Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுபடியும் ஒரு சாமிக்கதை.......?

Featured Replies

264584_229810330373220_100000327645081_753454_1402941_n.jpg

சரவணபாபா மடம் முரளிகிருஸ்ண சுவாமிகள் எனப்படும் ஜிலேபி (தேன்குழல்) சாமியார் மீது கேரளாவில் பொது மக்களாலும் மக்கள் பொது அமைப்புக்களாலும் பண மோசடி பாலியல் வன்முறை என்பன குறித்து பல புகார்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சாமியார் தற்போது UK Head Office, Saravanababa Matham 269A, Preston Road, Preston Waye, Harrow, Middlesex. HA3 0PS என்னும் முகவரியில் தங்கி இருந்து கொண்டு தனது வழக்கமான மோசடிச் செயல்கள் மூலம் மத நம்பிக்கை கொண்ட அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றான்.

கதை சொல்ல மட்டுமே தெரிந்த சாமிகள், மக்களை ஏமாற்றுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதனை உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது மனித மனம் என்பது இரண்டு பாகங்களை உடையது. ஒன்று சக்தி வாய்ந்தது. மற்றொன்று பலவீனமானது. இதில் பல வகையான துன்பங்களும் அனுபவங்களும் வலிய மனதை உருவாக்குகின்றது. எனினும் மனத்தின் பலவீனமான பாகம், வெளியேயுள்ள சலசலப்புகளுக்கு மயங்கி விடுகின்றது. இந்த பலவீனமான மனதைப் பயன்படுத்தி தான் சாமியார்களும் குருஜிக்களும் செழிக்கின்றனர்.

இந்தச் சாமிகளின் முகத்திரை, இவர்களின் முன்னாள் பக்தர்களினால் பின்வருமாறு கிழிகின்றது. “உண்மை வெளியானது! தொடர்ந்து ஏமாற்ற இந்தக் கயவர்களை அனுமதியோம்!” (இணைப்பு 1. (கீழே)) என்ற துண்டுப் பிரசுரத்தில் தான் ஜிலேபி சாமியாரின் முன்னாள் பக்தர் ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார்.

மதம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆன்மா அற்ற உலகின் ஆன்மா, மதம் மக்களின் அபின் என்று சமுக விஞ்ஞானிகள் மார்க்சும் எங்கெல்சும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதியவைகள் தான் இருபத்தோராம் நூற்றாண்டிலும் சாமியார்களை நம்பி ஏமாறும் பக்தர்களின் அனுபவ மொழிகளாக வெளிவருகின்றது.

கேரளாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ், வர்த்தமானம், தேஜஸ் எனப்படும் பிரபல பத்திரிகைகளில் இந்த ஜிலேபி சாமியாரின் மோசடிகளையும் பாலியல் சேட்டைகளையும் பற்றிய பல செய்திகள் வந்துள்ளன. (சண்டையின்னா… சட்டை கிழியத்தான் செய்யும், சாமியார் என்றால் பாலியல் சேட்டை விடத்தான் செய்வார்). லேகா என்ற பெண்மணி பாலக்காடு டி.எஸ்.பியிடம் கொடுத்த புகாரில், தனது கணவனை ஏமாற்றி ஒரு கோடி பெறுமதியான நிலத்தினை சரவணபவ மடத்தின் பெயரில் நன்கொடையாக பெற்றதாகவும் ஆனால் தற்போது அந்த நிலம் தனிப்பட்டவர்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். பார்க்க இணைப்பு 2. (கீழே)

சரவணபவ பக்தஜன சமரக்சண சமதியின் தலைவர் மோகனன் என்பவர், ஜிலேபி சுவாமியை கைது செய்யுமாறு வெளியிட்ட அறிக்கையினை, சனிக்கிழமை மார்ச் 12.2011 அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரசுரித்திருக்கின்றது. (பார்க்க இணைப்பு 3). இல்லாத அறக்கட்டளைகளின் பெயரில் பெரும் பணத்தினை மோசடி செய்ததாக இந்தச் சாமியான சரவணபாபா மீது, மோகனன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவரால் ஏமாற்றப்பட்ட லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவர் 11.05.2011 அன்று பிரன்ற் (BRENT TOWN COUNCIL) நகரசபையிற்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (பார்க்க இணைப்பு 4). இதில் சாமியாரின் பாஸ்ட்போர்ட், விசா போன்ற விபரங்களை அவர் நகர சபையினருக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்துடன் இந்தச் சாமியார் பிரித்தானியாவில் வேலை ஏதும் செய்ய முடியாது. பொது நிதியம் எதிலிருந்தும் உதவி பெறக் கூடாது (No work or Recourse to Public Funds) என்ற நிபந்தனையின் கீழ்தான் அவரிற்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் விசா விதிகளிற்கு மாறாக, மக்களையும் இங்கிலாந்துச் சட்டத்தினையும் ஏமாற்றி கோடி கோடியாய் பணத்தை சுருட்டுவதற்கு இந்த கடவுளின் அவதாரம் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. வாலிப வயோதிப அன்பர்களே! ஆண்மை இழந்தவர்களே! கம்பு போல் நிற்க ஓடி வாருங்கள் என தமிழ் நாட்டிலே சிட்டுக் குருவி லேகிய வைத்தியர்கள் லாட்ஜ் விபரம், நேர காலம் போட்டு விளம்பரம் செய்வதைப் போல, இந்தச் சாமியாரும் ஒரு ஆன்மிக லேகிய விளம்பரம் செய்திருக்கிறார். (பார்க்க இணைப்பு 5)

கந்தனிற்கு சிந்தனை எந்த நேரமும் கவட்டிற்குள்ளே தான் என்பது போல தனது பண ஆசையை விளம்பரத்தில் எந்த விதமான கூச்சமும் இன்றி மண், பெண், பொன் என்ற ஆசைகளை துறந்த இந்தத் துறவி வெளிப்படுத்தியுள்ளார். அதில் Post Office BACKYARD converted too perform HUSTLE to collect Money. பணத்தினை துரித கதியில் பெற்றுக் கொள்வதற்காகத் தான் தபால் அலுவலக பின்பக்கத்தை மாற்றி வைத்திருக்கின்றோம். ஆன்மீகம் பேசவல்ல என்று சாமியாரே தெளிவாக சொல்லி விட்டார்.

“லண்டனில் உள்ள பல ஆலயங்கள் இந்தக் கொள்ளையரின் உண்மையினை அறிந்தும், இந்தச் சாமியார்களுக்கு பொன்னாடை போர்த்தி, மக்களை ஏமாற்றி அவர்களை மடையர்களாக்கும் இந்தச் சாமியாருக்குத் துணை போகின்றனர்” என்று எங்களிற்கு இந்த சாமியாரின் மோசடிகளைப் பற்றி சொன்னவர் கவலைப்படுகின்றார்.

சாமியார்கள் கோவில்கள் என்பன மக்களை ஏமாற்றுவதற்காகவே இருக்கும் அமைப்புக்கள். அதாவது கூட்டுக் கொள்ளையர்களில் எப்படி ஒருவரை மற்றர் காட்டிக் கொடுப்பார்..? சாமியார்களில் போலிச் சாமியார் நல்ல சாமியார் என்று கிடையவே கிடையாது. எல்லாச் சாமியார்களும் போலிகள் தான். கள்ளர்கள் தான்.

பொதுவாக சாமியாரை தேடிப் போபவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு கைவிரலால் எண்ணி விடலாம். அதாவது..,

• வேலை மற்றும் விசா இல்லை.

• திருமணம் நடக்கவில்லை.

• குழந்தை இல்லை.

• கணவன் மனைவிக்குள் ஏற்படும் குடும்பப் பிரச்சினை.

• உடல் நலக் குறைவு.

தன்னிடம் வருபவர்களின் வயது – தோற்றம் – உடல்மொழி என்பவற்றை வைத்து, இவற்றில் ஒன்றினை சாமியார்கள் எடுத்து விடுவார்கள். காய்களும் கனிகளும் நிறைந்த மாமரத்திற்கு கல்லெறியும் போது, எப்படியும் ஒரு மாங்காயாவது விழத்தானே செய்யும். இப்படி பல நூறு பேருக்கு சொல்லும் போது சிலருடைய பிரச்சினைகளை சாமிகள் சரியாகவே சொல்லி விடுவார்கள். அந்தப் பிரச்சனைக்காக உரியவர்களின் முயற்சியாலோ அல்லது இயல்பாகவோ அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் போது அதற்கான புகழும் பணமும் சாமியாரிற்கு வந்து கிடைக்கின்றது.

முப்பது ஆண்டுகளிற்கு முன்பு மிகக் குறைந்தளவு இலங்கைத் தமிழர்களே வெளிநாடு சென்றார்கள். அந்த நாட்களில் கைரேகை பார்க்கும் எந்தச் சோதிடமும்..! உனக்கு வெளிநாடு போவதற்கான ரேகை இருக்கிறது எனச் சொல்லவில்லை. பின்பு அரசியல் காரணங்களிற்க்காகவும், தொழில் தேடியும் எமது தமிழர்கள் பெருமளவில் வெளிநாடு போகத் தொடங்கியதும், திடீரென எல்லோருடைய கையிலும் வெளிநாட்டு ரேகை முளைத்து விட்டதாம்..!? யாரைப் பார்த்தாலும் வெளிநாடு போகும் பலன் இருக்கிறது என்று சாமிகளும் சாத்திரிகளும் சொல்லத் தொடங்கி விட்டார்கள். அதாவது பரிணாம வளர்ச்சியில் வெளிநாட்டு ரேகை வளரும் என்று கண்டு பிடித்த விஞ்ஞானிகள் நம் சாத்திரிகளும் சாமியளும் தான். நல்ல காலமாக புதிதாக முளைக்கிற விசயங்களை கையோடு மட்டும் நிறுத்தி விட்டார்கள்.

இந்த சாமியாரைப் பற்றி எழுதுவதற்காக சாமியாரிடம் அருளாசி வாங்கப்போன ஒரு இளைஞரை சந்தித்தேன். அவர் இங்கிலாந்தில் தற்காலிக அனுமதி பத்திரத்தில் வாழ்பவர். எந்நேரமும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் படலாம் என்ற நிலையில் உள்ளவர். நிம்மதி இல்லாததால் இந்தச் சாமியாரிடம் போனார். அங்கு நடந்த உரையாடலை கீழே எழுதி இருக்கின்றேன். முதலாவதாக சாமியாரின் குரலும் இரண்டாவதாக இளைஞனின் குரலும் மூன்றாவதாக எனது குரலும் பின்னூட்டமாக வருகின்றது.

சுவாமி: வாங்க தம்பி முகத்தில் மகிழ்ச்சி இல்லை. விசா இல்லை என்ற கவலை உங்களிற்கு சரி தானே.

பக்தன்: ஆம் சுவாமி

நான்: ஆமா வாழ்க்கையிலே இன்ப வெள்ளம் கரை புரண்டு ஓடுது. அதை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கவா உம்மிடம் வந்தேன். வெளிநாட்டிலிருக்கும் ஒரு சிறுவயது இளைஞன் சாமியாரிடம் வந்தால் பெரும் பாலும் விசாப் பிரச்சினையாகத் தானிருக்கும் என்பதை உமக்கு சொல்லியா தெரிய வேண்டும்.

சுவாமி: வேலை கூட நிரந்தரமில்லை அப்படி இப்படித் தானே.

பக்தன்: ஆமாம் சுவாமி.

நான்: ஏண்டா விசா உள்ளவனுக்கே வேலை இல்லை. இதிலே விசா இல்லாதவனிற்கு எப்படி வேலை கிடைக்கும். இது பெரிய ராணுவ ரகசியம். இவர் ஞானக் கண்ணாலே கண்டு பிடிச்சுட்டார்.

சுவாமி: கவலைப்படாதே எல்லாம் நல்ல படியாக நடக்கும். இந்தா ருத்திராட்ச மாலை. கழுத்திலே போட்டுக்கொள். அடுத்த மாதம் மறுபடியும் வா. அதற்குள் எல்லாம் சரியாகி விடும்.

சாமியார் தனது பிரச்சினைகளை அப்படியே கணித்துச் சொன்னதால் மெய்மறந்து போன இளைஞன் சட்டைப் பையிலிருந்ததை எல்லாம் சாமியாரிற்கு பக்கத்திலிருந்த காணிக்கைத் தடடில் போட்டாராம்.

ஒரு மாதம் போன பின்னும் ஒன்றும் நடக்கவில்லை. மறுபடியும் சாமியாரிடம் போனான்.

பக்தன்: சுவாமி ஒன்றுமே நடக்கவில்லை.

சுவாமி: நம்பிக்கையை இழக்காதே நம்பிக்கை தான் வாழ்க்கை. கடவுளை மனப்பூர்வமாக கும்பிட்டால் எல்லாம் நடக்கும்.

நான்: ஆமா. அப்ப தானே கேட்டது கிடைக்காது விட்டால் நீ மனப்பூர்வமாக கும்பிடவில்லை. அதனால் தான் நல்லது நடக்கவில்லை என்று சாமியார்கள் தப்பிக் கொள்ளலாம்.

மறுபடியும் காணிக்கையினை போட்டு விட்டு இளைஞன் போக வெளிக்கிடும் போது சாமியார் அவரை கட்டிப் பிடித்து ஆசீர்வதித்தாராம். சாமியாரின் கை சரியாக நெஞ்சிலே ருத்திராட்சக் கொட்டை இருந்த இடத்திலே இருந்ததாம். தான் மாலை போட்டிருப்பது அவரிற்கு எப்படி தெரிந்தது என்று பொடியன் புல்லரித்துப் போனான். நெஞ்சைத் தொடுவதற்கு சாமியர்களிற்கு சொல்லியா கொடுக்க வேண்டும். எல்லாம் ஒரு பழக்கத்திலே வந்தது தான் என்றேன்.

கேரளாவில் ஒரு மிக வறிய குடும்பத்தில் பிறந்து, கோழிக்கோடு சந்தையில் ஜிலேபி விற்று வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த முரளி கிருஸ்ணன் இன்று கோடீஸ்வரன். அவரது குடும்பமும் பெரும் பணக்கார குடும்பமாக மாறி விட்டது. வேறெந்த வருமானமும் இல்லாத ஒருவர் கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்பதே அவரை அம்பலப்படுத்துகிறது.

சாயிபாபா, நித்தியானந்தா, சங்கராச்சாரி என்று நீளும் இந்த கள்ளர்கூட்டத்திடம் இருக்கும் கோடிக்கணக்கான பணம் முழுவதும் மக்களை ஏமாற்றி திருடிய பணம் தான். மக்கள் விழிப்படையும் வரை புதிது புதிதாக லட்டு சுவாமி, ஜிலேபி சுவாமி என்று வந்து கொண்டு தான் இருப்பார்கள்.

இதில் 5 பின் இணைப்புக்கள் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன இவர் ஒரு உண்மைச் சாமியார் என்று ..அங்கு சென்று பாருங்கள்....

http://www.ndpfront.com/?p=21818

விஜயகுமாரன்

நன்றி முகப்புத்தகம்..

Edited by நெருப்பு நீலமேகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.