Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படமும் இலங்கை அரசாங்கத்தின் தகிடுதத்தங்களும்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 ஜூன் 2011

சிங்கள இணையத்தளம் வெளியிட்ட செய்தி பொய்யானது என்கிறார் மேஜர் ஜெனரல் உபய மெதவல:-

சனல் 4 தொலைக்காட்சி இலங்கை தொடர்பாக ஒளிப்பரப்பிய நிகழ்ச்சி மூலம் முன்வைத்த பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பதில் தூதுவர் பீ.எம்.அம்ஸா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பீ.பீ.சி தொலைக்காட்சியின் ஆசிய பிரிவின் ஒளிப்பரப்பிய நேரடி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அம்ஸா இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தார். இந்த நிகழச்சியில் செனல் 4 தொலைக்காட்சியின் நிகழச்சி தயாரிப்பாளர் கெல்லம் மெக்ரே, தமிழர் நலன்புரி அமைப்பின் வென்ஜிஸ் ஜனரஞ்சன், பிரித்தானிய சிங்கள அமைப்பின் சத்துர ஜயதிஸ்ஸ ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இலங்கைக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான நிகழ்ச்சிகள எந்த காரணத்திற்காக ஒளிப்பரப்புகிறீர்கள் என அம்ஸா செனல் 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள இணையத்தளம் வெளியிட்ட செய்தி பொய்யானது என்கிறார் மேஜர் ஜெனரல் உபய மெதவல:-

சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் உள்ள இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது. எனினும் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சனல் 4 தொலைக்காட்சியிடம் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை கோரியுள்ளதாகவும் அது கிடைத்தவுடன் விசாரணைகளை நடத்த எண்ணியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இராணுவப் பேச்சாளரின் மறுப்பு அடிப்படையற்றது எனவும் தாம் வெளியிட்ட தகவல்கள் 10 வீதம் சாரியானது என இராணுவத் தரப்பு தகவல்கள் கூறியதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த செனல் 4 தொலைக்காட்சியின் வீடியோவில் உள்ள இராணுவத்தினரில் 12 பேர் உறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இராணுவத்தின் விசேட அதிரடிப்படை, கமாண்டோ படைப்பிரிவு மற்றும் 681 படைப்பிரிவு ஆகியவற்றில், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பணியாற்றியவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை இராணுவப் பேச்சாளர் உண்மையில் அறியவில்லை என்றால், பிரிகேடியர் அருண வன்னியாராச்சியிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63090/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.