. செய்திசேவை நிறுவனம் தனது செய்தி ஆய்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியடைந்த பின்னர் தற்போது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான பல யுத்தக் குற்றங்கள் தொடர்பான காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பியது.

'இலங்கையின் கொலைக்களங்கள்' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படமானது, இலங்கைப் படைகளால் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு போர் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட போது வீடியோ மற்றும் கைத்தொலைபேசிகள் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளே இத்திரைப்படத்தில் பதிவாக்கப்பட்டுள்ளன.

சரணடைந்தவர்கள் மிகக் கொடூரமான பாணியில் இலங்கைப் படையினரால் கொல்லப்படும் காட்சிகள், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழ்ப் புலிகளின் பெண் உறுப்பினர்களின் உடலங்கள் ஆகியனவும் இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யுத்த வலயத்தில் அகப்பட்டுக் கொண்ட தமிழ்ப் பொது மக்களைக் குறி வைத்துத் தாம் ஒருபோதும் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என அரசாங்கத்தால் அறுதியிட்டுக் கூறப்படுகின்ற போதிலும், பொது மக்களை இலக்கு வைத்து படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குததற் காட்சிகளும் இத்திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணத் திரைப்படமானது இலங்கையில் ஒளிபரப்பப்பட்டிருக்காத போதிலும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளின் உதவியுடன் இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்கள் Twitter, Facebook போன்ற சமூக இணையத்தளங்கள் மூலம் தரவிறக்கம் செய்து அதனைப் பார்த்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள காட்சிகள் மனதிற்கு மிகவும் வேதனையைத் தருவதாக தமிழ் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் சிங்கள சட்டவாளர் ஒருவர் தெரிவித்தார்.

"சாதாரண தமிழ் மக்கள் இந்த ஆவணப் படம் தொடர்பான தமது கருத்துக்களைக் கூற ஆவலாயுள்ள போதிலும், தமது உணர்வுகளை வெளிப்படையாகக் கூற அச்சமடைகிறார்கள்" என தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத குறித்த சிங்கள சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=8133:-4-------&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.