Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்களின் உறவுகள் வடிக்கும் கண்ணீர் காணீரோ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்களின் உறவுகள் வடிக்கும் கண்ணீர் காணீரோ!

Sunday, June 26, 2011, 10:39

சிறீலங்கா

தமிழ் மக்கள் படும் துன்பம் சொல்லுந்தரமன்று. யுத்த காலத்தில் அவர்கள் பட்ட வேதனைகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.வன்னியில் நடந்த யுத்தம் அந்த மக்களை வெறுமைப்படுத்தி வாழ்வை வெறுக்கவைத்துவிட்டது. அந்த இழப்புகளிலிருந்து மீள முடியாமல் துடிக்கும் அவர்களின் மீள்குடியேற்றங்கள் அவர்களுக்கான நிவாரணங்கள் என எவையுமே திருப்தியற்றவையாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது. அடர்ந்த காட்டில் சிறுகுடிசை கட்டி குழந்தைகளுடன் வாழும் அவலம் இலங்கை மண்ணில் நடக்கும் மிக மோசமான பாவகாரியம்.

தமிழர்கள் என்பதற்காக நடக்கின்ற இந்தக் கொடூரத்தை இயற்கை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

இதற்கு மேலாக யுத்தத்தின்போது காணாமற்போன உறவுகளைத் தேடி அலைபவர்கள் துன்பம் தனி அத்தியாயம்.

காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இதுவரை இந்த அரசு வெளிப்படுத்தவில்லை. காணாமல்போனவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறியமுடியாமல் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலையும் பரிதாபத்தின் கதை சொல்லிமாளா. ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதி பரிபாலனங்கள், படைத்தரப்புகள் இப்படி எல்லாத் தரப்பினருக்கும் காணாமல் போனவர்களைத் தேடித்திரிபவர்களின் அவலம் நன்கு தெரியும்.

அப்படியிருந்தும் ஏன்தான் இப்படியாக துன்பம் நீடிக்கின்றது.

ஓ! மனித வடிவங்களில் இராட்சச சிந்தனைகள், மனிதநேயங்களுக்குப் பதிலாக பேய் மனங்கள். வெளித்தோற்றங்கள் மனிதங்களாக இருப்பினும் மனிதங்கள் காடு வாழ் கொடூர மிருகங்களிலும் மோசமானவையாக இருக்கும்போது, கண்ணீர் விட்டுக் கதறியழும் தாய்மாரின் அவலத்தை அவர்களால் ஒருபோதும் உணரவும், அது கண்டு இரங்கவும் முடியாதே.

எதுவாயினும் அல்லல்பட்டு ஆற்றாது அழுகின்ற கண்ணீர் இந்தத் தேசத்திற்கு ஆரோக்கியமானதல்ல. உலகில் ஏற்பட்ட அழிவுகள் அத்தனைக்கும் பின்னால் ஆற்றாது அழுத கண்ணீரே மிகப்பெரும் ஆயுதமாக இருந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அந்த உண்மையை இலங்கையும் அனுபவரீதியாக உணர்ந்துகொள்ளும் என்பதற்கு மனுநீதி சாஸ்திரங்கள தக்க சான்றாதாரங்களாகும்.

நிகழ்காலத்தில் நாம் செய்கின்றவற்றுக்கான விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படும் என்ற உண்மையை உணர்ந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்ளும்போது அழிவுகளைத் தவிர்க்க முடியும். இதனடிப்படையில் இலங்கைத் தேசமும் காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவுகள் படும் துன்பத்தை நீக்க ஏதேனும் செய்தாக வேண்டும்.

இல்லையேல் அவர்களின் கண்ணீர் அராஜகத்தை அழிக்கும் வச்சிராயுதமாக மாறும் என்பது சத்தியம்.

http://www.tamilthai.com/?p=20247

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.