Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியார் போக்குவரத்துசேவை சாரதி,நடத்துனர் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் போக்குவரத்துசேவை சாரதி,நடத்துனர் மீது தாக்குதல்

Sunday, June 26, 2011, 10:26

சிறீலங்கா

பேருந்தின் பின்புற வழியால் ஏறுமாறு கூறிய காரணத்திற்காக தனியார் போக்குவரத்து பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் படையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முழங்காவில் கிளிநொச்சி,வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான பயணிகள்போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ளும் பேருந்து தனது வழக்கமான சேவைக்காக முழங்காவில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ஆனைவிழுந்தான் என்ற இடத்தில் சாதாரண உடையில் பேருந்தை மறித்த நபரொருவர் பேருந்தின் முன்புற வழியாக ஏற முற்பட்டார்.

அதற்கு அனுமதிக்காத பேருந்து நடத்துனர் பின்புற வழியால் ஏறுமாறு பணித்துள்ளார். அதனை ஏற்றுக்கொள்ளாத அந்த நபர் தான் படைச் சிப்பாய் என கூறிக்கொண்டு பேருந்து நடத்துனரைக் கடுமையாக தாக்கியுள்ளர். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநரும் சாரதியும் குறித்த நபரை திருப்பித் தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை அருகில் இருந்த காவலரண் ஒன்றில் நின்ற படையினர் அவதானித்து, அங்கு வந்து நடத்துனரையும் சாரதியையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் அத்துடன் படைச்சிப்பாய் ஒருவர் குறித்த சாரதியையும் நடத்துநரையும் சுடுவதற்காக தனது துப்பாக்கியை ஆயத்தம் செய்துள்ளார். இதனால் பயணிகள் பெரும் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அதிகளவு பொதுமக்களும் படையினரும் நிலைமைய கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து பேருந்தை அருகில் உள்ள படைமுகாமிற்கு கொண்டு சென்று பிரதேசப் படைப் பொறுப்பதிகாரி முன்னிலையில் சம்பவம் தெடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளது. இதன் போது சாதாரண உடையில் வந்தவர் படையினர் என்பது தமக்குத் தெரியாது என பேருந்தின் நடத்துநர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருதரப்புக்களிற்கிடையேயும் சமாதானம் ஏற்பட்டு பேருந்து சேவையை தொடர்ந்ததாக இச் சம்பவம் தொடர்பாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமத்தினால் 1 மணி நேர தாமதத்தின் பின்னரே பயணம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilthai.com/?p=20242

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.